இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்
Follow me on :
எனது புத்தகங்கள்
எனது புத்தகங்கள்
இதுவரை ஆறு புத்தகங்கள் அச்சு வடிவிலும் ஒரு புத்தகம் மின்னூலாகவும் வெளி வந்துள்ளன. முதல் புத்தகமான ’இணையத்தால் இணைவோம்’, இணையத்தின் புதுமையான, பயனுள்ள இணையதளங்களை பட்டியலிட்டு விரிவாக அறிமுகம் செய்யும் கையேடாக அமைந்திருந்தது. அடுத்த புத்தகம், நெட்சத்திரங்கள், இணையம் மூலம் புகழ் பெற்ற சாமானியர்களின் கதையை விவரித்தது.
முதல் இராண்டு நூல்களும் மதி நிலையம் வெளியிட மூன்றாவது நூலான நம் காலத்து நாயர்கள், புதிய தலைமுறை வெளியிடாக வந்தது. இணையத்தின் அடையாளமாக திகழும், பேஸ்புக், டிவிட்டர், ஸ்கைப் போன்ற வெற்றிகரமான இணையதளங்களை உருவாக்கிய இளம் நிறுவனர்களின் கதையை விவரிக்கும் வகையில் புதிய தலைமுறை கல்வி இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம்.
பேஸ்புக், டிவிட்டர் போன்ற நன்கறிந்த சேவைகள் தவிர, பரவலாக அறியப்படாத ஆனால் மிக முக்கிய சேவைகளான லைப்ரரி திங், கிக்ஸ்டார்ட்டர், டக்டக்கோ உள்ளிட்ட சேவைகளை உருவாக்கிய நிறுவனர்களையும் இந்த புத்தகம் மூலம் அறியலாம்.
ரொக்கமில்லா சமூகத்தின் வரலாற்றையும், எதிர்காலத்தையும் விவரிக்கும் டிஜிட்டல் பணம் புத்தகம் நான்காவதாக வெளிவந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை விவரிக்கும் இந்த புத்தகம், மிக பிரதானமாக செல்பேசி சார்ந்த முன்னோடி பண பரிவர்த்தனை சேவைகள் பற்றியும், அவற்றின் பின்னே உள்ள தொலைநோக்கு பார்வை மற்றும் கனவு பற்றி பேசுகிறது.
ஐந்தாவது நூலான, மொபைல் ஜர்னலிசம், திறன்பேசிகள் இதழியல் துறையில் ஏற்படுத்தி வரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் விவரிக்கும் செல்பேசி இதழியல் கையேடாக அமைந்தது. கிழக்கு பதிப்பகம் வெளியீடு.
இவைத்தவிர, சமூக ஊடக முன்னோடி சேவைகளில் ஒன்றான ஸ்லேஷ்டாட் வரலாற்றை விவரிக்கும் ஆதியில் ஸ்லேஷ்டாட் இருந்தது மின்னூலாக வந்துள்ளது. பிரிடமில்புக்ஸ் தளத்தில் வாசிக்கலாம்.
மற்ற நூல்கள் தயாரிப்பில் உள்ளன.