டியூட் உனக்கொரு இமெயில் 1 – இணைய உலகின் ரஜினி!

nடியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இமெயில் வடிவில் இந்தத் தொடர் அமைய இருக்கிறது. இமெயில் என்பது கூட ஒரு குறியீடுதான். மற்றபடி, வாசக நண்பர்களுடன் தொழில்நுட்ப உலகம் சார்ந்த விஷயங்களை பேசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொழில்நுட்ப உலகின் புதிய போக்குகள், நாளைய நுட்பங்களின் முன்னோட்டம், தெரிந்துகொள்ள வேண்டிய இணைய ஆளுமைகள், கேட்ஜெட்கள் என பலவற்றை இதன்மூலம் பகிர்ந்துகொள்ள விருப்பம்.

உள்ளடக்கம் முழுக்க முழுக்க நவீன உலகின் அப்டேட்டாக இருந்தாலும், இந்தத் தொடருக்கான இன்ஸ்பிரேஷன் அண்ணா, கலைஞர், நேரு போன்ற மாபெரும் தலைவர்கள் மக்களுக்கு எழுதிய கடிதங்கள்தான். தங்கள் பணிச்சுமைக்கு மத்தியிலும் இந்தத் தலைவர்கள், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு வழிகாட்டக்கூடிய விஷயங்களை நட்போடு பகிர்ந்து கொள்ளவும் கடிதங்களை பயன்படுத்தினர்.

அதே பாணியில், உங்களோடு இமெயில் வாயிலாக தொடர்புகொள்வது போல இந்தத் தொடர் அமையும் என நம்புகிறேன். பதில் மெயில்கள் மூலம் இந்த உரையாடலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது உங்கள் பொறுப்பு:

*****

இந்த வார மெயிலை ஜெப் டீனுடன் துவக்குவோம்.

யார் இந்த ஜெப் டீன் (Jeff Dean)?

இணைய உலகில் கொஞ்சம் கெத்தான மனிதர் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

ஜெப் டீன் யார் என்று தெரிந்துகொள்வதற்கு முன், குவோரா (quora) தளத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஏனெனில் குவோராவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம்தான் ஜெப் டீன் கண்னில் பட்டார்.

‘ஜெப் டீன்’ போன்ற மென்பொருள் பொறியாளர்களை மற்ற சராசரி பொறியாளர்களிடம் இருந்து வேறுபடுத்துவது எது? என்பது தான் கேள்வி – பதில் தளமான குவோராவில் கேட்கப்பட்டிருந்த கேள்வி.

கேள்வி பதில் தளம் என்று மட்டும் சொல்வது குவோராவுக்கான சரியான அறிமுகம் இல்லை என்பது என் கருத்து. குவோராவில் மூழ்கிப் பார்த்தால் நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள். குவோராவை கேள்வி பதில்களுக்கான இணைய சமூகம் என்று சொல்லலாம். இல்லை எனில் கேள்வி பதில்களுக்கான சமூக வலைப்பின்னல் என்றும் சொல்லலாம். இதில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் பெரும்பாலும், இந்த யாரும் வெறும் யாரோவாக இருப்பதில்லை.
குழப்புகிறதா?

அதாவது, அனாமதேயமாக யாரும் தலையை காட்டி ஏதாவது பதில் சொல்வதில்லை. பெரும்பாலும் எல்லோரும் பொறுப்பாகவே பதில் அளிக்கின்றனர். அதைவிட முக்கியம் சின்சியராக பதில் அளிப்பதை பார்க்கலாம். இன்னொரு முக்கிய விஷயம், பல நேரங்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தப்பட்ட நபரே பதில் அளிக்கும் வாய்ப்பு அதிகம்.

கேள்வி பதில்கள் மூலம் தொடர்பு கொள்ளும் தளம் என்பதால், இதில் கேட்கப்படும் கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் சுவாரஸ்யமானவையாகவும், அநேகமாக பலன் உள்ளவையாகவும் இருப்பதை பார்க்கலாம்.

குவோரா பற்றி இன்னும் நிறைய குறிப்புகள் சொல்லலாம். வரும் மெயில்களில் பார்க்கலாம். இப்போது டீன் கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.

டேட்டா விஞ்ஞானியான ஹேகன் ஸ்டிராண்ட் என்பவர் இதற்கான பதிலை அளித்திருந்தார். சராசரி என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை, அதற்கு பதிலாக அதிக அறியப்படாத நல்ல திறமையான மென்பொருளாளர்களிடம் இருந்து டீனை வேறுபடுத்துவது எது என கேள்வியை மாற்றி அமைத்துக்கொண்டால், ஒருவர் நினைக்கும் அளவுக்கு வேறுபாடு பெரிதல்ல என நினைக்கிறேன் என அவர் தனது பதிலை அசத்தலாக துவக்கியிருந்தார்.

டியூட், இந்தப் பதிலின் தன்மையை கவனித்தாயா?

மாற்று கருத்துடன் தான் பதிலை துவக்குகிறார். ஆனால் அந்த மறுப்பை எத்தனை நயமாக வெளிப்படுத்துகிறார். இதை குவோராவின் ஹால்மார்க் என்று சொல்லலாம். இணையத்தில் உரையாடும்போது நம் பின்பற்ற வேண்டியது இந்த வகை அணுகுமுறையை தான். கலாய்ப்பது, கழவியூற்றுவது எல்லாம் கலகலப்பாக இருக்கும் என்றாலும், எப்போது எங்கே நகைச்சுவையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிய வேண்டும். அதோடு நகைச்சுவை பொருந்தாத இடங்களையும் அறிய வேண்டும். மேலும் எதிர்க் கருத்தை சொன்னாலும், அதை மென்மையாக பதிவு செய்வது தேர்ந்த உரையாடலுக்கு வழி வகுக்கும்.

இவை அறிவுரை அல்ல, ஒரு பகிர்தல் அவ்வளவு தான். சரி, டீன் தொடர்பான அறிமுகத்திற்கு மீண்டும் வருவோம். டீன் அவர் சாதித்திருப்பதற்கு தகுதியான அசாதரணமான மென்பொருளாளர் தான், ஆனால் அதே அளவு அறியப்படாத பலரும் அவரைப்போலவே திறன் பெற்றவர்கள்தான் என்று தனது பதிலை தொடர்கிறார் ஸ்டிராண்ட். அவர் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததே முக்கிய காரணம் என்றும் குறிப்பிடுகிறார்.

டீன் 1999-ல் கூகுள் நிறுவனத்தின் முதல் 50 ஊழியர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார் என்பதும், நிறுவனத்தின் அசுர வளர்ச்சியில் டீனுக்கும் பங்கிருக்கிறது என்பதும் பதிலின் சாரம்சமாக அமைகிறது.

ஆக, டீனைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால், கூகுளின் ஆரம்ப கால ஊழியர்களில் ஒருவர், இப்போது கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைவர் என்பதை எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும். இது கிட்டத்தட்ட விக்கிபீடியா பாணி அறிமுகம். இதில் சுவாரஸ்யம் இல்லை; டீன் உண்மையில் யார் என்றும் தெரியவில்லை. n1

குவோரா தளத்திலேயே டீன் பற்றி வேறு ஒரு கேள்வி இருக்கிறது. ஜெப் டீன் பற்றிய அதிசய தகவல்கள் எவை? எனும் அந்த கேள்விக்கான பதில் தான் அசர வைப்பதாக இருக்கிறது. டீன் பற்றிய இந்த தகவல்களே அவருக்கு இணைய உலகில் கல்ட் அந்தஸ்து ஒருப்பதை உணர்த்துகிறது. ஒரு ஸ்டீவ் ஜாப்ஸ் போல, பரவலாக அறியப்படாவிட்டாலும், புரோகிராமிங் தெரிந்தவர்கள் மத்தியில் அவர் ஒரு லெஜண்டாக இருக்கிறார்.

இதை உணர்த்தக்கூடிய டீன் தகவல்கள் சிலவற்றை பார்ப்போமா?

* டீனின் சாதனைகள் அதிகம் என்பதால் அவரது பயோடேட்டாவில், உள்ளடக்க பட்டியல் உண்டு.

* ஆதியில் கடவுள் ஒளி உண்டாகட்டும் என்றார். ஜெப் டீன்தான் அதற்கான கோடிங்கை எழுதினார்.

* நீங்கள் உங்கள் பணியை டீனிடம் விளக்க முடியாது. அவர்தான் உங்களை பணியை உங்களுக்கு விளக்குவார்.

* கிரஹாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தபோது, டீனிடம் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது.

* ஆப்பிள் லோகோவில் இருந்து ஆப்பிளை கடித்தது டீன்தான்.

* டீன் தூங்குவதில்லை, பிரபஞ்சத்தை அவர் தூங்கச்செய்கிறார்.

* டீன் கீபோர்டில் கண்ட்ரோல் விசையே கிடையாது, அவர் எப்போதும் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார்.

இப்படி நீள்கிறது டீன் தகவல்கள். இவை எல்லாமே மிகையானவை என்றாலும், அடிப்படையில் டீனின் அசாதரண ஆற்றலை உணர்த்துபவையாக இருக்கின்றன. இந்தத் தகவல்களில் பெரும்பாலானவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என்றாலே கம்ப்யூட்டர், கோடிங் போன்றவற்றை நுனிப்புல்லாகவேனும் அறிந்திருக்க வேண்டும். நீங்களே படித்துப் பார்த்து சொல்லுங்கள்.

அட, கூகுளில் இப்படி ஒரு கோடிங் சிங்கமா? என ஜெப் டீன் வியக்க வைக்கிறார். டீன் மீது இப்படி ஒரு அபிமானமா என்ற வியப்பும் ஏற்படுகிறது. டீன் தொடர்பான இந்த தகவல்கள் இணையத்தில் இதேபோல பிரபலமாக இருக்கும் சக் நாரிஸ் தகவல்களுடன் ஒப்பிடப்படுகிறது. ஹாலிவுட் நடிகரான சக் நாரிஸ் பற்றி இணையத்தில் சொல்லப்படும் அசாதாரண தகவல்களே இப்படி சொல்லப்படுகின்றன.

ஆனால், என்னைப் பொறுத்தவரை சக் நாரிசை விட, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒப்பிடும்போதே டீனின் பெருமையை புரிந்துகொள்ள முடியும்.

தூத்துக்குடி பிரச்சனை காரணமாக ரஜினி இப்போது கொஞ்சம் மாட்டிக்கொண்டு முழித்தாலும், இணையத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு வியக்க வைப்பது. ரஜினி தொடர்பான துணுக்குகளை மட்டும் படித்துப் பாருங்கள், அவரது சூப்பர் ஸ்டார் கெத்து புரியும்.
சாம்பிளுக்கு ஒன்றை பார்க்கலாமா?

எல்லோரும் ஐபேட், ஐபோன், பிளாக்பெரியில் இருந்து ஸ்டேடஸ் போடுகின்றனர். ரஜினி கால்குலேட்டரில் இருந்து பேஸ்புக் ஸ்டேடஸ் போடுகிறார்.

இப்படி எண்ணற்றவை இருக்கின்றன. இதற்காக என்றே ஓர் இணையதளமும் இருக்கிறது.

எனக்கு என்னவோ, ஜெப் டீன் தகவல்களை படிக்கும்போது, அவரை இணைய உலகின் ரஜினி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நிற்க, டீனைப் பற்றி படிக்கும்போது அவர் புரோகிராமிங்கில் எத்தனை பெரிய கில்லாடி என்பதை அறிய முடிகிறது. கூகுளால் அவர் வளர்ந்தார் என்றாலும், கூகுள் விஸ்வரூப வளர்ச்சியில் அவரது பங்கி முக்கியமானது. சொடக்கு போடுவதற்குள் கூகுள் தேடல் முடிவுகளை கொண்டு வந்து கொட்டும் வகையிலான அதன் தேடல் ரகசியம் மற்றும் அதற்கு தேவையான மென்பொருள் கட்டமைப்பு எல்லாம் டீனின் பங்களிப்புதான்.

அடுத்த மெயிலில் சந்திப்போம் டியூட்!

-அன்புடன்,
சைபர்சிம்மன்

நன்றி: http://www.newstm.in/news/science/technology/38391-jeff-dean-and-rajini-on-internet.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.