Category Archives: இணைய செய்திகள்

யூடியூப்பில் முழு நீள திரைப்படங்க‌ள்

yt1யூடியூப்பில் இனி முழு நீள தரைப்படங்களை கண்டு ரசிக்கலாம். அதே போல் பிரபலமானா டிவி தொடர்களையும் பார்த்து ரசிக்க முடியும்.

இதற்கு ஏற்ற வகையில் யூடியூப் திரைப்படங்கள் ,டிவி தொடர்களை பார்த்து ரசிப்பதற்காக தனி பக்கத்தை அமைத்துள்ளது.

யூடியூப் இதுவரை பிரதானமாக சிறிய அளவிலான வீடியோ கோப்புகளுக்கான இடமாக இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் சாமன்யர்களாளேயே உருவாக்கப்பட்டவை.

இந்நிலையில் யூடியுப் முழு நீள படங்க‌ளை பார்ப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. இதற்காக யூடியூப் பல ஸ்டுடியோக்களோடு ஒப்பந்தம் செய்து கோண்டுள்ளது. மேலும் இது போன்ற ஒப்பந்தங்க‌ள் மூலம் முழு நீள விருந்து மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதைக்கு பார்க்ககூடிய படங்கள் பழையதாக இருக்கும். மற்ற இடங்களிலும் சுலபமாக கிடைக்ககூடியததாகவும் இருக்கலாம்.காபிரைட் பிரச்சனைதான். ஆனால் விரைவில் படங்களின் பட்டியல் விரிவடையும்.

இந்த அறிவிப்பின் பின்னே விளம்பர நோக்கமும் இருக்கிறது.

———-

link;
http://www.youtube.com/shows

கூகுல் தந்த விடுதலை.

1-agwomanகூகுலின் ஸ்டிரிட்வியூ சேவை சர்ச்சைக்குரியதாக இருந்தால் என்ன, அதற்கு எதிர்ப்பு வலுத்து வந்தால் என்ன, விட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த பெண்மணிக்கு அது விடுதலை வாங்கி தந்திருக்கிறது தெரியுமா?

பிரிட்டனைச்சேர்ந்த சியூ கர்ட்டிஸ் என்னும் 40 வயது பெண்மணி கூகுல் ஸ்டிரிட்வியூ சேவையால் கவரப்பட்டு தனது வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளில் இப்படி வெளி உலகை எட்டிப்பார்ப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தெனாலியில் வருவதையும் விட அதிகமான பயங்கள் உலகில் உள்ளன.இவற்றில் வெளியே வருவத‌ற்கே பயப்படுபவர்களும் இருக்கின்றனர்.இவ‌ர்கள் பொது இடங்களை கண்டாலே அஞ்சி நடுங்கும் இவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பார்கள்.

இந்த‌ வகை பாதிப்பிறகு அகோரபோபியா எண்று பெயர். (நான் கடவுளுக்கும் இதற்கும் தொடர்பில்லை)

பிரபல ஹாலிவுட் இயக்குனர் வூடி ஆலன், அறிவியல் புனைகதை எழுத்தாளார் பிலிப் க் டிக், இண்டெர்நெட் எழுத்தாளர் வில்லியம் கிப்சன் உள்ளிட்டோர் இந்த குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்காவில் உள்ளவ‌ர்களில் 32 லட்சம் பேர் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பொது இடங்களில் திடிரென வலிப்பு போனற‌ தாக்குதல் வரலாம்.

கர்ட்ட்டிசும் இத்தகைய பாதிப்பிற்கு இலக்கானவர்.

இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக அவர் விட்டை விட்டு வெளியே வந்ததில்லையாம் . திருமணம் கூட‌ விட்டிலியே நடைபெற்றிருக்கிறது.

இவ்வாறு அடைந்து கிடந்தவருக்கு கூகுலின் ஸ்டிரிட்வியூ சேவையை பார்த்து விதிக்கு வரும் ஆர்வம் ஏற்பட்டதாம். இதனையடுத்து அவர் இண்டெர்நெட் மூலம் சுய‌முன்னேற்ற பயிற்சி எடுத்துக்கொண்டு ஒரளவு துணிச்சல் பெற்ற விட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

சில நிமிடங்கள் மட்டுமே விதியில் நடந்தாலும் தன்னைப்பொருத்தவரை அது மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் கூறீயுள்ளார்.

சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

sarathbabu1-1தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித்தவரான அவர் தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தை முன்னிறுத்தி அவரை அறிமுகம் செய்ய எண்ணியிருந்தேன்.

ஆனால் சக பதிவரான குளோபன் சரத் பற்றி அருமையாக எழுதியுள்ளார். அந்த இணைப்பை கிழே கொடுத்துள்ளேன்.

சரத் பாபுவாவிற்காக பதிவர்கள் இயன்ற அளவுக்கு பாடுபட வேண்டும் என்னும் அவர் கருத்தை நானும் மனதார ஆத‌ரிக்கிறேன்.

குளோபன் தேர்தல் முடியும் வரை வேறு பதிவுகள் ஈடப்போவதில்லை என கூறியுள்ளார். சரத் பதிவு முதலில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி தெரிவித்துள்ளார். நல்ல முடிவு.

என் பங்கிற்கு முடிந்த வரை சரத்பாபு பற்றிய செய்திகளை இந்த பதிவில் இடம்பெற செய்ய முயற்சிக்கிறேன்.

தேர்தல் தொடர்பான எனது மற்றொரு பதிவான மல்லிகா சரபாயின் இணையதளத்தையையும் படித்து பர்ர்க்கவும்

———-

சரத்பாபுவின் இணையதளம்;
http://sarathbabu.co.in/in

link;
http://globen.wordpress.com/2009/04/14/sarathbabu/

———
link1;
http://cybersimman.wordpress.com/2009/04/01/mallika/

இண்டெர்நெட்டை வெறுக்கும் நடிகை

1-keiraஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார்.

பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிய்ரா நெட்டை வெறுப்பதற்கான காரணம்,ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான். இது மனிததன்மையற்ற செயல் என அவர் கருதுகிறாராம்.

பல ஹாலிவுட் பிரபலங்கள் டிவிட்டரில் கலக்கி கொண்டிருக்கும் போது கிய்ரா இப்படி நெட் மீது பாய்ந்திருக்கிறார். பிரபலாமானவ‌ர்கள் என்ற முறையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்,தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இண்டெர்நெட்டை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் விளம்பர நோக்கமும் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டர் போன்ற சமூக தொழில்நுடங்களை இயல்பாகவே வரித்துக்கொண்டுள்ளனர்.

இதிலிருந்து கிய்ரா மாறுபடுகிறார். வலைபின்னல் தளங்களில் அதிக நேரத்தை செலவிட நேர்வதை அவர் புரிந்து கொள்ள முடியவில்லை என்கிறார்.

24 வயதாகும் கிய்ரா நிச்சயம் இந்த கருத்தை விளம்பரத்திற்காக கூறவில்லை என நம்பலாம். காராணம் அவர் தன்னை ஒருபோது பிரப்லம் என கருதிக்கொள்ளாதாவர்.

வீட்டில் நுழையும் போதோ நண்பர்களோடு பேசும் போதோ தன்னை ஒரு பிரபலமாக நினைத்துக்கொள்வதில்லை என்பது அவரது கருத்து. ஒரு இளவரசியாக தன்னை நடத்துமாறு கேடபதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே கிய்ராவின் கோபத்தையும் இயல்பானதாக‌வே எடுத்துக்கொள்ள‌லாம்.

கிய்ரா வலைபின்னல் தளங்கள் பக்கம் போகாமல் இருப்பதோடு த‌ன்னைப்பற்றி கூகுல் செய்யாமலும் இருக்கிறார்.

கூகுலில் தகவல்களை தேடுவதோடு,நெட் தங்களை பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்வதற்காக கூகுலில் தங்கள் பெயரை டைப் செய்து தேடும் வழக்கம் பலருக்கு இருக்கிறது. பிரபலங்களும் இப்படி தங்களை கூகுலிட்டுக்கொள்கின்றனர்.

கிய்ரா இதனையும் தேவையில்லாத‌து என்று சொல்கிறார். இதற்காக சக நடிகையும் தோழியுமான சியான்னா மில்லரின் உதவியை அவர் அடிக்கடி நாடுகிறாராம். இது பறிறி இருவரும் பேசிக்கொள்வதும் உண்டாம்.

வந்தது டிவிட்டர் வைரஸ்

டிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி?

,டிவிட்டரை போன்ற தளமான ஸ்டாக்டைலி டாட் காம் என்னும் பெயரிலான தளத்திற்கு வருகை தருமாறு இந்த வைரஸ் அழைப்பு விடுக்கிறதாம். புகைப்படங்கள்,வீடியோ வசதி கொண்ட சேவை என்றும் ஆசை காட்டப்படுகிறது. இதை நம்பி இணைப்பை கிளிக் செய்தால் விபரீதம் தானாம். கிளிக் செய்யாவிட்டாலும் கூட பாதிப்பு ஏற்படலாமாம்.

எனவே டிவிட்டர் பாஸ்வேர்டை மாற்றுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த வைரஸ் உள்ளே நுழைந்த ஓட்டையை அஃடைத்துவிட்டதாக டிவிட்டர் சர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.