Tag Archives: செய்தி

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்?

அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.

பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம்.

படிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகிய‌வ‌ற்றை ஒலி வ‌டிவில் மாற்றிக்கொள்வ‌தை இந்த‌ த‌ள‌ம் சாத்தியாமாக்குகிற‌து.

அது ம‌ட்டும‌ல்ல‌ அவ‌ற்றை எம் பி 3 கோப்பாக ட‌வுண்லோடு செய்து கொள்ள‌லாம்.இத‌ன் பொருள் நாம் ப‌டிக்க‌ விரும்பும் செய்தி ம‌ற்றும் த‌க‌வ‌ல்க‌ளை ந‌ம்முட‌ன் கொண்டு சென்று விரும்பும் நேர‌த்தில் ஐபோட் போன்ற‌ சாத‌ன‌ங்களின்  மூல‌ம் கேட்டு ம‌கிழ‌லாம்.

இத‌ற்கென‌ த‌னியே எந்த‌ சாப்ட்வேரையும் ட‌வுண்லோடு செய்ய‌ வேண்டிய‌தில்லை.சும்மா க‌ட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக‌ மாற்றி விட‌லாம்.

எதையும் கேட்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ சேவை. இப்போதைக்கு இல‌வ‌ச‌மாக‌ உள்ள‌து.
 ———-

http://www.carryouttext.com/

டிவிட்டருக்கு ஒரு சோதனை

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது.
அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் செய்தி நிறுவனங்களூக்கு உலக நடப்பு பற்றி செய்தி க‌ண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.

இவ‌ற்றைத்த‌விர‌ வேறு க‌ட்டுப்பாடுக‌ளும் உண்டு.அந்த‌ ப‌ண்ணை வீட்டில் இருக்கும் க‌ம்ப்யூட்ட‌ர்க‌ளில் ப‌ழைய‌ த‌க‌வ்ல்க‌ள் எதுவும் இல்லாம‌ல் வெறுமையாக்வே இருக்கும். அவ‌ர்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும் செல்போனை கொண்டு இண்டெர்நெட்டில் உலா வ‌ர‌ முடியாது.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் இர‌ண்டுமே செய்தி வெளியீட்டில் உத‌வுவ‌தாக‌ பேச‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. அதிலும் குறிப்பாக‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌வும் செய்திக்ளை வெளியிட‌வும் ஏற்ற‌தாக‌ இருப்ப‌தாக‌ புக‌ழ‌ப்ப‌டுகிற‌து.

ஈரான் தேர்த‌ல் பிர‌ச்ச‌னையின் போது டிவிட்ட‌ர் அட‌க்கு முறைக்கு ந‌டுவே செய்தியை வெளிக்கொண‌ர்வ‌தில் பெரும் புர‌ட்சியையே உண்டாக்கிய‌து. ச‌மீப‌த்தில் ஹைதி நில‌ந‌டுக்க‌த்தின் போது கூட‌ டிவிட்ட‌ர் செய்தி வெளியிட்டு சாத‌ன‌மாக‌ பேரூத‌வி புரிந்த‌து.

அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து.என்வே டிவிட்ட‌ர் செய்திக‌ளீன் ந‌ம்ப‌க‌த்த‌ன‌மை குறித்த கேள்விக‌ள் உள்ள‌ன‌.
இந்த‌ பின்ன‌ணியில் டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக்கின் செய்தி வெளியீட்டுத்தன்மையின் வ‌ர‌ம்புக‌ளை ப‌ரிசோதித்து பார்த்து விடுவ‌து என்று தீர்மானித்து தான் இந்த‌ ப‌ரிசோத்னைக்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
அடுத்த் மாத‌ம் முத‌ல் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ இந்த‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் க‌ன‌டா,சுவிஸ்,பிரான்ஸ்,பெல்ஜிய‌ம்,நாடுக‌ளைச்சேர்ந்த‌ வானொலி நிருப‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ள‌ன‌ர். பிரான்சில் இந்த‌ சோத்னை நிக‌ழ‌ உள்ள‌து.

செய்தி வெளியிட்டில் டிவிட்ட‌ரை எந்த‌ அள‌வுக்கு ந‌ம்ப‌லாம் என்று இந்த‌ சோத‌னை உண‌ர்த்தும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இணைய செய்தி உலகை உலுக்கிய 19 வயது வாலிபர்

bnoபிரேக்கிங் நியுஸ் என்றதும் சி.என்.என், பிபிசி,நியூயார்க் டைம்ஸ் போன்ற பெரிய மீடியா நிறுவனங்களே நினைவுக்கு வரக்கூடும்.ஆனால் இணைய உலகைப்பொருத்தவரை பிரேக்கிங் நியுஸ் என்றதும் நினைவுக்கு வருபவர் மைக்கேல் வான் பாப்பல் என்னும் வாலிபர் தான்.

ஹாலந்து நாட்டைச்சேர்ந்த பாப்பலுக்கு 19 வயது தான் ஆகிறது.ஆனால் அதற்குள் இண்டெர்நெட் உலகில் முக்கிய புள்ளிகளில் ஒருவர் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.இணைய செய்தி உலகை தீர்மாணிக்க கூடிய செல்வாக்கு மிக்க நபர் என்றும் அடையாளம் காட்டப்படிருக்கிறார்.

பாப்பலுக்கு சொந்தமாக ஒரு செய்தி தளம் இருக்கிறது. அந்த தளம் ஒரு செய்தி நிறுவனமாக வளர்ந்திருப்பதோடு சர்வதேச செய்தி அமைப்பு ஒன்றையும் நிறுவ இருப்பதாகவும் மீடியா நிறுவனங்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் பெருமையோடு அறிவித்துள்ளது.

செய்திக்கடலில் பெரிய திமிங்கலங்கள் எல்லாம் நீந்த முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது வாலிபரான பாப்பல் இணைய செய்தி உலகில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்திக்கொண்டிருப்பதோடு புதிய ஏஜென்சியை துவக்க இருபதாகவும் அறிவுத்துள்ளார்.

எப்படி சாத்தியமானது இந்த வளர்ச்சி.செய்தி உலகில் பாப்பல் வயதில் இருப்பவர்களை பொதுவாக குழந்தை என்றே கருத பலரும் தயாராக உள்ள நிலையில் இவர் மட்டும் எப்படி ஒரு நட்சத்திரமாக உருவானார்.

எளிமையான ஆனால் சுவாரஸ்யமான கதை அது.இண்டெர்நெட்டை புரிந்து கொண்ட ஒரு இளைஞனின் வெற்றிக்கதை .

மற்ற வாலிபர்களைப்போல பாப்பலுக்கும் இண்டெர்நெட்டில் உலா வருவது பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.குறிப்பாக அவருக்கு செய்திகளில் ஆர்வம் இருந்தது.இண்டெர்நெட்டில் தான் தளத்திற்கு தளம் தாவிக்கொண்டிருக்க முடியுமே.இப்படி பல செய்தி தளங்களையும் அவற்றில் அவப்போது வெளியாகும் பிரேக்கிங் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருந்த போது பாப்பலுக்கு ஒரு எளிமையான எண்ணம் தோன்றியது.

பலருக்கும் தோன்றக்கூடிய எண்ணம் தான்.எல்லா பிரேக்கிங் செய்திகலையும் ஒரே இடத்தில் தொகுத்து வைத்து படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்.இது தான் அந்த எண்ணம்.இப்படி ஒரே இடத்தில் உடனுக்குடன் பிரேக்கிங் செய்திகளை படிப்பதன் மூலம் புதிய பெரிய செய்திகளை அவைவெளியாகும் போதே தெரிந்துகொள்ளலாம்.இதற்காக வெவ்வேறு செய்தி தளங்களுக்கு சென்று நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணம் அவருக்கு உதயமாயிற்று.ஆனால் அப்போது செய்திகளை திரட்டித்தரும் தலங்கள் இருந்தனவே தவிர பிரேக்கிங் செய்திகளுக்கான திரட்டி எதுவும் இல்லை.பாப்பல் தானே அத்தகைய சேவையை துவக்க முடிவு செய்தார்.

இப்போது பிரப்லமாக இருக்கும் டிவிட்டர் குறும்பதிவு செவையை இதற்காக பயன்படுத்திக்கொள்ள தீர்மாணித்தார்.இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இரன்டு ஆண்டுகளுக்கு முன் டிவிட்டர் இத்தனை பிரபலமாகவில்லை என்பது தான்.

டிவிட்டர் பயன்பாடு ஒஅரவலாகாத நிலையில் அதன் அருமையை உணர்ந்திருந்த பாப்பல் டிவிட்டரில் ஒரு கனக்கு துவக்கி தான் பார்க்கும் பிரேக்கிங் செய்திகளை பகிர்ந்து கொள்ள துவங்கினார்.

ப்ரேக்கிங் நியுஸ் என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் செய்திகளை பகிர்ந்து கொண்டார்.புதிய பெரிய செய்திக்காக வலை வீசிக்கொண்டே இருப்பது அவை கண்ணில் பட்டவுடன் டிவிட்டரில் தெரிவிப்பது என அவர் தீவிரம் காட்டினார்.

இந்த சேவை சுவாரஸ்யமாக இருக்கவே பலரும் அவர் டிவிட்டர் பக்கத்தை பின் தொடர தொடங்கினர்.மற்றவர்களுக்கும் பரிந்துரைக்க துவங்கினர்.விளைவு இந்தசேவை விரைவிலேயே பிரபலமாக்த்துவங்கியது.

இந்த சேவையை எதிர்கொண்டவர்கள் அட நல்ல சேவையாக இருக்கிறதே என்று வியந்து போயினார். செய்திப்பசி கொன்டவர்கள் இந்த சேவையை பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தனர்.இந்த நேரத்தில் தான் ஒசாமா பின் லேடனின் வீடியோ கோப்பு ஒன்று எப்படியோ பாப்பலின் கைகளில் கிடைத்தது.மற்ற செய்தி நிறுவனங்களுக்கெல்லாம் கிடைக்காமல் தனது கைகளில் க்டைத்தாந்த வீடியோவை அவர் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விற்றுவிட்டர்.

அப்பொது தான் அவருக்கு தீவிரமாக செயல்பட்டால் பெரிய நிறூவனங்களை முந்திக்கொண்டு செயல் பட முடியும் என்ற நம்பிகை ஏற்பட்டது.செய்தியை தொகுத்து தருவதே சிறந்த வழி என்ற உறுதியும் உண்டானது.

தொடர்ந்து பிரேக்கிங் செய்திகளை தொகுத்து அளித்து வந்தவருக்கு பல நாடுகளில் இருந்து வாசகர்கள் கிடைத்தனர்.இதனையடுத்து பிரேக்கிங் நியுஸான்லைன் என்னும் இணையதளத்தை ஏற்படுத்தினார்.

வரவேற்பு பிரமாதமாக் இருந்த்தை அடுத்து தனது கீழ் பணியாற்ற செய்தி ஆசிரியர்களையும் நியமித்துக்கொண்டார். இன்று முழுவீச்சிலான செய்தி தளமாக உருவாகியுள்ளது. சர்வதேச செய்தி ஏஜென்சியை துவக்கப்போவதாக அறிவிக்கும் அலவுக்கு அவர் வளர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் எந்த செய்தி நிறூவனம் வேண்டுமானால் பிரேக்கிங் செய்தியை வெளியிடலாம். எந்த நிறுவனம் வேணுமானால் கோட்டை விடலாம். ஆனால் அவற்றை தொகுத்து அளிப்பதன் மூலம் பி என் ஓ மட்டும் முன்னிலைல் இருக்கும் எண்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இண்டெர்நெட் செய்தி மற்றும் நாளிதழ்களின் வருவாயை பாதித்து அவற்றின் செயல்பாட்டிற்கே வேட்டு வைத்து வருவதாக கருதப்படும் நிலையில் பாப்பல் புதிய பெரிய செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வழங்கி தனக்கென ஒரு செய்தி சம்பிராஜ்யத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

(

நன்றி;யூத்புல் விகடன் மின்னிதழ்)

——–

link;
http://www.bnonews.com/

ஆனிய‌ன் ஒரு அறிமுக‌ம்

onion1ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல் என்று பொருள்.

ப‌க‌டி,கேலி,கிண்ட‌ல்,நையாண்டி என்றெல்லாம் சொல்ல‌ப்ப‌டுவ‌த‌ன் உச்ச‌த்தை உண‌ர‌வேண்டும் என்றால் நீங்க‌ள் ஆனிய‌ன் வாச‌க‌ராக‌ இருக்க‌ வேண்டும்.ஆனிய‌ன் இத‌ழை ப‌டிக்கும் போது புன்ன‌கைக்காம‌லோ அல்ல‌து விழுந்து விழுந்து சிரிக்காம‌லோ இருக்க‌ முடியாது.அந்த‌ அள‌வுக்கு ந‌ட‌ப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும்,ந‌ட‌க்காத‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும் இல‌க்காக்குவ‌து தான் இந்த‌ இத‌ழின் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

குற்ற‌ம் க‌ண்டுபிடித்து பேர் வாங்கும் ப‌ல‌வ‌ர்க‌ள் என்பார்க‌ளே அது போல‌ ஆனிய‌ன் இத‌ழ் ஆசிரியர் குழு நையாண்டி செய்தே பேர் வாங்கி வ‌ந்திருக்கிற‌து.1988 ம் ஆண்டு இளைஞ‌ர் இத‌ழாக‌ துவ‌க்க‌ப்ப‌ட்ட‌ ஆனிய‌ன் அமெரிக்காவின் முக்கிய‌ ந‌க‌ர‌ங்க‌ளில் ப‌திப்பிக்க‌ப்ப‌ட்டு பிர‌ப‌ல‌மான‌து.

1996 ல் இத‌ன் இணைய‌ப‌திப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட போது இணைய‌வாசிக‌ள் ப‌ல‌ர் ஆனிய‌ன் அபிமானிக‌ளாயின‌ர்.ஆனிய‌னுக்கான‌ விக்கிபீடியா க‌ட்டுரை இத‌னை அமெரிக்க‌ போலி செய்தி நிறுவ‌ன‌ம் என்று ஆர‌ம்ப‌மாகிற‌து.போலி என்றால் பொய் செய்தி என்ற‌ அர்த்த‌மில்லை.

தேசிய‌ ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ நிக‌ழ்வுக‌ளை நையாண்டி செய்து வெளியிடுவ‌தால் இவ்வாறு குறிப்பிட‌ப்ப‌டுகிற‌து.ஆனியன் தன்னை அமெரிக்காவின் மிகச்சிறந்த செய்தி வழங்கும் நிறுவனம் என்று அழைத்துக்கொள்கிறது.வழக்கமான இதழில் பார்க்கக்கூடிய அனைத்து அம்ச‌ங்க‌ளும் ஆனியனிலும் இருக்கும் என்றாலும் எல்லாமே நையாண்டியை சார்ந்த்தாக இருக்கும்.
ஆனிய‌ன் இத‌ழில் வெளியாகும் கட்டுரைக‌ள் கேலியாக‌ அமைவ‌தோடு சிந்திக்க‌ வைக்க‌க்கூடிய‌ விம‌ர்ச‌ன‌மாக‌வும் இருக்கும் என்று பார‌ட்ட‌ப்ப‌டுகிற‌து.

ஆனிய‌ன் இத‌ழின் முத‌ல் பாதி தான் இப்ப‌டி நையாண்டி ராஜ்ஜிய‌மாக‌ இருக்கும் இர‌ண்டாம் பாதியில் அருமையான‌ நேர்காண‌ல்க‌ள்,விம‌ர்ச‌ன் அறிமுக‌ங்க‌ள் இட‌ம்பெற்றிருக்கும்.

இப்போது எத‌ற்கு இந்த‌ ஆனிய‌ன் புராண‌ம் என்றால் ஆனிய‌ன் ஐபோனுக்கான‌ செய‌லியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.ஐபோனுக்கான‌ செய‌லியை நியுயார்க் டைம‌ஸ் உள்ளிட்ட‌ நாளித‌ழ்க‌ள் பெற்றுள்ள‌ன‌.ஆனிய‌னும் இந்த‌ ப‌ட்டிய‌லில் சேர்ந்துள்ள‌து.

ஆனால் ஆனிய‌ன் என்றால் த‌னித்துவ‌ம் என்றும் அர்த்த‌ம்.அத‌ன்ப‌டி இந்த‌செய‌லி செய்தி இல்லா செய்திக‌ளை த‌ருவ‌த‌ற்காக‌ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அந்த வகையில் இது வ‌ழ‌க்க‌மான‌ செய்தி செய்லியாக‌ இல்லாம‌ல் வேறுப‌ட்ட‌தாக‌ இருக்கும்.அதாவ‌து இந்த‌ செய‌லி செய்தி த‌லைப்புக‌லை ம‌ட்டுமே வ‌ழ‌ங்கும். முழு நீள‌ செய்திக‌ள் இருக்காது.

செய்தி சேவையை இந்த‌ செய‌லி புர‌ட்சிக‌ர‌மாக‌ மாற்றும் என‌ ஆனிய‌ன் குறிப்பிட்டுள்ள‌து.முழ‌ நீள‌ செய்திக‌ளை எத‌ற்கு ப‌டிக்க‌ வேண்டும் த‌லைப்புக‌ள் ம‌ட்டெம் போதாதா என்று ஆனிய‌ன் கேட்காம‌ல் கேட்கிற‌து.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் மூல‌ம் ப‌கிர்ந்து கொள்ள‌ இந்த செய‌லி ஏற்ற‌தாக‌ இருக்கும்.


link;
http://www.theonion.com/content/index

கூகுலின் புதிய சேவை

gஎத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது.

இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் நியூயார்க் டைம்ஸ்,வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட பிர‌ப‌ல‌ செய்திதாள் நிறுவ‌ன‌ங்க‌ளோடு ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டுள்ள‌து.

கூகுல் ஏற்க‌ன‌வே கூகுல் நியூஸ் என்னும்பெய‌ரில் செய்தி சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.இந்த‌ சேவை பிர‌ப‌ல‌மாக‌ இருந்தாலும் நாளித‌ழ் நிறுவ‌ன‌ங்க‌ளால் க‌டுமையாக‌ விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.த‌ங்க‌ள் செய்திக‌ளை எடுத்து வெளியிட்டு கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் காசு பார்ப்ப‌தாக‌ நாளித‌ழ்க‌ள் சார்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌வே நாளித‌ழ்க‌ளுக்கு இது சோத‌னையான‌ கால‌ம் தான்.இண்டெர்நெட்டின் போட்டி கார‌ண‌மாக‌ நாளித‌ழ்க‌ளின் வ‌ருவாய் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிலையில் கூகுலின் செய்தி சேவையை ஒரு சுர‌ண்ட‌லாக‌வே நாளித‌ழ்க‌ள் பார்க்கின்ற‌ன‌.த‌ங்க‌ள் உழைப்பை உறிஞ்சித்தின்னும் ஒட்டுண்ணி என்று வால் ஸ்டிரீட் ஜ‌ர்ன‌ல் ஆசிரிய‌ர் ச‌மீப‌த்தில் காட்ட‌மாக‌வே கூறியிருந்தார்.

இந்த‌ பின்ன‌ணியில் தான் கூகுல் பாஸ்ட்பிலிப் செய்தி சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.கூகுல் செய்தி சேவைக்கும் இதற்கும் அடிப்படையிலேயே வித்தியாச‌ம் உள்ள‌து.பாஸ்ட்பிலிப் சேவையில் செய்தி ப‌க்க‌ங்க‌ள் புகைப்ப‌ட‌ம் போல‌ ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்வ‌து போல அமைந்திருக்கிற‌து.ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்தால் ப‌டித்துக்கொண்டே போகலாம்.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ கூகுல் இவ்வாறு செய்துள்ள‌து.ஒன்று வ‌ழ‌க்க‌மான‌ செய்தி இணைப்பை காட்டிலும் இப்ப‌டி கிளிக் செய்யும் போது ப‌த்திரிக்கையை புர‌ட்டும் உண‌ர்வை பெற‌ முடியும்.அதைவிட‌ முக்கிய‌மாக‌ ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌தும் விரைவாக‌ இருக்கும்.

செய்தி த‌ள‌ங்க‌ளுக்கு செல்லம் போது குறிப்பிட்ட ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌து தாம‌தாவ‌தே இணைய‌வாசிக‌ள் அதிக‌ நேர‌ம் செய்தி த‌ள‌ங்க‌ளில் த‌ங்காத‌த‌ற்கான‌ கார‌ண‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.மாறாக‌ புர‌ட்டிப்பார்க்கும் வ‌ச‌தியோடு விரைவாக‌ ப‌டிப்ப‌து சாத்திய‌மானால் இணைய‌வாசிக‌ள் அதிக‌நேர‌ம் செல‌விடுவார்க‌ள் என்று கூகுல் எதிர‌பார்க்கிற‌து.இத‌னால் அதிக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ முடியும்.

செய்தி சேவையில் கூகுல் விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயை தானே வைத்துக்கொண்டாலும் பாஸ்ட்பிலிப் சேவையில் வ‌ருவாயை நாளித‌ழ்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ முன்வ‌ந்துள்ள‌து.அதாவது இணைந்து சம்பாதிப்போம் என கூகுல் நாகிதழ்களோடு கைகோர்த்துள்ளது.

ப‌த்திரிக்கைகளை ப‌டிக்கும் அனுப‌வ‌த்தையும் வ‌ச‌தியையும் இண்டெர்நெட் தொழில்நுட்ப‌த்தோடு இணைந்துத‌ரும் வ‌ச‌தியாக‌ கூகுல் இத‌னை வ‌ர்ணி9த்துள்ள‌து.

இந்த‌ சேவை வெற்றி பெற்றால் நாளித‌ழ்க‌ளுக்கு வ‌ருவாய் வ‌ருவ‌தோடு கூகுல் மீதான‌ விம‌ர்ச‌னமும்,கோபமும் குறையும்.

—–
link;
http://fastflip.googlelabs.com/