Tag Archives: ஆடியோ

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.

பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம்.

படிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகிய‌வ‌ற்றை ஒலி வ‌டிவில் மாற்றிக்கொள்வ‌தை இந்த‌ த‌ள‌ம் சாத்தியாமாக்குகிற‌து.

அது ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ற்றை எம் பி 3 கோப்பாக ட‌வுண்லோடு செய்து கொள்ள‌லாம்.இத‌ன் பொருள் நாம் ப‌டிக்க‌ விரும்பும் செய்தி ம‌ற்றும் த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம்முட‌ன் கொண்டு சென்று விரும்பும் நேர‌த்தில் ஐபோட் போன்ற‌ சாத‌ன‌ங்களின்  மூல‌ம் கேட்டு ம‌கிழ‌லாம்.

இத‌ற்கென‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.சும்மா க‌ட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக‌ மாற்றி விட‌லாம்.

எதையும் கேட்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ சேவை. இப்போதைக்கு இல‌வ‌ச‌மாக‌ உள்ள‌து.
 ———-

http://www.carryouttext.com/

மறதி இனி இல்லை

வர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு  தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிரச்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை  நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள்.  அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இருப்பார்கள்

சில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் சந்தித்து கொள்ளும் போது அவரது முகம் நினைவில் இருக்கும். ஆனால் அவர் யார்?, எப்போது சந்தித்தோம் என்ற விவரம் மறந்து போயிருக்கும்.

சில நேரங்களில் எவ்வளவுதான் யோசித்தாலும், எங்கே சந்தித்தோம் என்ற விஷயம் ஞாபகத்துக்கு வராமல்  முரண்டுபிடிக்கும்.  இது எல்லோருக்கும் நேரும் அனுபவம் தான். ஆனால் வர்த்தக துறையின ருக்கு இத்தகைய  அனுபவம் நேரும் போது, அது  அருமையான வாய்ப்பை இழப்பதற்கான காரணமாகவும் அமையலாம். ஆனால் அத்தகைய கவலை இனி இல்லை.  குறைந்த பட்சம் விழிப்புணர்வு மிக்க அந்தரங்க உதவியாளனை பெற்றிருக்கும் நபர்களுக்கு ஏற்படவாய்ப்பில்லை.  

எப்போது யாரை சந்தித்தோம் என்ற விவரத்தை விரும்பிய நேரத்தில் அந்த உதவியாளன்  எடுத்து சொல்லி விடும் ஆம். அந்த உதவியாளன் உங்களுக்கு உதவக்கூடிய  ஒரு ஹைடெக் சாதனம். அந்த சாதனத்தை நீங்கள் சின்னஞ்சிறிய மைக்கை மாட்டிக் கொள்வது போல சட்டை யோடு சேர்த்து அணிந்து கொள்ளலாம்.

அணிந்து கொள்ளக் கூடிய கம்ப்யூட்டர் என்று சொல்லக் கூடிய வியரபில் கம்ப்யூட்டர் வரிசையில் புதிதாக  உருவாக்கப்பட்டிருக்கும் சாதனம்  இந்த அந்தரங்க விழிப்புணர்வு உதவியாளன். ஒரு சாப்ட்வேர், 2 மைக்ரோ போன்கள், ஒரு காமிரா, ஒரு ஆடியோ சாதனம் எல்லாமே சின்னஞ் சிறியவை, உள்ளடக்கியது இந்த உதவியாளன்.  இதில் இருக்கும் சாப்ட்வேருக்கு பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது. 

இந்த உதவியாளனை அணிந்திருக் கும் நபர், யாரோ ஒருவரை சந்தித்து பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சாதனம்  அந்த உரையாடலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும்.  உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது போன்ற வாசகத்தை கேட்டதுமே சாதனம் விழித்து கொண்டு, ஆஹா, நமது எஜமானர் முக்கியமான ஒருவரை சந்தித்திருக் கிறார் என்னும் உணர்வை பெற்று, அந்த மனிதரின் பெயரை குறித்து வைத்து கொண்டு அவரை அழகாக ஒரு கிளிக் செய்து படமும் எடுத்து கொள்ளும். அத்தோடு நிறுத்தாமல் அவர் பேசுவதை  எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வைத்து கொள்ளும்.  
பின்னர் அழகாக அந்தமனிதரின் பெயர், அவரை சந்தித்த இடம் மற்றும் தினம்  ஆகியவற்றை  குறித்து  அதற்குரிய வரிசையில் பதிவு செய்து விடும்.

எஜமானர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த நபரை  சந்திக்கும் போது, அவரை எங்கே சந்தித்தோம் என தெரியாமல் குழம்பி தவித்தால், அந்த உதவியாளனை உதவிக்கு அழைத் தால் போதும் அது, அவரை எங்கே எப்போது சந்தித்தார் என்ற விவரத்தை நொடிப்பொழுதில் தந்துவிடும்.

எனவே இந்த உதவியாளன் இருக்கையில் மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமல்ல, வர்த்தக குழுவை சந்தித்துப்பேசும் பொழுது ஏதாவது ஒரு முக்கிய விவரம் கேட்கப்பட்டது என்றால், அது கையில்  இல்லாவிட்டால் அசடு வழிய வேண்டிய அவசியமில்லை. 

பேசிக் கொண்டே,  உதவியாளனிடம் இந்த விவரம் தேவை என்னும் குறிப்பை தெரிவித்தால் போதும்.  மறுமுனையில் அலுவலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தை கவனித்து கொண்டிருக்கும் சக ஊழி யர்களில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தேவையான  விவரத்தை  சொல்லி விடுவார்கள். அதனை உதவியாளன் மூலம் கேட்டு, கூட்டத்தில் பங்கேற்ப வர்களிடம் சொல்லி அசத்திவிடலாம்.

இதே போல காரில் சென்று கொண்டிருக்கும் போது, நாளிதழில் பார்க்கும் நல்ல புத்தகம் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத் தாலோ, அல்லது கண்ணில் படும் சுவரொட்டியில் உள்ள  திரைப் படத்தின் டிவிடியை வாங்க  வேண் டும் என்று நினைத்தாலோ உடனே உதவியாளனுக்கு சொன்னால் போதும். அது அந்த விவரத்தை பதிவு செய்து கொண்டு, இன்டெர்நெட் மூலம் அதற்குரிய தளத்தில் ஆர்டர் செய்து விடும். அல்லது  நாம்  வீட்டிற்கு சென்றவுடன், அந்த புத்தகத்தை வாங்க விரும்பினீர்களே என்று நினைவுபடுத்திவிடும். இவ்வாறு சகலகலாவல்லவனாக செயல்படக் கூடிய இந்த உதவியா ளனை ஆக்ஸ் சென்டர் டெக்னாலஜீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.