யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வழி

view_pure_2வீடியோக்களை பார்த்து ரசிப்பது என்று வரும் போது யூடியூப் பெஸ்ட் . ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிக்கும் போது , பக்கவாட்டில் விளம்பரங்களை பொறுத்துக்கொண்டாக வேண்டும். இத்தைகைய விளம்பர இடையூறுகள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க வழி செய்யும் இணையதளங்களும் இல்லாமல் இல்லை. வியுபியூர் சேவையும் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.

யூடியூப் வீடியோக்களை சுத்தமாக்கி தருவதாக இந்த இணையதளம் சொல்கிறது. அதாவது யூடியூபி வீடியோ தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பக்கவாட்டில் தோன்றக்கூடிய தொடர்புடைய வீடியோ பரிந்துரை மற்றும் பின்னூட்டங்கள் போன்ற இடையூறுகள் இல்லாமல் தேர்வு செய்த விடியோவை மட்டும் பார்க்கலாம். இதற்காக பார்க்க விரும்பும் யூடியூப் வீடியோ இணைப்பை மட்டும் இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் விளம்பரம் போன்றவற்றை நீக்கி சுத்தமாக்கி விடுகிறது.

வழக்கமான யூடியூப்பில் பார்ப்பதற்கும் வியுபியூர் சேவையில் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்பதை முகப்பு பக்கத்திலேயே காட்சி வீடியோவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த சேவைக்கான புக்மார்கிங் வசதியும் உள்ளது. அதன் மூலம் நேரடியாக யூடியூப் தளத்திலேயே இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வீடியோ பிரியர்களுக்கு சரியான சேவை இது. ஆனால் சில வீடியோக்களில் இந்த தூய்மை படுத்தலையும் மீறி விளம்பரங்கள் எட்டிப்பார்க்கலாம். அவற்றை பொறுத்துக்கொள்வதைவிட வேறு வழியில்லை. பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள்.

இணைய முகவரி; http://viewpure.com/

——————-

பி.கு; யூடியூப் சேவை பற்றி ஏற்கனவே பல முறை எழுதியுள்ளேன். இதே போன்ற சேவையை கூட ஒரு முறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

பொதுவாக விளம்பரம் இல்லாமல் யூடியூப் வீடியோவை பார்க்க விரும்புவது நல்ல விஷ்யம் தான். ஆனால் பின்னூட்டங்களை இடைஞ்சலாக மட்டுமே என்னால் கருத முடியவில்லை. பல நேரங்களில் பின்னூட்டங்களில் பயனுள்ள மற்றும் சுவயான தகவல்களை அறியலாம். திரைப்பாடல் தொடர்பான வீடியோக்கள் இதற்கு சாட்சி. பல வீடியோக்களில் ரசிகர்கள் அந்த பாடல் பற்றி உருகி இருப்பதை பார்க்கலாம். மேலும் குறிப்பிட்ட பாடல் தொடர்பாக அறிய தகவல்களையும் பின்னூட்டமாக தெரிவித்திருப்பார்கள். உதாரணமாக ,மேயர் மீனாட்சி படத்தில் கே.ஆர்.விஜயா பாடும் பாடலில் , அவர் நாயகியாக கொடிகட்டிப்பறந்த ஆண்டு என ஒரு ரசிகர் குறிப்பிட்டிருப்பார்.

இதே போல எஸ்.பி.பி. சிவாஜிக்காக பாடிய முதல் பாடலில் சிவாஜி அவருக்கு தைரியம் அளித்ததை ரசிகர் ஒருவர் சுட்டிக்காட்டியிருப்பார். இன்னும் பல உதாரணங்கள் உண்டு.

1in

யூடியூப் தொடர்பான சுவாரஸ்யமான இணையதளங்கள் எனது இணையத்தால் இணைவோம், தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக யூடியூப் கால இயந்திர சேவை நான் ரசித்து எழுதியது. ; புத்தக்ம் கிடைக்குமிடம்: http://nammabooks.com/buy-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-Inaiyathal-Inaivom-Mathi-Nilayam

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “யூடியூப் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் பார்க்க வழி

 1. நந்திதா

  வணக்கம்
  பல பயனுள்ள தகவல்களைத் தளராமல் தந்து கொண்டிருக்கும் தங்களைப் புகழ்ந்து பேச தக்க வார்த்தைகள் இல்லை. உளமார்ந்த நன்றி
  அன்புடன்
  நந்திதா

  Reply
  1. cybersimman

   ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி. இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் அடைய செய்யும் முயற்சியே இந்த வலைப்பதிவு;

   முடிந்தால் என் தொகுப்பு நூலையும் படித்துப்பார்த்து கருத்துக்களை பகிரவும்.

   சிறந்த இணையதளங்கள் பற்றிய விரிவான அறிமுகங்களை கொண்ட ’இணையத்தால் இணைவோம்’; http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

   Reply
 2. RAVICHANDRAN R

  Meendum oru nalla thagaval

  Reply
  1. cybersimman

Leave a Comment to நந்திதா Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *