Category Archives: இணைய செய்திகள்

கூகுலில் பிடிபட்ட திருடன்

thiefகூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப்படக்கூடியாதாகவே இருக்கிறது.

பாரட்டுக்களும் விமரசனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.த‌ற்போது இந்த‌ சேவை திருட‌னை பிடித்துக்கொடுத்துள்ள‌தாக‌ பாராட்டுக்கு ஆளாகியுள்ள‌து.

ஹாலாந்தை சேர்ந்த 14 வயது வாலிபரிடம் 6 மாதங்களுக்கு முன் திருடிய இரட்டையர்கள் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவையால் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அந்த வாலிபர் தலைநகர் ஆம்ஸ்டர்டம் அருகே உள்ள குரோனின்ஜ‌ன் என்னும் இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இரண்டு பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துகொண்டு ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அவர் புகார் செய்தாரா, திருடர்கள் போலிசுடம் பிடிபடுவார்கள்,எனற நம்பிக்கை அவருக்கு இருந்த்தா என்று தெரியவில்லை.ஆனால் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ ஆறு மாத‌ங்களுக்குப்பிற‌கு திருட‌ர்க‌ள் இருவ‌ரும் வாலிப‌ரின் க‌ண்ணில் ப‌ட்டுள்ள‌ன‌ர்.

அதாவ‌து கூகுலின் ஸ்டிரீட்வியூ சேவை மூல‌ம் சிக்கின‌ர்.

காமீரா மூலம் நகரின் காட்சிகளை படம் பிடித்து வரைபடத்தின் மேல் கூகுல் ஸ்ட்ரிட்விட்யூ சேவையாக வழங்கி வருகிறது. இந்த‌ சேவையின் மூல‌ம் விதியில் ந‌ட‌ப்ப‌வ‌ற்றை அப்ப‌டியே பார்க்க‌ முடியும்.இத‌ன் கார‌ன‌மாக‌ இந்த‌ சேவை அந்த‌ர‌ங்க‌த்தின் மீதான தாக்குத‌ல் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.

இங்கிலாந்தில் பெண்ம‌ணை ஒருவ‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ர் விலைமாது ஒருவ‌ரின் வீட்டிற‌கு சென்ற‌தை இந்த‌ சேவை வ‌ழியே பார்த்து விட்டு விவாக‌ர‌த்து பெற்றார் என்றால் பார்த்துக்கொல்ளுங்க‌ள்.

அமெரிக்காவில் துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ சேவை ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கும் விரிவுப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. ஒரு சில‌ இட‌ங்க‌ளில் க‌டு எதிர்ப்புக்கும் ஆளாகி வ‌ருகிற‌து.

இந்த‌ நிலையில் தான் ஹால‌ந்து வாலிப‌ர் ஸ்டிரிட்வியூ மூல‌ம் பார்த்துக்கொண்டிருந்த‌ போது ஆறு மாத‌ங்களுக்கு முன் த‌ன்னிட‌ம் வ‌ழிப‌றி செய்த‌வ‌ர்களை பார்த்திருக்கிறார்.

உட‌னே அவ‌ர் இது ப‌ற்றி போலிசாருக்கு த‌க‌வ‌ல் கொடுத்திருக்கிறார். விசார‌னை ந‌ட‌த்திட‌ போலிசார் இருவ‌ரையும் கைது செய்துள்ள‌ன‌ர்.

கூகுல் ஸ்டிரிட்வியூ அதார‌த்தோடு பூகார் செய்ய‌ப்ப‌டுவ‌தோடு புகார் செய்ய‌ப்ப‌டுவ‌து இதுவே முத‌ன் முறை என்றும் இது புதுமையான‌ அனுப‌வ‌மாக‌ இருப்ப‌தாக‌வும் அந்நாட்டு போலிசார் கூறியுள்ள‌ன‌ர்.

ஸ்டிரிட்வியூ ச‌ர்ச்சையில் இது ம‌ற்றொரு சுவார‌சிய‌மான‌ க‌ட்ட‌ம்.

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

sansukiஇன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா.

மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார்.

சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவர‌து சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராத‌தால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இணையத்திலும் அவரது விடுதலைக்காக குரல் எழுந்துள்ளது. சான் சூ கீயை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு இணைய தளம் அமிக்கப்பட்டுள்ளது. சான் சூ கீயின் வயதை குறிக்கும் வகையில் www.64forsuu.ஒர்க்/என உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் அவரது விடுதலைக்காக இணையவாசிகளின் ஆதரவை கோருகிறது.

அது மட்டும் அல்ல பிரபலங்களும் இந்த தளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த‌ தள‌த்தின் வேண்டுகோளுக்கு எற்ப‌ ஹாலிவுட் ந‌டிகை ஜூலியா ராப‌ர்ட்ஸ் உள்ளிட்டோர் சான் சூ கீ விடுத‌லைக்காக‌ த்ங்க‌ள‌து க‌ருத்தை டிவிட்ட‌ர் மூல‌மும் ப‌கிர்ந்து கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர்.

நீங்களும் உங்கள் 64 வார்த்தைகளை சான் சூ கிக்காக பதிவு செய்யலாம்

—-
link;
http://www.64forsuu.org/

இன்டெர்நெட் டைலர்.

ctop_picபொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும்.

ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை.

இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ த‌ள‌த்தை இண்டெர்நெட் டைல‌ர் என்றும் சொல்ல‌லாம். இந்த‌ இணைய‌ டைல‌ரிட‌ம் உங்க‌ள் விருப்ப‌ம் போல் ச‌ட்டையை தைத்துக்கொள்ள‌லாம்.

இந்த‌ தள‌த்தின் மூல‌ம் ச‌ட்டை வ‌டிவ‌மைப்பை தேர்வு செய்வ‌து சுல‌ப‌மான‌து.ஆர்ட‌ர் செய்வ‌தும் சுல‌ப‌மான‌து.

டென்மார‌க் நாட்டைச்சேர்ந்த‌ வாலிபர்க‌ள் துவ‌ங்கியுள்ள‌ இந்த‌ த‌ல‌த்தை உல‌கின் எந்த‌ மூலையிலிருந்தும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். ச‌ட்டையை உங்க‌ள் இருப்பிட‌த்திற்கே அனுப்பிவைத்து விடுகின்ற‌ன‌ர். க‌ட்ட‌ண‌த்தை ம‌ட்டும் பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

இனி ஒரே மாதிராயான‌ ச‌ட்டையை அணிய‌ விரும்பாத‌வ‌ர்க்ள் தாராள‌மாக‌ இந்த‌ இணைய‌ த‌ள‌த்திற்கு சென்று பார்க்க‌லாம்.

—-

link;
http://www.shirtsmyway.com/design_myshirt.php

3 வயது சிறுமியின் ஆன்லைன் ஷாப்பிங்

girlஅறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும்.

நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண் அள்ளும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார். 3 வயது சிறுமியால் எப்ப‌டி இண்டெர்நெட்டை பயன்படுத்தி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்ய முடிந்த்து என்னும் சந்தேகம் ஏற்படலாம்.

எல்லாம் ஒரே ஒரு கிளிக்கால் வந்த விணை தான்.

க‌ம்ப்யூட்ட‌ர் இருக்கும் வீடுக‌ளில் குழ‌ந்தைக‌ளுக்கு கீபோர்டை க‌ண்டுவிட்டால் ஒரே கொண்டாட்ட‌ம் ஏற்ப‌ட்டுவிடும் அல்லவா.கீபோர்டை த‌ட்டுவ‌திலும் ம‌வுசை ந‌க‌ர்த்துவ‌திலும் ம‌ழ‌லைக‌ளுக்கு அப்ப‌டியொரு ஆன‌ந்த‌ம்.

சில‌ நேர‌ங்க‌ளில் க‌ம்ப்யூட்ட‌ரை அப்ப்டியே விட்டுச்சென்றால் ம‌ழ‌லைக‌ள் கீபோர்டில் புகுந்து விளையாடி விடும்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த‌ சாரா குவின்லின் என்னும் பெண்ம‌ணியும் ச‌மீப‌த்தில் இப்ப‌டி இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருந்தார். த‌ன‌து ஆசை ம‌க‌ளுக்காக‌ பொம்மைக‌ளை வாங்க‌ ஏல‌ த‌ள‌ம் ஒன்றை அவ‌ர் பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.

அத‌ன் பிற‌கு அவ‌ர் அப்ப‌டியே தூங்க‌ச்சென்றுவிட்டார்.இண்டெர்நெட் இணைப்பையும் அவ‌ர் துண்டிக்க‌ ம‌ற‌ந்துவிட்டார்.

அவ‌ர் தூங்கிக்கொண்டிருந்த‌ போது அவ‌ர‌து 3 வ‌ய‌து குழ‌ந்தை க‌ம்ப்யூட்ட‌ர் முன் அம‌ர்ந்து கிளிக் செய்து விளையாட‌த்துவ‌ங்கிய‌து.

இப்ப‌டி குழ‌ந்தை அடுத்த‌டுத்து கிளிக் செய்த‌த‌ன் விளைவாக ஏல‌த்தில் பொருள் வாங்கியாதாக‌ ப‌திவாகிவிட்ட‌து. அதிலும் குழ‌ந்தை வாங்கிய‌து பொம்மை கூட‌ அல்ல‌ ம‌ண் அள்ளும் இய‌ந்திர‌ம்.

ஏல‌ நிறுவ‌ன‌த்திட‌மிருந்து இமெயில் வ‌ந்த‌ போது அத‌னை பார்த்து சாரா திடுக்கிட்ட‌ப்போய்விட்டார். பின்ன‌ர் என்ன‌ ந‌ட‌ந்திருக்கும் என்ப‌தை அவ‌ர் யூகித்துக்கொண்டு நிறுவ‌ன‌த்திற‌கு விள‌க்க‌ம் அனுப்பு வைத்தார். இத‌னைஅடுத்து அந்த‌ ஏல‌ம் ர‌த்து செய்ய‌ப்ப‌ட்ட‌து.

எது எப்படியோ குழந்தைகள் இருக்கும் வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்கள் கொஞ்ச‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து. குறைந்த‌ப‌ட்ச‌ம் இண்டெர்நெட் இணைப்பை துண்டிப்ப‌திலாவ‌து க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும்.

டிவிட்டரில் இந்திய தேர்தல்

indiavotesதேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளியிடுவதில் டிவிட்டர் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டர் சேவையை தேர்தல் முடிவுகளை வெளியிட பயன்படுத்துவது இயல்பானது தானே?

மக்களவை தேர்தலுக்கான வாக்கு என்ணிக்கை சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சிலர் டிவிட்டர் மூலம் தேர்தல் முடிவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.சந்தோஷ்மஹரிஷி என்பவர் நிமிடத்திற்கு ஒருமுறை தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

சங்கர் கணெஷ் என்பவரும் டிவிட்டரில் முடிவுகளை தந்து வருகிறார்.

————

link;
http://news.in.msn.com/national/indiaelections2009/article.aspx?cp-documentid=3021392

—————

link;
http://twitter.com/arpitnext/status/1814501279