வாருங்கள் வருங்கால இயக்குனர்களே

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.
அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் வாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடும் புதிய இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
.
இந்த தளத்தின் மூலம் அவர்கள் பாலிவுட்டின் கதவை எளிதாக தட்டலாம். திறமை இருந்தால் புகழ் ஏணியில் ஏறியும் சென்று விடலாம்.   இதற்கு முன்னர் இருந்தது போல திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டம் வேண்டும். இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அப்போதுதான் திரைப்படத் துறையில் முத்திரைப்பதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

நல்லகதையும், அதனை இயக்கக்கூடிய திறமையும் இருந்தால் போதும் வாய்ப்பு தேடி வரும். அதற்கான வழியைத்தான் இந்த இணைய தளம் காட்டுகிறது. ஏ டூ இசட் என்னும் நிறுவனம், 1 டேக் மீடியா என்னும் பெயரில் இந்த இணைய தளத்தை அமைத்துள்ளது.   புதிய படைப்பாளிகளுக்கு பாலிவுட்டோடு தொடர்பு ஏற்படுத்தி தரும் உத்தேசத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்  மற்றும் இளம் படைப்பாளிகளுக்கான  இணைப்பு பாலம் என்றும் இந்ததளத்தை கூறலாம்.  அதற்கேற்ற வகையில் இந்த தளம் இளம்  படைப்பாளிகள் தங்களது  திறமையை அரங்கேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

வலைப்பின்னல் தளங்களில், தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, தங்களது விருப்பு, வெறுப்புகளை குறிப்பிடுவது போல படைப்பாளிகள் இந்த தளத்திலும் தங்களுக்கான இணைய பக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அதில் தங்கள் புகைப்படத்தையும் இடம் பெற வைத்து கைவசம் உள்ள, கதை, திரைக்கதை போன்றவற்றையும் அரங்கேற்றலாம்.

நேரடியாக இயக்குனர்களை சந்தித்து கதை சொல்ல முடியவில்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்கள் அந்த கவலை இல்லாமல் இந்த தளத்தில் தங்கள் வசம் உள்ள கதையையும், திரைக்கதையையும் இடம் பெற செய்து விடலாம்.

இப்படி இந்த தளத்தில் கதை சொல்வதன் மூலம் என்ன பயன் என்று கேட்கலாம்?
படைப்பாளிகள் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இந்த தளத்தின் ஒரு பகுதி. இந்த தளத்திற்கு இன்னொரு முக்கிய  பணியும் இருக்கிறது. 

படைப்பாளிகளை அழைப்பது போலவே, பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும்  இந்த தளம் அழைக்கிறது.  புதுமையான கதைக்கான தேடல் எப்போதுமே நல்ல தயாரிப்பாள ருக்கும், சிறந்த இயக்குனருக்கும் இருக்கத்தானே செய்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்காதா?
 முன்னணி இயக்குனர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து, இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ள கதை, திரைக்கதைகளை பரிசீலித்து பார்த்து தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய திறமையை அவர்களால்  எளிதாக  இனம் கண்டுகொள்ள முடியும்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள கதைகளில் திறமையின் பிரகாசத்தை கண்டுபிடிக்க முடிந்தால் அந்த படைப்பாளியை தொடர்பு கொண்டு,  அவரை ஊக்குவிக்கலாம்.  இப்படியாக இளம் படைப்பாளி களுக்கு பாலிவுட்டின் பிரபலங்களின்  ஆதரவை பெற்று தரும் நோக்கத்தோடு இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

சொல்லப்போனால் இந்தி திரைப்பட உலகுக்கான வேலை வாய்ப்பு மையம் போல இந்த தளம் செயல்படும் என்று  இதனை நிறுவியுள்ள தேஜாஷா கூறுகிறார். அறிமுகப்படைப்பாளிகள், இடைத் தரகர்களின் கையில் சிக்கி  அவதிப்பட வேண்டிய நிலையை இந்த தளம் இல்லாமல் செய்து விடும் என்று அவர் நம்பிக்கையோடு செய்கிறார்.

அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த தளம் நல்லவரவேற்பை பெற்றிருக்கிறது.
 மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் இந்த தளத்தை பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போது இதன் செல்வாக்கும் உயரும்.

எப்படியும் இளம் படைப்பாளிகள் இந்ததளத்தை விரும்பி பயன்படுத்துவார்கள்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாலிவுட் இயக்குனர்கள் இதனை  எந்தஅளவுக்கு பயன்படுத்த தொடங்குகின்றனரோ அந்த அளவுக்கு இதன் வெற்றி அமையும்.

இயக்குனர்களையும், தயாரிப்பாளர் களையும் தேடி வர செய்வது கூட படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது.அவர்கள் திறமையை  வெளிப்படுத்துவதற்கான களம் அமைத்து தரப்பட்டுள்ளது.  அதனை பயன்படுத்தி கொண்டு பிரகாசிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *