Tag Archives: நன்றி

என்டிடிவி ஹின்டு பேட்டி;வாழ்த்துக்க‌ளுக்கு நன்றி

என்டிடிவி ஹின்டுவில் நேற்று ஒலிபரப்பான தமிழ் வலைப்பதிவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் ஷிரடி சாய்தாசன்(சுதந்திர மென்பொருள்) ,வடிவேலன் (கவுத்தம் இன்போடெக்)மற்றும் என்னுடைய பேட்டி இடம்பெற்றதை பார்த்து பாரட்டிய இணையவாசிகள் மற்றும் சக பதிவர்கள் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.அதற்காக‌ என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.

பலர் பின்னூட்டங்கள் வழியே வாழ்த்து கூறி நெகிழ வைத்துள்ளனர்.தொலைபேசியில் வாழ்த்து கூறிய‌ ச‌க‌ ப‌திவ‌ர் சூர்ய‌க‌ண்ண‌னுக்கும் ந‌ன்றிகள் ப‌ல.

ர‌ஃபி என்னும் பதிவர் இந்த பேட்டிக்கான யூடியூப் இணைப்பை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவருக்கு பிரத்யேக நன்றி.

இந்த‌ பாராட்டுக்க‌ள் தான் என் போன்ற‌ ப‌திவ‌ர்க‌ளுக்கான‌ ஊக்கமாக‌ அமைந்து தொட‌ர்ந்து இய‌ங்க‌ வைக்கிற‌து.குறிப்பாக தொழில்நுட்ப பதிவாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டு ஊக்குவித்து வரும் சுதந்திர மென்பொருள் பதிவாளர் ஷிரடி சாய்தாசனுக்கு மனமார்ந்த ந‌ன்றி.

ந‌ன்றியுட‌ன் சிம்ம‌ன்.

—–

link;
http://www.raafi.com/2009/12/ndtv-hindu.html

இணைய‌வாசிக‌ளுக்கு ந‌ன்றி

thஇணைய உலகில் எதிர்கொள்ளும் அனுபவங்களையும்,அதன் போக்குகளையும் சுவையான தகவல்களையும் இந்த வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிறேன்.இவற்றை படித்துவிட்டு வாசகர்கள் பின்னூட்டங்களாக தெரிவிக்கும் கருத்துக்களே எனக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கின்றன.

இதுவரை பின்னுட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. தொட‌ர்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் சமீபத்தில் இந்த பதிவில் குறிப்பிடப்பட்ட இணையதளங்களின் உரிமையாளர்களே ந‌ன்றி தெரிவித்தும் பாராட்டியும் பின்னூட்டமிட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.

‘பாலிடேவுக்கு வாருங்கள்’ என்னும் பதிவை பார்த்துவிட்டு பாலிடே இணையதளம் சார்பிலும் ‘திருமண அழைப்பு தளம் பதிவுக்கு இன்வைட்டி தளம் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு வேலை வேட்டை இணையதளம் பதிவில் குறிப்பிடப்பிடட்டுள்ள ஜான் கோல்பே என்னும் அமெரிக்கர் இந்த‌ பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு தனது இணையதளத்திலும் இந்த‌ ப‌திவை இணைத்துள்ளார்.

த‌மிழில் என்னைப்ப‌ற்றி எழுதியிருக்கிறார்க‌ள் என நினைக்கிறேன் என்று அவ‌ர் குறிப்பிட்டு ம‌கிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அவ‌ருக்கும் ந‌ன்றி.

இந்த வலைப்ப‌திவுக்கு கிடைத்து வ‌ரும் இத்த‌கைய‌ ஆத‌ர‌வு மேலும் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட‌ ஊக்க‌ம‌ளிக்கிற‌து.ஆத‌ர‌வு அளிக்கும் இணைய‌வாசிக‌ளுக்கு ந‌ன்றி.

தமிழ்நெஞ்சத்திற்கு நன்றி

சகப்பதிவரான தமிழ்நெஞ்சம் ஒரு பின்னூட்டத்தில் வாக்குகளுக்கு பதில் வாக்களிப்பதில்லை என்றும் நாகரீகம் கருதிகூட தனது தளத்தின் பக்கம் வந்து பின்னூட்டம் இடுவதில்லை என குறைகூறியிருந்தார். நணபரின் பதிவில் இருந்த வேகம் அவரது உணர்வுகளை தெளிவாக புலப்படுத்துகிறது.

முதலில் தமிழ்நெஞ்சத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் என தரப்பு விளக்கத்தையும் அளிக்க கடமைபட்டுள்ளேன்.

வாக்களிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சரிதான். ஆனால் எனக்கு வாக்களித்தாலேயே ஒருவருக்கு பதில் வாக்கு அளிப்பது முறையாக இருக்காது என்றே பதில் வாக்களிப்பதை தவிர்த்து வருகிறேன். தவிர வாக்களிப்பார்கள் என்னும் எதிர்பார்ப்பில் வாக்களிப்பதையும் தவறாக கருதுகிறேன்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நல்லது என கருதும் பதிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை.

இது ஒரு புறம் இருக்க ,வாக்களிப்பதில்லை. பின்னுட்டம் இடுவது இல்லையே தவிர என் பதிவை தொடர்ந்து வாசிக்கும் சக பதிவர்களின் பதிவுகளை நானும் வாசித்தே வருகிறேன். ம‌ற்ற நல்ல பதிவுகளையும் வாசிக்கிறேன்.அந்த வகையில் நண்பர் தமிழ்நெஞ்சத்தின் பதிவுகளையும் அவப்போது படித்து வருகிறேன்.

இப்படிப்பட்ட நல்ல பதிவுகள் குறித்து தனியே எழுதவும் திட்டமிட்டுள்ளேன்.

எனவே நண்பர் தமிழ்நெஞ்சம் தொடர்ந்து என் பதிவுக்ளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

வேர்ட்பிரஸ்காரர்கள் தனித்தீவா என்பது எனக்கு தெரியாது.என்னைபொருத்தவரை ஒதுங்கியிருக்க விரும்பவில்லை. மற்றபடி அறிவிஜிவீ அடைமொழிக்கு நன்றி. நான் அறிவுஜீவீ இல்லாவிட்டாலும் கூட.