Category Archives: ஐபோன்

ஐபோனால் பிறந்த குழந்தை

ஐபோனால் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னால் ,ஐபோனில் உள்ள ஆயிரக்கணக்கான செயலிகளில் ஒன்று அதற்கு உதவியிருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கிலாந்தை சேர்ந்த லேனா பிரைஸ் என்பவர் தான் ஐபோன் உதவியோடு தாயாகியிருக்கிறார்.அவர‌து குழந்தை உலகின் முதல் ஐபோன் குழந்தை என்று வர்ணிக்கப்படுகிற‌து.பிரைசுக்கு இதில் மகிழ்ச்சி தான்.

தவமாய் தவமிருந்து தாயகியிருப்பவர் அல்லவா?அதற்கு உதவிய ஐபோன் செய‌லி சார்ந்து தனது குழந்தை வர்ணிக்கப்படுவதில் ஆனந்தம் இல்லாமலா போய்விடும்.

ஐபோனுக்கும் கருத்தரிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பி கொண்டிருப்பவர்கள் கவனிக்க, பிரைஸ் 4 ஆண்டுகளாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தார்.தாயாகும் ஆசை அளவில்லாமல் இருந்த போதும் அதற்கான பாக்கியம் மட்டும் வாய்க்கவில்லை.

மருத்துவ பரிசோதனைகளில் அவர் உடலில் எந்த கோளாறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கருத்தறிக்காதது ஏன் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

இந்த நிலையில் தான் அவர‌து  துணைவர் டேட்லி ஐபோன் ஒன்றை வாங்கி பரிசளித்தார்.ஐபோன் செய‌லிகள் பற்றி அறிந்திருந்த லேனா பிரைஸ் அதில் கருத்தரிப்பு என டைம் செய்து தேடிய போது 5 செயலிகள் இருப்பது தெரிந்தது.

அதில் மாதவிடாய் சுழற்சி அடிப்படையிலான செயலியை தேர்வு செய்து கொண்டார்.அந்த செயலி மாதவிடாய் சுழற்சியின் அடிப்படையில் கரு முட்டை உற்பத்தி நாளை கணக்கிட்டு அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக உறவு கொள்ள ஆலோசனை கூறியது.அதன் அடிப்படையில் துணைவரோடு சேர்ந்த இரண்டாவது மாதத்திலேயே கருவுற்றார்.

தற்போது அழகான‌ குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.இந்த குழந்தை ஐபோன் உபயம் என்று அவர் ஆனந்தததோடு சொல்கிறார்.

ஐபோன் சார்ந்த‌ செய‌லிக‌ளே இப்ப‌டி அச‌த்துகின்ற‌ன‌ என்றால் புதிதாக‌ அறிமுக‌மாகியுள்ள கூடுதல் திற‌ன் கொண்ட ஐபேட் சார்ந்த‌ செய‌லிக‌ள் எப்ப‌டி இருக்கும் யோசித்துப்பாருங்க‌ள்

ஆப்பிளின் ஐபேட்; புதிய தகவல்கள்

லேப் டாப் கம்ப்யூட்டரும் இல்லை;செல்போனும்(ஸ்மார்ட்போன்) இல்லை;இரண்டுக்கும் இடைப்பட்ட புதிய‌தொரு மொபைல் சாதனம்.

 ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய சாதனாமான ஐபேடை அதன் தலைமை அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் இப்படி தான் வர்ணித்துள்ளார்.இது மாய‌த்த‌ன்மை மிக்க‌ புர‌ட்சிக‌ர‌மான‌ தாயாரிப்பு என்றும் புக‌ழ்ந்து த‌ள்ளியுள்ளார் ஜாப்ஸ். ஐபேட் பெய‌ரே அச‌த்தாலாக‌ தான் உள்ள‌து.

ஐபாட் ம‌ற்றும் ஐபோன் ஆகிய‌வ‌ற்றின் தொட‌ர்ச்சியாக‌ ஆப்பிள் அறிமுக‌ம் செய்துள்ள‌ புதிய சாத‌ன‌ம் இது.பெரும் எதிர்பார்ப்பு ம‌ற்றும் ப‌ர‌ப்புக்கு இடையே இந்த‌ சாத‌ன்ம் அறிமுக‌மாகியுள்ள‌து.

பொதுவாக‌வே ஆப்பிளின் புதிய‌ அறிமுக‌ம் என்றாலே ஒரு மித‌மிஞ்சிய‌ எதிர‌பார்ப்பு இருக்க‌த்தான் செய்யும்.சில ஆண்டுகளூக்கு முன் ஐபோன் அறிமுக‌மான‌ போது திருவிழாவிக்கு நிக‌ரான் கோல‌க‌ல‌ நிகழ்வாக‌ அமைந்த‌து.

ஐபோட் வெற்றியை தொட‌ர்ந்து ஆப்பிள் செல்போன் ச‌ந்தையிலும் நுழைய‌லாம் என்று ஆருட‌ம் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் ஆப்பிள் ஐபோனை க‌ள‌மிற‌க்கி அச‌த்திய‌து. ஐபோனின் வெற்றி இன்று மாபெரும் தொழில்நுட்ப‌ ச‌காப்த‌மாக‌ திக‌ழ்கிற‌து.ஐபோனின் வ‌ருகை செல்போன் ச‌ந்தையையே மாற்றி அமைத்து விட்ட‌து.

 இந்த‌ பின்ன‌னியில் தான் கொஞ்ச‌ கால‌மாக‌வே ஆப்பிள் புதிய‌தொரு சாஅத‌ன‌த்தை அறிமுகம் செய்ய‌ உத்தேசித்திருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ந‌ம்மூரில் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் காத‌ல் க‌தை ப‌ற்றிய‌ அனுமான‌ங்க‌ளை வெளியிடும் உற்சாக‌த்தோடு ஆப்பிளின் புதிய‌ சாத‌ன்ம் ப‌ற்றி ர‌க‌சிய‌ த‌க‌வ‌ல்க‌ளும் யூக‌ங்க‌ளும் வெளியாகி வ‌ந்த‌ன‌.

இத‌னிடையே ஆப்பிள் 27 ம் தேதி இந்த‌ சாத‌ன‌ம் வெளியாகும் என்று அதிகார‌பூர்வ‌மாக‌ அறிவித்த‌ நிலையில் இந்த‌ யூக‌ங்க‌ள் வ‌லுப்பெற்ற‌ன‌.புதிய‌ வகை டேப்ல‌ர் க‌ம்ப்யூட்ட‌ராக‌ இது இருக்கும் என்ப‌தை பெரும்பாலான‌ யூக‌ங்க‌ள் உறுதி செய்த‌ன‌.

இந்த‌ டேப்லெட் க‌ம்ப்யூட்ட‌ர் ஈ புக் வ‌ச‌தி கொன்ட‌தாக‌ இருக்கும்,வீடியோ கேம் ம‌ற்றும் செய‌லிக‌ளில் புதிய‌ பாய்ச்ச‌லாக‌ அமையும் என்றெல்லாம் பேச‌ப்ப‌ட்ட‌து. அதைவிட‌ முக்கிய‌மாக‌ நாளித‌ழ்க‌ள் மாறு ப‌த்திரிக்கைக‌ளுக்கான‌ புதிய‌ வ‌ழியாக‌வும் விள‌ங்கும் என்றும் க‌ணிக்க‌ப்பட்ட‌து.

இந்நிலையில் ஆப்பிள் வ‌ழ‌க்க‌ப்ப‌டி அத‌ன் நட்ச‌த்திர‌ த‌லைமை அதிகாரியான‌ ஸ்டீவ் ஜாப்ஸ் ப‌ர‌ப்புக்கு ஈடுகொடுக்கும் வ‌கையில் புதிய‌ சாத‌னாமான‌ ஐபேடை அறிமுக‌ம் செய்துள்ளார். ஐபேட் டேப்லெட் வ‌கையை சேர்ந்த‌தாக‌ அமைந்துள்ள‌து.

ஐபோனை விட‌ ச‌ற்றே பெரிதாக‌ இருந்தாலும் தோற்ற‌த்திலும் வ‌டிவ‌மைப்பிலும் அத‌னை ஒத்திருக்கிற‌து.அரை இன்ச் அக‌ல‌ம் கொண்ட‌ ஐபேட் லேப்டாப்பை விட‌ எடை குறைந்த‌தாக‌ உள்ள‌து.வை பீ ம்ற்றும் ப்ளுடூத் வ‌ச‌தி கோன்டுள்ள‌து. அத‌ன் சிற‌ப்ப‌ம்ச‌ம் என்று பார்த்தால் பத்து ம‌ணி நீடிக்க‌ கூடிய‌ பேட்ட‌ரி,அழகான‌ தொடு திரை,ஐபுக் என்னும் புத்த‌க‌ வாசிப்பு வ‌ச‌தி என‌ அடுக்கி கொண்டே போக‌லாம்.

இதில் வீடியோ கேம் ஆட‌லாம். ப்ட‌ம் பார்க்க‌லாம். விடியோ கேமை பொருத்த‌வ‌ரை வேக‌த்தை கூட்டும் வ‌ச‌தி கூடுத‌லாக‌ உள்ள‌து.ப‌ட‌ம் பார்க்க‌ ஏற்ற‌ பெரிய‌ திரை கூடுத‌ல் சிற‌ப்ப‌ம‌ச‌ம். புத‌த‌க‌ வ‌ச‌தியை பொருத்த‌வ‌ரை புத்த‌க‌ அல‌மாரி போன்ற‌ அமைப்பிலிருந்து புத்த‌கத்தை உருவும் வ‌ச‌தியும் ப‌க்க‌ங்க‌ளை தொட்டு திருப்பும் வ‌ச‌தியும் குறிப்பிட‌த்த‌க்க‌து,

எல்லாவ‌ற்றையும் விட‌ ஆச்ச‌ர்ய‌ம் இத‌ன் விலை தான். ஆயிர‌ம் டால‌ராவ‌து இருக்கும் என்று கூற‌ப்ப‌ட்ட‌ நிலையில் 499 டால்ர் முத‌ல் கிடைக்க‌ உள்ள‌து.

கூகுல் போன் புதிய தகவல்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .

இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.கூகுல் போன் செய்திக‌ளை தொட‌ர்ந்து பின் தொட‌ருவோம்.

ஆனிய‌ன் ஒரு அறிமுக‌ம்

onion1ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல் என்று பொருள்.

ப‌க‌டி,கேலி,கிண்ட‌ல்,நையாண்டி என்றெல்லாம் சொல்ல‌ப்ப‌டுவ‌த‌ன் உச்ச‌த்தை உண‌ர‌வேண்டும் என்றால் நீங்க‌ள் ஆனிய‌ன் வாச‌க‌ராக‌ இருக்க‌ வேண்டும்.ஆனிய‌ன் இத‌ழை ப‌டிக்கும் போது புன்ன‌கைக்காம‌லோ அல்ல‌து விழுந்து விழுந்து சிரிக்காம‌லோ இருக்க‌ முடியாது.அந்த‌ அள‌வுக்கு ந‌ட‌ப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும்,ந‌ட‌க்காத‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும் இல‌க்காக்குவ‌து தான் இந்த‌ இத‌ழின் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

குற்ற‌ம் க‌ண்டுபிடித்து பேர் வாங்கும் ப‌ல‌வ‌ர்க‌ள் என்பார்க‌ளே அது போல‌ ஆனிய‌ன் இத‌ழ் ஆசிரியர் குழு நையாண்டி செய்தே பேர் வாங்கி வ‌ந்திருக்கிற‌து.1988 ம் ஆண்டு இளைஞ‌ர் இத‌ழாக‌ துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ ஆனிய‌ன் அமெரிக்காவின் முக்கிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் ப‌திப்பிக்க‌ப்ப‌ட்டு பிர‌ப‌ல‌மான‌து.

1996 ல் இத‌ன் இணைய‌ப‌திப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட போது இணைய‌வாசிக‌ள் ப‌ல‌ர் ஆனிய‌ன் அபிமானிக‌ளாயின‌ர்.ஆனிய‌னுக்கான‌ விக்கிபீடியா க‌ட்டுரை இத‌னை அமெரிக்க‌ போலி செய்தி நிறுவ‌ன‌ம் என்று ஆர‌ம்ப‌மாகிற‌து.போலி என்றால் பொய் செய்தி என்ற‌ அர்த்த‌மில்லை.

தேசிய‌ ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ நிக‌ழ்வுக‌ளை நையாண்டி செய்து வெளியிடுவ‌தால் இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து.ஆனியன் தன்னை அமெரிக்காவின் மிகச்சிறந்த செய்தி வழங்கும் நிறுவனம் என்று அழைத்துக்கொள்கிறது.வழக்கமான இதழில் பார்க்கக்கூடிய அனைத்து அம்ச‌ங்க‌ளும் ஆனியனிலும் இருக்கும் என்றாலும் எல்லாமே நையாண்டியை சார்ந்த்தாக இருக்கும்.
ஆனிய‌ன் இத‌ழில் வெளியாகும் கட்டுரைக‌ள் கேலியாக‌ அமைவ‌தோடு சிந்திக்க‌ வைக்க‌க்கூடிய‌ விம‌ர்ச‌ன‌மாக‌வும் இருக்கும் என்று பார‌ட்ட‌ப்ப‌டுகிற‌து.

ஆனிய‌ன் இத‌ழின் முத‌ல் பாதி தான் இப்ப‌டி நையாண்டி ராஜ்ஜிய‌மாக‌ இருக்கும் இர‌ண்டாம் பாதியில் அருமையான‌ நேர்காண‌ல்க‌ள்,விம‌ர்ச‌ன் அறிமுக‌ங்க‌ள் இட‌ம்பெற்றிருக்கும்.

இப்போது எத‌ற்கு இந்த‌ ஆனிய‌ன் புராண‌ம் என்றால் ஆனிய‌ன் ஐபோனுக்கான‌ செய‌லியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.ஐபோனுக்கான‌ செய‌லியை நியுயார்க் டைம‌ஸ் உள்ளிட்ட‌ நாளித‌ழ்க‌ள் பெற்றுள்ள‌ன‌.ஆனிய‌னும் இந்த‌ ப‌ட்டிய‌லில் சேர்ந்துள்ள‌து.

ஆனால் ஆனிய‌ன் என்றால் த‌னித்துவ‌ம் என்றும் அர்த்த‌ம்.அத‌ன்ப‌டி இந்த‌செய‌லி செய்தி இல்லா செய்திக‌ளை த‌ருவ‌த‌ற்காக‌ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அந்த வகையில் இது வ‌ழ‌க்க‌மான‌ செய்தி செய்லியாக‌ இல்லாம‌ல் வேறுப‌ட்ட‌தாக‌ இருக்கும்.அதாவ‌து இந்த‌ செய‌லி செய்தி த‌லைப்புக‌லை ம‌ட்டுமே வ‌ழ‌ங்கும். முழு நீள‌ செய்திக‌ள் இருக்காது.

செய்தி சேவையை இந்த‌ செய‌லி புர‌ட்சிக‌ர‌மாக‌ மாற்றும் என‌ ஆனிய‌ன் குறிப்பிட்டுள்ள‌து.முழ‌ நீள‌ செய்திக‌ளை எத‌ற்கு ப‌டிக்க‌ வேண்டும் த‌லைப்புக‌ள் ம‌ட்டெம் போதாதா என்று ஆனிய‌ன் கேட்காம‌ல் கேட்கிற‌து.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் மூல‌ம் ப‌கிர்ந்து கொள்ள‌ இந்த செய‌லி ஏற்ற‌தாக‌ இருக்கும்.


link;
http://www.theonion.com/content/index

கஞ்சாவை காட்டும் ஐபோன்

தலைப்பை பார்த்ததும் திடுக்கிட வேண்டாம். கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது.
மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு.

கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

ஆனால் ம‌ரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும்.

ஐபோன் சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபர‌ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும் ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை பொருளாக கருதப்படும் மரியூனா கைடைக்கும் இடங்களை காட்டக்கூடிய செயலியை அஜ்னாக் டாட் காம் என்னும் நிறுவனம் கனாபிஸ் எண்னும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் சாட்டரீதியாக மருத்துவ தன்மையோடு அது விற்கப்படும் இடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.

இதே போல பெட்ரோல் நிலையங்கள் மற்றும் நண்பர்களின் இருஒப்பிடத்தை காட்டும் செயலிகளும் உருவாக்கப்ப்ட்டுள்ளன.