Tag Archives: பொருளாதார‌ம்

கூகுல் ஜோசியம்

laptopகூகுலுக்கு தெரியாத விஷயம் உலகத்தில் இருக்கிறதா என்ன? எந்த கேள்விக்கு பதில் வேண்டும் என்றாலும் கூகுலில் தேடலாம் என்பது தெரிந்த விஷயம் தான்.
அப்ப‌டியே க‌ட‌ந்த‌ ஆண்டு நொடித்துப்போன‌ உல‌க‌ பொருளாதார‌ம் இப்போது எப்ப‌டி இருக்கிற‌து என்னும் கேள்விக்கு ப‌தில் தேவை என்றாலும் கூகுலிட‌மே கேட்க‌லாம் தெரியுமா?

இந்த‌ கேள்விக்கான கூகுலின் ப‌தில் ம‌கிழ்ச்சியை த‌ர‌க்கூடிய‌து.பொருளாதார‌ சீர்குலைவை அடுத்து உண்டான‌ தேக்க‌நிலை சீராக‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்ப‌தே அந்த ப‌தில்.

கூகுல் என்ன பொருளாதார நிபுணரா?அதனால் எப்படி பொருளாதார நிலை குறித்த் பதில சொல்ல முடியும்?

எல்லாம் ஒரு கணிப்பு தான். தேடப்படுவதை வைத்து சொல்லப்படும் கணிப்பு.

கூகுல் முன்ன‌ணி தேடிய‌ந்திர‌மாக‌ இருப்ப‌தும் ப‌ல‌ரும் தேட‌ல் என்றால் கூகுலையே நினைப்ப‌தும் நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல் தேவைப்ப‌டும் போது பெரும்பால‌னோர் நாடுவது கூகுலைதான்.அது ம‌ட்டுமல்ல‌ முக்கிய‌ நிக‌ழ்வுக‌ள் உல‌கை உலுக்கும் போது அவை தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட்ட‌வும் கூகுலை தான் ப‌ய‌ன்ப‌டுத்துகிண்ற‌ன‌ர்.

உதார‌ண‌த்திற்கு பாப் இசை ம‌ன்ன‌ன் மைக்கேல் ஜாக்ஸ‌ன் ம‌ர‌ன‌ம‌டைந்த‌ போது ஜாக்ஸ‌ன் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ள் கூகுலில் அதிக‌ம் தேட‌ப்ப‌ட்ட‌ன‌. ப‌ன்றிக்காய்ச்சல் நோய் ப‌ர‌வ‌த்துவ‌ங்கிய‌ போது இந்த‌ நோய் ப‌ற்றி விடாம‌ல் தேடிய‌து இண்டெர்நெட் ச‌மூக‌ம்.

கூகுலில் அதிக‌ம் தேட‌ப்படும் ப‌த‌ங்க‌ளை வைத்தே பிர‌ப‌லமாக‌ திக‌ழ்வ‌து யார் என்று ஊகித்துவிட‌ முடியும்.அதே போல‌ உல‌கில் நில‌வும் போக்குக‌ளையும் கூகுலில் தேட‌ப்ப‌டும் ப‌த‌ங்க‌ள் மூல‌மே ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியும்.

இதே அடிப்படையில் தான் த‌ற்போது பொருளாதார‌ தேக்க‌த்தின் பாதிப்பு உல‌கிலும் ,குறிப்பாக‌ அமெரிக்காவிலும் குறைந்திருப்ப‌தாக‌ க‌ணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

பொருளாதார‌ சீர்குலைவின் பாதிப்பு உச்ச‌த்தில் இருந்த‌போது எங்கு பார்த்தாலும் ஆட்குறைப்பு ப‌ற்றியும் நிறுவ‌ன‌ங்க‌ள் இழுத்து மூட‌ப்ப‌டுவ‌து ப‌ற்றியும் தான் பேச்சாக‌ இருந்த‌து.அப்போது வேலை வாய்ப்பு ப‌ற்றியே கூகுலில் அதிக‌ம் தேட‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இப்போது கூகுலில் தேட‌ப்ப‌டும் சொற்க‌ளை பார்த்தால் வேலை வாய்ப்பு, ம‌ற்றும் அர‌சு உத‌வுக்கான‌ தேட‌ல் குறைந்திருக்கிற‌தாம்.அதே நேர‌த்தில் வீடு, ம‌ற்றும் வீட்டுக்க‌ட‌ன் தொட‌ர்பான‌ தேட‌ல் ஒர‌ல‌வுக்கு அதிக‌ரித்திருக்கிற‌தாம்.

இவ‌ற்றை க‌ருத்தில் கொண்டு பார்த்தால் பொருளாதார‌ தேக்க‌நிலையிலிருந்து அமெரிக்கா மிள‌த்துவ‌ங்கியிருக்கிற‌து என்றுதானே பொருள்.கூகுலின் முத‌ன்மை பொருளாதார‌ நிபுண‌ரான‌ ஹால் வ‌ரியான் இப்ப‌டி தான் ந‌ம்பிக்கையோடு கூறுகிறார்.

கூகுல் தேட‌ல் முடிவுக‌ள் தொற்று நோய் ப‌ர‌வுவ‌து தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல்க‌ளையும் தெரிந்து கொள்ள‌ உதுவுகிற‌து என்ப‌து கூடுத‌லான‌ த‌க‌வ‌ல்.

யூடியூப் வாங்கித்தந்த வேலை

boyuஅமெரிக்க வாலிபர் ஒருவர் யூடியூப் மூலம் தனது தந்தைக்கு வேலை வாங்கித்த்ந்திருக்கிறார் தெரியுமா?

யூடியூப்பை பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்பதற்கான உதாரணம் இது.

அந்த வாலிபரின் பெயர் பென் கல்லட்.அவருக்கு 14 வயது தான் ஆகிறது.டம்பாவில் வசிக்கும் அவர் மற்ற பிள்ளைகளைப்போலவே கம்ப்யூட்டரை அதிகம் பயன்படுத்துபவர்.யூடியூப் ம்ற்றும் மைஸ்பேஸ் தளங்களிலும் பரிட்சயம் மிக்கவர்.

கல்லட்டிற்கு தனது த‌ந்தை மீது பாசம் அதிகம்.மதிப்பும் அதிகம்.

அமெரிக்க பொருளாதார‌ம் சரியில்லை அல்லவா ,அதனால் பல‌ர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். கல்லட்டின் தந்தைகும் இதே நிலை தான் ஏற்பட்டது.டம்பா பே லைட்டிங் என்னும் நிறுவனத்தில் அவர் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக பணியாற்றிவந்த அவ‌ர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

ஒருவிதத்தில் கல்லட் தந்தைக்கும் இந்நிலை ஏற்படலாம் என அறிந்திருந்தார். சில நாட்கள் முன் அவர் காரில் சென்றுகொண்டிருந்த போது ,வேலை இழந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் தனக்கு வேலை தேவை என்னும் அட்டையை வைத்திரூருப்பதை பார்த்தார்.

அப்போதே தந்தைக்கும் இந்நிலை ஏற்படுமோ என்ற அச்சம் அவருக்கு உண்டானது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் த‌ந்தைக்கு வேலை தேட என்று ஒரு வீடியோ படத்தை அவர் தயார் செய்தார். இதனிடையே தந்தை வேலையியை விட்டு நிக்கப்படவே , தான் தயார் செய்திருந்த வீடியோ கோப்பை யூடியூப்பில் இடம் பெற வைத்தார்.
3 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில் எதையுமே பேசவில்லை.

முதல் காட்டியில் தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.கையில் ஒரு அட்டையில் தனது பெயரை எழுது வைத்துக்கொண்டவர், இது மார்க் பர்றிய கதை ,மார்க் எனக்கு டிரம்ஸ் வாங்கித்தந்தார் என்னும் வாசகத்தையும் வைத்திருந்தார். அடுத்த காட்சியில் மார்க் கடினமாக் உழைப்பார்.அதாவது வேலை இழக்கும் வரை என கூறிப்பிட்டிருந்தார்.

அதற்கு அடுத காட்சி ,அவர் மிகவும் புத்திசாலி, கடின உழைப்பாளி,எல்லவற்றுக்கும் மேல் என் தந்தை என குறிப்பிட்டிருந்தார்.

அவ்வளவு தான் .

என் தந்தைக்கு வேலை வேண்டும் என இதன் மூலம் அவர் சொல்லாமல் சொல்லியிருந்தார்.

மகனின் பாசத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்திய இந்த கோப்பு
அனைவரின் கவனத்தியும் ஈர்த்தது.முதல் நாளன்றே ஆயிரம் பேரால் பார்க்கப்பட்டதோடு .பலர் இமெயில் மூலம் ஆறுதலும் கூறியிருந்தனர். அதைவிட முக்கியமாக வேலை வாய்ப்பு ப்ற்றியும் தகவல் தெரிவித்தனர்.

யூடியூப் மூலம் மகன் வேலை வாங்கித்தந்தது மார்க் மற்றும் அவர் மனைவியை நெகிழ வைத்துள்ளது.

————-

link;
http://deadspin.com/5170771/florida-kid-uses-youtube-for-good-not-evil?skyline=true&s=i