Category Archives: இணைய செய்திகள்

யூடயூப் மூலம் பிரசவம்

ytubeபிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.

மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந்த 28 வயது வாலிபர் கடற்படையில் எஞ்சினியராக பணிபுடிந்து வருகிறார்.அவரது மனைவி நிறைமாத கர்பினியாக இருந்த்தால விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.

மனைவி ஜோ பிரசவ வலிக்கு முந்தைய அறிகுறிகள் ஏற்படுவதாக கூறவே மார்க் எதற்கும் இருக்கட்டும் என்று கூகுலுக்கு சென்று பிரசவம் என்று டைப் செய்து பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்களை தேடிப்பர்த்திருக்கிறார்.

அப்போது பிரசவம் தொடர்பான யூடியூப் வீடியோ கண்ணில் படவே அதனை ஆர்வத்தோடு பார்த்திருக்கிறார்

அடுத்த 4 மணி நேரத்தில் உண்மையாகவே அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது.உடனே மருத்துவமணைக்கு தகவல் தெரிவித்தார். போனில் பேசிக்கொண்டிருந்த போதே மனைவியின் வலி தீவிரமாகவே அவர் போனை போட்டுவிட்டு மனைவிக்கு உதவ சென்றுவிட்டார்.

யூடியூப் காட்சியில் பார்த்த‌தை ம‌ன‌தில் கொண்டு தானே பிர‌ச‌வ‌ம் பார்த்தார்.

இது அவர்களின் நான்காவது குழந்தையாகும்.

பிரசவ வலி எடுத்தும் கணவர் பதட்டப்படாமல் செயல்பட்டது மகிழ்ச்சியை தருவதாக மார்க்கின் மனைவி ஜோ கூறியுள்ளார்.

யூடியூப் வீடியோ எத்த‌னையோ விஷ‌ய‌ங்க‌ளை சாதித்துள்ள‌ன‌.அந்த‌ வ‌ரிசையில் பிர‌ச‌வ‌மும் சேர்ந்துள்ள‌து.

—————–

link;
http://news.bbc.co.uk/2/hi/technology/8028625.stm

தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

omஇண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா?

இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது.

நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான்.

ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம்.
ஃபேஸ்புக் போன்ற தளங்கள் உங்களுடைய பழைய நண்பர்களை தேடித்த‌ருகிறது.வேறு பல தளங்கள் ஒத்த கருத்துடைய நபர்களை நண்பர்களாக பெற உத‌வுகின்றன.

ஃபேஸ்புக் மூலம் எப்போதோ பிரிந்த நண்பர்களை மீண்டும் சந்த்தித்த இனிமையான அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.தொடர்ந்து நட்பை வள‌ர்த்துக்கொள்ள கைகொடுப்பதில் ஃபேஸ்புக்கிற்கு நிகர் பேஸ்புக் தான்.

ஒரே விதமான சிந்தனை போக்கு கொண்டவர்கள் கருத்து பரிமற்றம் செய்து கொள்ளவும் பேஸ்புக் உதவுகிறது.
எல்லாம் சரிதான் எப்பொழுதும் அறிமுகமானவர்களுடனே பேசிக்கொண்டிருந்தால் எப்படி?ஒத்தகருத்துள்ளவர்கள்மட்டுமே சந்தித்து பேசிக்கொள்ளும் போது ஏதாவது ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்பட்டு விடாதா?

அது மட்டும் அல்லாமல் புதியவர்களை அறிமுகம் செய்துகொண்டு நட்பு பாராட்டும் போது தானே புதிய விஷயங்களை அறிந்துகொள்ள முடியும்.

பல நேரங்களில் அறிமுகமில்லாதவர்கள் நமக்கு அனுபவத்தின் புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளனர் அல்லவா?

ரெயில் பயணங்களின் போதும், வெளியூருக்கு செல்லும் போதும் இத்தகைய அனுபவங்கள் நேர்வதுண்டு அல்லவா?

இண்டெர்நெட்டும் ஆரம்ப கால‌த்தில் இப்படி யார் யாரையோ சந்தித்து உரையாட வைத்தது.அரட்டை அறையில் நுழைந்து சாட் செய்வதே ஒரு பரவசமான விஷயமாக‌ இருந்தது.

ஆனால் இன்று நண்பர்கள் வலையில் மாட்டிக்கொண்டிருக்கிறோம்.வலை வீசுவதும் நண்பர்களுக்காகவே என்றாகிவிட்டது.

அதிலும் இண்டெர்நெட்டில் மோசடிகளும் ஆபத்துகளும் அதிகரித்த பிறகு பாதுகாப்பிற்கே முன்னுரிமை வந்திருக்கிறது.

இதை தவறில்லை என்றாலும் வையம் முழுவதும் வலை விரிந்துள்ள நிலையில் முன்பின் அறிமுகமில்லாதவர்களை தொட‌ர்பு கொண்டு உறையாடலில் ஈடுபடாமல் இருப்பது சரியா?

பிரிட்ட‌னை சேர்ந்த‌ லீப் கெ புரூக்ஸ் என்னும் இணைய‌ வ‌டிவ‌மைப்பாள‌ர் இந்த‌ த‌ள‌த்தை உருவாக்கியுள்ளார்.புதிய‌ வ‌கையான‌ ந‌ட்பை ஏற்ப‌டுத்து த‌ருவ‌தே இந்த‌ த‌ள‌த்தின் நோக்க‌ம் என்கிறார் அவ‌ர்.

த‌ற்போது உள்ள‌ வ‌லைபின்ன‌ல் த‌ள‌ங்க‌ளுட‌ன் இணைந்து இந்த‌ சவை செய‌ல்ப‌டும் என்றும் அவ‌ர் கூறுகிறார்.

இந்த‌ சேவை சுவார‌சிய‌மாக‌ இருப்ப‌தோடு ப‌ய‌னுள்ள‌தாக‌வும் இருக்கும் என்கிறார்.உங்களை போன்றவர்க‌ளோடே பேசிக்கொண்டிருந்தால் எதையும் புதிதாக‌ தெரிந்து கொள்ள‌ முடியாது என‌ கூறூம் புரூக்ஸ் அறிமுக‌மில்லாத‌வ‌ர்க‌ளோடு பேசும்போது தான் அனுப‌வ‌ம் விரிவ‌டையும் என்கிறார்.

ந‌ல்ல‌ முய‌ற்சி தான் ஆனால் ப‌ய‌ன்ப‌டுத்து போது எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல்ல‌து.

—————

link;
http://omegle.com/

மோர்சுக்கு மரியாதை செய்த கூகுல்

goolecode1கூகுல் தேடியந்திரத்தை நேற்று பயன்படுத்தியவர்கள் கொஞ்சம் குழப்பத்திற்கு ஆளாகியிருக்கலாம்.காரணம் முகப்பு பக்கத்தில் கூகுல் என்ற வார்த்தையை காண முடிந்திருக்காது.அதற்கு பதிலாக புள்ளிகளின் சிதற‌லையே பார்த்திருக்க முடியும்.

இது எதோ தொழில்நுட்ப கோளாறு என பலரும் நினைத்திருக்கலாம். ஒரு சிலர் தங்கள் உலாவியில் பிரச்சனை என்றுகூட நினைத்திருக்கலாம்.

ஆனால் இது கோளாறும் இல்லை தற்செயலாக நடந்தது இல்லை. கூகுல் தனக்கே உரிய பாணியில் லோகோவில் திடமிட்டு செய்த மாற்றம் தான் இது.

கூகுலின் வரலாற்றை அறிந்தவர்கள் முக்கிய தினங்களின் போது அந்த தினங்கலுக்கு ஏற்ப கூகுல் தனது லோகோவை மாற்றியமைத்து வருகிறது என்பது தெரிந்திருக்கும்.

உதாரணமாக கிறிஸ்துமஸ் என்றால் லோகோவில் கிறிஸ்துமசை குறிக்கும் சித்திரங்கள் இடம்பெறும். ஒலிம்பிக் போட்டி என்றால் ஒலிம்பிக் விளையாட்டை லோகோ நினைவு படுத்தும். இதே போல புகழ்பெற்றவர்களின் பிறந்த தினங்களின் போதும் அவர்களை கவுரவிக்கும் வகையில் லோகோவில் மாற்றம் செய்யப்படும்.

கூகுல் லோகோவில் செய்யப்படும் மாற்றங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன.போதுவாக இந்த சித்திர லோகோ மிகவும் அழகாக இருக்கும்.

ஆனால் நேற்று நிகழ்ந்த மாற்றம் இப்படி அமையவில்லை.கலைந்த புள்ளிகளைப்போல இருந்த அந்த சித்திரம் குழப்பத்திஅயே உண்டாக்கியது.

விஷயம் என்னவென்றால் கம்பிகள் மூலமான தகவல் தொடர்புக்கான தந்தி சேவையின் அடிப்படையான குறியீட்டு மொழியை உருவாக்கிய சாமுவேல் மோர்சின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை கவுரவிக்கவே கூகுல் மோர்ஸ் கோட் என்று சொல்லப்படும் சங்கேத மொழியை போலவே தனது லோகோவை அமைத்திருந்தது.

மோர்சின் முழு பெயர் சாமுவேல் ஃபிலே பிரிஸ் மோர்ஸ்.அமெரிக்காவில் பிற‌ந்து வளர்ந்த மோர்ஸ் அடிப்படையில் ஒரு ஒவியர். வரலாற்று காட்சிகளை திறம்பட வரைந்து வந்த மோர்ஸ் தகவல் தொடர்புக்கான சங்கேத மொழியை கண்டுபிடித்தன் மூலம் உலக்ப்புகழ் பெற்றார்.

19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டின் பெரும்பகுதி முழுவதும் தகவல் தொடர்பில் அவரது முறையே கோலோச்சியது.

வீடியோ கேமிற்காக விழுந்த அடி

கொஞ்சம் கவலை த‌ரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார்.

இக்காலத்து சிறூவர்கள் போல வீடியோ கேமே கதி என கிடந்ததால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றே நினைக்கத்தோன்றும்.ஆனால் விடியோ கேமை ஒழுங்காக விளையாடவில்லை என் தந்தை அவனை அடித்திருக்கிறார்.

தந்தையின் பெயர் டெரி டவுல்பி. அவரது மகனுக்கு ஆறு வயதாகிறது. சமீப‌த்தில் வீடியோ கேமில் திறமையை வெளிப்படுத்த‌வில்லை என்று மகனை அவர் அடித்து உதைத்திருக்கிறார்.

இதற்காக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ கேம் மோகத்திற்காக பிள்ளைகள் கண்டிக்கப்படுவதை தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இது வித்தியாசமாக இருக்கிறது.

அந்த தந்தையின் செயலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் பல வீடியோ கேம்களில் திறமையை வெளீப்படுத்தினால் பணம் சம்பாதிக்க முடியும் . விடியோ கேம் சாம்பியன்ஷிப்புகளும் உள்ளன.

விடியோ கேம் திறமை எதிர்காலத்திற்கு தேவை என கருது நிலை வரலாம்.வீடியோ கேம்கள் கல்வி நோக்கிலும் பயன்படுத்தப்படுகிறது.போராட்ட நோக்கிலான கேம்களும் இருக்கின்றன.

எனவே வீடியோ கேம் திறமையை பெர்றோர்கள் வலியுறுத்த துவங்குவத்ற்கான அறிகுறியாகவும் இதனை கருதலாம். இப்போது படி படி என செல்வது போல ஒழுங்காக ஆடு ஆடு என சொல்லலாம்.

இல்லை இது ஒரு விதிவிலக்கான சம்பவமாக கூட இருக்கலாம்.ஆனால் வீடியோ கேம் கலாச்சாரம் நுட்பமான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.

கூகுலில் தெரிந்த ஆங்கில எழுத்துக்கள்

goகூகுல் எர்த் வரைபட சேவை மூலம் பூமியின் மேல்பகுதியில் ஆஸ்திரேலிய வடிவமைப்பாளர் ஆங்கில எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார்.

கூகுல் எர்த் துணை கொண்டு பூமி மீது தெரியும் காட்சிகளை சுலபமாக பார்க்க முடியும் . இந்த சேவை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் ட்ட்ஷ்வுட் என்னும் வடிவமைப்பாளர் இந்த சேவை வழியே பூமி மீது ஆங்கில எழுத்துக்களை தேடிக்கொண்டிருந்தார்.அதாவது செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் பார்க்கும் போது ஆங்கில எழுத்துக்களை போன்ற தோற்றம் கொண்ட கட்டிடங்களை தேடி வந்தார்.

இந்த முயற்சியின் பயனாக 26 ஆங்கில எழுத்துக்களையும் கண்டுபிசித்து தொகுத்துள்ளார்.