Category Archives: இணைய செய்திகள்

இண்டெர்நெட்டை வெறுக்கும் நடிகை

1-keiraஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார்.

பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிய்ரா நெட்டை வெறுப்பதற்கான காரணம்,ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான். இது மனிததன்மையற்ற செயல் என அவர் கருதுகிறாராம்.

பல ஹாலிவுட் பிரபலங்கள் டிவிட்டரில் கலக்கி கொண்டிருக்கும் போது கிய்ரா இப்படி நெட் மீது பாய்ந்திருக்கிறார். பிரபலாமானவ‌ர்கள் என்ற முறையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்,தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இண்டெர்நெட்டை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் விளம்பர நோக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டர் போன்ற சமூக தொழில்நுடங்களை இயல்பாகவே வரித்துக்கொண்டுள்ளனர்.

இதிலிருந்து கிய்ரா மாறுபடுகிறார். வலைபின்னல் தளங்களில் அதிக நேரத்தை செலவிட நேர்வதை அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.

24 வயதாகும் கிய்ரா நிச்சயம் இந்த கருத்தை விளம்பரத்திற்காக கூறவில்லை என நம்பலாம். காராணம் அவர் தன்னை ஒருபோது பிரப்லம் என கருதிக்கொள்ளாதாவர்.

வீட்டில் நுழையும் போதோ நண்பர்களோடு பேசும் போதோ தன்னை ஒரு பிரபலமாக நினைத்துக்கொள்வதில்லை என்பது அவரது கருத்து. ஒரு இளவரசியாக தன்னை நடத்துமாறு கேடபதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே கிய்ராவின் கோபத்தையும் இயல்பானதாக‌வே எடுத்துக்கொள்ள‌லாம்.

கிய்ரா வலைபின்னல் தளங்கள் பக்கம் போகாமல் இருப்பதோடு த‌ன்னைப்பற்றி கூகுல் செய்யாமலும் இருக்கிறார்.

கூகுலில் தகவல்களை தேடுவதோடு,நெட் தங்களை பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்வதற்காக கூகுலில் தங்கள் பெயரை டைப் செய்து தேடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. பிரபலங்களும் இப்படி தங்களை கூகுலிட்டுக்கொள்கின்றனர்.

கிய்ரா இதனையும் தேவையில்லாத‌து என்று சொல்கிறார். இதற்காக சக நடிகையும் தோழியுமான சியான்னா மில்லரின் உதவியை அவர் அடிக்கடி நாடுகிறாராம். இது பறிறி இருவரும் பேசிக்கொள்வதும் உண்டாம்.

வந்தது டிவிட்டர் வைரஸ்

டிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி?

,டிவிட்டரை போன்ற தளமான ஸ்டாக்டைலி டாட் காம் என்னும் பெயரிலான தளத்திற்கு வருகை தருமாறு இந்த வைரஸ் அழைப்பு விடுக்கிறதாம். புகைப்படங்கள்,வீடியோ வசதி கொண்ட சேவை என்றும் ஆசை காட்டப்படுகிறது. இதை நம்பி இணைப்பை கிளிக் செய்தால் விபரீதம் தானாம். கிளிக் செய்யாவிட்டாலும் கூட பாதிப்பு ஏற்படலாமாம்.

எனவே டிவிட்டர் பாஸ்வேர்டை மாற்றுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வைரஸ் உள்ளே நுழைந்த ஓட்டையை அஃடைத்துவிட்டதாக டிவிட்டர் சர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

கூகுலுக்கு எதிராக மனித‌ச்சங்கிலி

1-gவந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்கூடாது என போர்க்கொடி தூக்கி கூகுல் வானத்தை பின்வாங்கவும் வைத்துள்ளனர்.
கூகுல் எர்த்,மேப்ஸ் வரிசையில் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அறிமுகமான சேவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த்ப்பட்டு வருகிறது. சமிபத்தில் பிரிட்டனிலும் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.
ஸ்டிரீட்வியூ என்பது நகரங்களில் உள்ள தெருக்களை புகைப்பட காட்சிகளாக பார்க்க உதவும் சேவை. வீடுகளைகூட குளோசப்பில் காண முடியும்.
கூகுலின் மற்ற எந்த சேவையையும் விட இந்த சேவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெருவோர காட்சிகளையும் .வீடுகளையும் யார் வேண்டுமானால் பார்க்கலாம் என்பது அந்தரங்கம் மிதான தாக்குதலாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் எதிர்பாராத பிரசனைகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
சமிபத்தில் பிரிட்டனில் கூகுல் ஸ்டிரிட்வியூவை பார்த்துவிட்டு ஒரு வீட்டின் மேற்கூறையில் வேயப்பட்டிருந்த ஓடுளை ஒருவர் திருடிச்சென்றது பரபர‌ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள பிர்வுட்டன் என்னும் ஊருக்கு குகுலின் ஸ்டிரிட்வியூவை வாகனம் காமிராவோடு வரிகை தந்தபோது அந்த‌ ஊர் மக்கள் விழத்துக்கொண்டு போர்க்கொடி தூக்கினர்.அந்த வாகனம் ஊருக்குள் நுழையக்கூடாது என்று மனிதசங்கிலி அமைத்து போராடினர்.விளைவு கூகுல் வாகனம் பின்வாங்கிவிட்டது.
இத்தகைய சர்ச்சைகள் எதிர்ப்புகளை மீறி கூகுல் இத்திட்டத்தில் உறுதியாக உள்ளது. இஅத புதிய சேவையின் தன்மையை புரிந்துக்கொள்ள நாளாகும் என கூகுல் நம்பிக்கையோடு கூறுகிறது.

கூகுல் தரும் நஷ்டஈடு

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது.
கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஜி மெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு கூகுல் மன்னிப்பு கேட்டிருந்தது. பராமரிப்பின் போது ஏற்பட்ட மனித தவறால் இது நேர்ந்தது என்று கூகுல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கூகுல் ஜிமெயில் கோளாறால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.05 டாலர்கள் அளவிற்கு நஷ்டஈடு வழங்குவதாக கூகுல் தெரிவித்துள்ளது.
நிற்க. இந்த நஷ்டஈடு இலவச ஜிமெயில் சேவையை பயன்படுத்து வோருக்கு பொருந்தாது. நிறுவனங் களுக்கு என்று கூகுல் வழங்கும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பிரத்யேக ஜிமெயில் சேவைக்கு மட்டுமே இது பொருந்தும்.
நஷ்டஈடு, பணமாக வழங்கப்படு வதற்கு பதிலாக 15 நாள் கூடுதல் சேவை இலவசமாக வழங்கப்படும். ஜிமெயில் பாதிப்பால் வாடிக்கை யாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை கூகுல் உணர்ந்திருப்பதாகவும் அதன் விளைவாகவே இந்த நஷ்டஈடு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கூகுல் சேவையில் எப்போது குறைபாடு ஏற்பட்டாலும், கூகுல் அதற்கு முறைப்படி வருத்தம் தெரிவிப்பதோடு வாடிக்கை யாளருக்கு ஏற்பட்ட பாதிப்பை உளப்பூர்வமாக உணர்வதாகவும் தெரிவிப்பதாக இன்டெர்நெட் உலக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

மன்னிப்பு கேட்டது கூகுல்

google-errorஇரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது?
ஜி மெயிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கூகுல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது.

ஜி மெயில் 3‍ வது பெரிய இ மெயில் சேவையாக திகழ்கிறது. 113 மில்லியன் பேர் ஜி மெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜி மெயில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜி மெயில் சேவையில் கோளாறு ஏற்பட்டு ஜி மெயிலை அணுக முடியாத நிலை உண்டானது. வையம்
முழுவதும் இதே நிலை. இந்தியாவிலும் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.

கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் இந்த பாதிப்பு நீடித்தது. ஜி மெயில் பயன்படுத்த முடியாதவர்கள் கொதித்துப்போய் நிற்க, கூகுல் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அதன் அதிகாரபூர்வ வலைபதிவில் இந்த கோளாறுக்கு வருத்த்ம் தெரிவிக்கப்பட்டது.

பிரச்சனை சரி செய்யப்பட்டதாகவும் உறுதி அளிக்க்ப்பட்டது.சமீப காலத்தில் இப்படி கூகுல் சங்கடத்திற்கு ஆளாவது இது 2 வது முறை. கடந்த‌ மாதம்
கூகுல் ய்ஹேடல் முடிவிகளில் பிரச்சனை ஏற்பட்டது. வைரஸ் பாதிப்பல் எல்லா தேடல் பக்கங்களுமே ஆபத்தானது என்னும் எச்ச்ரிக்கை வாசகம் தோன்றி வெறுப்பேற்றியது.