Category Archives: யூடியூப்

இணைய தாத்தா பீட்டர் ஆக்லே !

oakley_2862561bநீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது.

உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர் , யார் இந்த இணையதாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் கூடாரம் என கருதப்படும் வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நுழைந்து வீடியோ வழியே இக்காலத்து மொழியில் பேசி , யூடியூப்பாளர்களால் இணைய தாத்தா என கொண்டாடப்பட்டவர். புற்றுநோயுடன் போராடி மறைவதற்கு முன்பாக ஆக்லே 400 க்கும் மேற்பட்ட யூடியூப் வீடியோக்களை பதிவேற்றியிருக்கிறார்.அவரது வீடியோக்கள் மொத்தமாக கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிகம் பிரபலமானவராக ( அதிக சந்தாதாரரகள்) அவர் இருந்தார். இந்த உலகை விடைபெற்று செல்லும் போது கூட அவருக்கு யூடியூப்பில் 43,000 சந்ததாரர்கள் இருந்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிறந்த ஆக்லே, வயோதிகத்தில் கடந்த கால அனுபவத்தை திரும்பி பார்த்து அவற்றை இக்கால தலைமுறையுடன் பகிர்ந்து கொண்டு ,இணைய உலகில் தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

பெரியவர் பீட்டர் ஆக்லேவை இணையப்புகழ் பெற்றவர்களில் முக்கியமானவராக குறிப்பிட வேண்டும். இண்டேர்நெட் என்றாலே நமக்கானது இல்லை என்று ஒதுங்கி கொள்ளும் வயதானவர்கள் மத்தியில் ஆக்லே அதை ஆர்வத்தோடு அரவனைத்துக்கொண்டு வெற்றியும் பெற்றார். யூடியூப் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஆக்லே, வயோதிகமும் தனிமையும் வாட்டிய காலத்தில் தனக்கான இளம் ஆதரவாளர்களை தேடிக்கொண்டதோடு, இக்காலத்து தலைமுறையுடன் அவர்களுக்கு புரியும் மொழியில் உரையாடலில் ஈடுபட்டு தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது வீடியோக்கள் ஒரு வயதானவரின் அலுப்பூட்டம் அறிவுரையாகவோ, முதியவரின் புலம்பலாகவோ இல்லாமல் சுவாரஸ்யமும் ,புத்துணர்ச்சியும் தரக்கூடியதாக இருந்தது. அதுவே அவரை இணையம் கொண்டாடிய தாத்தாவாக உருவாக்கியது. இணையத்தில் பேச வேண்டிய மொழியை ஆக்லே தாத்தா நன்றாக அறிந்திருந்தார். அவரது யூடியூப் வீடியோக்கள் எதுவும் 2 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை. சராசரியாக 5 நிமிடத்திற்குள் அவர வீடியோவில் தான் சொல்ல வந்ததை முடித்துக்கொண்டார். இந்த வீடியோ வழியே அவர் தனது இளமைக்கால அனுபவம் துவங்கி எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், திருமன வாழ்க்கை, தனிப்பட்ட அனுபவம் ஆகியவற்றை வீடியோவில் பேசியவர் ,கல்வி, வயோதிகம் போன்ற பொதுவான விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கிறார். ஒவ்வொரு வீடியோவும் ஆயிரக்கணக்கானோரால் பார்த்து ரசித்து பாராட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன் யூடியூப்பில் அவர் அடியெடுத்து வைத்த முதல் வீடியோவே ஹிட்களை அள்ளி அவரை நட்சத்திரமாக்கியது .2006 ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆக்லே தனது முதல் வீடியோவை பதிவேற்றினார். இது கொஞ்சம் ஆச்சர்யமானது தான். ஏனெனில் யூடியூப்பே அப்போது தான் அறிமுகமாகியிருந்தது. இளைஞர்கள் மத்தியில் பிரபலமான அந்த தளத்தில் இளசுகள் உருவாக்கிய வீடியோக்கள் தான் குவிந்திருந்தன. அந்த காலகட்டத்தில் யூடியூப் என்றால் என்ன என்று இணையவாசிகள் பலருக்குமே

யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

http _surprise.ly_v_யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை பார்த்தாக வேண்டும். அதாவது நம்மூர் தொலைக்காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் போது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இருபது நிமிடங்களுக்கு விளம்பரங்களை பார்த்து , படம் பார்க்கும் ஆசையே வெறுத்து போவது போல தான். இவ்வாறு விளம்பரங்கள் போன்ற இடையூறுகள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க வழி செய்கிறது சர்பிரைஸ்.லே இணையதளம்.

பெயருக்கேற்ப இந்த தளம் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் தான் இருக்கிறது. இதன் முகப்பு பக்கம் எந்த அலங்காரமும் இல்லாமல் படு சிம்பிலாக இருக்கிறது. மேல் பகுதியில் சிறிய கட்டம் மட்டும் இருக்கிறது. அதில் நீங்கள் பார்க்க விரும்பும் யூடியூப் வீடியோ முகவரியை சமர்பித்தால் போதும் , விளம்பர இடையூறு , வடிவமைப்பு அலங்காரங்கள் இல்லாமல் எளிமையாக வீடியோவை பார்க்க முடிகிறது.

தியேட்டரில் சினிமா பார்ப்பது போல, திரை முழுவதும் கறுப்பு பின்னணியில் நடுவே வீடியோவை மட்டும் பார்த்து ரசிக்கலாம்.

இணையத்தில் செய்தி மற்றும் கட்டுரைகளை விளம்பரங்கல் நீக்கி பார்க்கும் வசதி ஏற்கனவே இருக்கிறது. இப்போது வீடியோ பிரியர்களுக்கும் இந்த வாய்ப்பை சர்பிரைஸ்.லே வழங்குகிறது.

அருமையான சேவை ,முயன்று பாருங்கள் : http://surprise.ly/v/

 

——-

பி.கு; இணையத்தால் இணைவோம் ; சைபர்சிம்மன் கையேடு-1 புத்தகத்தில் யூடியூப் சார்ந்த சுவார்ஸ்யமான பயனுள்ள புதுமையான  இணைய சேவைகள் பற்றி விரிவாக எழுதுயுள்ளேன். முடிந்தால் வாங்கி படித்து பார்த்து சொல்லவும். ; http://600024.com/store/inaiyathal-inaivom-mathi-nilayam

யூடியூப் வழங்கும் புதிய வசதி.

Lowers-youtube_610x436தனிநபர் தொலைகாட்சி பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது வரை யோசிக்கவிட்டாலும் இனி யோசியுங்கள். ஏனெனில் தனிநபர் தொலைகாட்சி நடத்துவது மிகவும் சுலபமானது. அதை நீங்களும் கூட செய்யலாம். எப்படி என்று ஆர்வத்துடன் கேட்கிறீர்களா? பிரபல வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் இதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இணைய உலகில் ஸ்டீரிமிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பட்டனை தட்டியதும் குழாயில் இருந்து தண்ணீர் பாய்வது போல ஆடியோ அல்லது விடியோ கோப்புக்கள் கிளிக் செய்ததும் ஒளிபரப்பாகத்துவங்கி விடுவதை தான் ஸ்டீரிமிங் என்கின்றனர். ஸ்டீரிமிங் செய்யப்படும் போது கோப்புகளை டவுண்லோடு செய்யத்தேவையில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கும் போதே ஸ்ட்டிர்மிங் செய்யப்பட்டால் அதை நேரடியாகவே பார்த்தோ கேட்டோ ரசிக்கலாம். இதற்கு லைவ் ஸ்டீரிமிங் என்று பெயர். தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்புக்கு நிகரானது.
இப்போது யூடியூப்பிற்கு வருவோம். யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது போலவே நாமும் கூ ட அதில் சுலபமாக வீடியோக்களை பதிவேற்றலாம். விரும்பினால் யூடியூப்பில் ஒரு கணக்கு துவங்கி நமக்கான சேனலையும் அமைத்து கொள்ளலாம். இந்த சேனல் வசதியையே கூட நமக்கான தொலைக்காட்சி சேனல் என்று சொல்லலாம். பலர் வெற்றிகரமாக இப்படி யூடியூப்பில் சொந்த சேனை வைத்திருக்கின்றனர். வீடீயோ வலைப்பதிவாளர்களும் கூட இருக்கின்றனர்.
ஆனால் இந்த சேனலில் என்ன பிரச்சனை என்றால் நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடியாது. ஏற்கனவே ஒளிப்பதிவு செய்த நிகழ்ச்சிகளை வீடியோ கோப்பாக பதிவேற்றி பார்க்க செய்யலாம்.
இதற்கு மாறாக நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க செய்ய முடிந்தால் எப்படி இருக்கும் எனும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் யூடியூப் சில மாதங்களுக்கு முன் நேரடி ஒளிபரப்பு வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நிகழ்ச்சிகளை அவை நடக்கும் போதே யூடியூப்பில் பார்க்க செய்வது சாத்தியம். முதலில் இந்த வசதி அதிக சந்தாதாரர்களை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு குறைந்தது ஆயிரம் சந்தாதாரர்களாவது இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இப்போது யூடியூப்பில் சரி பார்க்கப்பட்ட கணக்கு உள்ள யாரும் இந்த வசதியை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக, உங்களிடம் யூடியூப் கணக்கு இருந்தால் போதும் நீங்களும் கூட யூடியூப்பில் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப துவங்கிவிடலாம். அது மட்டும் அல்ல கூகுல் ஹாங்கவுட்ஸ் சேவையையும் இதில் இணைக்க முடியும். எனவே ஹாங்கவுட்ஸ் பயன்படுத்துவர்கள் அதில் பகிர்ந்து கொள்ளும் வீடியோ தகவலை யூடியூப்பிலும் ஒருங்கிணைக்க முடியும். மேலும் இப்படி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பது போன்ற புள்ளி விவரங்களையும் யூடியூப்பே தருகின்றது.
வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இசைக்குழு போன்றவை இந்த நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களோடு மேலும் துடிப்பான வழியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஏன் தனிநப்ர்களும் கூட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறமையும் ஆர்வாமும் இருந்தால் நீங்களே நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பவும் செய்யலாம். அது பார்வையாளர்களை காவருமானால் உங்களுக்கான தனிநபர் தொலைகாட்சி தாயாராகிவிட்டது என பொருள். யார் கண்டது யூடியூப்பில் இத்தனை லட்சம் பேர் பார்த்த வீடியோ என்று தானே இப்போது பெசுகிறோம். இனி வரும் காலத்தில் இத்தனை லட்சம் பார்த்து ரசித்த நேரடி நிகழ்ச்சி என்று பேசப்படலாம்.
யூடியூப் நேரடி ஒளிபரப்பு வசதி பற்றி அறிய: http://news.cnet.com/8301-1023_3-57615505-93/youtube-opens-up-live-streaming-to-all-verified-accounts/

யூடியூப்பை சிறப்பாக பயன்படுத்த சில வழிகள்!

வீடியோ பகிர்வு சேவையான யுடியூப் தளத்திற்கு அறிமுகமே தேவையில்லை.யூடியூப்பை பாடல் காட்சிகளை பார்த்து ரசிக்கவும்,நகைச்சுவை வீடடியோக்களை பகிர்ந்து கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தி வரலாம்.பிரப்லமான செய்தி கிளிப்களை பார்க்க, திரைப்பட டிரைலர்களை காண என மேலும் பலவழிகளில் யூடியூப்பை பயன்படுத்தலாம்.

யூடியூப் சார்ந்த பல்வேறு சேவைகளும் இருக்கின்றன. யூடியுப்பிலே கூட பலவேறு வசதிகள் இருக்கின்றன.யூடியூப்பில் உள்ள எல்லா வசதிகளையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இப்படி பரவலாக அறியப்படாத ஆனால் பயனுள்ள யூடியூப் வசதிகள் சிலவற்றை பார்க்கலாம்.

யூடியூப்பில் பாட்டு கேட்பது சுலபமானது. பிடித்த பாடலை வீடியோவோடு பார்த்து ரசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.ஆனால் யூடியூப்பில் பாடல கேட்பதில் உள்ள ஒரே சங்கடம் ஒவ்வொரு பாடல் முடிந்த பிறகும் அடுத்த பாடலை தேர்வு செய்து கொன்டிருக்க வேண்டும். இசைவானில் மிதக்க விரும்பும் போது இப்படி ஒவ்வொரு பாடலாக தேர்வு செய்ய வேண்டியிருப்பது அந்த அனுபவத்தையே பாழாக்கி விடும்.

இதற்கு மாறாக விருப்பமான பாடல்கள் அடுத்தடுத்து ஒலிபரப்பாக கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.சுகமாக தான இருக்கும் இல்லையா? இப்படி யூடியூப்பிலேயே பாடல்களை வரிசையாக கேட்டு மகிழலாம்.இதற்கான பிலேலிஸ்டை உருவாக்கி கொள்ளும் வசதியை யூடியூப் டிஸ்கோ( http://www.youtube.com/disco)  தருகிறது.இந்த சேவையில் உங்களுக்கு பிடித்தமான பாடகர் அல்லது பாடலை சமர்பித்தால அதனடிப்படையில் பிலேலிஸ்ட்டை உருவாக்கி தருகிறது. அதில் உள்ள பாடல்களை ஆனந்தமாக கேட்டு ரசிக்கலாம். பாப் பிரியர்கள் என்றால் இந்த சேவை பரிந்துரைக்கும் பிரப்லமான பாடல்கள் அல்லது பிரபலமான பாடகர்கள் பாடல்களை கேட்டு ரசிக்கலாம்.

இதே போல யூடியூப்பில் உள்ள மற்றொரு பயனுள்ள வசதி யூடியூப் லைவ்.( ) http://www.youtube.com/live இது நேரடி ஒளிபரப்புக்கான சேவை. இதன் மூலம் தற்போது இணையத்தில் காணகிடைக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தேடாமலே தேடி பார்த்து ரசிக்கலாம். அமெரிக்க அதிபர் மாளிகை ஒளிபர‌ப்பு, விளையாடு நிகழ்ச்சிகள் என் பலவற்றை பார்க்க முடியும்.குறிப்பிட்ட நேரத்தில் நேரடி ஒளிபர்ப்பு நிகழ்ச்சிகள் எவை என்பதை இதன் முகப்பு பக்கத்திலேயே பார்த்து தெரிந்து கொள்லலாம்.அவற்றில் உங்களை கவரும் சேவைக்கு உறுப்பினாராகும் வசதியும் இருக்கிற‌து.இந்திய நிழச்சிகளில் துவங்கி பிரபலமான அல்ஜசிரா டிவி  உட்பட உலக‌ம் ம்ழுவதும் உள்ள பல நிகழ்ச்சிகளை பார்கலாம். இத்த்னை நேரடி ஒளிபரப்புகளா என வியந்டு போவீர்கள்.

அது மட்டுமா இந்த வசதியை வீடியோ உரையாடலுக்கான கூகுல் ஹாங்க் அவுட வசதியுடன் இணைத்து கொள்ளலாம். அப்போது ஹாங்க் அவுட்டில் பங்கேற்காதவர்கள் கூட இதை நேரடி ஒளிபர‌ப்பாக பார்க்க முடியும்.

நீங்கள் எடுக்கும் வீடியோக்களையும் யூடியூப்பில் பதிவேற்றலாம். அந்த வீடியோ நேரத்தியாக இருக்க வேண்டும் என்றால் அது அழகாக எடிட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.இதற்கான வசதியும் யூடியூப்பில் இருக்கிறது. யூடியூப் வீடியோ எடிட்டர் (http://www.youtube.com/editor ) மூலம் உங்கள் வீடியோக்களை அழகாக எடிட் செய்து பலரும் பார்த்து ரசிக்க செய்யலாம்.பல காட்சிகளை சேர்ப்ப‌து,பின்னணி இசை சேர்ப்பது, எடிட் செய்வது, உப‌ தலைப்புகள் கொடுப்பது என பல‌வ

அருமையான பயன‌ வீடியோக்கள்.

உலகை வீடியோக்களால் வலம் வரலாம் என அழைக்கிறது டிராவீடியோ. பயண வீடியோக்களுக்கான கூகுல் என இந்த தளத்தை கொண்டாடலாம்.சுற்றுலா நாட்டம் உள்ளவர்களும் சரி,பயணங்களை விடும்புகிறவர்களும் சரி இந்த தளத்தை பார்த்தால் சொக்கு போய் விடுவார்கள்.

காரணம் இந்த தளத்தில் பயனம் சார்ந்த அருமையான வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.இரண்டு விதங்களில் இதை செய்யலாம்.முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பயண வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம்.இல்லை என்றால் குறிப்பிட்ட இடம் அல்லது நகரை குறிப்பிட்டு அதற்கான வீடியோ காட்சிகளை தேடி ரசிக்கலாம்.

முகப்பு பக்கத்தில் வீடீயோ பட்டியலும் இரண்டு விதமானவை.அதிகம் பார்க்கப்பட்ட பயண வீடியோக்கள் முதல் வகை என்றால் இரண்டாவது வகை பிரபலமான நகரங்கள். அதாவது வீடியோக்களை தேடுபவர்களால் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிமாக தேடப்பட்ட நகரங்கள் அடிப்படையில் இந்த இரு பட்டியலும் அமைந்துள்ளன.

குறிப்பிட்ட வீடியோவை கிளிக் செய்ததும் அந்த வீடியோ எத்தனை பேரால பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.அந்த‌ வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.வீடியோ பற்றிய கருத்தையும் பதிவு செய்யலாம்.அதே போல ஏற்கனவே பதிவான கருத்துக்களையும் படித்து பார்க்கலாம்.

சுற்றுலா செல்ப‌வர்கள் அதற்கு முன்பாக் இணைய ஆய்வில் ஈடுபடுவது வழக்கமாக இருக்கிறது. விக்கிபீடியாவில் துவங்கி சுற்றுலா மற்றும் பயன தளங்களும் இதற்காக இருக்கின்றன.யூடியூப் பிரியர்கள் பயணம் சார்ந்த வீடியோக்களை தேடிப்பார்த்து பார்க்க விரும்பும் நகரங்கள் பற்றிய தகவல்களை காட்சிரீதியாகவே தெரிந்து கொள்ளலாம்.

இத்தகைய வீடியோக்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிப்பதற்கான எளிய வழியாக டிரவீடியோ இருக்கிறது.

———-

http://travideos.com/