கேளுங்கள்!

இந்த வலைப்பதிவை மேலும் பயனுள்ளதாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக உங்கள் இணைய தேவை மற்றும் எதிர்பார்ப்பை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
இது வரை நான் தேர்வு செய்து எழுதியதை நீங்கள் படித்து வந்திருக்கிறீர்கள் .இந்த ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்ள தினமும் கை கொள்ளாத விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.இருப்பினும் எனது தேர்வை தாண்டி உங்கள் குறிப்பிட்ட தேவைக்காக எழுதுவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.நான் தொடாடத விஷயங்கள் இருக்கின்றன.நான் தவிர்த்த விஷ்யங்களும் இருக்கின்றன.

நான் எழுத வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கும் தலைப்புகள் அல்லது விஷ‌யங்கள் இருக்கிறதா? அவற்றை தெரிவிக்கவும்.அவை தொடர்பான தகவலகளை திரட்டி உங்களுக்கான பதிவாக எழுதுகிறேன். குறிப்பிட்ட நோக்கிலான பதிவுகளை நீங்கள் எதிர்பார்த்தாலும் தெரிவிக்கவும்.

இணையம் மற்றும் தொழில்நுட்பம சார்ந்து உங்கள் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் மற்றும் எதிர்பார்ப்புகளை தெரிவியுங்கள்.அவை இந்த வலைப்பதிவை மேலும் மெருக்கூட்ட உதவும் என நினைக்கிறேன்.

இணையத்தில் எனக்கிருக்கும் ஆர்வமும்,பத்திரிகையாளனாக எனது எனுபவமும் எந்த தலைப்பு குறித்தும் தகவல்கள் தேடி ஆய்வு செய்து சுவாரஸ்யமாக எழுத முடியும் என நம்புகிறேன்.

எனவே உங்கள் விருப்பத்தை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்கவும். இணையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தே உங்கள் விருப்பம் இருக்கட்டும்.வேன்டுமானால் அறிவியலை சேர்த்து கொள்ளுங்கள்.விண்டோஸ் இயங்கு தளத்தில் கோப்புகளை நிறுவவது எப்படி என்றோ அல்லது எக்செல் கோப்புகளில் புதிய அட்டவனையை சேர்ப்பது எப்படி போன்ற செய்லவிளக்க கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னால் முடியும் என நினைக்கவில்லை.ஆனால் இத்தகைய கேள்விகளையும் எழுப்புங்கள். இதற்கு பதில் அளிக்க கூடிய பதிவர்களை விருந்தினராக அழைத்து எழுத சொல்கிறேன்.

இது உங்கள் வலைப்பதிவு. உங்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பும் இதை மேலும் செழுமையாக்கட்டும்.இந்த வலைப்பதிவு மேலும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

அன்புடன் சிம்மன்.