Category Archives: டிவிட்டர்

பாட்டு டிவிட்டர் பாட்டு

knmaanடிவிட்டர் பயன்பாட்டில் புதிய மைல்கல்லாக பாப் பாடகர் கநான் டிவிட்டர் மூலம் பாடல் ஒன்றை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

கனான் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய தந்தை ஒரு கவிஞர் . அத்தை ஒரு பாடகி. சோமாலியாவில் உள்நாட்டுப்போர் தீவர‌மடைந்த நிலையில் அவ‌ரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.

சிறிது காலம் நியுயார்க்கின் ஹார்லம் பகுதியில் வசித்த க‌நான் பின்ன‌ர் கனடா சென்றார். கனடாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளத்துவங்கியதோடு ஹிப் ஹாப் இசையையும் பயில துவங்கினார்.

இது அவரை பாடகராக்கியது. பின்னர் சல் கய் என்பவரின் நட்பு கிடைத்து ஐ நா சபை அகதிகள் அரங்கில் பாடினார். அப்போது சோமாலிய பிரச்சனையில் ஐ நா நிலைப்பாட்டை விமர்சித்தார்.

தொடர்ந்து ஐ நா நிக‌ழ்ச்சிகளில் பாடிய அவர் , டியுரபேட்டர் என்னும் ஆல்பத்தை வெளியிட்டார்.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கநான் தனியே இணையதளமும் வைத்திருக்கிறார். டிவிட்டர் மூலமும் அவர் ரசிகர்களை தொடர்பு கொண்டு வருகிறார்.

இப்போது டிவிட்டர் மூலம் ஒரு பாடலை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் டிவிட்டர் மூலமே பாடல் வரிகளை சம‌ர்பிக்கலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வரிகளை கொண்டு ஏற்கனவே வெளியான ஆல்பத்தில் உள்ள ‘மக்கள் என்னை நேசிக்கின்றனர்’ என்னும் பாடலை மீண்டும் உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

டிவிட்டர் மூலம் பாடலை உருவாக்கும் முதல் பாடகர் என அவர் வர்ணிக்கப்படுகிறார்.

டிவிட்டரின் பயன்பாட்டு எல்லை விரிவடைந்து வருவதன் அடையாளமாக இதனை கொள்ளலாம்.

உயிர் காத்த டிவிட்டர்.

mooreவருங்காலத்தில் டிவிட்டர் புரளிகள் வெறுப்பேற்றலாம். இது வெறும் கணிப்புதான். டிவிட்டரின் வீச்சை கற்பனை செய்து பார்த்தபோது, டிவிட்டர் எப்படியேல்லாமோ கைகொடுக்க வாய்ப்பு இருப்பதை யூகிக்க முடிந்தது. அதே நேரத்தில் டிவிட்டர் எதிமறையாகவும் பயன்படுத்தப்படலாம் அல்லவா?

அதாவது டிவிட்டர் மூலம் வெடிகுண்டு புரளிகள் வரலாம். நிற்க அதற்கு முன்பாக டிவிட்டர் உயிர் காத்த கதையை பார்த்துவிடலாம்.

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான டெமி மூர் டிவிட்டர்பிரியை. ஷுட்டிங்கிற்கு நடுவே செல்போன் மூலம் டிவிட்டரில் அவர் தனது கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்வார். அவர்து கனவரும் ஒரு டிவிட்டர்பிரியர் தான்.

டெமி மூர் பகிர்ந்து கொள்பவற்றை 4 லடசம் பேர் ஆர்வத்தோடு படித்து வருகின்றனர். அவர‌து கண‌வருக்கு இதைவிட அதிக டிவிட்டர் ரசிகர்கள் உண்டு.

சமிபத்தில் பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் மூரை தொடர்புகொண்டு , கையில் கத்தி வைத்திருப்பதாகவும் அதனால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொல்லப்போவதகவும் தெரிவித்திருக்கிறார்.

மூர் அதை படித்துவிட்டு,அந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.கூடவே இவர் என்ன விளையாடுகிறாரா இல்லை நிஜமாகவே சொல்கிறாரா என் கேட்டிருந்தார்.

இதனை படித்து பார்த்த மூர் ரசிகர்கள் பலர் உடனடியாக அந்த பெண்மணி வசித்த சான் ஜோஸ் போலிசாரை தொடர்பு கொண்டு எச்சரித்துள்ளனர். அடுத்தடுத்து பலர் போன் செய்ததை அடுத்து போலிசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை காப்பாற்றியுள்ளனர்.

அவ‌ர் காப்பாற்றப்பட்ட விவரத்தையும் மூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

டிவிட்டரில் தனக்கு வந்த தகவலை ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டதால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டிவிட்டரில் பகிரப்படும் விஷயம் இப்படி உயிர் காக்க உதவலாம். சரி யாராவது வேண்டுமென்றே பொய்யான தகவல்களை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு ஏமாற்றினால் என்னாவது.

நம்மூர் ஆசாமிகள் போனில் வெடிகுண்டு புர‌ளியை கிளப்பிவிடுவது போல டிவிட்டரிலும் செய்யலாம் அல்லவா?

டிவிட்டர் வாங்கித்தந்த லோன்

tஇனி வங்கிகளோ , வர்ததக நிறுவனங்களோ அலைய வைத்தால் டிவிட்டர் மூலம் பாடம் புகட்டலாம் தெரியுமா?

ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த பெண்மணி ஒருவர் டிவிட்டர் மூலம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வங்கிகடன் பெற்றிருக்கிறார்.

அலிசன் காட்பிரே என்னும் அந்த பெண்மணி சிட்னி நகரில் வசிப்பவர்.காமன்வெல்த் வங்கியிடம் இவர் வீட்டிக்கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். வங்கி அவருக்கு கடன் வழங்கவும் முன்வந்தது.

வங்கி அனுமதியை நம்பி அவர் புதிய வீட்டிற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினார்.

ஆனால் வங்கியிடம் இருந்து அதிகாரபூர்வமான அனுமதி வருவது தாமதமாகி கொண்டே இருந்த‌து. அலிசனும் வங்கிக்கு நடையாய் நடந்தார். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை. அலிசனும் பொறுமையோடு காத்திருந்தார்.

இதனிடையே வீட்டிறகான ஒப்பந்தத்தை வழங்க இருந்த நிறுவனம் உடனடியாக
கடன் அனுமதி சான்றிதழை சம‌ர்பிக்கவிட்டால் , அபாராதம் செலுத்தவேண்டும் என தெரிவித்த‌து. குறிப்பிட்ட அந்த வீட்டை வாங்க வேறு ஒருவர் விருப்பம் தெரிவித்திருப்பதால், வங்கி அனுமதி சமர்பிக்கப்படும் வரை நஷ்ட ஈடாக அபாராதம் கட்ட வேண்டும் என கூறப்பட்டது.

இதனால் அலிசன் கொதித்துப்போனார். வங்கியின் அலட்சியம் அவரை வெறுத்துப்போகவைத்தது.

அலிசன் டிவிட்டர் பிரியர். இந்த வெறுப்போடு டிவிட்டரில், தனது வேதனையை வெளிப்படுத்தினார். வங்கி படாத‌பாடு படுத்துவதால் இன்ன‌மும் வீட்டு பத்திர ஒப்பந்தம் தமதமாகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம் தனக்கு நியாயம் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் அவருக்கு இல்லை. தனது உள்ளக்குமுறலை டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

டிவிட்டர் வாயிலாக எதையும் பகிர்ந்து கொள்ளலாமே.அதை தான் செய்தார்.

ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் வங்கி வாடிக்கையாள‌ர் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் அவர் டிவிட்டர் பதிவை படித்துவிட்டு அலிசனை தொடர்புக்கொண்டார். அவருடைய கோபத்தை புரிந்துகொள்வதாக கூறிய அதிகாரி பிரசச்சனையை தீர்த்து வைப்பதாகவும் உற்தி அளித்தார்.

அதன்படியே மறுநாள் எல்லம் சரியாகிவிட்டது.

டிவிட்டருக்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதலாம்.

டிவிட்டர் மூலம் ஒரு கருத்தை பகிர்ந்துகொள்ளும் போது அது பரவலாக படிக்காப்படும் வாய்ப்பு இருப்பதால் நல்ல செதியாக இருந்தாலும் சரி எதிர்மறையான செய்தியாக இருந்தாலும் சரி காட்டுதீ போல பரவிவிடும்.

வர்ததக நிறுவனங்கள் பற்றி , அவற்றின் சேவை தொடர்பாக வாடிக்கையாளர்கள் மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் பட்சத்தில் நிறுவனத்தின் நன்மதிப்பை அவை பாதிக்கக்கூடும்.

பலவர்ததக நிறுவனங்கள் டிவிட்டர் போன்ற தளங்களில் நிறுவனம் பற்றி கூறப்படுவதை தெரிந்துகொள்வதற்காக என்றே தனியே ஊழியர்களை நியமித்துள்ளன. எனவே டிவிட்டரில் புகார் தெரிவித்தால் ச்து கவனிக்கப்படும் வாய்ப்புள்ளது எனபத‌ற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டாக அமைகிறது.

நிற்க அமெரிக்காவில் சமையல்கலைஞர்கள் சிலர் டிவிட்டர் மூலம் சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கியுள்ளனர் தெரியுமா?

சுருக்கெழுத்து போன்ற முறையில் அவர்கள டிவிட்டர் கணக்கில் சமையல் குறிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

டிவிட்டர் பகிர்வு சாதனம் என்பதால் அவரவர்கள் தங்களை சார்ந்த விஷயங்களை பகிந்ந்து கொள்கின்றனர். ச‌மையல் வல்லுனர்கள் அதன்படி சமையல் கலையை பகிர்ந்து கொள்கின்ற்னர்.

டிவிட்டரால் வந்த வழக்கு

ciscofattyfailடிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார்.
சைமோங்கிர் என்னும் அந்த வடிவமைப்பு கலைஞர் டெக்ஸாஸ் நகரில் வசித்து வருபவர். பல்வேறு பிரபலங்களுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்து தருகிறார். இணையதளம் மூலமும் விற்பனை செய்து வருகிறார்.

இண்டெர்நெட் வாயிலாக இவரிடம் இருந்து ஆடைகளை வாங்கியுள்ள பாடகி லவ் கடந்த பிப்ரவரி மாதம் அவரிடமிருந்து நேரிடையாக தனக்கு தேவையான ஆடைகளி ஆர்டர் செய்துள்ளார்.

இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பமானது.
ஆடைகளுக்கு 4000 டாலர் பில் தொகையை சைமோங்கிர் அனுப்பிவைத்திருக்கிறார். இதன் பிறகு பாடகிக்கு அவ்ர் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டதாக சைமோங்கிர் கூறியுள்ளார்.
எது காரண‌மோ தெரியவில்லை, பாடகிக்கு வடிவமைப்பாளர் மீது கடுங்கோபம் உண்டானது என்னவோ உண்மை. இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் தீர்மானித்தார்.

இதற்கு டிவிட்டரை அவர் தேர்வு செய்தது தான் வழக்கில் முடிந்திருக்கிறது.

குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என வர்ணிக்கப்படும் டிவிட்டரில் பல பிரபலங்கள் த‌ங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்னும் கேள்விக்கு பதில் அளிப்பது தான் டிவிட்டர் பதிவின் இலக்கணம்.

நீங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்திர்கள் என்றால் , சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என டிவிட்டர் செய்யலாம். ஷாப்பிங் செல்வதாக இருந்தால் , அதையே குறிப்பிடலாம். பாடகி லவ்விற்கும் டிவிட்டரிடும் பழக்கம் இருக்கிறது. அவரோ அப்போது கோபத்தில் இருந்தார்.

டிவிட்டர் இலக்கணப்படி கோபத்தை கொட்டுவது தானே முறை. லவ் அதை தான் செய்தார்.

வடிஅவமைப்பாளர் மீது தனக்குள்ள கோபத்தை அப்படியே தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். கொஞ்ச‌ம் கடுமையாகவே கருத்துக்களை கூறியிருந்தார்.

நான் அறிந்தவரை மோசாமான‌ பெண்மணி என்றும்,மரணிக்கும் வரை அவருக்கு நிம்மதி கிடையாது என்றும் குறியிருந்தார். லவ் ரசிகர்கள் இதனை ரசித்திருக்கலாம். ஆனால் சைமோன்ங்கிர் இவற்றை படித்துவிட்டு கொதித்துப்போய்விட்டார்.
டிவிட்டர் மூலம் தன்னைப்பற்றி மோசமான பொய்யான கருத்துக்களை கூறி தன் இமேஜை பாழாக்கிவிட்டார் என்றும் இதற்கு நஷ்டஈடு தர உத்தர்விட வேண்டும் என்றூம் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

வழக்கு என்ன ஆகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும் ; டிவிட்டர் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பிற்கான உதாரணமாக இந்த சம்பவம் அமைவதாக கருதப்படுகிறது.

பாடகியின் கோபம் தொலைபேசி மூலமோ இ மெயில் மூலமோ வெளிப்பட்டிருந்தால் இந்த அளவு பிரச்சனை வந்திருக்காது. டிவிட்டர் எதையும் உடனடியாக‌ எல்லோரிடமும் கொன்டூ செல்லும் ஆற்றல் கொண்டது அல்லவா? அது தான் பாடகியின் கோபம் அவரை வம்பில் மாட்டி வைத்துள்ளது.
டிவிட்டரில் வெளிப்படுத்துன் கருத்துக்கள் உங்களை பிரச்சனையில் சிக்க வைக்கலாம் எனபதை இந்த சம்பவம் தெளிவாகவே உண்ர்த்துகிறது.

இதேபோல மற்றொரு சம்பவத்தில் அமெரிக்க இளம்பெண் ஒருவர் டிவிட்டரால் தனக்கு கிடைத்த வேலையை இழந்திருக்கிரார்.குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு பிரபல நிறுவனமான சிஸ்கோவில் வேலை கிடைத்தது. அவரும் டிவிட்டர் முகவரி உள்ளவர் தான்.
வேலை கிடைத்த செய்தியை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அந்த பெண் வெலை கிடைத்துவிட்டது என டிவிட்டர் செய்தார். அதோடு நிறுத்திகொண்டிருக்கலாம். ஆனால் டிவிட்டர் விடதே? நினைப்பதை அப்படியே பகிர தூண்டுவது தானே டிவிட்ட்ரின் சிறப்பு.

அவருக்கு அந்த வேலையில் கொஞ்சம் அதிருப்தி போலும்.அதை மறைக்காமல் டிவிட்ட‌ரில் தெரிவித்துவிட்டார். சிஸ்கோவில் வேலை கிடைத்ததுள்ளது. மகிழ்ச்சி தான்.நல்ல சம்பளம். ஆனால் தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும் பிடிக்காத வேலைக்காக என்று அவ‌ர் குறைப்பட்டுக்கொணடார். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அதிருப்தி ஏற்படுவது இயல்பு தானே? ஆனால் அதை வெளிப்ப்டையாக் சொல்ல‌லாமா? நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொள்வோம் தானே. அந்த இளம்பெண்ணும் ட்விட்டர் மூலம் தனது ந‌ட்பு வட்டத்தில் இதை பகிர்ந்துகொண்டார். டிவிட்டர் யுகத்தில் இது இயல்பு தானே. ஆனால் அவரது போதாத நேரம் சிஸ்கோ நிறுவன‌ உயரதிகாரி இதை படிதுவிட்டார்.

தான் படித்த விஷயத்தை டிவிட்ட‌ரிலேய பின்னூட்டமாக குறிப்பிட்டார். இந்த பெண்ணை எந்த அதிகாரி நேர்காணல் கண்டு வேலைக்கு சேர்த்தார் என தெரிய செய்ய வேண்டும் என்றூம் கூறியிறுந்தார். அவர் வேலை அவ்வளவு தான் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

இப்படி யாராவது நல்ல வேலையை கெடுத்துகொள்வார்களா என்று பலரும் கேட்கின்றனர். இதனிடையே அவருக்கு சிஸ்கோ ஃபேட்டி (cisco fatty)என பெயரிட்டு இது ப‌ற்றி இண்டெர்நெட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. டிவிட்டர் கொண்டு வந்துள்ள புதிய கலாச்சாரத்தினை எப்படி ஏதிர்கொள்வது என சிந்திக்கவும் வைத்துள்ளது.

இன்னொரு சுவார்ஸ்யமான விஷயம் தெரியுமா? சிஸ்கோஃபேட்டி என்னும் பெயரிலேயே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டிவிட்டில் வெலை இழப்பது எப்படி என்னும் கேள்வியோடு ,இளம்பெண் டிவிட்டரால் வேலை இழந்த கதை கூறப்பட்டுள்ளது.

———-

link;
http://ciscofatty.com/

இனி டிவிட்டர்காணல் காலம்

tweet2இமெயில் அறிமுகமான காலத்தில் இமெயில் மூலம் பேட்டி காண்பது எந்த அளவுக்கு வியப்பை ஏற்படுத்தி புருவங்களை உயர்ச்செய்தது என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் மூலம் டிவிட்டர் பேட்டி காணப்பட்டிருப்பது பரபரப்பை உண்டாக்கி பெரிதாக பேச வைத்திருக்கிறது.

டிவிட்டர் மூலமாக பேட்டியா என்று ஆச்ச‌ர்யம் ஏற்பட்டாலும் ஒருவிதத்தில் பேட்டி காண்பதற்கு இமெயிலை விட டிவிட்டரே பொறுத்தமானதாக தோன்றுகிறது.
டிவிட்டர் குறுஞ்செய்தி போல வலைபதிவு செய்யும் சேவை.
டிவிட்டரின் பலமும் பலவீனமும் ,அதன் 140 எழுத்து கட்டுப்பாடுதான்.

அடிப்படையில் “நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்னும் கேள்விக்கு பதிலளிக்க உதவும் டிவிட்டரின் குறிக்கோளுக்கு 140 எழுத்துக்கள் போதுமானதுதான். ஆனால் ஒரு முழு நேர்காணலை ந‌டத்த போதுமானத‌ல்ல.

கேள்விகளுக்கு கூட பிரச்சனையல்ல. ஆனால் பதிலளிக்கும் போது 140 எழுத்துக்கள் கட்டுப்பாடு சிக்கல் தான்.

ஆனால் டிவிட்டரில் உள்ள உடனடி தன்மை பேட்டி காண்பதற்கு உகந்ததாக இருக்கும்.
இமெயில் பேட்டி என்றால் கேள்விகளை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கவேண்டும்.

டிவிட்டரில் அப்படி இல்லை. கேள்வியை டைப் செய்தவுடன் பதிலையும் டைப் செய்துவிடலாம்.எனவே நேரடி பேட்ட போன்ற ஒரு உணர்வு ஏற்பட வாய்ப்புள்ள‌து.

டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் பழக்கம் பிரபலாமாகி வரும் நிலையில் டிவிட்டரின் பயன்பாட்டு எல்லைகள் விரிந்து வருகிறது.டிவிட்டரில் எது செய்தாலும் அது புதுமையாக இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போடியிட்ட ஜான் மெக்கெயினிடம் டிவிட்டர் மூலம் பேட்டி காணப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஏ பி சி தொலைக்காட்சி நிருபரான ஸ்டெபெனோபோலஸ் டிவிட்டர் மூலம் இந்த பேட்டியை நடத்தியுள்ளார். 20 நிஒமிடம் நீடித்த இந்த பேட்டியின் போது மெக்கெயின் பொருளாதாரம். பாகிஸ்தான் உட்பட பல விஷயங்கள குறித்து பதில் அளித்துள்ளார்.

இந்த நிகழ்வு பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.டிவிட்டர் மூலம் பேட்டி காண்பதற்கு டிவிட்டர்வியூ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. த‌மிழில் டிவிட்டர்காணல் என வைத்துக்கொள்ளலாம். வரும் காலத்தில் டிவிட்டர்கானல்கள் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.