Written by: "CyberSimman"

சிறந்த காட்சி விளக்கத்திற்கு உதவும் டகாஹாஷி முறை

பொருளதார வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் அறியப்படும் ஜப்பான், சிறப்பாக காட்சி விளக்கம் செய்யும் முறைகளுக்கும் அறியப்படுகிறது. ஏற்கனவே பெச்சாகுச்சா எனும் அதிவேகமாக காட்சி விளக்கம் அளிக்கும் முறை அந்நாட்டில் அறிமுகமாகி உலகமெங்கும் பரவியது போல, டகாஹாஷி எனும் இன்னொரு முறையும் பிரபலமாக இருப்பதை அறிய முடிகிறது. 20 ஸ்லைடுகள் , ஒவ்வொன்றுக்கும் 20 நொடிகள் எனும் கட்டுப்பாட்டை கொண்ட பெச்சாகுச்சா முறை, ஜப்பானுக்கே உரித்தானது என்றாலும், காட்சி விளக்கத்திற்கான அடிப்படை இலக்கணத்தை மீறாதது. இந்த முறையில் காட்சிகளுக்கான முக்கியத்துவம் […]

பொருளதார வளர்ச்சிக்கும், சுறுசுறுப்புக்கும் அறியப்படும் ஜப்பான், சிறப்பாக காட்சி விளக்கம் செய்யும் முறைகளுக்கும் அறியப்ப...

Read More »

இணைய சேமிப்பை கைவிட்ட கூகுள்!

இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக கூகுள் அறிவித்த போது எதிர்ப்பு அலை உருவாகியிருக்க வேண்டும். ஆனால், இந்த சேவை விலக்கி கொள்ளப்பட்ட செய்தி கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. தகவல் இது தான். முன்னணி தேடியந்திரமான கூகுள், சேமிக்கப்பட்ட பக்கங்கள் எனும் வசதியை தனது தேடலின் ஒரு பகுதியாக வழங்கி வந்தது. கேஷ்டு (cached) பேஜ் எனும் பெயரில் இந்த […]

இணையதள சேமிப்பு பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை எனத்தெரிகிறது. இல்லை எனில், இணைய பக்க சேமிப்பு சேவையை கைவிடுவதாக க...

Read More »

அல்டாவிஸ்டா பற்றி நீங்கள் அறிய வேண்டியவை!

அல்டாவிஸ்டா எல்லோரும் மறந்துவிட்ட, 90 ஸ் கிட்ஸ் என சொல்லப்படும் பழைய தலைமுறை பயன்படுத்திய தேடியந்திரமாக இருக்கலாம். ஆனால், கூகுளுக்கு பழகிய தலைமுறையினர் அல்டாவிஸ்டா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், அல்டாவிஸ்டா ஒரு முன்னோடி தேடியந்திரம். தேடல் நுட்பம் வளரிளம் பருவத்தில் இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பெரும் பாய்ச்சலாக அல்டாவிஸ்டா 1995 ல் அறிமுகமானது. முழு இணைய பக்கங்களையும் தேடும் ஆற்றலை கொண்டிருந்தது அதன் சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. இன்று தேடல் […]

அல்டாவிஸ்டா எல்லோரும் மறந்துவிட்ட, 90 ஸ் கிட்ஸ் என சொல்லப்படும் பழைய தலைமுறை பயன்படுத்திய தேடியந்திரமாக இருக்கலாம். ஆனால...

Read More »

கூகுளை கேள்வி கேளுங்கள்!

தமிழக எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவிஜீவிகள் மீது எனக்கு முக்கிய ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தங்கள் சார்ந்த துறையில், எல்லாவற்றையும் கேள்வி கேட்கும், விமர்சிக்கும் இயல்பும், துணிவும் (!) பெற்றிருந்தாலும், இணையம், தொழில்நுட்பம் என்று வரும் போது, இவர்கள் முன்னணி நுட்பங்களை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் தன்மை பெற்றிருக்கின்றனர் என்பது தான். உதாரணம், பேஸ்புக் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், நம்மவர்களோ பேஸ்புக் ஏதே தங்களுக்காக உருவாக்கப்பட்ட கருத்துக்களம் போல இயல்பாக ஏற்றுக்கொண்டு அதில் உழன்று […]

தமிழக எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவிஜீவிகள் மீது எனக்கு முக்கிய ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தங்கள் சார்ந்த துற...

Read More »

நான் ஏன் ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில்லை!

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறிந்து கொள்வதிலும், அறிந்தவற்றை எழுதுவதிலும் உள்ள ஆர்வம், ஏஐ சேவைகளை பயன்படுத்துவதில் இல்லை. அதிலும் குறிப்பாக எழுத்துப்பணிகக்காக ஏஐ சேவையை பயன்படுத்தும் விருப்பம் கிடையாது. எழுதுவது தொடர்பான இணைய ஆய்வுக்கும் ஏஐ நுட்பத்தை நாடுவதில்லை. இதுவரை அதற்கான தேவையை உணர்ந்ததில்லை. அதோடு, எனக்கான உள்ளடக்கம் தொடர்பான தேடலில் ஏஐ நுட்பத்தைவிட எனது தேடலே மேம்பட்டது எனும் நம்பிக்கையும் இருக்கிறது. இது […]

எல்லோரும் ஏஐ சாதனங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். என்னளவில், ஏஐ எனப்படும் செயற்கை அறிவு அல்லது செய்யறிவு தொடர்பாக அறி...

Read More »