Tag Archives: சேவை

வார்த்தை விளையாட்டு இணையதள‌ம்.

டிவிட்டரை விளையாட்டாகவும் பயன்படுத்தலாம்.தீவிரமாகவும் பயன்படுத்தலாம்.ஆனால் டிவிட்டரைப்போலவே துவங்கப்பட்டுள்ள புதிய சேவையை விளையாட்டாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் ரசனை இருந்தால் மட்டுமே இந்த சேவை செல்லுபடியாகும்.

சேவையின் பெயர்.வேர்டர்.(wordr).டிவிட்டரைப்போன்ற‌ சேவை தான் .ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு டிவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். வேர்டர் அந்த அள‌வுக்கு தாராளம் இல்லை.ஒரே ஒரு வார்த்தை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.ஆனால் அதிகபட்சம் 28 எழுத்துக்கள் கொண்ட வார்த்தையை பயன்படுத்தலாம்.

சும்மா ஜாலியாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் பகிர்ந்து கொள்ளப்படும் புதுமையான மற்றும் வித்தியாசமான வார்த்தைகளுக்காகவே ஒரு முறைவிஜயம் செய்யலாம்.மற்றபடி பயன்ப்டுத்துவது அவரவர் விருப்பத்தை பொருத்தது.

——-]

link;http://wordr.org/

கூகுல் போன் புதிய தகவல்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .

இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.கூகுல் போன் செய்திக‌ளை தொட‌ர்ந்து பின் தொட‌ருவோம்.

ஏடிஎம் எங்கே இருக்கிறது?ஒரு வழிகாட்டி

a1
ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்க‌ள்.

அது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும?

இந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது.

ஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே ஏடிம் மையம் எங்கே உள்ளது என்பதை அடையாள‌ம் காட்டிவிடும்.அந்த ஏடிம் மையம் எத்தகைய சேவைக்கானது,24 மணிநேர‌மும் இயங்கக்கூடியாதா, போன்ற தகவல்களையும் வழங்கும்.

ஐபோன் இருப்பிடம் உணர் ஆற்றல் கொண்டது என்பதால் இருக்கும் இடத்தை சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லாமல் அதுவே புரிந்து கொண்டு மையத்தை காட்டிவிடும்.

தேவைப்பட்டால் அருகே உள்ள விமான நிலையத்தை குறிப்பிட்டும் தேடலாம்.ஏடிம் மையங்களில் அருகாமையில் உள்ளது எது என்பதியும் அறியலாம். நமது இடத்திற்கும் மையத்திற்கும் உள்ள தொலைவையும் அறீய முடியும்.

இந்த சேவை உலகின் எந்த நகரிலும் செல்லுபடியாகுமாம்.

முன்னணி கிரிடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு சார்பில் ஐபோனுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இபோன் சார்ந்த ஆச்சர்யங்கள் இப்ப‌டி நிறையவே இருக்கிறது.

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

midomiஇசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம்.
.
இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது.

பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது.

ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை பாடியோ அல்லது முனுமுனுத்தோ, அதற்கு நிகரான பாடல்களை தேடலாம். விரும்பிய பாடல்களை தேடிப் பெறும் வசதியைத் தரும் இணைய தளங்கள் அனேகம் இருக்கின்றன.

ஆனால் பாடல்களை பாடிக்காட்டியே தேடக் கூடிய, புதுமையான வசதி தரும் தளம் இது மட்டும்தான். அந்த வகை யில் இந்த தளம் மிகவும் சுவாரசியமானது.

தற்போது அறிமுகமாகும் எந்த தளமும், சமூக பண்பு இல்லாமல் இருப்பதில்லை. அதாவது இணைய வாசிகள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்து கொள்ளும் சேவை யையும் சேர்ந்தே வழங்குகின்றன. இந்த தளமும் இத்தகைய சமூக பண்புடனேயே உதயமாகியிருக்கிறது.

இசைப்பிரியர்கள் இந்த தளத்தின் மூலம் மற்ற இசைப்பிரியர்களை தொடர்பு கொண்டு நண்பர்களாக முடியும். பாடல்களை பாடி காட்டும் போது, அதே பாடலை வேறு யார் பாடியிருக் கிறாரோ, அதனை நாம் கேட்டு மகிழ முடியும். அது பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் அவரோடு நட்பு கொள்ளலாம்.

இவ்வாறு பிடித்தமான பாடல்களை பாடுவதன் மூலமும், அவற்றை மற்ற வர்கள் பாடிக் காட்ட கேட்டு கருத்து சொல்வதன் மூலமும் இசைப்பிரியர் கள் தங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அடுத்தமுறை வேறு யாராவது பாடலை பாடி தேடும் போது, நீங்கள் பாடி வைத்திருக்கும் பாடல் அவருக் கான பட்டியலில் முதலிடத்தில் வந்து நிற்கும் வாய்ப்பும் இருக்கிறது. அவர் அதனை கேட்டு ரசித்து உங்களோடு தொடர்பு கொண்டு, நண்பராகும் வாய்ப்பு உள்ளது.

மற்ற எந்த இசையைச் சேர்ந்த தளங்களிலும் இல்லாத மற்றொரு சிறப்பம்சம், இந்த தளத்தில் எந்த மொழியிலும் பாடலாம் என்பதே. பெரும்பாலான இசைத் தளங்களில் ஆங்கிலமே பிரதான மொழியாக இருக்கிறது. நம்மவர்கள் தமிழ் பாடலை கேட்க விரும்பினால் அந்த தளங்கள் கைகொடுக்காது.

ஆனால் இந்த தளத்தில் அப்படியில்லை. தமிழிலேயே பாடித் தேடலாம்.
இது போல எந்த உலக மொழியிலும் பாடல்களை பாடலாம். காலப் போக்கில் இந்த தளம் பிரபலமாகி பல நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறும் போது எல்லா மொழி களிலும் பொருத்தமான பாடல்களை தேடுவது சாத்தியமாகலாம்.

இந்த தளத்தில் தேடுவதோடு, தங்களுக்கான தனி பக்கத்தையும் உருவாக்கி கொண்டு சுருக்கமான சுயசரிதை விவரங்களை வெளியிட்டு, ஒத்த ரசனை உள்ளவர்களை தேடி நட்புறவு கொள்வது மிகவும் சுலபமானது. இத்தோடு பிடித்தமான பாடல்களை இந்த தளத்தின் மூலமே காசு கொடுத்து வாங்கவும் முடியும்.

இசையையும், இசைச்சார்ந்த மனிதர் களையும் தேடுவதை சுலபமாக்கும் சுவாரஸ்யமான தளம் என்று இதனை வர்ணிக்கலாம். இசைப்பிரியர்கள் இந்த தளத்தில் தங்களை மறந்து மூழ்கிக் கிடக்கலாம்.

————-
www;
www.midomi.com

ஐ போன் அற்புதங்கள்

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவிலான  பில்லே இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.  இந்தபோன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.  ஐபோன், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என்று ஒரு தரப்பினரும், எதிர்பார்ப்பை  மிஞ்சும் வகையில் அற்புதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
.
ஐபோன் பேட்டரி போன்றவை பெரும் சர்ச்சைக்கு  இலக்காகி இருக்கிறது.  இந்நிலையில் ஐபோனுக்கு அனுப்பப்பட்ட பில் ரசீதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  பொதுவாக  செல்போனுக்கான பில் எப்படி இருக்கும். ஒரு பக்கத்தில்  கட்டணத்தொகை மற்றும் அதற்கான விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிகம் போனால்  இரண்டு மூன்று பக்கங்கள் இருக்கும். அவ்வளவு தானே. 

ஆனால் ஆப்பிளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பில்லோ, 10 பக்கத்துக்கும் குறையாமல்  இருப்பதாக  புகார் எழுந்துள்ளது.  ஒரு சில வாடிக்கை யாளர்களுக்கு 30, 40 பக்கங்களுக்கு பில் வந்து சேர்ந்திருப்பதாகவும் கூறப் படுகிறது.
குறிப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவருக்கு 300 பக்கங்களுக்கு இந்த பில்  வந்திருக்கிறது.  ஐபோன் சார்பாக ஏடி அண்ட் டி செல்போன் சேவை நிறுவனம் இந்த பில்களை அனுப்பி வைத்திருக்கிறது.

ஐபோன், வாடிக்கையாளர்களின் செல்போன் பயன்பாடு தொடர்பான  அனைத்து விவரங்க ளையும் பதிவு செய்து கொள்ளும் வசதியை வழங்குகிறது. எத்தனை போன் கால்கள், எத்தனை எஸ்எம்எஸ் செய்திகள், எத்தனை டவுன்லோடுகள் என எல்லாவிதமான விவரங்களையும்  பதிவு செய்து கொள்ள முடியும்.

இத்தனை விவரங்களையும் பில்லும் பிரதிபலிப்பதால் அது பல பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. 300 பக்கம் கொண்ட பில்லை பெற்ற ஜஸ்டீன் ஜாரிக் என்பவர் இந்த அனுபவத்தை ஒரு சிறிய வீடியோ படமாக தயாரித்து அதனை  யூடியூப் தளத்தில் இடம் பெறவும் வைத்திருக்கிறார்.

ஐபோனுக்கான  விளம்பரத்தில் வரும்  பாடல் பின்னணியில் ஒலிக்க,  தபாலில் பில்லை பெறுவதில் தொடங்கி, அதனை பிரித்துப் பார்த்து 300 பக்கங்கள் இருப்பதால்  அதிசயித்ததுவரை  அந்த வீடியோ காட்சி விவரிக்கிறது. இந்த வீடியோ படம் பலரால் பார்க்கப்பட்டு, இன்டெர்நெட் உலகில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 ஆப்பிள்  தற்பெருமைக்காக பல விஷயங்களை  செய்து விட்டு, உண்மையில் அது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருப்பதாக முணுமுணுப்பு எழுந்திருக்கும் நிலையில், அதற்கான  மற்றொரு உதாரணமாக இது கருதப்படுகிறது.
ஆனால் பில் அனுப்பிய  ஏ டி  அண்ட் டி நிறுவனமோ, இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றும், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் இப்படி  பில் அனுப்பி வைப்பதே வழக்கம் என்றும், ஐபோனுக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக இந்த விஷயம்  தனித்து தெரிவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் ஐபோன் ஓசைப்படாமல் மற்றொரு சேவையை அறிமுகம் செய்து சபாஷ் வாங்கியிருக்கிறது.

ஐபோன் மூலமே புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை படித்து பார்க்கக் கூடிய வசதி தான் அது. பதிப்பகத் துறையில் புகழ் பெற்ற ஹார்ப்பர் அண்ட் காலின்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஐபோன்  இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையின் மூலமாக ஐபோன் வழியே  இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ள  புதிய புத்தகங்கள் பற்றிய விவரங்கள்  மற்றும்  விமர்சனங்களை படிக்க முடியும். அதோடு புத்தகத்தின் உள்ளே உள்ள  சில பக்கங்களை மாதிரிக்கு படித்து பார்க்கலாம்.

10,000 திற்கும் மேற்பட்ட புத்தகத்தின் விவரங்கள் இதுவரை இந்த சேவைக்காக  டிஜிட்டல் மய மாக்கப்பட்டிருப்பதாக பதிப்பகம்  தெரிவிக்கிறது. ஐபோன் வாடிக்கையாளர்கள் பலர் இந்த சேவையை  வரவேற்றுள்ள னர்.  ஒரே நேரத்தில் 10 பக்கங்கள் வரை ஐபோனிலேயே படிக்க முடியும். அதாவது  ஏறக்குறைய 2 அத்தியாயங்களை  ஐபோன் மூலமே படித்து விடலாம்.

ஐபோன் மேலும் பல பதிப்பகங்க ளோடு இதே போன்ற ஒப்பந்தங் களை செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் ஐபோனிலேயே ஒரு நூலகத்தை  அடக்கிவிடலாம்.