Category Archives: டிவிட்டர்

டிவிட்டர் விவாகரத்து

annistanடிவிட்டரால் வேலை கிடைத்திருக்கிறது. டிவிட்டரால் வேலை போய்
இருக்கிறது. இப்போது டிவிட்டரால் ஒரு நட்சத்திரக்காதல் முறிந்திருக்கிறது.

டிவிட்டர் மோகம் முதலில் பிரபலங்களை தான் பிடித்து ஆட்டுகிறது. டிவிட்டர் செய்வது பிரபலங்களுக்கு உள்ளபடியே எந்த அளவுக்கு பயனுள்ளது என்பது ஒருபுறம் இருக்க ,’டிவிட்டர் செய்கிறார்’ என் கூறப்படுவது ந‌ல்ல விளம்பரமாக அமைந்து விடுகிறது.

விளம்பரத்தை மீறி டிவிட்டரிடுவது நட்சத்திரங்களை பொருத்தவரை ரசிகர்களோடு தொடர்பு கொள்வதற்கான நல்ல வழி.

ஆனால் டிவிட்டர் என்பது இருபக்கமும் கூரான கத்தியைபோன்றது. அதனை கவனமாக கையாளவேண்டும். இல்லையென்றால் சிக்கலில் முடியலாம்.

ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் அனிஸ்டனின் காதல் இப்ப்டி தான் டிவிட்டரால் முடிவுக்கு வந்திருக்கிறது.

அனிஸ்டன் தற்போது ஜோலியின் கணவராக இருக்கும் ராட் பிட்டின் மாஜி காதலி என்ற விஷயத்தை எல்லாம் விட்டுவிடுவோம்.

இப்போது அவர் பாப் பாடகரான ஜான் மேயர்ஸ் என்பவரின் காதலி. அதாவது மா காதலி. சமீபத்தில் அவர்கள் காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறிவுக்கு காரணம் மேயர்சின் டிவிட்டர் மோகம் என்று கூறப்படுகிறது.

மேயர்ஸ் சதசர்வ காலமும் டிவிட்டரே கதியென கிடப்பவராக கருதப்படுகிறார்.தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவர் டிவிட்டரில் பதிவு செய்வதை ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் காதலி ஆனிஸ்டன் இதை விரும்பவில்லை போலிருக்கிறது.

அதிலும் மேயர்ஸ் தன்னிடம் போதிய கவனம் செலுத்த‌வில்லை என்னும் கோபம் அவருக்கு இருக்கிறது. மேயர்சும் அதற்கேற்ப காதலியிடம் பாராமுகம் காட்டி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அனிஸ்டன் சமிபத்தில் மேயர்சின் டிவிட்டர் பக்கத்தை பார்த்து கொதித்துப்போயிருக்கிறார்.

இந்தமனிதருக்கு டிவிட்டரில் உபயோகமில்லாத தகவக்ல்களை பகிர மட்டும் நேரம் உள்ளது ஆனால் என்க்கு போன் செய்யவோ . ஒரு எஸ் எம் எஸ் அனுப்பவோ முடியவில்லையா என அவர் பொங்கியிருக்கிறார்.

எனவே அவர் டிவிட்டரை கட்டக்கொன்டு அழட்டும் நான் போகிறேன் என் காதலிக்கு விடை கொடுத்து விட்டார். மேயர்ஸோ தன் பங்குக்கு சமாதானம் சொல்ல்க்கூட முற்படவில்லையாம். அப்படிய சரி என கூறிவிட்டாராம்.

அந்த அள‌வுக்கு டிவிட்டரை விரும்புகிறாரா எனத்தெரியவில்லை.எப்படியோ டிவிட்டர் மோகத்தால் அவர் காதல் முறிந்துவிட்டது.

டிவிட்டரால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு இது உதாரணம் போலும்.

நிற்க மேயர்ஸ் அனிச்டனுக்கு டிவிட்டர் மூலமே சமதானம் சொல்லியிருந்தால் பிரச்சனை தீர்ந்திருக்கலாம் அல்லவா?

டிவிட்டரில் சிக்கிய திருடன்

1-twitமுன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்க‌ம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம்.

ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை.

நீ யார், எதற்கு என் வீட்டிற்குள் வருகிறாய் என்றும் கேட்கவில்லை. அதற்கு மாறாக தன்னுடைய டிவிட்டர் கண‌க்கு மூலம் இந்த தகவலை தன்னை பின் தொடர்பவர்களுக்கு தெரிவித்தார் .

அப்போது நள்ளிரவு 3 மணியிருக்கும்.20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், (அவ‌ர் வீடில்லாதவர்களாக இருக்கலாம்,குடித்து விட்டு இருக்கலாம். அல்லது தூக்கத்தில் நடந்து வந்திருக்கலாம்), என் வீட்டு குளியலைறைக்குள் நுழைந்துவிட்டார் என்று அவர் எழுதினார்.

உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கலாம், டிவிட்டர் இணையம் மற்றும் செல்போன் வழியே குறுஞ்செய்தியாக தகவல்களை பகிர்ந்துக்கொள்ள உதவும் சேவை.

இப்போது பிரபலங்கள் மத்தியில் எதையும் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. டிவிட்டரில் பகிரப்படும் தகவல்களை ஆர்வத்தோடு படிப்பதெற்கென்று அவரவற்கு வாசகர்களும் இருக்கின்றனர். பின்தொடர்பவர்கள் என இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

பிரேகரும் இப்படி டிவிட்டரில் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் தான்.

எனவே தான் வீட்டுக்குள் யாரோ நுழைந்ததும் அவர் அதனை முதலில் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

அடுத்ததாக அந்த ஆசாமி என்ன செய்து கொண்டிருக்கிறான் போன்ற விவர‌ங்களையும் தெரிவித்தார்.

இதற்குள் அவரது பின்தொடர்பாளர்களில் பலர் இந்த செய்தியை படித்து விட்டு ,மேற்கொண்டு என்ன நடக்கிற‌து என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர்.

ஒரு சிலர், நிலைமையை சமாளிக்க ஆலோசனைகளையும் வழங்கினர். முத்லில் போலிசுக்கு தகவல் சொல்லுங்கள் என்று சிலர் தெரிவித்தனர்.இன்னும் சிலரோ இதுவரை போலிசுக்கு போகாமல் இருப்பதே முட்டாள்த்தனம் என்று கடிந்து கொண்டனர்.

பிரேகரும் இது பற்றியேல்லாம் யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர‌து உள்ளுணர்வு அந்த ஆசாமியால் ஆபத்தில்லை என கூறியதால் ,தொடர்ந்து ந‌டப்பவற்றை டிவிட்டர் மூலம் தெரிவித்தவண்ணம் இருந்தார்.

கிட்டத்தட்ட 15 டிவிட்டர் செய்திகளை பகிர்ந்துகொண்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவ‌ர் குளியலறைக்கு சென்று அந்த நபரை விரட்ட முற்பட்டிருக்கிறார். ஒரு சிறு போராட்டத்திற்கு பிறகு அந்த நபரை இழுத்து வந்தார்.அப்போது அந்த ஆசாமி படுக்கையறையில் சுருண்டு விழுந்தார்.பத்து நிமிட போராட்டத்திற்கு பின் அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதனிடையே யூசட்ஸ்டிரிம்.டிவி சேவையின் மூலம் அதனது வீட்டில் ந‌டக்கும் காட்சிகளையும் அவர் பகிர்ந்துகொன்டார்.

ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல பலரும் டிவிட்டர் மூலம் இந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நாடகம் முடிந்த பின் யூடியூபிலும் இதனை பிரேகர் பகிர்ந்துகொண்டார்.

இண்டெர்நெட் உலகில் இந்த சம்பவம் லேசான பரபர‌ப்பை ஏற்படுத்திவிட்டது.டிவிட்டர் ஏற்படுத்தியுள்ள‌ தாக்கத்தின் அடையாளாமாக இது கருதப்படுகிறது. சுவையான சம்பவம் என்றாலும் எதையும் டிவிட்டர் செய்யும் பழக்கம் எங்கே போய் முடியுமோ என்ற விவத்த்தையும் உண்டாக்கியுள்ளது.

திருடன் வந்தால் உடனே அதற்கேற்ப செயல்படுவதை விட்டு இப்படி டிவிட்டர் மூலம் உலகிற்கு தெரிவிக்க முற்படுவது சரியா என்றும் கேட்கப்படுகிறது.

இன்னும் சிலரோ இந்த சம்பவம் முழுவதுமே ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாமா என்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஆனால் அவ்வாறு இல்லை என பிரேபர் மறுத்துள்ளார்.

இணைய கலாச்சாரம் எனபது எத்தனை நூதனமானது என்பதை இந்த சம்பவம் உனத்துவதாகவும் கருதபடுகிறது.

தேடு தேடு டிவிட்ட‌ரில் தேடு

tcyclewஅடுத்த முறை உங்கள் சைக்கிளோ பைக்கோ காணாமல் போகிறது என வைத்துக்கொள்வோம்.அதை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கும் போது, டிவிட்டர் மூலமும் தேடுதல் வேட்டையை நட‌த்தலாம் தெரியுமா?
டிவிட்டரில் உங்களுக்கு பின்னே நிற்க பெரிய அளவிலான தொண்டர் படை இருக்குமானால் அவர்களில் யாராவது பைக்கை கண்டுபிடிக்க உதவலாம்.

உலகப்புகழ் பெற்ற சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டிராங் இப்படி தான் காணாம்ல் போன தன்னுடைய பைக்கை கண்டுபிடிக்க டிவிட்டர் படையை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

டிவிட்டர் உலகம் போற்றும் குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை. பிரபலங்களும் சாமான்யர்களும் பலவிதங்களில் இதனை பயன்படுத்தி வருகின்றனர். டிவிட்டர் மூலம் தகவல்கலை வெளியிடலாம் . பகிர்ந்து கொள்ளலாம். டவிட்டருக்கான புதிய புதிய பயன்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சைக்கிள் வீரரான ஆம்ஸ்டிராங்,காணாமல் போன தனது சைக்கிளை கண்டுபிடிக்க டிவிட்டர் சேவையை பயன்படுத்தியுள்ளார்.
டூர் டி பிரான்ஸ் என சொல்லப்படும் சைக்கிள் பந்தயத்தை 7 முறை வென்றுள்ள இவர் கலிபோர்னியாவில் சைக்கிள் பந்தயத்திற்க்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது சைக்கிள் திருடப்பட்டு விட்டது.
பயிற்சிக்குபின் டிரக்கில் கொண்டு செல்லப்பட வைக்கப்பட்டிருந்த போது களாவாடப்பட்டது.
ஆம்ஸ்டிராங்கும் சாதாரணமான வீரர் இல்லை. அவர் பயன்படுத்தும் சைக்கிளும் சாதாரணமானது அல்ல.புற்றுநோயோடு போராடி மீண்டு வந்தவர் ஆம்ஸ்டிராங் . சைக்கிள் களத்தில் அதன் பிறகு அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். அவர் பயன்படுத்தும் சைக்கிள் வேகத்திற்கு உதவக்குடிய நுட்பங்களோடு அதி நவீன தொழில் நுட்பத்தோடு அவருக்காக என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

இத்தகைய சைக்கிள் உலகிலேயே ஒன்றுதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சைக்கிள் காணாமல் போனதுமே பதறிப்போன ஆம்ஸ்டிராங் போலிசில் புகார் செய்த கையோடு தனது டிவிட்டர் பக்கத்திலும் இத்த தகவலை வெளியிட்டு அதனை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

கூடவே டிவிட்டர் மூலம் புகைப்படங்களை வெளியிட உதவும் டிவிட்பிக் சேவை வழியே சைக்கிளின் படத்தையும் வெளியிட்டார்.
சைக்கிளை பார்த்தால் தகவல் சொல்லுங்கள் என்பது தான் அவரது வேண்டுகோள்.
டிவிட்டர் மூலம் தகவல் அறிந்தவர்கள் சைக்கிள் திருடனையோ சைக்கிளையோ பார்த்தால் தகவல் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையு ம் அவருக்கு இருந்த்து.

ஆம்ஸ்டிராங் டிவிட்டரிலும் ஒன்றும் சாதாரணமானவ‌ர் இல்லை. டிவிட்டரில் அவரை பின்தொடர்பவர்கள் 1,28,000 பேர் உள்ளனர். ஆம்ஸ்டிராங்கின் தீவிர ரசிகர்களான இவர்கள் அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் டிவிட்டர் மூலம் பிந்தொடர்ந்து வருகின்ற‌னர்.

சைக்கிள் தேடலிலும் இவர்கள் உதவுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். அதிலும் அவரது சைக்கிள் விசேஷமானது என்பதால், அதனை விற்க முற்பட்டால் எளிதாக தெரிந்துவிடும். எனவே அதனை விற்பனை செய்வது திருடியவருக்கு சாத்தியமில்லை.

எத்தனை ரசிகர்கள் உடனே தேடத்தொடங்கினர் என்று தெரியவில்லை.ஆனால் பலரும் டிவிட்டர் வாயிலாகவே அவருக்கு ஆறுதல் கூறினர்.ஒரு சிலர் எனது பைக்கை தருகிறேன் என்றனர்.ஒரு சிலட் நக்கலடித்தனர் என்பது வேறு விஷயம்.
இத்ற்குள் அந்த சைக்கிள் ஏல தளமான இபேவில் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் சிலர் கதைவிட்டனர். மொத்ததில் ஆம்ஸ்டிராங் சைக்கிள் காணாமல் போனது பரபரப்பையும் ஏற்படுத்தியது.விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
ஆம்ஸ்டிராங்கின் டீட்டர் படை பார்த்துக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் உண்டானது.
இது திருடியவர் மனதில் பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எது எப்படியோ அடுத்த சில நாட்களில் சைக்கிள் போலிசாரிடம் ஒப்பாடைக்கப்பட்டுவிட்டது.

சைக்கிளை ஒப்படைத்தது திருடியவர் அல்ல என்று பொலிசார் குறியுள்ளனர்.
மேற்கொன்டு விவரங்களை வெளியிடவில்லை.
டிவிட்டரால் சைக்கிள் கிடைத்ததா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் தேடல் பணியில் டிவிட்டரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற ந்ம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது அல்லவா? அது தான் முக்கியம்.

————–

தேடலுக்கு தொழில்நுட்பம் எப்படி பயன்படும் என்பதை சுட்டிக்காட்டும் என் முந்தைய பதிவு…
link;
http://cybersimman.wordpress.com/2008/12/31/

டிவிட்டரில் திருக்குற‌ள்

twt4கம்பராமயணத்தை யாராவது டிவிட்டர் மூலம் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
இல்லை கம்பராமயணத்தை டிவிட்டரில் கொன்டு வருவது கடினம்.அதை விட திருக்குறள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.தினம் ஒரு டிவிட்டர் குறள் என்று அமர்க்களப்படுத்தளாம்.
டிவிட்டர் அநேகமாக‌ உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.உலகம் போற்றும் உன்னதமான குறும் வலைப்பதிவு சேவை இது.மைக்ரோ பிளாகிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.140 சொற்க‌ளில் செய்திகளை வெளியிட வழி செய்யும் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது வேகமாக பிரபலமாகி வருகிற்து.
ஆரம்பத்தில் “நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க அறிமுகமான டிவிட்டர் நாளடைவில் மிகவும் பிரபலமாகி வேறு பல வித்ங்களிலும் பயன்படலாயிற்று. இன்று டிவிட்டர் எத்தனையோ வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற‌து.இதில் வியப்பூட்டும் வழிகள் அநேகம் இருக்கின்றன.
இந்த வகையில் இப்போது ஆங்கில மகாகவி சேக்ஸ்பியரின் நாடகத்தை டிவிட்டருக்கு கொண்டு வந்துள்ளனர்.

அதாவது சேக்ஸ்பியரின் நாடகம் ஒன்றை டிவிட்டர் மூலம் வெளியிட தொடங்கியுள்லனர்.இதற்காக டிவிட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.டேமிங் ஆப் த ஷுரு என்னும் நாடகம் தேர்வு செய்யப்பட்டு அதன் பிராதான பாத்திரங்களுககான டிவிட்டர் கணக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினம் ஒரு காட்சி என்ற முறையில் பாத்திரங்கள் வாயிலாக வசனங்கள் டிவிட்டர் செய்யப்பட உள்ளன. 140 வார்த்தை என்பதால் வசணங்கள் கொஞ்சம் சுருக்கப்படும்.
இந்த முயற்சியை துவக்கியுள்ளவர் இதனை சேக்ஸ்பரிமண்ட் என்று அழைக்கிறார்.
இது கொஞம் ஓவர் என்று சிலர் கூறினாலும் சேக்ஸ்பியரை மக்களிடம் கொண்டு வரும் நல்ல முயற்சி என்றும் பாராட்டப்படுகிற‌து. இது வெற்றி பெறுமா என்பது ஒரு புறம் இருக்கட்டும் , நாமும் கூட தமிழ் இலக்கியத்தை ட்விட்டர் செய்யலாம் அல்லவா?
அப்படி செய்ய முற்ப்பட்டால் இரண்டு அடியில் உலகை அள‌ந்து விடும் குறள் அத்ற்கு மிகவும் ஏற்றது அல்லவா?

————–
link;
http://twitter.com/AmwayShakes

—————–

(

டிவிட்டர் ப‌ற்றி எழுத நிறைய சுவாரஸ்யமான விஷய்ங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுத உள்ளேன்

.)