Tagged by: டிவிட்டர்

என்ன படம் பார்க்க‌லாம்;வழிகாட்டும் இணையதளம்.

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இருந்தது.இப்போது அந்த நிலை இல்லை.என்ன தான் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பில்டப் கொடுத்தாலும் பதிவுலக‌ மொழியில் சொல்வதானால் மொக்கை படத்தை யாரையும் பார்க்க வைக்க முடியாது. படம் பற்றி தயாரிப்பாளரும் விமர்சகர்களும் அஹா ஒஹோ என்று சொன்னாலும் பதிவுலகும் டிவிட்டர் வெளியும் உண்மையான லட்சனத்தை அம்பலமாக்கி விடும்.எனவே ரசிகர்களை முன் போல சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது. இது ர‌சிக‌ர்க‌ளின் காலம். இதனை […]

விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து பிரம்மித்து தியேட்டருக்கு போய் படம் பார்த்து ரசிகர்கள் ஏமாந்த காலம் ஒன்று இரு...

Read More »

டிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம். இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை. இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ […]

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டர...

Read More »

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »

டிவிட்டருக்கு வருகிறார் ஜார்ஜ் புஷ்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டிவிட்டருக்கு வருகை தர இருக்கிறார்.இதனை டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார்.எதிர்பார்க்ககூடியது போலவே ஸ்டோன் ஒரு டிவிட்டர் செய்தி மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். உலக அறிவு மாநாடு நிகழ்ச்சியில் ஸ்டோன் முன்னாள் அதிபர் புஷ்ஷை சந்தித்துப்பேசியிருக்கிறார்.இந்த சந்திப்பிற்கு பின் ஸ்டோன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் புஷ் படத்தை போட்டு அவர் விரைவில் டிவிட்டர் செய்யலாம் என்று கூறியுள்ளார். ஜார்ஜ் புஷ் பெயரில் ஏற்கனவே டிவிட்டர் முகவரி பதிவு […]

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் டிவிட்டருக்கு வருகை தர இருக்கிறார்.இதனை டிவிட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் தெரிவித...

Read More »

நலம் நலமறிய டிவிட்டர்

எலிஸிபெத் டெய்ல‌ர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.அறுவை சிகைச்சை வெற்றி பெற்று அவர் ப‌ரிபூர்ண நலத்துடன் இருக்கிறார்.இத‌னை அவ‌ரே டிவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு ‘தெள்ளத்தெளிவாக’ தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தனது சிகிச்சையில் ஊகங்களுக்கோ வதந்திகளுக்கோ இடம் கொடுக்காமல் தவிர்த்திருக்கிறார்.அதே நேரத்தில் ரசிகர்களுக்கு தேவையான தகவலை தானே பகிர்ந்து கொண்டிருக்கிறார். நிமிடத்திற்கு நிமிடமான தகவல்களை பகிர்ந்து கொள்ள வழி வகுக்கும் டிவிட்டர் சேவையை பயன்படுத்துவதால் என்ன பயன் என்று எழக்கூடிய கேள்விக்கு சரியான பதிலாக இதனை […]

எலிஸிபெத் டெய்ல‌ர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.அறுவை சிகைச்சை வெற்றி பெற்று அவர் ப‌ரிபூர்ண நலத்துடன் இர...

Read More »