காகிதத்தில் ஒரு குரல்

1paperஎதிர்காலத்தில் என்னவெல் லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் உண்மைலேயே பிரமிப்பாகத் தான் இருக்கிறது.
பளபளப்பான காகிதத்தில் அச்சாகி யிருக்கும் உயர்தர பத்திரிகையை புரட்டிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதி லுள்ள படங்களை பார்த்து பிரமிப்ப தோடு அவற்றை மூடி வைத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.
அந்த படத்தை கிளிக் செய்தீர் கள் என்றால், அதாவது அதனை தொட்டாலே போதும் அந்த படம் பேசத் தொடங்கி விடும்.
உதாரணத்திற்கு ஒரு நட்சத்திரத்தின் பேட்டி என்று வைத்துக் கொள்ளுங்க ளேன். அந்த பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் கிளிக் செய்தவுடன் அந்த நட்சத்திர பேட்டியை படிக்காமல் அவரது பேட்டியை அப்படியே கேட்டு ரசிக்கலாம்.
இதே போல நாளிதழ்களில் வரும் விளையாட்டு செய்திக ளில் வர்ண னையை கேட்கலாம்; இன்னும் என்ன வெல்லாமோ நடக்க சாத்தியமுள்ளது.
இந்த மாயமெல்லாம் எப்படி சாத்திய மாகும் என்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் நவீன டிஜிட்டல் காகிதத்தால் தான்.
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானிகள் இப்படி பேசும் காகிதங்களை ஆய்வு மூலம் உருவாக்கி உள்ளனர். இவற்றை அவர்கள் டிஜிட்டல் காகிதம் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த காகிதத்தில் என்ன விசேஷம் என்றால் அவை மின்சாரத்தை கடத்தக் கூடிய இங்க்கால் நிரப்பப்பட்டு இருக்கிறது. மேலும் தொடு உணர்வை புரிந்து கொள்ள கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு. அதோடு அச்சிடப் பட்ட ஸ்பீக்கரும், அதில் இணைக்கப் பட்டுள்ளது.
இந்த மூன்றும் சேர்ந்துதான் மேலே விவரித்தது போன்ற மாயங் களை எல்லாம் சாத்தியமாக்கு கிறது.
இந்த டிஜிட்டல் காகிதத்தில் செய்தி, தகவல், பேட்டி போன்ற வற்றை ஒளிப்பதிவு செய்து அதனை அச்சி டப்பட்டிருக்கும் ஸ்பீக்கரோடு இணைத்து விட்டால் போதும். அந்த காகிதத் தின் மீது கை வைக்கும் போது அந்த ஸ்பீக்கர் பேச தொடங்கி விடும்.
கேட்டால் ஏதோ மாயாஜால கதை போல இருக்கலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியமே என்றார் மைக்கேல் குலிக்சன். இதன் மாதிரி வடிவத்தை அவர் தனது ஆய்வுக் கூடத்தில் உருவாக்கியும் காட்டி இருக்கிறார்.
இத்தகைய டிஜிட்டல் காகிதம் வருங்காலத்தில் விளம்பர நிறுவனங் களால்
விதவிதமான வழிகளில் பயன் படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார்.
பொது இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை இத்தகைய டிஜிட் டல் காகிதங்களை பயன் படுத்தினால் பொதுமக்கள் அவற்றை பார்த்து ரசிப்பதோடு, கேட்டு மகிழலாம்.
விளம்பர நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு தொடர்பான தகவல்களை இந்த முறையில் வாடிக்கையாளர் களிடம் சுலப மாக கொண்டு சேர்க்க முடியும்.
விளம்பர நிறுவனங்கள் மட்டுமல்லா மல் பொருட்களை பேக் செய்யும் போதும்
டிஜிட்டல் காகிதங்களை பயன்படுத்தலாம்.
தற்போதைய நிலையில் இந்த வகை டிஜிட்டல் காகிதத்தை உருவாக்க அதிக நேரமும், அதை விட அதிக தொகையும் தேவைப் படுகிறது. ஆனால் வருங்காலத் தில் இதற்கு தேவைப்படும் நேரம் மற்றும் செலவை கணிசமாக குறைத்து விடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது சாத்தியமானால் இந்த வகை டிஜிட்டல் காகிதங்கள் எல்லா இடத்தி லும் புழக்கத்திற்கு வந்து விடும்.
சாக்லெட் உறைகளை டிஜிட்டல் காகிதத்தில் தயார் செய்கிறோம் என்று வைத்துக் கொள்கிறோம். அதனை தொட்ட உடனே அந்த சாக்லெட்டின் அருமை, பெருமையை கதை போல கேட்க முடியும்.
அதே போல டிஜிட்டல் காகிதத் தாலான சிகரெட் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே அதிலிருந்து புகைப் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனும் உபதேசத்தையும் காதில்
கேட்கலாம்.
வாசகமாக படித்தால் இதனை எளிதாக அலட்சியம் செய்து விட தோன்றும். ஆனால் உபதேசத்தை கேட்கும் போது நிச்சயம் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது. அதற்காக வேனும் இந்த டிஜிட்டல் காகிதம் விரைவில் புழக்கத்திற்கு வர வேண்டும் என்று எதிர் பார்க்கலாம்.
———-

0 thoughts on “காகிதத்தில் ஒரு குரல்”

Leave a Reply to valaipookkal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *