Tag Archives: தொலைக்காட்சி

கூகுல் மீது வழக்கு

modelvகூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை காக்க தவறியாதற்காக 15 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்.

அவரது வாதம் வெற்றி பெறுகிறாதோ இல்லையோ இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பதிவர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் அதற்காக போராட தயாராக உள்ளனர் என்பதையும் இந்த வழக்கு உணர்த்திருகிறது.

ரோஸ்மேரி போர்ட் என்பது அவரது பெயர்.ஆனால் அந்த பெயர்கூட யாருக்கும் தெரியமலேயே இருந்தது.காரணம் அவர் அனாமத்து பதிவராக தன்னைப்பற்றிய எந்தவிதமான தகவல்களையும் வெளியிடாமல் இருந்ததுதான்.

வலைப்பதிவு ஏற்படுத்தி தரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களைப்பற்றி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள பலரும் தயாராக உள்ள நிலையில் ஒரு சிலர் மட்டும் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பதிவு செய்கின்றனர்.இவர்கள் அனாமத்து பதிவாளர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

பெரும்பாலும் சர்சைக்குரிய சங்கதிகளை எழுதவும் பிறர் மீது சேற்றை வாரி பூசவும் இவ்வாறு அடையாளத்தை மறைத்துகொள்கின்றனர்.வேறு நியாயமான காரணங்களுக்காக அடையாளத்தை வெளியிடாமல் இருப்பவர்களும் உண்டு.

நியூயார்க்கைச்சேர்ந்த ரோஸ்மேரி ஸ்காங்க்ஸ் ஆப் நியூயார்க் என்னும் பெயரில் மறைந்து கொண்டு வலைப்பதிவு செய்து வந்தார்.அவர் எழுதியது என்ன ,அவற்றை யார் படித்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் மாடல் ஒருவர் மீது அவர் நடத்திய தாக்குதல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.கனாடவைச்சேர்ந்த லிஸ்குலா கோஹன் என்னும் மாடலழகி பற்றி அவர் தாறுமாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.அவதூறு என்ற வரையறைக்குள் பொருந்தக்கூடிய அந்த பதிவுகளை பார்த்து கோஹன் கொதித்துப்போனார்.

யார் என்றே தெரியாத ஒருவரால் இப்படி கடுமையாக தாக்கி எழுதப்பட்டது அவரை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது.முகம் தெரியாத நபாரால் எழுதப்படும் அந்த பதிவு தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என்ற அச்சமும் உண்டானது.

பத்திரிக்கையிலேயோ தொலைக்காட்சியிலேயோ இப்படி யாராவது கூறியிருந்தால் சரியான பதிலடி கொடுக்கலாம்.தேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் இழுக்கலாம். ஆனால் அனாமத்து பதிவாளரை என்ன செய்ய முடியும்?அனாமத்து தன்மை தானே அவர்களின் பாதுகாப்பு.

பார்த்தார் கோஹன் .இதை இப்படியே விடக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவ‌தூறான‌ க‌ருத்துக்க‌ளை எழுதிவ‌ரும் அந்த‌ ப‌திவாள‌ர் யார் என்ப‌தை வெளியிட‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட வ‌லைப்ப‌திவு சேவை நிறுவ‌ன‌த்திற்கு உத்த‌ர‌விடவேண்டும் என்று அவ‌ர் கோரினார்.

வ‌ழ‌க்கை விசாரித்த‌ நியுயார்க் உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் அவ‌ர் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட‌ அந்த‌ ப‌திவ‌ரின் அடையாள‌த்தை வெளியிட‌ வேண்டும் என்று கூகுலுக்கு (பிளாகர் சேவையின் உரிமையாளர்)தீர்ப்ப‌ளித்த‌து.இத‌னைய‌டுத்து அந்த‌ ப‌திவ‌ர் ரோஸ்மேரி என்ற‌ விவ‌ர‌ம் தெரிய‌வ‌ந்த‌து.

இண்டெர்நெட் உல‌கில் இது முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ தீர்ப்பாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.ஒரு முன்னோடி தீர்ப்பாக‌வும் க‌ருத‌ப்ப‌டுகிற‌து.இனி ப‌திவ‌ர்க‌ள் அனாம‌த்து முக‌முடியின் கீழ் ம‌றைந்துகொண்டு இஷ்ட‌ம் போல‌ எழுதுவ‌து சாத்திய‌மில்லை.

இந்நிலையில் ரோஸ்மேரி கூகுல் நிறுவ‌ன‌த்தின் மீது வ‌ழ‌க்கு தொட‌ர்ந்துள்ளார். கூகுல் த‌ன‌து அந்த‌ர‌ங்க‌ உரிமையை மீறிவிட்ட‌தாக‌ கூறீ அவ‌ர் நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.

சொன்னது நீ(ங்கள்)தானா!

speechஅமெரிக்க அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு பயப்படு கின்றனரோ இல்லையோ அவர்கள் கையில் இருக்கும் டிஜிட்டல் ஆயுதங்களை நினைத்து அஞ்சியே ஆக வேண்டும்! இல்லையேல் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு அமெரிக்க வாக்காளர்கள் இன்டெர் நெட்டின் சக்தியை அரசியல் நோக்கில் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
.
இதற்கான சமீபத்திய உதாரணம் “ஸ்பீச்சாலஜி’ “யூடியூப்’ பாதி “ஃபேக்ட்செக்’ மீதி என்று வர்ணிக்கப்படும் இந்த தளம், வாக்காளர்களை அரசியல் நிபுணர்களாக்கி அரசியல்வாதிகளை அடிபணிய வைக்க நினைக்கிறது.

அதாவது அரசியல்வாதிகள் தாங்கள் பேசிய பேச்சுகளுக்கும், சொன்ன கருத்துக்களுக்கும் பொறுப்பேற்க வைக்கிறது இந்த தளம். இதையே வேறு விதமாகச் சொல்வதானால், பொதுமக்களின் நினைவுத்திறன் குறுகிய காலத்திலானது என்று ஒரு கருத்து உண்டல்லவா, அதைப்பற்றி பொதுமக்கள் நினைவுத்திறனை யூடியூப் வீடியோ கோப்புகள் மூலம் நீடித்து நிலைக்க வைக்கிறது. அரசியல்வாதிகள் சொன்ன வார்த்தைகளையும் சரி செய்த தவறுகளையும் சரி, பொது மக்கள் சுலபத்தில் மறந்து விடுகின்றனர் என்பதை குறிப்பதற்காக இவ்வாறு குறிப்பிடுவதுண்டு.

பொதுமக்கள் நினைவுத் திறன் மீதான நம்பிக்கையால் (அ) இதுதான் இயல்பு என்பதாலோ அரசியல் வாதிகள், தங்கள் சொல்லையும் செயலையும் சுலபமாக மாற்றிக்கொண்டு விடுகின்றனர். நேற்று வரை ஒரு நிலைப்பாடு இருக்கும்! இன்று பார்த்தால் தளத்தை மாற்றிப்போட்டு வேறு விதமாக பேசத்தொடங்கி இருப்பார்கள். குறிப்பிட்ட கொள்கைக்காக உயிரையும் கொடுப்பேன் என்னும் விதமாக பேசியிருப்பார்கள். திடீரெனப் பார்த்தால் அந்த கொள்கைக்கு நேர் எதிரான செயலில் ஈடுபட்டிருப்பார்கள்.

அரசியல்வாதிகளின் பொது இயல்பு என்று இதனைச் சொல்லலாம். ஆனால் இந்த தடமாற்றத்தை சுட்டிக்காட்டுவதும், தட்டிக்கேட்பதும் சாத்தியமா?
பெரும்பாலும் இது பொறுப்புள்ள பத்திரிகையாளர்களால் செய்யப்பட வேண்டிய பணி! அரசியல் தலைவர் பாதை மாறியதையும் தான் பேசி வந்ததற்கே எதிராக நடந்து கொள்வதையும் கண்காணித்து தோலுரித்துக் காட்டுவதை பத்திரிகையாளர்கள் செய்தாக வேண்டும்!

ஆனால் இன்று பத்திரிகைகளையும் முழுவதுமாக நம்ப முடிவதில்லை. இதற்கான காரணங்களை விட்டுத் தள்ளுங்கள், இந்தப்பணியை வாக்காளர்களே தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்ற தெம்பை அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் ஸ்பீச்சாலஜி(Speechology.org) தளம் ஏற்படுத்தியிருக்கிறது.

நம்மூரை விட அமெரிக்க அரசியல்தளம் வண்ணமயமானது. வெறும் மேடை பிரச்சாரம், பேரணி என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, நேரடி தொலைக்காட்சி விவாதம், வாக்காளர்களுடன் நேருக்கு நேர் என அமெரிக்க தேர்தல் அரங்கம் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உயிர்த்துடிப்புடன் கூடவே ஒரு வித பொழுதுபோக்கு அம்சத்தோடு அமைந்திருக்கிறது. அதிலும் இப்போது யூடியூப் யுகத்தில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வீடியோ கோப்புகளையும் பயன் படுத்த தொடங்கி யிருக்கின்றனர்.

விளைவு, எங்கு பார்த்தாலும் வேட்பாளர்களின் வீடியோ வேண்டுகோள்கள்தான்! யூடியூப்பில் பிரச்சாரத்திற்கு என்றே வேட்பாளர்கள் சார்பில் தனிப்பகுதிகள் தொடங்கப் பட்டு, மைஸ்பேஸ் போன்ற இளைஞர்கள் கூடும் தளங்களில் வேட்பாளர்கள் வீடியோ கோப்புகளில் வாக்காளர்களுக்கு வலை வீசுகின்றனர்.

ஆனால் இத்தனைக்கும் மத்தியில் வேட்பாளர்கள் தயங்காமல் பொய் பேசுகின்றனர். சொன்னதை அழகாக மாற்றிச்சொல்லி தப்பிச் செல்கின்றனர். விவாத மேடையிலோ நேர் காணல்களிலோ இவற்றை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டாலோ, மழுப்பலாக பதில் சொல்லி நழுவிச் சென்று விடுகின்றனர்.இந்தக்கதை இனி நடக்காது என்று சொல்வதுதான் ஸ்பீச்சாலஜி.

இந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் வீடியோ காட்சிகள் அனைத்தையும் இந்த தளத்தில் பார்க்கலாம். வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஆற்றிய உரைகள், தொலைக்காட்சி பேட்டி மற்றும் விவாதத்தில் தெரிவித்த கருத்துக்கள் என சகலமும், வீடியோ கோப்புகளாக இந்த தளத்தில் அரங்கேறி இருக்கும்.

இந்த வீடியோ காட்சிகளை வேட்பாளர்களின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் உண்டு. வீடியோ காட்சி தொடர்பான தலைப்புகளின் அடிப்படையிலும் தேடலாம். அதன்பிறகு அலசி ஆராய்ந்து, குற்றம் குறைகளை வாக்காளர்களோ சுட்டிக்காட்டலாம். அதாவது வேட்பாளர்கள் எப்படி முன்னுக்கு பின் முரணாக பேசுகின்றனர். எங்கெல்லாம் உண்மையை பேசாமல் அடக்கி வாசிக்கின்றனர். எந்த இடத்தில் எல்லாம் மனமறிய பொய் சொல்கின்றனர் போன்ற விஷயங்களை எல்லாம் வாக்காளர்கள் புட்டுப்புட்டு வைக்கப்படும்.

இதற்கு ஆதாரமாக அவர்களின் வீடியோ பேச்சை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் அவர்கள் சொன்ன கருத்துக்களை திரட்டி, அலசிப் பார்த்து தவறுகளை சுட்டிக்காட்டி, முகத்திரையை கிழிக்கலாம். இதைத்தான் இந்த தளம், வாக்காளர்களின் ஆய்வு அலசலில் உருவான அரசியல் விமர்சனம் என்று குறிப்பிடுகிறது.

இப்படி வாக்காளர்களோ விழிப் புணர்வோ விமர்சனப் பணியை செய்வதால், தேர்தல் களத்தில் இருப்பவர்கள் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப உண்மையை வளைப்பதோ, மறைப்பதோ சாத்தியமில்லை!

ஏற்கனவே ஃபேக்ட் செக் (fact check.org)என்னும் இணையதளம் இப்படி அமெரிக்க அரசியல்வாதி பேச்சுக்கள், உரையாடல்கள், பேட்டிகளை கண்காணித்து அவர்கள் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறது.ஸ்பீச்சாலஜி மொத்த பொறுப்பை வாக்காளர்களிடமே ஒப்படைத்தி ருக்கிறது. அதுவும் வீடியோ ஆயுதத்தோடு.

————–]]]

link;
http://speechology.org/