புகைப்படங்களுக்கான பேஸ்புக்

பிரபலமான பிலிக்கரில் துவங்கி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான வசதியை அளிக்கும் இணைய தளங்களும், சேவைகளும் எண்ணற்றவை இருக்கவே செய்கின்றன. இருப்பினும் இந்த வரிசையில் அறிமுகமாகி இருக்கும் புதிய இணைய தளமான ஸ்னாப் டாட் மீ தளத்தை வித்தியாசமானது என்று சொல்லலாம். புகைப்பட பகிர்வு தளங்களில் கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் இது விளங்குகிறது. வழக்கமான புகைப்பட தளங்களுக்கு மாறாக இந்த தளம் வெப் கேமிராவில் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இணைய வாசிகளில் பலர் வெப்கேம் பிரியர்களாகவும் இருக்கின்றனர். வெப்கேமில் பதிவாகும் காட்சிகளை அப்படியே வீடியோவாக ஓட விடும் வசதியும் இருக்கிறது. வெப்கேம் காட்சிகளை தொகுத்து வழங்கும் இணைய தளங்களும் இருக்கின்றன. ஆனால், வெப்கேமிராவில் எடுக்கப்படும் புகைப்படங்களை பதிவு செய்யவும், அவற்றை மற்றொருவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் ஒரு இணைய தளம் இல்லை என்ற குறையை போக்கும் வகையில் ஸ்நாப் டாட் மீ அறிமுகமாகி உள்ளது. வெப்கேம் வைத்திருப்பவர்கள், அவற்றின் மூலம் எடுக்கப்படும் காட்சிகளை இந்த தளத்தில் பதிவு செய்யலாம். இந்த புகைப்படங்களை பிலிக்கர் உட்பட மற்ற வலைப்பின்னல் தளங்களின் வாயிலாக நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல், இந்த தளத்திலேயே இணைய வாசிகள் தங்களுக்கான வலைபின்னளை உருவாக்கிக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த தளத்தை புகைப்படங்களுக்கான பேஸ் புக் என்றும் சொல்லலாம். தளத்தில் உறுப்பினர்களாக சேரும் இணைய வாசிகள், தங்களது புகைப்படங்களின் மூலம் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

அந்த படங்களை பார்த்து ரசிப்பவர்கள் அவை குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து தங்களது நண்பர்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு வலைப்பின்னளில் சேருபவர்களுக்கு புதிய புகைப்படங்கள் இடம் பெறும் போது அவைப்பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆக இணைய வாசிகள் புகைப்படங்களின் மூலமே தங்களது நட்புக்குழுவோடு பேசிக் கொள்ளலாம். நட்பையும் வளர்த்துக் கொள்ளலாம். இந்த தளத்தின் முகப்பு பகுதி எளிமையாக, அழகாக இருக்கிறது. வெப்கேம் புகைப்படங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

அவற்றை கிளிக் செய்தால் புகைப்படங்கள் பற்றிய விவரங்களை தெரிவித்துக் கொள்ளலாம். மேலும் படங்களை பார்க்க வேண்டும் என்றால் தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே போகலாம். புகைப்படங்கள் எத்தனை முறை பார்க்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம். புகைப்பட பிரியர்களுக்கு நிச்சயம் இந்த தளம் சுவாரஸ்யமானதாக விளங்கும். வெப் கேம் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதே இந்த தளத்தின் நோக்கம் என்றாலும், ஐ போன் மற்றும் ஆன்டிரியாட் போன் மூலம் படங்களை பகிர்ந்து கொள்ளும் கூடுதல் வசதியும் உண்டு.

———

http://snapp.me/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புகைப்படங்களுக்கான பேஸ்புக்

  1. kuthalingam

  2. Pingback: புகைப்படங்களுக்கான பேஸ்புக் : வலைச்சரம்

Leave a Comment to bayaji Cancel Reply

Your email address will not be published.