Tag Archives: தேர்தல்

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

manmohan_singhகொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் பிர‌ப‌ல‌ங்க‌ளும் அத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ப‌ல‌ர் ஃபேஸ்புக் மூல‌ம் தேர்த‌ல் பிர‌ச்சார‌மும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்.

அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா ஃபேஸ்புக் ப‌ய‌ன்பாட்டில் முன்னோடி என்று வ‌ர்ணிக்க‌ப்ப‌டும் அள‌வுக்கு த‌ன்னுடைய‌ தேர்த‌ல் பிராசார‌த்தின் போது ஆதார‌வாள‌ர்க‌ள் ம‌ற்றும் வாக்காள‌ர்க‌ளை தொட‌ர்புகொள்ள தீவிரமாக‌வே ஃபேஸ்புக்கை ப‌ய‌ன்ப‌டுத்த‌னார். த‌ற்போது அதிப‌ரான‌ பின்னும் ஃஃபேஸ்புக்கை அவ‌ர் ப‌ய‌ன்ப‌டுத்தி வருகிறார்.

ஆனால் இந்தியாவை பொறுத்த‌வ‌ரை அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் ம‌த்தியில் ஃபேஸ்புக் போன்ற‌வை இன்னும் பிர‌ப‌ல‌மான‌தாக‌ தெரிய‌வில்லை.ராகுல் போன்ற‌ இள‌ம் எம் பி க்க‌ள் சில‌ர் ஃபேஸ்புக்கில் உள்ள‌ன‌ர்.

இந்த‌ நிலையில் இண்டெர்நெட் ப்ரிட்ச‌ய‌ம் இல்லாத‌வ‌ரும் செல்போன் கூட‌ வைத்திர‌த‌வ‌ருமான‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் ஃபேஸ்புக்கில் உறுப்பின‌ராக‌ இருப்ப‌து விய‌ப்பானாதது தான்.

ஆனால் பிரதமர் தானே நேரடியாக ஃப்பேஸ்புக்கில் தகவல்களை இடம்பெற வைப்பதாக கருத்வதற்கில்லை. இந்திய‌ வ‌ழ‌க்க‌ப்ப‌டி அவ‌ர் சார்பில் அதிகாரி யாராவ‌து செய்து கொண்டிருக்க‌லாம்.

ஒபாமாவின் அறிவுரை

இத‌னிடையே அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா ஃபேஸ்புக் ப‌ய்ன‌பாடு தொட‌ர்பாக‌ இளைஞ‌ர்க‌ளுக்கு முக்கிய‌ அறிவுரை வ‌ழ‌ங்கியுள்ளார்.எதிர்கால‌த்தில் அதிப‌ராக‌ வேண்டும் என்‌ற‌ விருப்ப‌ம் இருந்தால் ஃபேஸ்புக்கில் இட‌ம்பெற‌ வைக்கும் த‌க‌வ‌ல்க‌ள் குறித்து எச்ச‌ரிக்கையாக‌ இருங்க‌ள் என்று குறியுள்ளார்.கார‌ண‌ம் இப்போது ஃபேஸ்புக்கில் ப‌திவு செய்யும் க‌ருத்துக்க‌ள் நாளை உங்க‌ளை ஆட்டிப்ப‌டைக்க‌லாம் .

அதிப‌ராகும் எண்ண‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ எல்லோருக்குமே இது பொருத்தும்.

இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி

kennedyசமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவண‌க்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி.

ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதள‌த்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும்.

ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் இணைய‌தள‌மில்லாம‌ல் இருந்தால் வாக்க‌ள‌ர்க‌ள் ம‌திக்க‌ மாட்டார்க‌ள். (இந்தியாவில் எத்த‌னை எம்பிக்க‌ள் இணைய‌த‌ள‌ம் வைத்துள்ள‌ன‌ர் என்று தெரிய‌விக்ல்லை)

தேர்ந்தெடுத்த‌ ம‌க்க‌ளோடு தொட‌ர்பு கொள்ள‌வும் அடுத்த‌ தேர்த‌லில் வாக்கு சேக‌ரிக்க‌வும் இணைய‌த‌ள‌ம் மிக‌வும் அவ‌சிய‌ம்.த‌ற்போதைய‌ எம்பிக்க‌ள் ஃபேஸ்புக் ப‌க்கம், டிவிட்ட‌ர் ப‌க்க‌ம் எல்லாம் வைத்துகொண்டு அச‌த்துகின்ற‌ன‌ர்.

ஆனால் இண்டெர்நெட் பிர‌ப‌ல‌மாக‌த்துவ‌ங்காத‌ கால‌த்தில், அதனை எப்ப‌டியெல்லாம் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்ப‌து தெளிவாக‌ புரியாத‌ ஆர‌ம்ப‌ கால‌த்திலேயே கென்ன‌டி த‌ன‌க்கான‌ இணைய‌த‌ள‌த்தை அமைத்துக்கொன்டார் என்றால‌ பார்த்துக்கொள்ளுங்க‌ள்.

இண்டெர்நெட்டின் த‌ற்போதைய‌ வ‌டிவ‌மான‌ வைய விரிவு வ‌லை அறிமுக‌மான‌ 1993 ம் ஆண்டே கென்ன‌டி த‌ன‌க்கான‌ இணைய‌த‌ள‌த்தை உருவாக்கிகொண்டார்.அப்போது அமெரிக்க‌ நாடாளும‌ன்ற‌த்தின் எந்த‌ அலுவ‌ல‌க‌மும் இண்டெர்நெட்டில் இட‌ம்பெற‌வில்லை.

இத‌ன்மூல‌ம் டெட் கென்ன‌டி இண்டெர்நெட்டில் இட‌ம் பெற்ற‌ முத‌ல் அமெரிக்க‌ எம்பி என்னும் சிற‌ப்பை பெற்றார். அத‌ன்பிற‌கு இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌திலும் அவ‌ர் முன்னினியில் திக‌ழ்ந்தார்.

தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.

elec2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவ‌ரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் தெரிய்ம் வகையில் விசேச சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை த‌விர டெல்லி தெரித‌ல் ஆணைய‌ த‌லைமை அலுவ‌ல‌கத்தில் ராட்ச‌த‌ திரை மூல‌மும் தேர்த‌ல் முடிவுக‌ள் வெளியிட‌ப்ப‌ட‌ உள்ள‌ன‌.

————-

link;
http://www.eciresults.nic.in/