Tag Archives: இன்டெர் நெட்

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3

foureyed2
(நேற்றைய தொடர்ச்சி)

வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர்.
.
எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா? அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா? ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி பகிர்ந்துகொள்ள தீர்மானித்தனர். அதேபோல இந்த படத்தை படவிழாக்களுக்கு அனுப்பிய அனுபவங்களையும் ரசிகர்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்தனர்.

படத்தின் பின்னணி தகவல்களை படம் எடுக்கப்பட்ட விதத்தை படமாக்கி அதனை பாட்காஸ்டிங் முறையில் ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். பாட்காஸ்டிங் என்பது ரசிகர்களின் கம்ப்யூட்டரை தேடி வரும் கோப்பு என்று சொல்லலாம். ஆர்எஸ்எஸ் என்று சொல்லப்படும் செய்தியோடை வசதி வழியே இவை வந்து சேருகின்றன.

பொதுவாக ஆடியோ கோப்புகளே பாட்காஸ்டிங் முறையில் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. வீடியோ கோப்புகளுக்கும் இது ஏற்றதாக கருதப்பட்டாலும், அதற்கு தேவை யான சாதனங்கள் அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் வீடியோ வசதி கொண்ட ஆப்பிளின் ஐபாடு அறிமுகமான காலத்தில், பாட் காஸ்டிங் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டது மிகவும் கச்சிதமாக பொருந்தி வந்தது.

பலரும் தங்கள் வீடியோ ஐபாடில் இந்த பாட்காஸ்டிங் காட்சிகளை விரும்பி பார்த்தனர். வீடியோ ஐபாடு பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த காட்சிகளும் அதனால் பிரபலமாகின. ஐடியுன்ஸ் தளத்திலும் இவை பரிந்துரைக்கப்பட்டன. விளைவு ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானது.

படத்தை எடுத்த விதம், ஸ்லாம்டான்ஸ் படத்திற்கு அதை அனுப்பிய கதை, என படம் சம்பந்த மான அனுபவங்களை பாட்காஸ்டிங் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
அப்படியே படத்தை சில தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்துவிட்டு, அதனை பார்க்க வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தனர். பாட்காஸ்டிங் பார்த்து ரசிகர்கள் தங்கள் ஊரில் படத்தை திரையிட விருப்பமா என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டு அந்த தகவலை வரைபடம் மூலம் வெளியிட்டனர். படம் திரையிடப் பட்ட போது அதிக விளம்பரம் இல்லாமல் பலர் தியேட்டருக்கு வந்து பார்த்தனர்.

தனிப்பட்ட முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட படத்திற்கு இத்தகைய வரவேற்பு மிகவும் பிரம்மாண்டமானது. பொதுவாக வர்த்தக ரீதியில் தயாரிக்கும் படங்களையே பெரிய அளவில் வெளியிட்டு, அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை ஏற்படுத்துவது சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சாதாரண எடுக்கப்படும் படத்திற்கும் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும் என்பதை இந்த படம் உணர்த்தியிருக்கிறது. இன்டெர்நெட் மூலம் சாத்தியமாகும் சக்திவாய்ந்த வழிகளைக்கொண்டே இதனை சாத்தியமாக்கிக்கொள்ளலாம் என்பதை இந்த படம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

2005ம் ஆண்டில் படம் எடுத்து முடிக்கப்பட்டது. 2006ல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த படம் இன்டெர்நெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. இன்று வரை படத்தின் டிவிடிக்கள் விற்பனையாகி வருகின்றன.

சிறிய அளவில் எடுக்கப்படும் படங்கள் இத்தனை நீண்ட காலத்துக்கு பேசப்படுவதாக இருப்பது சாதாரண மான விஷயம்தான். இதற்கும் இன்டெர் நெட்டே காரணமாக இருக்கிறது.

டிஜிட்டல் தொழில்நுட்பம் திரைப் படக்கலையை மிகவும் ஜனநாயக மயமாக்கியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த தன்மையைக் கொண்டு எவர் வேண்டுமானாலும் சுலபமாக படத்தை எடுக்கலாம் என்னும் நிலை இங்கு இருக்கிறது.
படத்தை எடுப்பது மட்டுமல்ல, அதனை விநியோகிப்பதும் கூட சுலபமானதுதான்.

விநியோகிப்பது மட்டுமல்ல அந்த படத்தை ரசிகர்கள் பார்க்கச்செய்வதும் கூட படைப்பாளி களின் கையிலேயே இருக்கிறது. இதற்கு தாராளமாக டிஜிட்டல் ஆயுதங் களை பயன் படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கிய கிரம்லே, இனி பாட்காஸ்டிங்தான் திரைப்படங்களின் எதிர்காலமாக விளங்கப்போகிறது என்று நம்பிக்கையோடு கூறுகிறார். சிறிய அளவிலான படங்கள் மட்டுமல்ல, விநியோகிப்பதற்கு மூன்றாம் நபர்களை தவிர்க்க விரும்பும் வர்த்தக ரீதியான தயாரிப்பாளர்கள் கூட இந்த வழிகளை பின்பற்றலாம் என்று அவர் கூறுகிறார்.

எப்படியும் படைப்பாளிகள் நேரடியாக ரசிகர்களை சென்றடை வதையே விரும்புகின்றனர் என்றும், அதற்கு இன்டெர்நெட் இப்போது மிகச்சரியான வழியை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

இன்டெர்நெட் நிபுணர்கள் பலர் நீண்டகாலமாகவே இந்த கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பல படைப்பாளிகள் இந்த வழிகளை மேற்கொள்ள முன்வரும்போது, திரைப்பட உலகில், டிஜிட்டல் புரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

———–

link;
www.foureyedmonsters.com

ரசாயன தேடியந்திரம்

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையும் விட ரசாயன துறைக்கே தனி தேடியந்தி ரத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.

நீங்கள் ரசாயன துறையை சேர்ந்த வராக இருந்தால், ரசாயன துறை தொடர்பான தகவல்களை இன்டெர் நெட்டில் தேடுபவராக இருந்தால் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர் கள். அதனால்தான் ரசாயனத்திற் கென்று தனி தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இந்த தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளது.

ரசாயனத்திற்கான தனி தேடியந் திரத்தின் அவசியத்தை மிக எளிதாக விளங்கி கொள்ளலாம். மற்ற துறையினரை விட ரசாயன துறையை சேர்ந்தவர்கள் இன்டெர் நெட்டில் தங்கள் துறை தொடர்பான தகவல்களை தேடும்போது நொந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மூலக்கூறு தொடர்பான தகவல் களை தேடினால் கூகுல் உள்ளிட்ட எந்த தேடியந்திரமும் அவர்களை வெறுப் பேற்றி விட வாய்ப்பு இருக்கிறது.

உதாரணமாக சிஎச்4 எனும் மூலக்கூறு தொடர்பான கட்டுரையை ரசாயன நிபுணர் ஒருவர் தேடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மாமூலான தேடியந்தி ரங்கள், அதனை சேனல்4 அல்லது சேப்டர்4க்கான குறியீடாக எடுத்துக் கொண்டு அந்த தகவல் களையெல்லாம் கொண்டு வந்து தரும். ஆனால் சிஎச்4 என்பது ஒரு மூலக்கூறு எனும் விஷயத்தை மறந்து விடும்.

இதே போல எண்ணற்ற உதார ணங்களை சொல்லி கொண்டே போகலாம். எச்இ என்றால் ஹீலியம் என்று உடனடியாக சொல்லத் தோன்றும். ஆனால் தேடியந்திரங் களை பொருத்தவரை எச்இ என்றால் அவன் என்று ஆண் மகனை குறிப்பதற்கான ஹி என்ற ஆங்கில வார்த்தையையே கருத்தில் எடுத்துக் கொள்ளும்.

இதே போல ஐ என்றால் அயோ டின் என்று பொருள் கொள்ளாமல் ஐ என்ற பதத்தையோ அல்லது இன் என்ற பதத்தையோ எடுத்துக் கொண்டு அதற்கேற்ப முடிவுகளை பட்டியலிட்டு கொடுக்கும்.

ரசாயன நிபுணர்களுக்கு இதனால் எத்தகைய ஏமாற்றம் ஏற்படும் என்பதை இப்படி தேடி பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். மேலும் ஓஎச் என்றால் ஆக்சிஜன் தொடர்பான மூலக்கூறு சேர்க்கை என்பது ரசாயனத்தில் பரீச்சயம் கொண்டவர்களுக்கு நன்றாக தெரியும்.

தேடியந்திரத்தில் ஓஎச் என்று சொன்னால் அது அமெரிக்காவில் உள்ள ஓஹியா மாகாணத்திற்கான சுருக்கம் என்று நினைத்துக் கொள்ளும். எனவே ரசாயன நிபுணர்கள் தேடி யந்திர பட்டியல்களில் மூலக்கூறு தொடர்பான விவரங்களை தாங் களே தேடி கண்டுபிடித்தாக வேண் டிய நிலை தற்போது இருக்கிறது.

தேவையில்லாத தகவல்களை எல்லாம் விலக்கி விட்டு பொருத்த மான முடிவுகளை அவர்கள் தேடி எடுக்க வேண்டும். இதனை எளிதாக்கும் வகையில் தற்போது கெம் எக்ஸ் சீர் எனும் பெயரிலான தேடியந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த தேடியந்திரம் மூலக்கூறு தொடர்பான தேடலில் ஈடுபடும் போது மூலக்கூறு இருக்கும் கட்டுரை களை இனங்கண்டு கொண்டு அவற்றை மட்டுமே பட்டியலிட்டு தருகிறது.

எனவே ரசாயன துறையினருக்கு தேடல் எளிதாக முடியும். இதற்காக ரசாயனம் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் இந்த தேடியந்திரத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளை தேட முடிவதோடு ரசாயன துறையினர் மூலக்கூறு தொடர்பான மற்ற ஆய்வுக் கட்டுரை களையும் தேடி கண்டுபிடிக்க இது உதவுகிறது. மூலக்கூறு தொடர்பான சூத்திரங் களை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை தேடியந்திரத்திற்கு கற்றுத் தந்து இதனை உருவாக்கியுள்ளனர்.

இதற்கு பின்னே கடினமான உழைப்பு இருக்கிறது. கம்ப்யூட்ட ருக்கு மூலக்கூறின் தன்மைகளை புரிய வைப்பது எளிதான காரியம் அல்ல. இதற்கான விசேஷ மொழியை கையாண்டு கம்ப்யூட்டர் கள் மூலக்கூறு விவரங்களை இனங் கண்டு கொள்ள வைத்திருக்கின்றனர்.

அடிப்படையான தகவல்களை தேட முடிவதோடு இந்த தேடியந்திரத்தின் மூலம் ரசாயன அட்டவணைகளில் உள்ள தகவல்களையும் எளிதாக தேட முடியும். இதற்காக என்று இன்டெர் நெட் முழுவதும் உள்ள ரசாயன அட்டவணைகளில் உள்ள தகவல்களையெல்லாம் சேகரித்து வைத்திருக்கின்றனர். ரசாயன துறையில் புதிதாக வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்தும் இந்த தேடியந்திரத்தில் சேர்க்கப்பட உள்ளது. ரசாயன துறையினருக்கு பெரிதும் பயன்படக் கூடிய அற்புதமான தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்
————
chem

website;http://chemxseer.ist.psu.edu/
——–