டிவிட்டரில் திருக்குற‌ள்

twt4கம்பராமயணத்தை யாராவது டிவிட்டர் மூலம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
இல்லை கம்பராமயணத்தை டிவிட்டரில் கொன்டு வருவது கடினம்.அதை விட திருக்குறள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.தினம் ஒரு டிவிட்டர் குறள் என்று அமர்க்களப்படுத்தளாம்.
டிவிட்டர் அநேகமாக‌ உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.உலகம் போற்றும் உன்னதமான குறும் வலைப்பதிவு சேவை இது.மைக்ரோ பிளாகிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.140 சொற்க‌ளில் செய்திகளை வெளியிட வழி செய்யும் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது வேகமாக பிரபலமாகி வருகிற்து.
ஆரம்பத்தில் “நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க அறிமுகமான டிவிட்டர் நாளடைவில் மிகவும் பிரபலமாகி வேறு பல வித்ங்களிலும் பயன்படலாயிற்று. இன்று டிவிட்டர் எத்தனையோ வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற‌து.இதில் வியப்பூட்டும் வழிகள் அநேகம் இருக்கின்றன.
இந்த வகையில் இப்போது ஆங்கில மகாகவி சேக்ஸ்பியரின் நாடகத்தை டிவிட்டருக்கு கொண்டு வந்துள்ளனர்.

அதாவது சேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றை டிவிட்டர் மூலம் வெளியிட தொடங்கியுள்லனர்.இதற்காக டிவிட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.டேமிங் ஆப் த ஷுரு என்னும் நாடகம் தேர்வு செய்யப்பட்டு அதன் பிராதான பாத்திரங்களுககான டிவிட்டர் கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினம் ஒரு காட்சி என்ற முறையில் பாத்திரங்கள் வாயிலாக வசனங்கள் டிவிட்டர் செய்யப்பட உள்ளன. 140 வார்த்தை என்பதால் வசணங்கள் கொஞ்சம் சுருக்கப்படும்.
இந்த முயற்சியை துவக்கியுள்ளவர் இதனை சேக்ஸ்பரிமண்ட் என்று அழைக்கிறார்.
இது கொஞம் ஓவர் என்று சிலர் கூறினாலும் சேக்ஸ்பியரை மக்களிடம் கொண்டு வரும் நல்ல முயற்சி என்றும் பாராட்டப்படுகிற‌து. இது வெற்றி பெறுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும் , நாமும் கூட தமிழ் இலக்கியத்தை ட்விட்டர் செய்யலாம் அல்லவா?
அப்படி செய்ய முற்ப்பட்டால் இரண்டு அடியில் உலகை அள‌ந்து விடும் குறள் அத்ற்கு மிகவும் ஏற்றது அல்லவா?

————–
link;
http://twitter.com/AmwayShakes

—————–

(

டிவிட்டர் ப‌ற்றி எழுத நிறைய சுவாரஸ்யமான விஷய்ங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுத உள்ளேன்

.)

0 thoughts on “டிவிட்டரில் திருக்குற‌ள்”

  1. //140 சொற்க‌ளில் செய்திகளை ..//

    140 சொற்கள் அல்ல. 140 எழுத்துக்கள்.

    அதாவது அதிகபட்சம் 140 எழுத்துகளில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *