பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான ஒரு பெயரை கொண்டிருக்கலாம். 

இன்று வரை உலகில் பெயர் என்பது பொதுவான ஒரு விஷய மாகவே இருக்கிறது. நம்மூரில் ராமசாமி, குப்புசாமி போல பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஸ்மித் மற்றும் ராபர்ட்களை  எங்கும் பார்க்கலாம். 

அது மட்டுமல்லாமல் பெயர் களுக்கு  பூர்வீகத்தை உணர்த்தும் ஆற்றலும் உண்டு. ஒருவரின் பெயரை கேட்டாலே அவர் எந்த ஊரில் பிறந்து இருப்பார் என்பதை ஓரளவுக்கு யூகித்து விடலாம். இதற்கு காரணம் பெயர் வைக்கும் போது நாம் பின்பற்றும் பொதுவான நடைமுறைகளே!

பாட்டன், முப்பாட்டனின் பெயர் அல்லது குலதெய்வத்தின் பெயர் இவற்றையெல்லாம் பரிசீலித்தே பெயர் வைக்கும் பழக்கம் இருக் கிறது. எனவே பெயரை கொண்டே அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார் என்பதை கண்டுபிடித்து விடலாம். 

நிற்க! இன்டெர்நெட் யுகத்தில் இந்த பழக்கத்தில் அடிப்படையான தொரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பெயர் வைக்கும் போது நம்முடைய பாரம்பரிய பழக்கங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, பெயர் நவீனமானதாக இருக்க வேண்டும் என்னும் மோகம் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த பழக்கங்களில் இருந்து முற்றாக விலக வேண்டிய அவசியத்தை இன்டெர்நெட் உண்டாக்கியிருக்கிறது. எல்லாம் டொமைனுக்கேற்ற பெயர் வைக்க வேண்டும் என்ற அவசியம்தான். 

இன்டெர்நெட் முகவரிகள் தான் டொமைன் பெயர்கள் என்று குறிப் பிடப்படுகின்றன. இன்டெர்நெட் யுகத்தில் பலரும் தங்கள் பெயரில் சொந்தமாக  இணையதளத்தை பராமரித்து வருகின்றனர்.

ஒருசிலர் இன்னும் ஒருபடி மேலே போய் தங்கள் வாரிசுகளுக்கும் இணையதளம் இருக்க வேண்டும் என்னும் முன்யோசனையில் அவர் கள் பிறக்கும்போதே, இணையதள முகவரியை பதிவு செய்து வைக்கின்றனர். அப்படியே அவர்களுக்கான இ மெயில் முகவரிகளையும் உருவாக்கி விடுகின்றனர். நல்ல பழக்கம்தான், புதுயுகத்துக்கு ஏற்ற பழக்கம்தான். ஆனால் இதில் புதியதொரு பிரச்சனை மறைந் திருக்கிறது  பெயர் பிரச்சனைதான்!

இணையதள முகவரிகளை பதிவு செய்யும் போது, அதிலும் குறிப்பாக ஒருவருடைய பெயரில் இணைய தள முகவரியை நாடும் போது, அந்த பெயர் தனித்தன்மை மிக்கதாக இருந்தாக வேண்டியது அவசியம். இல்லை யென்றால் அந்த பெயரில் உள்ள மற்றவர்களில் 
யாராவது முன் கூட்டியே முகவரியை பதிவு செய்திருப்பார்கள்.  இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ளும் போது அந்த பிரச்ச னையை நீங்கள் எதிர் கொண்டிருக்கலாம்.
உங்கள் பெயரில் ஏற்கனவே முகவரி  பதிவு செய்யப்பட்டிருப் பதை கண்டு, பிறந்த ஆண்டு அல்லது வேறு சில சொற்களை உடன் சேர்த்து கொண்டு நீங்கள் இமெயில் முகவரியை ஏற் படுத்தி கொண்டிருப்பீர்கள். இணைய தள முகவரி விஷயத்தில் இதே போன்ற சிக்கல்தான் ஏற்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக முன் யோசனை மிக்க பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், பெயர் வைப்ப தற்கு முன்பாகவே அந்த பெயரில் இணையதள முகவரியை பதிவு செய்ய முடியுமா என்று யோசித்து பார்க்கின்றனர். இவ்வாறு பல்வேறு பெயர்களை பரிசீலித்து  எந்த பெயர் வைத்தால் அதில் முகவரியை பதிவு செய்வது சுலபமாக இருக்குமோ அந்த பெயரை  தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி விடுகின்றனர்.

அதன் பிறகு அதே பெயரில் இணைய தள முகவரி மற்றும் இமெயில் முகவரியை ஏற்படுத்தி விடுவது சுலபமாக இருக்கிறது. பெயர் வைப்பதில் இப்படியொரு புதிய நிர்ப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டி யிருப்பதால், தற்போது வழக்கில் உள்ள பெயர்களில் இருந்து  விலகி நிற்கும் புதுமையான பெயர்களை  தேர்வு செய்யும் நிலை ஏற்படுகிறது.
தற்போது இணையதள முகவரி யின் அவசியத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே இவ்வாறு செயல்படு கின்றனர்.  நாளை மேலும் பலர் இதே முறையை பின்பற்றத் தொடங்கலாம்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால் பொதுவான பெயர்கள் மறைந்து ஒவ்வொருவரும் தனித்தனி பெயர் பெற்றிருக்கும் நிலைதானே ஏற்படும். 

அந்த நிலையில் பெயர் களுக்கான தட்டுப்பாடும் வரக் கூடும்.  இந்தநிலை எவ்வளவு விரைவாக வரும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.  இப்போதைக்கு குழந்தைகளின் பெயர்களில் இணையதள முகவரி களை பதிவுசெய்பவர்களில் சிலர் அந்த தளத்தில் குழந்தைகளின் புகைப் படங்கள் மற்றும் அந்த குழந்தை வளரும் விதம் தொடர்பான தகவல் களை பதிவு செய்யலாம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பாப்பாவுக்கு ஒரு டொமைன்

 1. //தற்போது இணையதள முகவரி யின் அவசியத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே இவ்வாறு செயல்படு கின்றனர். நாளை மேலும் பலர் இதே முறையை பின்பற்றத் தொடங்கலாம்//

  அருமையான கணிப்பு

  உங்கள் பதிவுகள் பல என்னை கவர்ந்தது 🙂

  Reply
 2. Alwin sam

   டாட்காம் பெயர்தான் வேண்டும் என்றால்தான் கிடைக்காமல் போகக்கூடும் 
  புதிது புதிதாக டொமைன் பெயர்கள் வந்துகொண்டே இருக்கிறது, இனி வரும் 
  தலைமுறையினருக்கு டாட்காம் பெயர் எதுவும் கிடைக்காமல் போகும் 
  அப்போது இதற்கு ஈடாக அனைவரும் விரும்பும் வேறு பெயர்களும் 
  வந்துவிடுமல்லவா 

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *