Category: இணைய செய்திகள்

டெக் டிக்ஷனரி – 30 இன்போடெமிக் (infodemic) – தகவல் தொற்று

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோனா வைரஸ் பாதிப்பு தெளிவாக உணர்த்தியது. எனவே தான், இந்த விளைவை குறிப்பதற்காக என்ரே புதிய வார்த்தையை உருவாக்க வேண்டியிருந்தது.- இன்போடெமிக். தமிழில் ’தகவல் தொற்று’. இன்போடெமிக் என்பது புதிய வார்த்தை. கோவிட் -19 என குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ் பரவத்துவங்கிய சூழலில், உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் தொடர்பாக பரவிய கட்டுப்படுத்த முடியாத தகவல் […]

தவறான தகவல்களும், பொய்ச்செய்திகளும் எல்லா காலத்திலும் உண்டு தான். ஆனால், இவை எந்த அளவுக்கு விபரீதமாக கூடும் என்பதை கொரோன...

Read More »

கொரோனா கால அமைதி- வெப்கேமில் தெரியும் காட்சிகள்

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்சிகளை படம் எடுத்து பகிர்ந்து கொண்டு வருகிறார். வீட்டிலிருந்தபடியே வெளியே செல்வது எப்படி சாத்தியம் எனும் குழப்பம் ஏற்படலாம். கலினா, இணையம் மூலம் இந்த பயணங்களை மேற்கொள்கிறார். இணையம் மூலம் காட்சிகளை படம் பிடித்து ஒளிபரப்ப வெப்காமிராக்கள் வழி செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். உலகின் பல நகரங்களில், இத்தகைய வெப்காமிராக்கள் அமைந்துள்ளன. இந்த வெப்காமிரா காட்சிகளை […]

புகைப்பட கலைஞரான நோவா கலினா (Noah Kalina), வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே, உலகின் பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள காட்...

Read More »

பிட்காயினால் என்ன பயன்? கொரோனா கால பதில்

கொரோனா நெருக்கடியில் கவலைப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நிச்சயம் பிட்காயின் ஒன்றல்ல என்று நினைக்கலாம். ஆனால், பிட்காயின் பற்றி பரிசீலிக்க இது சரியான நேரமே. அதாவது பிட்காயினால் என்ன பயன் என்று கேட்டுக்கொள்வதற்கான நேரம் இது. கொரோனா சூழலில் பிட்காயினை சீர் தூக்கி பார்க்க வேண்டிய அவசியத்தை பார்ப்பதற்கு முன், முதலில் பிட்காயினின் அடிப்படை அம்சங்கள் சிலவற்றை நினைவில் கொள்வோம். பிட்காயின் ஒரு கிரிப்டோ நாணயம். இணையம் மூலம் பயனாளிகளை அதை நேரடியாக பரிமாறிக்கொள்ளலாம் என்பதால் […]

கொரோனா நெருக்கடியில் கவலைப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றில் நிச்சயம் பிட்காயின் ஒன்றல்ல என்று நினைக்கலாம். ஆனால், ப...

Read More »

பொன்விழா காணும் பூமி தினம்: இணையத்தில் 72 மணிநேர நேரலை

பூமி தின நிகழ்வுகள் இந்த ஆண்டு டிஜிட்டல்மயமாகி இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் வீட்டில் இருந்தபடியே நீங்களும் பங்கேற்கலாம். கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் உண்டாகியுள்ள அசாதாரண சூழலில், நம் புவி காப்பதற்கான முயற்சிக்கு இணையம் மூலமே ஆதரவு தெரிவிக்கலாம். இதற்காக, 72 மணி நேர நேரலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து நமது பூமியை பேணி காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 22 ம் தேதி பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

பூமி தின நிகழ்வுகள் இந்த ஆண்டு டிஜிட்டல்மயமாகி இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் வீட்டில் இருந்தபடியே நீங்களும் பங்கேற்கலாம...

Read More »

கொரோனா கால குறும்படம்

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமையான முறையில் உருவாக்கியிருக்கிறார் என்பது தான் விஷயம். அதாவது அவர் தனிமையில் இந்த படத்தை இயக்கி முடித்திருக்கிறார். கொரோனா காரணமாக உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்வாசியான பெர்மனும், வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். எதுவும் செய்யாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது, ஒரு படைப்பாளி என்ற முறையில் அவருக்கு மிகவும் கடினமாக இருந்ததால், சின்னதாக […]

பென் பெர்மன் என்பவர் ஐந்து நிமிட குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டிருக்கிறார். இந்த குறும்படத்தை அவர் முற்றிலும் புதுமைய...

Read More »