Tagged by: தேடல்

நீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]

மாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...

Read More »

ஒரு இணைய கையேடு மூடப்படுகிறது, கொஞ்சம் வருந்தலாமே பிளிஸ்!

டி.எம்.ஒ.இசட் தளம் முடப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்தி என்றாலும், அதைவிட முக்கியமானது, இணையத்தின் மகத்தான ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது தான். அது மட்டுமா, இணைய தேடலின் ஒரு முக்கிய அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. மறக்கப்பட்ட அத்தியாம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதனால் தான் இந்த செய்தி இன்னும் வேதனை தருகிறது. டி.எம்.ஒ.இசட் தளமா அது என்ன? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், இந்த தளம் பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம். […]

டி.எம்.ஒ.இசட் தளம் முடப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு வருத்தம் தரும் செய்தி என்றாலும், அதைவிட முக்கியமான...

Read More »

இது நடுநிலையான தேடியந்திரம்!

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எந்த ஒரு ஒற்றை தேடியந்திரமும் ஆதிக்கம் செலுத்துவது நல்லதல்ல, அதை ஏற்றுக்கொள்ளவது அதைவிட நல்லதல்ல எனும் சிந்தனை ஐரோப்பாவில் வலுவாகவே இருக்கிறது. அதன் அடையாளமாக உருவான தேடியந்திரங்களின் வரிசையில் அன்பபிள் தேடியந்திரமும் வருகிறது. ஆனால் இது மூல தேடியந்திரம் அல்ல: மெட்டா தேடியந்திர வகையைச்சேர்ந்தது. அதாவது இது சொந்தமாக இணையத்தை தேடுவதில்லை. மாறாக, பிற தேடியந்திரங்களின் தேடல் அட்டவனையை பயன்படுத்தி […]

அன்பபிள் (Unbubble) தேடியந்திரத்தை அறிவீர்களா? இது ஒரு சர்வதேச தேடியந்திரம். ஐரோப்பாவின் பங்களிப்பு. தேடியந்திர உலகில் எ...

Read More »

கலைகளுக்கான தேடியந்திரம்!

குறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclopedia). பெயரில் இருந்தே உணரக்கூடியது போலவே இது கலைகளுக்கான தேடியந்திரம். கலை மற்றும் கலைஞர்கள், குறிப்பாக ஓவியக்கலைஞர்கள் தொடர்பான தகவல்களை தேட இது உதவுகிறது. முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட கலைகளுக்காக என்று தனியே ஒரு தேடியதிரமா என வியக்கத்தோன்றும். ஆனால், இதை பயன்படுத்திப்பார்க்கும் போது, இவ்வளவுதானா? என்ற அலுப்பும் ஏற்படலாம். ஏனெனில் இதில் எல்லா […]

குறிப்பிட்ட துறைகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பிரத்யேக தேடியந்திரங்கள் வகையின் கீழ் வருகிறது ஆர்ட்சைக்லோபீடியா (artcyclo...

Read More »

மாற்று தேடியந்திரங்கள் எதற்காக?

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்கிறேன். இவற்றில் பல தேடியந்திரங்கள் இடையே காணாமல் போய்விட்டது வேறு விஷயம். ஆனால் இன்னமும் தேடியந்திரங்கள் ஈர்ப்புக்குறியவையாகவே இருக்கின்றன. ஒரு புதிய தேடல் நுட்பத்துடன் அறிமுகமாகும் தேடியந்திரத்தை பரீட்சயம் செய்து கொள்வதை உற்சாகம் அளிக்கவே செய்கிறது. இந்த ஆர்வம் காரணமாகவே தமிழ் இந்துவில் ஆ’வலை வீசுவோம் எனும் தலைப்பில் தேடியந்திரங்கள் பற்றி தொடராக எழுதி வருகிறேன். 25 வது பகுதியில் […]

தேடியந்திரங்கள் மீது எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. புதிய தேடியந்திரங்கள் பற்றியும் தொடர்ந்து உற்சாகமாக எழுதி வந்திருக்...

Read More »