Tag Archives: பாலிவுட்

டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி

ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.ஷாரூக் டிவிட்டரை பயன்ப‌டுத்தும் விதம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் அவ‌ருக்கு போட்டியும் உருவாகியுள்ளது.
போட்டி என்றால் ரசிகர் ஒருவர் ஷாரூக் பெயரிலேயே போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி ஷாரூக் போலவே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த போலி ஷாரூக்கிற்கும் பின்தொடர்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பக்கத்தை அமைக்கலாம்.பெரும்பாலும் பலர் தங்கள் பெயரில் டிவிட்டர் பக்கம் அமைத்து தங்கள் சுயபுராண‌த்தை பதிவு செய்வது உண்டு.ஒரு சில‌ர் ம‌ட்டும் விவ‌கார‌மாக‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை துவ‌க்கி விளையாடுவ‌துண்டு.சில‌ நேர‌ங்க‌ளில் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ந‌ட்ச‌த்திர‌த்தின் புக‌ழ்பாட இவ்வாறு செய்வ‌துண்டு.சில‌ வேண்டுமென்றே விவ‌கார‌மாக‌ இத‌னை செய்வ‌தும் உண்டு.
க‌வ‌ன‌த்தை ஈர்ப்ப‌து உட்ப‌ட‌ இத‌ற்கு ப‌ல‌வித‌ நோக்க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.இத‌னை க‌ட்டுப்ப‌டுத்த‌வே டிவிட்ட‌ர் பிர‌ப‌ல‌ங்க‌ளைப்பொருத்த‌வ‌ரை அவ்ர்க‌ளுக்கான‌ அதிகார‌பூர்வ‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்த‌ உறுதிசெய்த் கொள்ளும் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தின் வ‌ல‌து புற‌த்தில் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ம் என்ற‌ வாச‌க‌ம் இட‌ம்பெற்றிருக்கும்.
அக்மார்க் முத்திரையைப்போல‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ பிர‌ப‌ல‌த்திற்கு உரிய‌ ப‌க்க‌ம் இது என‌ உண‌ர்த்தும் சான்றித‌ழ் இது,

ஆனால் இந்த‌ க‌ட்டுப்ப‌ட்டையும் மீறி போலி ப‌க்க‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.ஷாரூக் விஷ‌ய‌த்தில் அவ‌ர் ‘iamsrk’,என்ற‌ பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை அமைத்துள்ளார‌ என்றால் அவ‌ர‌து போலி ‘imsrk. என்னும் பெய‌ரில் டிவிட்ட‌ர் செய்து வ‌ருகிறார்.

இந்த‌ செய‌லை எதிர்த்து ஷாரூக் டிவிட்ட‌ர் நிர‌வாக‌த்திட‌ம் முறையீடு செய்து நிவார‌ண‌ம் தேட‌லாம். அவ்வாறு செய்கிறாரா என்று தெரிய‌வில்லை.

————

இது போலி ஷாரூக்;http://twitter.com/imsrk

டிவிட்டரில் ஷாரூக் கான்

பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில் முதல் நாளிலேயே  10 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதையும் தான் குறிப்பிடுகிறன்.

திரைப்பட நட்சத்திரங்கள் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டரை விட சிற‌ந்த மற்றும் எளிமையான வழி கிடையாது.பல பிரபலங்கள் இதனை உணர்ந்து டிவிட்டர் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிவிட்டர் செய்யும் பாலிவுட் நட்ச‌த்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே வரும் நிலையில் பாலிவுட் மன்னாக கருதப்படும் கான்(ஷாருக்கான்)இப்போது டிவிட்டரில் தனக்கான பக்கத்தை துவக்கியிருக்கிறார்.

ஷாரூக் டிவிட்ட‌ருக்கு வ‌ந்த‌த‌ன் பின்னே சுவார‌ஸ்ய‌மான‌ க‌தையும் இருக்கிற‌து.ஷாரூக்கை வைத்து ப‌ல‌ வெற்றிப்ப‌ட‌ங்க‌ளை கொடுத்துள்ள‌ இய‌க்குன‌ர் க‌ர‌ண் ஜோக‌ர் தான் அவ‌ரை டிவிட்ட‌ர் ப‌க்கம் இழுத்து வ‌ந்துள்ளார்.டிவிட்ட‌ருக்கான் விள‌ம்ப‌ர‌ தூத‌ரைப்போல‌ செய‌ல்ப‌ட்டு ஷாரூக்கை டிவிட்ட‌ர் செய்ய‌ ச‌ம்ம‌திக்க‌ வைத்த‌தாக‌ ஜோக‌ர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாரூக்குட‌ன் த‌ன‌க்கிருக்கும் நெருக்க‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி 3 மாத‌த்திற்கும் மேல் டிவிட்ட‌ரின் அருமை பெருமைக‌ளை அவ‌ரிட‌ம் எடுத்துச்சொல்லி ஜோக‌ர் ஷாரூக்கை ஒருவ‌ழியாக‌ டிவிட்ட‌ர் செய்ய‌ ச‌ம்ம‌திக்க‌ வைத்துள்ளார்.

ஷாரூக் டிவிட்ட‌ர் செய்ய துவ‌ங்க‌ வேண்டும் என்ப‌தில் ஜோக‌ருக்கு ஆர்வ‌ம் ஏற்ப‌ட‌ முக்கிய‌ காரணம் இருக்கிறது. ஜோக‌ரின் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை ப‌டிக்க‌ வ‌ரும் ர‌சிக‌ர்க‌ளில் பெரும்ப‌லானோர் ஷாரூக் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளையே கேட்டு வ‌ந்துள்ள‌னர் .மேலும் பலர் ஷாருக்கிடம் சொல்ல நினைக்கும் விஷயம் அல்லது கேட்க நினைப்பவற்றை ஜோகரிடம் கேட்டுள்ளனர.என‌வே ஷாருக்கே டிவிட்ட‌ர் செய்தால் ர‌சிக‌ர்க‌ளின் த‌க‌வ‌ல் ஏக்க‌த்தை போக்க‌ முடியும் என்று ஜோக‌ர் நினைத்திருக்கிறார்.

அதோடு ஏற்க‌ன‌வே டிவிட்ட‌ரின் ஆற்ற‌லை உண‌ர்ந்த‌வ‌ர் என்ற‌ முறையில் ர‌சிகர்க‌ளோடு நேர‌டியாக‌ தொட‌ர்பு கொள்ள ஷாரூக் டிவிட்ட‌ர் செய்வ‌து அவ‌சிய‌ம் என்றும் நினைத்துள்ளார்.

உங்க‌ள் மீது அபிமான‌ம் வைத்திருக்கும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கானோர் டிவிட்ட‌ரில் உங்க‌ளுக்காக‌ ஆவ‌லோடு காத்திருக்கின்ற‌ன‌ர் என்று சொல்லி ஒரு வ‌ழியாக‌ ஷாரூக்கை ச‌ம்ம‌திக்க‌வும் வைத்து விட்டார்.

ஷாரூக்கும் த‌ன‌து முத‌ல் ப‌திவிலேயே இத‌னை குறிப்பிட்டு ஜோக‌ரால் தான் டிவிட்ட‌ரில் இணைந்திருப்ப‌தாக‌ தெரிவித்துள்ளார்.அடிப்ப‌டையில் கூச்ச‌ சுபாவ‌ம் கொண்ட‌ நான் இய‌க்குன‌ரும் ந‌ண்ப‌ருமான‌
ஜோக‌ரின் வ‌ற்புறுத்த‌லால் டிவிட்ட‌ர் மூல‌ம் க‌ருத்துக்க‌ளை ப‌கிர‌ முன்வ‌ந்திருப்ப‌தாக‌ ஷாருக் குறிப்பிட்டிருந்தார்.

ஷாரூக் டிவிட்ட‌ரில் நுழைந்த‌துமே இர‌ண்டு விஷ‌ய‌ங‌க‌ள் ந‌ட‌ந்த‌ன‌. ஏற்க‌ன‌வே டிவிட்ட‌ரில் இருக்கும் பாலிவுட் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் அபிஷேக் ப‌ச்ச‌ன்,விவேக் ஒபிராய் ,பாரான் அக்த‌ர் போன்ற‌வ‌ர்க‌ள் அவ‌ரை டிவிட்ட‌ருக்கு வ‌ர‌வேற்ற‌ன‌ர்.
அதோடு ஷாருக் ர‌சிக‌ர்க‌ள் அள‌வில்லா ம‌கிழ்ச்சியோடு அவ‌ர‌து டிவிட்ட‌ர் பக்க‌த்தில் பின்தொட‌ர்பாள‌ர்க‌ளாக‌ இணைந்த‌ன‌ர். முத‌ல் நாள‌ன்றே  10 ஆயிரம் பேர் ஷாருக் ப‌க்க‌த்தில் சேர்ந்துவிட்ட‌ன‌ர்.
இதே வேக‌த்தில் தொட‌ர்ந்தால் டிவிட்ட‌ரில் உள்ள‌ ம‌ற்ற‌ பாலிவுட் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை அவ‌ர் பின்னுக்குத்த‌ள்ளிவிடும் வாய்ப்பு உள்ள‌து.

ஷாரூகை பின்தொட‌ர‌ விரும்புகிற‌வ்ர்க‌ள் க‌வ‌ன‌த்திற்கு ஐய‌ம் எஸ் ஆர் கே என்னும் பெய‌ரில் அவ‌ர் டிவிட்ட‌ர் செய்கிறார்.

———–

http://twitter.com/iamsrk

டிவிட்டர் மகாராணி பிரியங்கா

பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகை யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் டிவிட்டரை பொருத்தவரை பிரியங்கா சோப்ரா தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.அதாவ‌து டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தும் பாலிவுட் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் வ‌ரிசையில் பிரிய‌ங்கா முத‌லிட‌த்தை பிடித்திருக்கிறார்.

குறும் வ‌லைப்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை ர‌சிக‌ர்க‌ளோடு நேர‌டியாக‌ தொட‌ர்பு கொள்ளும் வ‌ழியாக‌ க‌ருதி பிரப‌ல‌ங்க‌ள் அத‌னை ஆர்வ‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.ஹாலிவுட் பிரப‌ல‌ங்க‌ல் அள‌வுக்கு இல்லாவிட்டாலும் பாலிவுட் ந‌டிகைக‌ளும் டிவிட்ட‌ரை ஆர்வ‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

ம‌ல்லிகா ஷெராவ‌த்,சோன‌ம் க‌பூர்,பிரித்தி ஜின்தா,லாரா த‌த்தா என‌ நீளும் இந்த‌ ப‌ட்டிய‌லில் பிரிய‌ங்கா சோப்ராவே முத‌லிட‌த்தில் இருக்கிறார்.ச‌மீப‌த்தில் டிவிட்ட‌ரில் ஒரு மைல் க‌ல்லையும் அவ‌ர் எட்டிப்பிடித்திருக்கிறார்.

டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ப‌டிக்க‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளாக‌ சேர்ந்து கொள்ளும் வ‌ச‌தி இருப்ப‌தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ல‌ட்ச‌க்க‌ன‌க்கில் பிதொட‌ர்ப‌வ‌ர்க‌ளை பெற்றுள்ள‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் எல்லாம் இருக்கின்ற‌ன‌ர்.இந்தியாவைப்பொருத்த‌வ‌ரை இப்போது தான் ந‌ட்ச‌த்திர‌ம் ஒருவ‌ர் ஒரு ல‌ட்ச‌ம் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை பெற்றுள்ளார்.பிரிய‌ங்கா தான் அந்த‌ ந‌ட்ச‌த்திர‌ம்.

அவ‌ருக்கு அடுத்த‌ இட‌த்தில் உள்ள‌ சோன‌ம் க‌பூருக்கு 34000 பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளும் க‌வ‌ர்ச்சி புய‌ல் ம‌ல்லிகாவிற்கு 28000 பிதொடர்ப‌வ‌ர்க‌ளும் ம‌ட்டுமே உள்ள‌ன‌ர் என்னும் போது ம‌ல்லிகாவுக்கு கிடைத்துள்ள‌ இந்த‌ ஆத‌ர‌வு சிற‌ப்பான‌து என்ப‌து புரியும்.

ந‌டிகைக‌ளில் முத‌லில் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்த‌ துவ‌ங்கிய‌வ‌ர் பிரிய‌ங்கா என்னும் போது இந்த‌ மைல்க‌ல் பொருத்த‌மான‌தே.

இந்திய‌ அள‌வில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் ச‌ஷி த‌ரூர் 5 ல‌ட்ச‌ம் பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளோடு முத‌லிட‌த்தில் உள்ளார்.பிரிய‌ங்கா அவ‌ருக்கு அடுத்த‌ இட‌த்தில் உள்ளார்.

ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளின் டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாடு ப‌ற்றி ஒரு உப‌ரி செய்தி.ச‌மீப‌த்தில் ஐஸ்வர்யா ராயும் டிவிட்ட‌ரில் சேர்ந்து கொண்டார்.ஆனால் அவ‌ர் த‌ன‌க்கான‌ த‌னி டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை உருவாக்கி கொள்ளாம‌ல் த‌ன‌து க‌ண‌வ‌ர் அபிஷேக்கின் ப‌க்க‌த்திலிருந்தே டிவிட்ட‌ர் செய்தார்.

த‌ன‌க்கு கிடைத்த‌ ஒரு நால் ஓய்வை க‌ணவ‌ர்ரோடு க‌ழிப்ப‌த‌ற்காக‌ கோவா செல்ல‌ப்போவ‌தாக‌ ம‌கிழ்ச்சியோடு அந்த‌ ப‌திவில் ஐஸ் குறிப்பிட்டிருந்தார்.

—–

link;
http://twitter.com/priyankachopra

வாருங்கள் வருங்கால இயக்குனர்களே

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.
அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் வாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடும் புதிய இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
.
இந்த தளத்தின் மூலம் அவர்கள் பாலிவுட்டின் கதவை எளிதாக தட்டலாம். திறமை இருந்தால் புகழ் ஏணியில் ஏறியும் சென்று விடலாம்.   இதற்கு முன்னர் இருந்தது போல திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டம் வேண்டும். இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அப்போதுதான் திரைப்படத் துறையில் முத்திரைப்பதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

நல்லகதையும், அதனை இயக்கக்கூடிய திறமையும் இருந்தால் போதும் வாய்ப்பு தேடி வரும். அதற்கான வழியைத்தான் இந்த இணைய தளம் காட்டுகிறது. ஏ டூ இசட் என்னும் நிறுவனம், 1 டேக் மீடியா என்னும் பெயரில் இந்த இணைய தளத்தை அமைத்துள்ளது.   புதிய படைப்பாளிகளுக்கு பாலிவுட்டோடு தொடர்பு ஏற்படுத்தி தரும் உத்தேசத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்  மற்றும் இளம் படைப்பாளிகளுக்கான  இணைப்பு பாலம் என்றும் இந்ததளத்தை கூறலாம்.  அதற்கேற்ற வகையில் இந்த தளம் இளம்  படைப்பாளிகள் தங்களது  திறமையை அரங்கேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

வலைப்பின்னல் தளங்களில், தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, தங்களது விருப்பு, வெறுப்புகளை குறிப்பிடுவது போல படைப்பாளிகள் இந்த தளத்திலும் தங்களுக்கான இணைய பக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அதில் தங்கள் புகைப்படத்தையும் இடம் பெற வைத்து கைவசம் உள்ள, கதை, திரைக்கதை போன்றவற்றையும் அரங்கேற்றலாம்.

நேரடியாக இயக்குனர்களை சந்தித்து கதை சொல்ல முடியவில்லை என்று வருந்தி கொண்டிருப்பவர்கள் அந்த கவலை இல்லாமல் இந்த தளத்தில் தங்கள் வசம் உள்ள கதையையும், திரைக்கதையையும் இடம் பெற செய்து விடலாம்.

இப்படி இந்த தளத்தில் கதை சொல்வதன் மூலம் என்ன பயன் என்று கேட்கலாம்?
படைப்பாளிகள் தங்களது திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவது இந்த தளத்தின் ஒரு பகுதி. இந்த தளத்திற்கு இன்னொரு முக்கிய  பணியும் இருக்கிறது. 

படைப்பாளிகளை அழைப்பது போலவே, பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும்  இந்த தளம் அழைக்கிறது.  புதுமையான கதைக்கான தேடல் எப்போதுமே நல்ல தயாரிப்பாள ருக்கும், சிறந்த இயக்குனருக்கும் இருக்கத்தானே செய்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தளம் ஒரு பொக்கிஷமாக இருக்காதா?
 முன்னணி இயக்குனர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து, இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ள கதை, திரைக்கதைகளை பரிசீலித்து பார்த்து தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் புதிய திறமையை அவர்களால்  எளிதாக  இனம் கண்டுகொள்ள முடியும்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள கதைகளில் திறமையின் பிரகாசத்தை கண்டுபிடிக்க முடிந்தால் அந்த படைப்பாளியை தொடர்பு கொண்டு,  அவரை ஊக்குவிக்கலாம்.  இப்படியாக இளம் படைப்பாளி களுக்கு பாலிவுட்டின் பிரபலங்களின்  ஆதரவை பெற்று தரும் நோக்கத்தோடு இந்த தளம் செயல்பட்டு வருகிறது.

சொல்லப்போனால் இந்தி திரைப்பட உலகுக்கான வேலை வாய்ப்பு மையம் போல இந்த தளம் செயல்படும் என்று  இதனை நிறுவியுள்ள தேஜாஷா கூறுகிறார். அறிமுகப்படைப்பாளிகள், இடைத் தரகர்களின் கையில் சிக்கி  அவதிப்பட வேண்டிய நிலையை இந்த தளம் இல்லாமல் செய்து விடும் என்று அவர் நம்பிக்கையோடு செய்கிறார்.

அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த தளம் நல்லவரவேற்பை பெற்றிருக்கிறது.
 மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் இந்த தளத்தை பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் போது இதன் செல்வாக்கும் உயரும்.

எப்படியும் இளம் படைப்பாளிகள் இந்ததளத்தை விரும்பி பயன்படுத்துவார்கள்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாலிவுட் இயக்குனர்கள் இதனை  எந்தஅளவுக்கு பயன்படுத்த தொடங்குகின்றனரோ அந்த அளவுக்கு இதன் வெற்றி அமையும்.

இயக்குனர்களையும், தயாரிப்பாளர் களையும் தேடி வர செய்வது கூட படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது.அவர்கள் திறமையை  வெளிப்படுத்துவதற்கான களம் அமைத்து தரப்பட்டுள்ளது.  அதனை பயன்படுத்தி கொண்டு பிரகாசிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு