இணைய சாதனையாளர்களின் கதை

 

img005இணையத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், ஸ்கைப், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை உருவாக்கிய இளம் சாதனையாளர்களின் வாழ்க்கை கதைகளை விவரிக்கும் வகையில் நம் காலத்து நாயர்கள் புத்தகம் அமைந்துள்ளது.

புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கும் இந்த நூல் எனது 3 வது புத்தகம். முதல் நூலான இணையத்தால் இணைவோம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இணையதளங்களையும், அவற்றின் சிறப்புகளையும் அறுமுகம் செய்யும் தொகுப்பாக அமைந்தது. இரண்டாவது நூலான நெட்சத்திரங்கள், இணையம் மூலம் புகழ் பெற்றவர்களின் வெற்றிக்கதைகளை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

மூன்றாவது நூலான நம் காலத்து நாயர்கள், இணையத்தின் ஆற்றலை நன்றாக புரிந்து கொண்டு, அதன் மூலம் இணையவாசிகளுக்கு பயன் அளிக்க கூடிய புதுயுக இணைய சேவைகளை உருவாக்கிய இளம் முன்னோடிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. நவீன இணையத்தி அடையாளமாக மாறியிருக்கும் முக்கிய சேவைகளை உருவாக்கியவர்களை இதன் மூலம் அறிமுகம் செய்து கொள்ளலாம்.

புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வந்த இது, தற்போது புதிய தலைமுறை பதிப்பகம் சார்பில் புத்தகமாக வந்துள்ளது.

நவீன இணையத்தின் வரலாற்று நாயகர்களை இந்த புத்தகத்தில் கண்டு வியக்கலாம்.