என்னருகே நிழல் இருந்தால்..

உங்களை ஒரு கல்லூரி மாணவராக கற்பனை செய்து கொள்ளுங்கள். அதிலும் ஜப்பானில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.  அந்த கல்லூரி விடுதி அறையில் நீங்கள் அமர்ந்து படித்துக் கொண்டி ருக்கிறீர்கள். உங்கள் அருகே விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அறைக்கு வெளிச்சத்தை தருவதற் கென்று இருக்கும் விளக்கிற்கும் இந்த விளக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை

இந்த விளக்கை நீங்கள் அடிக்கடி பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அதன் உள்ளே நிழல் உருவம் ஒன்று அசைந்து கொண்டே இருக்கிறது. அந்த அசைவு உங்களை புன்னகைக்க வைக்கிறது. ஒருவித திருப்தியை, மகிழ்ச்சியை தருகிறது.

சற்று நேரம் படுத்துக் கொண்டி ருக்கிறீர்கள். தூக்கம் கண்ணை சுற்றுகிறது. கொட்டாவி விட்டபடி புத்தகத்தை மூடி வைக்க போகும் போது விளக்கில் இருக்கும் நிழலை பார்த்து விட்டு, மீண்டும் படிக்க உட்காருகிறீர்கள். இது என்னடா மாயமாக இருக்கிறதே என நினைக்க வேண்டாம். நிழல் மூலம் நண்பர்களோடு தொடர்பு கொள்ள ஜப்பானிய மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ள நவீன தொழில்நுட்ப சாதனத்தால் சாத்தியமாக்கக் கூடிய அற்புத காட்சிதான் இது.

நண்பர்களாக இருக்கும் எல்லோருக் கும் அதிலும் குறிப்பாக கல்லூரி பருவத்தில் இருப்பவர் களுக்கு தங்களுடைய நெருக்கமான நண்பர் இப்போது என்ன செய்து கொண்டிருப் பார் என்று அறியும் ஆர்வம் சமயங்க ளில் ஏற்படும். அது போன்ற நேரத்தில் நண்பரை பார்க்க அல்லது தொடர்பு கொள்ள தோன்றும். செல்போன் யுகத்தில் இதுவொரு பெரிய விஷயமல்ல.

ஆனால் இதெல்லாம் விட இந்த நிழல் யுக்தி மிகவும் அற்பதமானது. டெலி ஷேடோ எனும் பெயரில் இதனை ஜப்பானிய மாணவரான யசுடா என்பவர் உருவாக்கி இருக்கிறார்.
மேலே பார்த்த காட்சியில் இருந்த அலங்கார விளக்குதான் இந்த சாதனத்தின் முக்கிய பகுதி. இந்த விளக்கில் தெரிந்த நிழல் உருவம் எங்கேயோ இருந்த உங்கள் நண்பரின் தோற்றம்.

நண்பர் தனது அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனும் காட்சி நிழல் உருவாக இந்த விளக்கில் தெரிந்து கொண்டே இருக்கும். அதனை பார்ப்பதன் மூலமாக நண்பர் என்ன செய்கிறார் என்பதை உணர்வ தோடு, அவர் அருகாமையில் இருக்கும் உணர்வையும் பெறலாம்.

நண்பர் படித்துக் கொண்டிருக் கிறாரா அல்லது கனவு காண்கிறாரா, பாட்டு கேட்கிறாரா போன்ற விவரங்களை விளக்கை பார்த்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இது வீடியோ யுகமும் என்பதால் நண்பர்களின் அருகாமையை உணர வேண்டுமென்று நினைப்பவர்கள் வீடியோ காட்சி மூலம் அல்லது இன்டெர் நெட்டில் பொருத்தப்பட்ட வெப்கேம் மூலம் நண்பர்கள் செய்வதை பார்க்கலாம்தான்.

ஆனால் அதற்கும் இந்த நிழல் யுக்திக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. வீடியோ காட்சியை பார்க்கும்போது நீங்கள் அதிலேயே மூழ்கி உங்கள் வேலை தடைபட்டு விட வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த நிழல் விளக்கு உங்கள் வேலையில் எந்தவிதத்திலும் குறுக்கிடாது. சொந்த வேலையை கவனித்தபடி நண்பர்க ளின் செயலை நிழல் வடிவில் தேவைப் படும்போது பார்த்துக் கொள்ளலாம்.

இதனை உருவாக்கிய மாணவர் யசுடா, புகைப்படத்திற்கும், வீடியோ காட்சிக்கும் இடைபட்ட சாதனம் இது என்று கூறுகிறார். புகைப்படத்தில் நினைவு மட்டும்தான் இருக்கும். வீடியோ காட்சியில் சகலமும் இருக்கும். ஆனால் வேலையை பாதிக்கும். இந்த இரண்டும் இடைபட்ட வகை யில் நண்பர்களின் அருகாமையை இடைஞ்சல் இல்லாத வகையில் நிழல் விளக்கு ஏற்படுத்துகிறது.

ஜப்பானிய வீடுகளில் திரை சீலை சுவர்கள் அமைக்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்த திரை சீலை சுவர்களை ஜப்பா னில் ஷோஜி என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் காகிதத்தாலான இந்த சுவர்கள் மெலிதாக இருக்கும். அறையின் தடுப்பாக இருப்பதோடு மறுபக்கத்தில் இருப்பவர்கள் செய்வதை பார்க்கக் கூடிய வகையில் இருக்கும். ஆனால் முழு உருவமும் தெரியாது. நிழல் உருவம் மட்டுமே தெரியும்.

அடுத்தவரின் அந்தரங்கத்தில் ஊடுருவாமல் அவர் செய்வதை தெரிந்து கொள்ள இந்த திரை சீலை சுவர் பயன்படுவதாக ஜப்பானியர்கள் கருதுகின்றனர். இந்த சுவற்றை பார்த்துதான் யசுடாவுக்கு நிழல் விளக்கை வடிவமைக்கும் யோசனை பிறந்ததாம். தொலை தூரத்தில் இருக்கும் நண்பர் களின் செயலை நிழல் விளக்கில் கார்ட்டூன் போல பார்த்து ரசிக்கும் வகையில் இந்த நிழல் விளக்கை வடிவமைத்துள்ளார்.

இந்த விளக்கின் கீழே ஒரு புரஜக்டர் இருக்கிறது. அந்த புரஜக்டரில் நண்பர் அறையில் பொருத்தப்பட்டுள்ள வீடியோ காமிராவில் பதிவாகும் காட்சி கள் வந்து சேரும்.
அதிலுள்ள விசேஷ சாப்ட்வேர் வீடியோ காட்சியை நிழல் உருவமாக மாற்றி விளக்கில் மின்ன வைக்கும். ஒரே சமயத்தில் நான்கு நண்பர் களோடு இந்த நிழல் விளக்கு மூலம் தொடர்பு கொள்ளலாம்.

சோதனை முயற்சியாக இந்த நிழல் விளக்கை யசுடா தயார் செய்திருக் கிறார். நடைமுறையில் இது பயன் பாட்டுக்கு வருமா? என்பது ஜப்பானி யர்கள் இதன் தேவையை உணர்வதை பொருத்தே இருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.