Category Archives: இமெயில்

இமெயிலுக்கு ஒரு முகமுடி

இணையம் இப்போது பூட்டுகள் நிறைந்த இடமாக மாறிக்கொண்டிருக்கிறது.அந்த பூட்டுகளை திறக்க இமெயில் சாவியை பய்னப‌டுத்த வேண்டியிருக்கிற‌து. பிரபலமான சேவைகள் அல்லது இணையதளங்களை பயன்படுத்தும் அனுமதியை பெற இமெயில் முகவரியை சமர்பிக்க வேன்டியிருக்கிறது.இவ்வளவு ஏன் வலைப்பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் அளிக்க வேண்டியிருந்தாலும் இமெயில் முகவரி தேவைப்படுகிற‌து. நம்பகமான தளங்கள் என்றால் இமெயில் சமர்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை. ஆனால் ஒரு சில தளங்களில் இமெயில் முகவரியை தர தயக்கம் ஏற்படலாம்.இது போன்ற நேரங்களில் குறிப்பிட்ட தளம் அல்லது சேவையை பயன்படுத்த முடியாமல் போகலாம். இமெயில் முக‌வ‌ரியை சம‌ர்பிப்ப‌தில் இன்னோரு பிர‌ச்ச‌னையும் இருக்கிற‌து.இமெயில் முக‌வ‌ரியை தருவ‌து என்ப‌து திற‌ந்த‌வெளியில் ப‌ன‌த்தை வைப்ப‌து போல‌ தான்.அது க‌ள‌வாட‌ப்ப‌டும் வாய்ப்பு இருக்க‌வே செய்கிற‌து.இப்ப‌டி ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌டும் இமெயில்க‌ளை கொத்திச்செல்வ‌தற்காக‌ என்றே பாட்க‌ள் என்று சொல்ல‌ப்ப‌டும் குட்டி ரோபோக்க‌ள் இணைய‌த்தில் உலாவிக்கொண்டிருக்கின்ற‌ன‌. அத‌ன் பிற‌கு உங்க‌ளுக்கு அழையா மெயில்க‌ளை அனுப்பி வைக்கும்.உங்க‌ள் முக‌வ‌ரி பெட்டியில் அடிக்க‌டு வ‌ந்து சேரும் எரிச்ச‌லூட்டும் வியாபார‌ ,விள‌ம்ப‌ர‌ மெயில்க‌ள் வ‌ந்து சேருவ‌து இப்ப‌டி தான். இந்த‌ பிர‌ச்ச‌னைக்கு அழ‌கான‌ ஒரு தீர்வு இருக்கிற‌து.http://scr.iம்/ இணைய‌த‌ள‌ம் அந்த‌ தீர்வை வ‌ழ‌ங்குகிற‌து.இமெயில் கோரும் எந்த‌ சேவையும் ப‌ய‌ன்ப‌டுத்தும் முன் இந்த‌ த‌ள‌த்திற்கு சென்று உங்க‌ள் இமெயிலை ச‌ம‌ர்பிக்க‌ வேண்டும்.உட‌னே அந்த‌ முக‌வ‌ரியை யாரும் ப‌டிக்க‌ முடியாத குறிச்சொற்க‌ளாக‌ மாற்றிவிடும். இனி இமெயிலுக்கு ப‌திலாக‌ இந்த‌ குறிச்சொற்க‌ளை ச‌ம‌ர்பிக்க‌லாம்.இவ்வாறு செய்வ‌த‌ன் மூல‌ம் உங்க‌ள் இமெயில் பாதுகாப்பான‌தாக‌ இருக்கும்.குறிச்சொற்க‌ள் மூடிய‌ இந்த‌ இமெயிலை ரோபோக்க‌ள் ப‌டிக்க‌ முடியாது.அவ‌ற்றோடு கேட்க‌ப்ப‌டும் ர‌க‌சிய‌ கேள்விக்கு ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர்கள் ம‌ட்டுமே இத‌னை ப‌டிக்க‌ முடியும். சூவ‌ர்ஸ்ய‌மான‌ சேவை;முய‌ற்சித்து பார்க்க‌லாம்.

————

link;http://scr.im/

லஷ்மண் ஸ்ருதியின் இணையத‌ளம்;ஒரு அறிமுகம்

லஷ்மண் ஸ்ருதியின் இன்னிசை கச்சேரிக்கு நீங்கள் பல முறை சென்றிருக்கலாம்.பாடல்களை கேட்டு ரசித்திருக்கலாம்.அந்த இசைக்குழுவின் மீது அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம்.

சரி.லஷ்மண் ஸ்ருதியின் இணைய வீட்டிற்கு விஜயம் செய்திருக்கிறீர்களா?இல்லை என்றால் ஒரு முறை சென்று பாருங்கள்.அட என்று லேசாக வியந்து போவீர்கள்.அந்த அளவுக்கு அழகாகவும் செறிவாகவும் இருக்கிறது லஷ்மண் ஸ்ருதியின் இணையதள‌ம்.

ஒரு இணையதளம் அழகாக இருப்பது பெரிய விஷயமல்ல.அதற்கு நல்ல வடைவமைப்பாளர் மட்டும் போதும்.ஆனால் இணையதளங்கள் சுவாரஸியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வடிவமைப்பு மட்டும் போதாது.விஷ‌ய‌ம் இருக்க‌ வேன்டும்.

லஷ்மண் ஸ்ருதி இணைய‌த‌ள‌த்தில் விஷ‌ய‌ங்க‌ளுக்கு ப‌ஞ்ச‌மில்லை என்ப‌தே விய‌ப்பான‌ விஷ‌ய‌ம்.உள்ளே நுழைந்த‌வுட‌னே முகப்பு ப‌க்க‌த்தில் ந‌ம்மை வ‌ர‌வேற்ப‌து இசை செய்திக‌ள் தான்.இசை த‌ட்டு வெளியீடு,இசை க‌லைஞ‌ச‌ர்க‌ளுக்கு பாராட்டு,இசை விழா என‌ இசைத்துறை தொட‌ர்பான‌ ச‌மீப‌த்திய‌ செய்திக‌ள் பிராதான‌மாக‌ இட‌ம்பெறுவ‌தே இந்த‌ த‌ள‌த்தின் பிராதான‌ அம்ச‌மாக‌ இருக்கிற‌து.அநேக‌மாக‌ தின‌ந்தோறும் இசை செய்திக‌ள் புத்த‌ம் புதிதாக‌ இட‌ம் பெற்ற‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌.

இது உண்மையிலேயே ஆச்ச‌ர்ய‌மான‌ ச‌ங்க‌தி.கார‌ண‌ம் ஒரு இசைக்குழுவின் இணைய‌த‌ள‌ம் என்ற‌துமே அத‌ன் சுய‌புராண‌த்தையே எதிர்பார்க்க‌த்தோன்றும்.இசைகுழுவின் நிக‌ழ்ச்சிக‌ள், சாத‌னைக‌ள் போன்ற‌ விவ‌ர‌ங்க‌ளே பிர‌தான‌மாக‌ இட‌ம்பெற்றிருக்கும்.சுருக்க‌மாக‌ச்சொன்னால் இசைக்குழுவின் விள‌ம்ப‌ர‌ கையேட்டின் இணைய‌வ‌டிவ‌மாக‌வே இணைய‌த‌ள‌ம் இருக்கும்.அத‌ன் கார‌ண‌மாக‌வே வாச‌க‌ர்க‌ளுக்கு பெரிய‌ அள‌வில் ஆர்வ‌ம் ஏற்ப‌டாது.

ஆனால் லஷ்மண் ஸ்ருதியின் இணைய‌தள‌த்தைப் பொருத்த‌வ‌ரை இசைக்குழு ப‌ற்றிஅய் விவ‌ர‌ங்க‌ள் பின்னணியில் இட‌ம்பெற்றிருக்க‌ இசை செய்திக‌ளே ந‌டு நாய‌க‌மாக அமைந்துள்ளன‌.

இசை செய்திக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இட‌து ப‌க்க‌த்தில் இசை விம‌ர்ச‌ன‌ங்க‌ள்,வீடியோ,டாப் டென் பாட‌ல்க‌ள்,இசை புத்த‌க‌ங்க‌ள்,சிற‌ப்பு ப‌குதி என‌ நிறைய‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.இவ‌ற்றைத்த‌விர‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள்,திருக்குற‌ள்,பிலிம்நியூஸ் ஆன‌ந்த‌னின் திரைப்ப‌ட‌ ப‌ட்டிய‌ல் ஆகிய‌வையும் இட‌ம்பெற்றுள்ள‌ன‌.

இப்ப‌டி மேய்வ‌த‌ற்கு ஏக‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இருக்கின்றனை.இசையமைப்பாளர்களின் பட்டியல்,பாட்ல் வரிகளின் பட்டியல் போன்றவற்ரை உதாரனமாக் கூறலாம்.சில‌ ப‌குதிக‌ளில் மிக‌க்குறைவான‌ விவ‌ர‌ங்க‌ளே இட‌ம் பெற்றிருப்ப‌து ஏமாற்ற‌ம் த‌ர‌லாம்.ஆனால் இப்போது தான் உருவாக்கி கொண்டிருப்ப‌தால் இருக்க‌லாம்.ஆனால் விரைவில் இவ‌ற்றை எல்லாம் முழுமையாக்க‌ வேண்டும்.

மொத்த‌தில் உயிர்ரோட்ட‌மாக‌ உள்ள‌ இனைய‌த‌ல‌ம் என்று சொல்ல‌லாம்.ஆனால் இந்த‌ உயிரோட்ட‌த்தை தொட‌ர்ந்து த‌க்க‌ வைத்துக்கொள்ள‌ த‌வ‌றிவிட‌க்கூடாது.

——

link;
http://www.lakshmansruthi.com/index.asp

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான்.

புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது.

இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

கிறிஸ்தும‌ஸ் ப‌ண்டிகையை முன்னிட்டு அமெரிக்கா முழுவ‌தும் இப்போது விடுமுரை கால‌ ம‌னோநிலையில் உள்ள‌து.வாழ்த்துக்க‌ள் ப‌ரிமார‌ப்ப‌ட்டு வ‌ரும் இந்த‌ கால‌த்தில் ஜிமெயில் உறுப்பின‌ர்க‌ள் த‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளில் யார‌வ‌து ஒருவ‌ருக்கு த‌பால் மூல‌ம் வாழ்த்து அட்டையை அனுப்பி வைக்க‌லாம் என‌ கூகுல் அழைப்பு விடுத்துள்ள‌து.பெய‌ரையும் முக‌வ‌ரியையும் சம‌ர்பித்தால் இல‌வ‌ச‌மாக‌ இந்த‌ அட்டையை கூகுல் அனுப்பி வைக்கும்.

இமெயில் சிற‌ந்த‌து என்றாலும் த‌பாலில் வாழ்த்து அட்டையை பெறும் அனுப‌வ‌த்திற்கு ஈடு இல்லை என்று குறிப்பிட்டுள்ள‌ கூகுல் அந்த‌ ம‌கிழ்ச்சியை அளிப்ப‌த‌ற்காக‌ இந்த‌ வ‌ச‌தியை உருவாக்கிய‌தாக‌ தெரிவித்துள்ள‌து.அதிலும் நீண்ட‌ நாட்களாக‌ தொட‌ர்பு கொள்ளாதவ‌ர்க‌ளிட‌ம் இருந்து வாழத்து வ‌ருவ‌து விஷேசமான‌து என‌ கூகுல் தெரிவிக்கிற‌து.

வ‌ர்த்த‌க் நிறுவ‌ன‌மான‌ கூகுல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் லாப‌ நோக்க‌ம் இல்லாம‌ல் இல்லை. இந்த‌ அட்டையிலும் குகுல் த‌ன‌து சேவையை விள‌ம்ப‌ர‌ம் செய்து வ‌ருகிற‌து.ஆனாலும் கூட‌ இந்த‌ சேவை புதுமையான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை.எல்லோரும் மெல்ல‌ த‌பால் சேவையை ம‌ற‌ந்து வ‌ரும் நிலையில் கூகுல் த‌பால் மூல‌ம் வாழ்த்து அனுப்ப‌ வைத்து நட்பை புதுப்பித்துக்கொள்ள‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் அளித்துள்ள‌து.

தீடிரென் வாழ்த்து அட்டை வ‌ரும் போது ம‌கிழ்ச்சி ஏற்ப‌டுபவ‌தோடு இமெயில்க்கு முந்தைய‌ கால‌த்திற்கும் திரும்பிச்சென்று வ‌ர‌லாம் அல்ல‌வா?
அதோடு இந்த‌ சேவை இந்தியாவில் அறிமுக‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌ வைத்துக்கொள்வோம் .அப்போது கிராமத்தில் இருக்கும் தாத்தாவிற்கோ அல்ல‌து சித்த‌ப்பாவிற்கோ பொங்கல் வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைத்தால் அவ‌ர்க‌ள் எப்ப‌டி ம‌கிழ்வார்க‌ள் என‌ எண்ணிப்பாருங்க‌ள்.

விள‌ம்ப‌ர‌த்திற்காக‌ என்றாலும் உண்மையிலேயே ப‌ய‌னுள்ள‌ சேவையை அறிமுக‌ம் செய்வ‌து தான் கூகுலின் த‌னிச்சிற‌ப்பு.

தை திங்களுக்கு கூகுல் இங்கேயும் இந்த‌ சேவையை அளிக்க‌ வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.

————
link;
https://services.google.com/fb/forms/gmailholidaycard/

இமெயில் அவதாரங்கள்

3dஇமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான இமெயில் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.
இது புதுமையான இமெயில் சேவையே தவிர புதிய இமெயில் சேவை அல்ல. உண்மையில் இமெயில்களை முற்றிலும் புதுமையான முறையில் பெற உதவும் சேவை. புதுமையானது மட்டும் அல்ல மிகவும் சுவையான சுவாரசியமான சேவை! இமெயில்களை இனிமை யான அனுபவமாக மாற்ற உதவும் சேவை.
திரைப்பட உலகில் “3டி’ எனப்படும் முப்பரிமாண உத்தி அறிமுகமான போது ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது அல்லவா? அதேபோலத்தான் இப்போது இமெயில் உலகில் “3டி’ உத்தி நுழைந்திருக்கிறது.
‘3dmailbox’ என்னும் அந்த சேவை உங்கள் இமெயில் முகவரி பெட்டியை முப்பரிமாண தன்மை கொண்டதாக மாற்றித் தருகிறது. இதனால் உங்களை தேடி வரும் இமெயில்களும் முப்பரிமாணத் தன்மை கொண்டதாகவே இருக்கும்.
அந்த முப்பரிமான உலகம் எப்படிப் பட்டது தெரியுமா? எழில் கொஞ்சும் கடற்கரையாக உங்கள் முகவரி பெட்டியை மாற்றி விடக் கூடியது.
முகவரி பெட்டி அலைகள் ஆர்ப்பரிக் கும் கடற்கரையானால் அதில் உலாவும் மனிதர்களின் வடிவத்தில் இமெயில்கள் வந்து சேரும். ஆம், புதிய இமெயில் வந்து சேரும்போது, கடற்கரையில் உள்ள ஓட்டல் ஒன்று க்கு நீச்சலுடை அணிந்த அவதாரமாக இமெயில் தோற்றம் தரும்.
வர்ச்சுவல் வேர்ல்டு என்று சொல்லப்படும் இன்டெர்நெட்டில் உயிர் பெறும் பல்வேறு வகையான மாய உலகங்களைப் போலவும் அதில் படைக்கப்பட்ட மனித தோற்றங்க ளைப் போலவும் (இவற்றைதான் இன்டெர்நெட் உலகில் அவதாரம் என்று குறிப்பிடுகின்றனர்).
இது இமெயிலுக்காக என்று உருவாக்கப்பட்ட மாய உலகம். இங்கே மெயில்கள் மாய மனிதர்களாக தோற்றம் அளிக்கும்.
கடிதங்களை நிலப்பறவைகள் என்று உரைநடையில் வர்ணிப்பது போல, இங்கு இமெயில்கள் மாய மனிதர்கள் வடிவம் பெறுகின்றன. இமெயில் களை பெற முற்றிலும் சுவையான வழிதான். இமெயில் என்றால் வீண் மெயில்களாக ஸ்பேம் தொல்லை இல்லாமல் இருக்குமா? இந்த மாய உலகில் வீண் மெயில்களை அடை யாளம் காட்டவும் வழி இருக்கிறது.
நம்பகமான மெயில்களை மட்டுமே காவலாளி அனுமதிப்பார். சந்தேகத்திற்கு இடமான மெயில்கள் வாயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு விடும். அந்த மெயில்கள் சுமோ பயில்வான் போன்ற தோற்றத்தில் அமைந்திருக்கும் என்பது விசேஷம்.
சுவாரசியம் இத்தோடு முடிந்து விடவில்லை. சந்தேகம் அளிக்கும் இமெயில்களை தேவை இல்லாதது எனத் தீர்மானித்து அவற்றை டெலிட் செய்ய முன் வந்தால் சுறா மீன் போல் தோற்றம் உண்டாகி அந்த இமெயில் மறைந்து போகும். இதனிடையே பிடிக்கப்படாத இமெயில்கள் ஓட்டல் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்கும். இமெயில்களை படித்தீர்கள் என்றால், அவற்றுக்கான அவதாரம் ஜாலியாக சூரியக் குளியல் எடுக்கத் துவங்கி விடும்.
மெயில்கள் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அவை சுற்று வட்டாரத்திலேயே உலாவிக் கொண் டிருக்கும். அவற்றை அனுமதித்து வரவேற்பதா (அ) வெளியேற்றுவதா என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். சொல்லப்போனால் கடற்கரை ரிசார்ட் ஒன்றில் நீங்கள் விடுமுறையை கழிப்பது போன்ற உணர்வை இந்த “3டி’ முகவரி பெட்டிஅளிக்கும். 3டி மெயில் பாக்சை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ் இந்த சேவை இமெயில்களை இனிமையானதாக ஆக்கும் என்கிறார்.
வீடியோ கேமின் தன்மையை இமெயில்களுக்கு ஏற்பத்தி தரும் முயற்சி இது என்கிறார்அவர். உங்களுக்கு வீடியோ கேம் பிடிக்கும் என்றால் இமெயில் மீது மிகுந்த மோகம் இருக்கிறது என்றால் இந்த சேவை நீச்சயம் உங்கள் மனதை கவர்ந்து விடும் என்கிறார் அவர். இமெயில்களை மனிதர்கள் வடிவில் மாற்றித் தரும் அனுபவம் வீடியோ கேமில் மூழ்கி இருப்பதற்கு நிதானமாக இருக்கும் என்றும் அவர் சொல்கிறார்.
முதல் கட்டமாக அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற மியாமி கடற்கரையை போல இந்த இமெயில் மாய உலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல்வேறு வகையான பின்னணியில் மாய உலகங்களை படைத்து இமெயில் களை வித்தியாசமான முறையில் தோற்றம் தர வைக்க முடிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இமெயில்கள் எல்லாம் போயிங் விமானமாக வந்து நிற்கும்.
நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இமெயில்களில் இருந்து முற்றிலும் வேறானது.
வித்தியாசத்தை வரவேற்பவர்கள் இந்த இமெயில் முறையை ஆதரிக்கலாம். அப்படி பரவலான வரவேற்பு இந்த சேவைக்கு கிடைக்கும் என்றால் மேலும் பல விமான உலகங்கள் இமெயில் களுக்காக உருவாக்கப் படலாம்.
எல்லாம் சரி இமெயில் சேவை இலவசமானது ஆயிற்றே! இந்த சேவை எப்படி? இந்த சேவையை சோதித்து பார்ப்பது இலவசமானது. சேவை உங்களுக்கு பிடித்திருக்கிறது. என்றால் கட்டணம் செலுத்தி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இந்த சேவையை உருவாக்கி உள்ள ராபர்ட் சாவேஜ், ஏற்கனவே இன்டெர்நெட் உலகில் பல டாட்காம் நிறுவனங்களை துவக்கி நடத்தினார். 1994ம் ஆண்டு வாக்கிலேயே மார்க்கெட் வாட்ச் என்னும் டாட் காம் நிறுவனத்தை துவக்கிய அவர் ஐஜம்ப், டிரேடிங் புளோர் என மேலும் டாட்காம்களை நடத்தி இருக்கிறார். இப்போது இமெயில்களை புதிய அவதாரம் எடுக்க வைத்து இருக்கிறார்.

——–
link;
http://www.3dmailbox.com/

இ மெயிலில் கால் செய்யவும்

இன்டெர்நெட்டில் இருந்து போன் செய்யலாம்! ஸ்கைப் சாப்ட்வேர் அதை எளிமையாக்கி பிரபலமாகவும் ஆக்கியிருக்கிறது. இமெயிலில் இருந்து போன் செய்ய முடியுமா? முடியும்! இந்த மாயத்தை சாத்தியமாக்கும் சேவையின் பெயர் “யூம்பா’ இஸ்ரேலைச் சேர்ந்த இலாத் ஹெமார் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து இந்த சேவையை உருவாக்கி இருக்கிறார். ஓராண்டு கால உழைப்பிற்கு பின் சமீபத்தில் இந்த சேவை இணையவாசிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யூம்பா’ சேவையை பயன்படுத்து பவர்கள் தங்கள் இமெயிலில் இருந்தே யாருக்கு வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் பேச முடியும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் இமெயில் முகவரியும் இன்டெர் நெட்டில் இணைக்கப்பட்ட தொலை பேசியிலும்தான். மறு முனையில் இருப்பவர் அருகாமையில் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் இருக்கலாம்!
அதோடு அவருக்கு என ஒரு இமெயில் முகவரி இருந்தால் போதும்! அவர் யூம்பா உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமோ பூம்பா சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை இதுதான் பூம்பாவின் தனிச்சிறப்பு. யூம்பா சேவை பிறந்ததற்கான காரணமும் இதுதான்!

“ஸ்கைப்’ போன்ற சேவைகளின் மூலம் இன்டெர்நெட் வழியே போன் பேசலாம். ஆனால் அதற்கு மறு முனையில் இருப்பவர் ஸ்கைப் உறுப்பினராக இருக்க வேண்டும்! அதேபோல், கூகுல் (அ) யாஹூ சேவையை பயன்படுத்துவதாயின் தொடர்புகொள்ள விரும்புபவரும், கூகுல் (அ) யாஹூ உறுப்பினராக இருந்தாக வேண்டும்.

ஆக, உங்கள் நண்பர்களுடன் எல்லாம் பேச வேண்டும் என்றால் ஒன்று நண்பர்களை நீங்கள் பயன்படுத்தும் சேவைக்கு மாறச் சொல்ல வேண்டும் இது அத்தனை சாத்தியமல்ல. எனவே உங்கள் நண்பர் வைத்திருக்கும் சேவையில் நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படியாக பத்து (அ) இருபது நண்பர்களுடன் பேசுவதற்காக நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் உறுப்பினராகி தனித்தனி முகவரி கணக்கை பராமரித்து வர வேண்டும்.
இதில் உள்ள சங்கடம் நான்கைந்து இன்டெர்நெட் தொலைபேசி சேவையை பயன்படுத்துபவருக்கு நன்றாக புரியும். யாஹூ நண்பருக்கு போன் செய்ய வேண்டும் என்றால், யாஹூ முகவரி கணக்கில் இருந்து தொலைபேசி செய்ய வேண்டும்.

ஸ்கைப் நண்பர் என்றால் ஸ்கைப்பில் இருந்து அழைக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் எந்த சேவையில் உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிலிருந்தே யாருடனும் பேச முடிந்தால் நன்றாகத்தானே இருக்கும்! யாஹூ போன்ற வலைவாசகல்கள் தங்கள் பயனீட்டாளர்கள் தங்களிடமே இருக்க வேண்டும் என்று விரும்புவதால் இப்படி எந்த சேவையை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அனுமதிப்பதில்லை.

எல்லா நிறுவனங்களுமே தங்கள் சேவைக்கு அதிக உறுப்பினர்கள் சேர வேண்டும் என்று நினைப்பது இயல்பானதுதான்! ஆனால் பிரச்சனை இணையவாசிகளுக்கு தான். ஒரு குறிப்பிட்ட சேவை வட்டத்துக்குள் வராத அந்நியர்களிடம் பேச வேண்டும் என்றால் நாமும் சேவை மாறியாக வேண்டும்.

இந்த நிலைக்கு தீர்வாகத்தான் யூம்பா வந்திருக்கிறது. யூம்பாவில் இருந்து யாருக்கு வேண்டுமானால் போன் செய்யலாம். அதோடு இந்த சேவையை பயன்படுத்துவதும் ரொம்ப சுலபமானது. எல்லாமே வெறும் கிளிக் தான். யூம்பா சாப்ட்வேரை டவுன்லோடு செய்ததுமே அது ஏற்கனவே நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இமெயில் சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு விடும்.

அதன் பிறகு இமெயில் முகவரி பெட்டியை திறந்தால் அதில் உள்ள நண்பர்களின் முகவரிக்கு அருகே தொலைபேசி லோகோவும் இடம் பெற்றிருக்கும். அதை கிளிக் செய்தால் போதும் பேச தொடங்கி விடலாம். நண்பர் மறுமுனையில் இல்லை என்றால் வாய்ஸ் மெயில் மூலம் செய்தியை பதிவு செய்யலாம்.

தொலைபேசி அழைப்பு மட்டும் அல்ல இதே முறையின் மெசேஜிங் சேவை மூலம் செய்தியும் அனுப்பி வைக்கலாம். இன்டெர்நெட் விஷயத்தில் மேம்பாடு தேவைப்பட்டாலோ ஏதாவது ஒரு குறை இருப்பதாக உணர்ந்தாலோ அதற்கான தீர்வை நாமே உருவாக்கி கொள்ளலாம் என்னும் உணர்வுக்கு ஏற்ப இஸ்ரேலின் ஹெமார் இந்த சேவையை தனக்காகவும் சக இணையவாசிகளுக்காகவும் உருவாக்கி உள்ளார்.

இன்டெர்நெட் தொலைபேசியை பயன்படுத்த முற்படுகையில் தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் விளைவாக அந்த சேவையை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

இந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து முழு வீச்சில் சேவையாக உருவாக்கி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு மாநாட்டில் அறிமுகமான இந்த சேவையை இன்று இந்தியா உட்பட 55 நாடுகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

——————
link;
www.yoomba.com