டொமைன் ரகசியம்-1

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா?
குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

.
ஜூர்பியர் பணம் சம்பாதிக்க தேர்வு செய்திருக்கும் முறையை குறுக்கு வழி ஆனால் நேர்மையான குறுக்கு வழி என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. எதையுமே செய்யாமல் எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் அதிக முதலீடுமின்றி, சுலபமாக பணத்தை அல்லது பலன்களை அள்ளிக் குவிப்பது என்பதே குறுக்கு வழிக்கான இலக்கணமாக இருக்கிறது.

ஜூர்பியரும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார். அவரது வர்த்தக திட்டம் பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம். “டாட் டிகே’ எனும் முகவரியின் உரிமையை பதிவு செய்து கொண்டு, அந்த முகவரியில் கூடுதலாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முகவரிக்கும் அவர் வருவாயை தேடிக் கொண்டிருக்கிறார்.

இது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள டொமைன் பெயர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் முகவரிகள் பொதுவாக டொமைன் பெயர் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பல ரகம் உண்டு. பரவலாக அறிந்த டாட் காம்ஐ தவிர டாட் ஓஆர்ஜி, டாட் நெட் போன்ற முகவரிகளும் இருக்கின்றன. இதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் பெயரை குறிக்கும் சுருக்கத்தை கொண்ட முகவரிகளும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு இந்திய முகவரிகள் என்றால் டாட் இன். பிரிட்டன் முகவரிகள் என்றால் டாட் யு.கே. ஆஸ்திரேலிய முகவரி என்றால் டாட் ஏ.யு. இவை சம்பந்தப்பட்ட நாடு களுக்கான பிரத்யேக இணைய முகவரிகள். டொமைன் பெயர்கள் வரலாற்றில் அவற்றில் முக்கியமானதாக கருதக் கூடியவற்றை முதலிலேயே பதிவு செய்து கொண்டு பின்னர் அதற்கு தொடர்புடையவர்கள் அதனை கேட்டு வந்தபோது பேரம் பேசி அதிக பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.

இதற்கு ஏறக்குறைய தடை விதிக்கப்பட்டு விட்டது. இதை தவிர டொமைன் தயாரிப்புகள் மூலம் சம்பாதிக்க மற்றொரு சுவாரசியமான வழி இருக்கிறது. அது பிரபலமாக இருக்கக் கூடிய இணையதளங்கள் போல தோன்றக் கூடிய ஆனால் சிறிய வேறுபாட்டை கொண்ட முகவரிகளை பதிவு செய்து கொள்வது.

இணைய முகவரிகளை டைப் செய்யும்போது கை தவறி ஒரு எழுத்து கூடுதலாக அல்லது குறைவாக அல்லது மாறி அடித்து விடுவது உண்டல்லவா. அப்போதெல்லாம், நாம் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த எழுத்து தொடரக் கூடிய இணையதளம் எட்டிப் பார்த்து வியக்க வைக்கும். அந்த தளத்தில் அநேகமாக அதிக விவரங்கள் இருக்காது.

ஒரு சில தகவல்கள் பட்டியலிடப்பட்டு ஏதாவது இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நிச்சயமாக கூகுல் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விளம்பரங்களில்தான் விஷயமே இருக்கிறது. கூகுல் விளம்பரங்களில் க்ளிக் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு ஒரு சிறிய தொகை வருவாயாக கிடைக்கும்.

இந்த விளம்பர முறை கூகுலுக்கு வருவாயை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. கூகுலுக்கு மட்டுமல்ல; அதனோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இணையதளங் களுக்கும் இது சீரான வருவாயை தருகிறது. இத்தகைய விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளம்பரம் என்று பெயர். அதாவது இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருப்பதற்கு பொருத்தமான

இணையதளங்களில் விளம்பர இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த பக்கத்தை படிப்பவருக்கு ஆர்வமுட்டக் கூடிய வகையில் இருக்கும் என்பதால் மாமூலான, பொதுவான விளம்பரங் களை விட இவை க்ளிக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுவான விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடும். இந்த விளம்பரங்கள் அவற்றின் பொருத்தம் காரணமாக பயனுள்ள இணைப்புகள் போலவே கருதப்படும்.

எனவே முன்னணி தளங்கள் உட்பட பல தளங்கள் இந்த விளம்பரங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றன. இந்த முறையையே மற்ற இணைய தளங்களும் புத்திசாலிதனமாக பயன்படுத்தி வருகின்றன. அந்த வழியை தொடர்ந்து பார்ப்போம்…

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டொமைன் ரகசியம்-1

 1. அருமை நண்பரே!
  தொடர்ந்து தாருங்கள்!!

  உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்!

  Reply
 2. pirabuwin

  அருமையான பதிவு.

  Reply
 3. butterflysurya

  பயனுள்ள அருமையான பதிவு..

  சூப்பர்.

  வாழ்த்துக்கள்

  சூர்யா
  சென்னை

  Reply
 4. Google Adsense Home Based online jobs

  Google Adsense New Approved Tricks 2011

  Just Pay $40 Only. If you need adsense Accounts Just Send your Information.

  Required Information:

  Name:

  Address of Communication:

  Mobile Number:

  New G-mail ID’s With Password Also:

  Payment Method:

  Indian Members Pay In Bank Deposit

  Rs.1200 Only/-

  Other Country Members:

  Paypal —-> $40

  Alertpay —->$40

  More info visit http://www.onedayonline.co.cc

  More info contact my mail ID—-> janakiraman986@gmail.com

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *