Tag Archives: கடன்

பண நலம் அறிய உதவும் இணையதளம்.

step4உடல் நலம், மன நலம் என்ப‌து போல பண நலமும் அவசியம் தான்.பண நலம் என்னும் வார்த்தை புதிதாக இருக்கிறத?ஒருவரின் பொருளாதார நிலையை அல்லது அரோக்கியத்தை இப்படி குறிப்பிடலாம் அல்லவா?

சரி,உடல் நலத்தை பேணிக்காப்பது போல பண நலத்தையும் கவனித்தாக வேண்டும் அல்லவா?

அடிக்கடி உடல் நலனிற்காக பரிசோதனை செய்து கொள்வது போல பண நலம் சரியாக உள்ளதா என்று சோதித்துக்கொள்வதும் நல்லது.அதாவது வரவுக்கேற்ற செலவு இருக்கிறதா என் பார்த்துக்கொள்ள வேண்டும்.அது தான் பட்ஜெட் போட்டு போட்டு திண்டாடிக்கொண்டிருக்க்றோமே என மத்திய தர குடும்பத்தினர் அலுத்துக்கொள்ளலாம்.

ஆனால் பண நலம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று அறிய ஒரு இனையதளம் இருக்கிறது என்பதே விஷயம்.

டெப்ட்ஸ்பார்க் என்னும் அந்த தளத்தில் எளிமையான் மூன்றே படிக‌ளில் உங்கள் பொருளாதார நிலையை தெரிந்து கொள்ளலாம்.(ஆனால் அமெரிக்காவை மையாமாக கொண்ட தளம்)

முதலில் உங்களுக்கு இருக்கும் கடன் மற்றும் கிரிடிட் கார்டு விவரங்களை குறிப்பிட்டு விட்டு அடுத்ததாக வருமானம் மற்றும் செலவுகளை குறிப்பிட்டால் அவற்றின் அடிப்படையில் உங்கள் நிதி நிலை எப்படி இருக்கிற‌து என வரைபடத்தோடு இந்த தளம் அறிக்கை தருகிறது.

புரியாதா நிதி வார்த்திகள் என் விளையாட்டு போன்றவை இல்லாமல் எளிமையாக் நிதி ஆரோக்கியத்தையும் எதிர்கால போக்கையும் இந்த தளம் உணர்த்துகிறது.

——
link;
https://www.debtspark.com/

தேசிய கடனுக்கான கால்குலேட்டர்

big_red

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?.

அமெரிக்கர் ஒருவர் இத‌னை செய்திருக்கிறார்.அவ‌ர் உருவாக்கியுள்ள புத்த‌ம்புதிய‌ கால்குலேட்டர் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்ப‌க்கூடிய‌து ம‌ட்டும‌ல்ல‌ பொருளாதார‌ விழிப்புண‌ர்வையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து.

தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கண‌க்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது.

இதில் டிரில்லியன் கண‌க்கில் மதிப்பிடலாம்.அதாவ‌து ல‌ட்ச‌ம் கோடி என்கின்ற‌ன‌ரே அந்த‌ அள‌வுக்கு பிர‌ம்மாண்ட‌மான‌ இல‌க்க‌ங்க‌ளை எல்லாம் இந்த‌ கால்குலேட்ட‌ர் கையாள‌க்கூடிய‌து.

நாம் என்ன‌ வ‌ங்கியா வைத்திருக்கிறோம். ல‌ட்சம், கோடி, ல‌ட்ச‌ம்கோடி என்றெல்லாம் க‌ண‌க்கிட‌ என்று நீங்க‌ள் நினைக‌லாம்.இது ந‌ம் வீட்டுக்க‌ண‌க்கை போடுவ‌த‌ற்கான‌ கால்குலேட்ட‌ர் இல்லை. நாட்டின் க‌ண‌க்கை போடுவ‌த‌ற்கான‌ கால்குலேட்ட‌ர்.

நாட்டின் க‌ண‌க்கு என்றால் க‌ட‌ன் கணக்கு தான்.

அமெரிக்க‌ பொருளாதார‌ம் நிலைகுலைந்து போன‌ கதை நினைவிருக்கிற‌து அல்லாவா? வீட்டுக்க‌ட‌ன் நெருக்க‌டியால் ஏற்ப‌ட்ட‌ பொருளாதார‌ பாதிப்பு அமெரிக்க‌ பொருளாதார‌த்தின் ப‌ல‌வீன‌ங்க‌ளை உண‌ர்த்திய‌தோடு க‌ட‌னுக்கான‌ உண்மையான‌ அர்த‌த‌த்தையும் ச‌ராச‌ரி அமெரிக்க‌ர்க‌ளுக்கு புரிய‌ வைத்த‌து.

க‌ட‌ன் சுமை தாளாம‌ல் ஒரு தேச‌மாக‌ அமெரிக்க‌ இன்னும் த‌டுமாறிக்கொண்டிருக்கிற‌து.பொருளாதார‌ செழிப்பு நில‌விய‌ கால‌த்தில் அமெரிக்கா க‌ட‌ன் வாங்கியே கால‌ம் த‌ள்ளிய‌தால் இன்று அந்நாடு டிரில்லிய‌ன் க‌ண‌க்கில் க‌ட‌ன்ப‌ட்டிருக்கிற‌து.டிரில்லிய‌ன் என்றால் ல‌ட்ச‌ம் கோடி என்று பொருள்.

நாட்டின் ஒட்டுமொத்த‌க‌ட‌ன் ப‌ற்றியெல்லாம் ச‌ராச‌ரி ம‌னித‌ர்க‌ள் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை . ஆனால் மேற்கு கொல‌ராடோவை சேர்ந்த‌ மாட் மைல‌ஸ் என்னும் ரிய‌ல் எஸ்டேட் அதிப‌ர் ஒரு நாள் அமெரிக்க‌ தெசிய‌ க‌ட‌ன் ப‌ற்றி யோசித்திருக்கிறார்.அப்போது தான் ச‌ராச‌ரி கால்குலேட்ட‌ரில் அமெரிக்க‌ க‌ட‌ன் தொகை அட‌ங்க‌வில்லை என்ப‌தையும் உண‌ர்ந்திருக்கிறார்.

ஒருவிதத்தில் தேசிய‌க்க‌ட‌ன் கை மீறி போய் கொண்டிருப்ப‌த‌ன் அடையாள‌ம் என்று அவ‌ர் க‌ருதினார்.சாத‌ராண‌ கால்குலேட்ட‌ரில் க‌ன‌க்கிட‌ முடியாத‌ அள‌வுக்கு க‌ட‌ன் வ‌ள‌ர்ந்திருப்ப‌து அவ‌ருக்கு க‌வ‌லையை அளித்த‌து.

தேசிய‌க்க‌ட‌ன் ப‌ற்றி அவ‌ப்போது பேச‌ப்ப‌ட்டாலும் நாம் எந்த‌ அள‌வுக்கு க‌ட‌ன் ப‌ட்டிருக்கிறோம் என்ப‌து யாருக்கும் தெரிய‌வில்லை என‌ நினைத்த‌ அவ‌ர் இது தொடர்பாக‌ விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்த‌ தெசிய‌ க‌ட‌னுக்கான‌ பிர‌த்யேக‌ கால்குலேட்ட‌ரை உருவாக்கினார்.

இந்த‌ கால்குலேட்ட‌ரில் டிரில்லிய‌ன் டிரில்லியனாக‌ சேர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்க‌ க‌ட‌னை சுல‌பமாக‌ கண‌க்கிட‌முடியும்.அது நாள்தோறும் வள‌ர்ந்து வ‌ருவ‌தையும் க‌ண‌க்கிட‌ முடியும்.

இத‌னால் என்ன‌ ப‌ய‌ன் என்கிறீர்க‌ளா? அமெரிக்காவின் செல‌வு எந்த‌ அள‌வுக்கு போய்கொண்டிருக்கிறது என்பதை இத‌ன் மூல‌ம் உண‌ர‌ முடியும் என்று அவ‌ர் ந‌ம்புகிறார்.

இந்த‌ கால்குலேட்ட‌ரை வாங்கி ஆட்சி பொறுப்பில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌க்குங்க‌ள் என்றும் வ‌ர‌வை மீறி செல‌வு செய்ப‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குங்க‌ள் என்றும் அவ‌ர் கேட்டுக்கொண்டுள்ளார.

ஒரு கால‌த்தில் மில்லிய‌ன் என்று பேசிக்கொண்டிருந்தோம். பின்ன‌ர் பில்லிய‌ன் என்றோம் .இப்போது டிரில்லிய‌ன் என்கின்ற‌ன‌ர்.இத‌ன் உண்மையான‌ ப‌ர்மான‌த்தை த‌ன‌து கால்குலேட்ட‌ர் புடரிய‌ வைக்கும் என்று கூறும் அவ‌ர் இந்த‌ கால்குலேட்ட‌ர் ம‌ற்றும் த‌ன‌ அவ‌சிய‌த்தை உண‌ர்த்த‌ ஒரு இணைய‌தள‌த்தையும் உருவாக்கியுள்ளார்.

——–.

link;
http://www.bigredcalculator.com/index.html

இன்டெர்நெட் அடகு கடை

borro1கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியாபாரமும் இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இன்டெர்நெட்டின் முதல் அடகு கடை கடை என்னும் அடைமொழியோடு இதற்கான இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
போரோ டாட் காம் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் குறுகிய கால் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. (கவனிக்க இது பிரிட்டனில் வசிப்பவர்களுக்கனது)
வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடியதவர்கள் மற்றும் பிற வழிகளில் எல்லாம் கடன் வாங்கி விட்டவர்களீன் வசதிக்காக ஆன்லைனில் அடகு வைத்து கடன் வாங்குவதற்காக இந்த தளம் துவங்கப்பட்டுள்ளதாம்.
பொருளாதார நெருக்கடி காராணமாக நடுத்தர மக்கள் வாழ்க்கையில் பிரச்சனை எற்பட்டுள்ள நிலையில் கடனுக்கான நெருக்கடியும் அதிகரித்திருப்பதால் ஆன்லைன் அடகு வசதி அவசியமாவதாக இத் தளம் கருதுகிறது.அத்ற்கேற்ப வட்டியும் குறைவு என்கிறது.
பிரிட்டன் முழுவதும் நாடு தழுவிய அளவில் கடன் வழிங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
எல்லாம் சரி ஆன்லைனில் அடகு வைப்பது எப்படி என்று கேட்கலாம். நெட்பிலிக்ஸ் காட்டிய வழிதான்.
நெட்பிலிக்ஸ் ஆன்லைன் டிவிடி வாடகை சேவை வழ‌ங்கும் நிறுவனம் ஆகும்.இந்த தளத்திற்கு சென்று விருப்பமான‌ டிவிடியை ஆர்டர் செய்தால் தபால் மூலம் டிவிடி வந்து சேரும் . அதே போல இந்த தளத்திலும், கடனுக்கு வின்னப்பித்துவிட்டு பிறகு கூரியர் மூலம் அடகு வைக்க வேண்டிய பொருட்களை அனுப்பி வைத்தால் அடுத்த 48 மணிக்குள் கடன் தொகை வீட்டுக்கு வந்து விடும்.
மோதிரம் , கைகடிகாரம் , கார், என எந்த பொருளையும் அடகு வைக்கலாம். அடகு வைக்கப்படும் பொருள் முழு பாதுகாப்போடு இருக்குமாம். எப்படி இருக்கிறது பாருங்கள்.

———–

link;
www.borro.com