Tag Archives: ரோபோ

வணக்கம் ரோபோ டீச்சர்..

1-robotபாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது.

எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம்.

இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி.

ரோபோ ஆய்வில் நிபுணரான கோபயாஷி வியப்பு,பயம்,கோபம்,மகிழ்ச்சி,வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.ஆகையால் ஏற்கனவே அறிமுகமான ஹோண்டாவின் அசிமோ ரோபோக்களை எல்லாம் விட இவர் சிற‌ந்தவர்.உணர்வுள்ள ரோபோவாயிற்றே.

கொழு கொழு தோற்றம் கொண்ட இளம் பெண்ணைப்போல இந்த ரோபோ ரப்பராலான முகத்தை கொண்டவர். இவருக்குள் மறைந்திருக்கும் நுண்ணிய மோட்டார்களில் தான் ரோபோவின் ஆறு குணங்களும் அடங்கியிருக்கிறது.

சமிபத்தில் டோக்கியோ பள்ளியில் சாயா மிஸ் அறிமுகமான போது மாணவர்க‌ள் அவரது வகுப்பை மிகவும் ரசித்து மகிழ்ந்திருக்கின்றனர்.
சாயா மற்ற மிஸ்களைப்போலவே அவ‌ர்களின் பெயரை கூப்பிட்டு வருகையை குறித்துக்கொண்டிருக்கிறார்.

மாணவர்கள் கூச்சல் போட்டபோது கோபத்தோடு வாயை மூடுங்கள் என்று அதட்டியிருக்கிறார்.

மொத்ததில் மாணவர்களுக்கு இந்த டீச்சரை முகவும் பிடித்துவிட்டது.

சாயா தொடர்ந்து பாடம் நடத்துவதற்கான வாய்ப்பு எப்படி என்று தெரியவில்லை. தற்போதுள்ள ரோபோக்களோடு ஒப்பிடும்போது சாயா மேம்பட்ட‌வர் என்றாலும் ஒரு நர்சரி ஆசிரியரோடு இவரை ஒப்பிட முடியாது. இவ்வளவு ஏன் எல்.கே.கி படிக்கும் குழ்ந்தையோடு கூட ஒப்பிடமுடியாது. அதிக பட்சமாக டீச்சரைப்போல நடிக்க மட்டுமே சாயாவால் முடியும். எதையும் கற்றுத்தர முடியாது.

ஆனால் எதிர்காலத்தில் சாத்தியமாகலாம். அந்த உத்தேசத்தோடு தான் சாயா உருவக்கப்பட்டிருக்கிறார்.

எல்லா ரோபோக்களுமே சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளைகள் தான். மனிதர்களைப்போலவே சிந்திக்கக்கூடிய ரோபோ தொலைதூர கணவு என்றாலும்
அந்த திசையில் விஞ்ஞானம் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருகிறது.

இந்த முயற்சியில் ஜப்பான் முன்ன்னியில் இருக்கிறது. அங்கு வயதானவர்களை கவனித்துக்கொள்ள ரோபோ பயன்ப‌டுத்த்ப்பட்டு வருகிறது.தொழிற்சாலைகளிலும் பெரும்ளவில் பயன்படுகிறது.

2015 ல் எல்லா ஜப்பானிய இல்லங்களிலும் ரோபோ இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

நிற்க தற்போது ஆசிரியர் அவதார்ம் எடுத்திருக்கும் சாயா இதற்கு முன் வரேவேற்பாளாராக இருந்தவர். ஆம் 15 ஆண்டு உழைப்பிற்கு பிறகு சாரா வரவேற்பறையாளினியாக பேரசிரியர் கோபயாஷியால் உருவாக்கப்பட்டாள்.

வரேவேற்பரைகளில் கேட்கப்படக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டவர் இப்போது ஆசிரியாகியிருக்கிறார்.

———–

link;
http://www.youtube.com/watch?v=mG13EZ4Xy9c

மரங்கொத்தி பறவையைத் தேடி…

birdஅந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன்றும் தெரியாத வெற்றுப் பார்வையல்ல. காவல் நாயை போன்ற விழிப்புணர்வோடு அது வானத்தை கண்காணித்தபடி, காட்சிகளை விழுங்கி கொண்டி ருக்கிறது.
.
அந்த காட்சிகளில் என்றேனும் ஒருநாள் ஒரு அதிசயம் பிடிபட லாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறை வேறுமா? என்பது தெரியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சலாம். இருந்தாலும், மாபெரும் தேடல் முயற்சி அது. மனிதர்களால் முடியாத முயற்சி. அதனால்தான், அந்த கர்மயோகியை உருவாக்கி காட்டின் நடுவே உட்கார வைத்திருக்கின்றனராம்.

அதுவும் ஒரு விஸ்வா சமான வேலைக் காரனை போல. என் கடன் கிளிக் செய்து கிடப்பதே என்று விண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் கிளிக் செய்து கொண்டே இருக்கிறது.

அந்த இடம் அமெரிக்காவின் அர்கான் சாஸ் மாகாணத்தில் உள்ள தேசிய வன விலங்கு சரணாலயம். அதில் பணியில் ஈடுபட்டிருக்கும் கர்மயோகி, தானியங்கி பறவை பார்வையாளர். அதாவது ரோபோ பேர்ட் வாட்சர்.

பறவை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் துறை பறவையியல், அதாவது ஆர்னிதோலாஜி என்று குறிப்பிடப் படுகிறது. பறவைகளை ஆய்வு செய்யும் நிபுணர் களுக்கு ஆர்னிதோலாஜிஸ்ட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதையே தொழிலாக அல்லாமல் பொழுதுபோக்காக மிகுந்த ஈடு பாட்டோடு செய்து வருபவர்களும் இருக்கிறார்கள்.
பேர்ட் வாட்சர், அதாவது பறவை பார்வை யாளர்கள் என்று அவர்கள் பிரபலமாக குறிப்பிடப்படுகின்றனர்.

இவர்கள் பறவைகளையே உலகமாக நினைத்து கொண்டிருக்கும் அற்புதமான மனிதர்கள். அன்புக் குரியவரை எதிர் பார்த்து நிற்பதுபோல புதிய பறவைகளை பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருந்து அவற்றை கண்டதும் ஒரு மாணவனின் உற்சாகத்தோடு குறிப்புகள் எடுப்பதே இவர்களின் வழக்கம்.

புதிய அல்லது அரிய பறவைகளை பார்க்க முடிவதை விட பறவை பார்வையாளர் களுக்கு சந்தோஷம் தரக் கூடிய விஷயம் வேறு எதுவுமில்லை. எண்ணற்ற பறவைகளை பார்த்து ரசிக்க முடிந்தாலும் அரிய ரகமாக கருதப்பட்ட மரங்கொத்தி பறவையை பார்க்க முடிய வில்லை எனும் ஏக்கம் இவர்களில் பலருக்கு உண்டு.

சாதாரண மரங்கொத்தி அல்ல, தங்க கழுத்து கருடனை போல தந்தத்தின் நிறம் கலந்த மரங்கொத்தி பறவை.

கியூபாவிலும், அமெரிக்காவின் தெற்கு பகுதியிலும் ஒரு காலத்தில் சுற்றித் திரிந்த இந்த அபூர்வ மரங்கொத்தி காடுகள் அழிக் கப்பட்ட தால் காணாமல் போய் விட்டன.
அதன் பிறகு அழிந்து போன பறவையின மாக கருதப்பட்ட இவை நடுவில் ஒன்றிரு முறை பறவையியல் நிபுணர்கள் சிலரது கண்ணில் பட்டதாக கூறப் படுகிறது.

அதன் விளைவாக அந்த பறவை இன்றும் கூட எங்கேனும் மறைந்திருக் கலாம் எனும் நம்பிக்கையில் அதனை கண்டுபிடித்து, அந்த இனம் அழிந்து போகால் காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. எனவேதான், இவை கண்ணில் பட்டதாக கூறப்படும் அர்கான் சாஸ் தேசிய வன விலங்கு சரணாலயத்தில் மாபெரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

மிசிசிபி ஆற்றங்கரையில் படுகையில் அமைந்திருக்கும் இந்த செழிப்பான வனப்பகுதியில், காணாமல் போய் விட்ட ஒரு பறவையை தேடுவது எளிதான செயல் அல்ல. பறவை எங்கிருக்கிறது என்று தெரியாது. எப்போது வரும் என்று தெரியாது.

இந்நிலையில், கொடிய வன விலங்கு களும், கண்ணுக்கு தெரியாத ஆபத்துக்க ளும் சூழ்ந்திருக்கும் இடத்தில், மனிதர்கள் பொழு தெல்லாம் அமர்ந்து பறவை வருமா என்று பார்த்திருக்க முடியாது. அப்படியே யாராவது ஒருவர் துணிவுடன் ஈடுபட்டா லும், மனித நடமாட்டம் பறவையை விலக செய்து விடலாம்.

இந்த காரணங்களால்தான், மரங் கொத்தி பறவையை தேடுவதற்காக என்று ஒரு தானியங்கி பறவை பார்வையாளரை உருவாக்கி இருக்கின்றனர்.

மரங்கொத்தி பறவையின் உலகை விட்டே அழிந்து விட்டதாக கருதப்பட்ட அரிய ரக மரங்ககொத்தி பறவையை இன்ன மும் இருப்பதாக சொல்லப்படு வதை உறுதி செய்து கொள்வ தற்காக காட்டின் நடுவே அவற் றின் இருப்பை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு ரோபோ பேர்ட் வாட்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ரோபோ பேர்ட் வாட்சர், அடிப்படையில் பார்த்தால் டிஜிட் டல் கேமராவும், அதனை இயக்கக் கூடிய சாப்ட்வேரும் தான்.பறவையியல் பார்வையாளர் செய்யக் கூடிய விஷயத்தை இந்த ரோபோ கண்ணும், கருத்துமாக நிறைவேற்றும் திறன் படைத்தது.
அதாவது, மரங்கொத்தி பறவை கண்ணில் படுகிறதா என்று சதா சர்வ காலம் பார்த்தபடி, காட்சி களை கேமராவில் பதிவு செய்து கொண்டே இருக்கும்.
இப்படி பதிவாகும் காட்சிகளில், மரங் கொத்தி பறவை என்றோ ஒரு நாள் சிக்கக் கூடும் என்பது நம்பிக்கை.

இதற்காகத்தான் அந்த ரோபோ வானத் தையே பார்த்துக் கொண்டிருக்கிறது. பறவை பறந்து செல்லக் கூடிய பாதையை கேமரா கண்களால் விழுங்கி கொண்டே இருக்கிறது.
இப்படி பதிவாகும் காட்சிகளில் பறவை தென்படுகிறதா என்பதை பார்த்து அதை மட்டும் சேமித்து வைத்துக் கொள்ளும் புத்திசாலித் தனம் அதற்கு உண்டு. மற்ற காட்சி களையெல்லாம் கழித்து கட்டி விடும்.

இப்படி பத்தா யிரத்தில் ஒரு படத்தை தான் அது பழுதில்லா தது என கருதி தன்னுள்ளே சேர்த்து வைக்கும். மனிதர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்போது அசந்த ஒரு நொடியில் பறவை கண்ணில் படாமல் தப்பிவிடும் அபாயம் இந்த ரோபோவிடம் கிடையாது.
24மணிநேரமும் அது ஓய் வில்லாமல் உன்னிப்பாக கவனித் துக்கொண்டே இருக்கம். ஆனால் இந்த ரோபோவிடம் உள்ள ஒரே ஒரு குறை அதனால் மனிதர்க ளைப்போல அது மரக்கிளை களுக்கு நடுவே பறவை அமர்ந் திருக்கும்போது சலசலப்பை வைத்து அதன் இருப்பை உணர்ந்து கொள்ள இதனால் முடியாது.

இப்போதைக்கு வானத்தை பார்த்தபடி இருந்து அதன் நடுவே பறவை வந்தால் மட்டுமே கண்டு கொள்ளும் ஆற்றல் இதற்கு இருக்கிறது. இதுவரை வாத்து கள், கழுகுகள் போன்ற பறவை களை இந்த ரோபோ சிறைப்பிடித்து தந்திருக்கிறது.

மரங்கொத்தி பறவை இதன் பார்வையில் படும் பட்சத்தில் அந்த காட்சியும் பதிவாகி விடும் என்று நிபுணர் கள் எதிர்பார்த்து காத்திருக் கின்றனர். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் கென் கோல்டுபர்க் எனும் பேராசிரியர் இந்த ரோபோவை வடிவமைத்து இருக்கிறார்.

பொதுவாக மனிதர்களால் முடியாத காரியத்தை, ரோபோ வால் சீரும், சிறப்புமாக செய்ய முடியும் என்று ஒரு கருத்து இருக் கிறது. சலிப்போ, களைப்போ இல்லாமல் இடை விடாமல் செய் யக் கூடிய பணிகளை ரோபோவை விட சிறப்பாக மனிதர்களால் செய்து விட முடியாது. அந்த வகையில் தான் மரங்கொத்தி பறவையை தேடிப் பிடிக்க இந்த ரோபோவுக்கு பேராசிரியர் கோல்டு பர்க் உயிர் கொடுத்து இருக்கிறார்.

இந்த தேடல் வெற்றியை தந்து மரங் கொத்தி பறவை உலகின் பார்வைக்கு கொண்டு வரப்பட லாம். இல்லை அபூர்வ மரங் கொத்தி பறவையின் காலம் முடிந்து விட்டது என்று சந்தேகத் திற்கு இடமில்லா மல் முடிவு செய்து கொண்டு விடலாம்.

அது மட்டுமல்லாமல் இந்த தேடல் ரோபோ மற்ற தேடல் பணிகளுக்கான முன்மாதிரியாக வும் அமையலாம். அடுத்தகட்டமாக அழியும் நிலையில் இருக்கும் கரடி, கொரில்லா போன்ற விலங்கு களை கண் காணிக்கவும் இத்தகைய ரோபோக்களை களத்தில் இறக்க லாம். விமான நிலையங்கள் போன்றவற்றில் வெடி மருந்து பொருட்களை கண்டு பிடிக் கும் பணியிலும் ஈடுபடுத் தப்படலாம்.

ரோபோ ஆய்வு மற்றும் செயல் பாட்டில் இந்த பறவை பார்வையா ளர் மிகவும் முக்கியமா னதாக கருதப்படுகிறது.
——–

ரோபோ நோயாளி

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம்.
.
ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாலும் அங்கே சர்வதேச ரோபோ கண்காட்சி அண்மையில் நடத்தப்பட்டது.

தலைநகர் டோக்கியோவில் நான்கு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பலவிதமான ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் வலியை உணரும் ரோபோ. ரோபோ நோயாளியாக இது அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு தனியே பெயரும் சூட்டப் பட்டுள்ளது. சிம்ராய்டு என்பது இதன் பெயர்.

அழகான இளம்பெண்ணை போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பல் மருத்துவ மாணவர் களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் பல்வலியை உணர்ந்து வெளிப்படுத்த முடியும்.

பல்வலிக்கு சிகிச்சை பெறும் நோயாளி எப்படி வலியால் துடிப்பாரோ அந்த உணர்வை இந்த ரோபோ வெளிப்படுத்தும். பயிற்சி மருத்துவர்கள் இந்த ரோபோவை கொண்டு பயிற்சியில் ஈடுபடும் போது, நோயாளிகள் வலியை எப்படி உணர்வார்கள் என்பது குறித்த அனுபவத்தை பெற முடியும் என்று கருதப்படுகிறது.

மருத்துவர்கள் நோயாளிகளின் வலியை உணர்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக நோயாளிகளை கஷ்டப்படுத்தாமல் இந்த பணியை செய்வதற்காக என்று ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளனர். விரைவில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல் மருத்துவர்கள் நோயாளிகளின் உணர்வை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க இந்த ரோபோ நோயாளி உதவும் என்றும் கருதப்படுகிறது.
இந்த ரோபோ கண்காட்சியில் மேலும் பல வித்தியாசமான ரோபோக்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று வீட்டு வேலையில் கைகொடுக்கக் கூடிய ரோபோ சேவகன்.

இந்த ரோபோ பல்வேறு விதமான வீட்டு வேலைகளை செய்து முடிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. அதோடு மனிதர்கள் மீது மோதிக் கொண்டால் அதனை உணரும் ஆற்றலும் இந்த ரோபோவுக்கு உண்டு.

வயதானவர்களை கைகொடுத்து தூக்கி விடுவது போன்ற சேவைகளையும் இந்த ரோபோ செய்யும் திறன் படைத்தது. ஜப்பானில் வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாலும் அவர்களின் தனிமை உணர்வை போக்க ஏற்கனவே ரோபோக்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மற்றுமொரு புதிய துணைவனாக இந்த ரோபோ வந்திருப்பதாக கருதப்படுகிறது.

டோக்கியோவை சேர்ந்த வசேடா பல்கலைக்கழகம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. டூவன்டிஒன் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ சந்தைக்கு விற்பனைக்கு வர மேலும் பல ஆண்டுகள் ஆகும் என்று கருதப்படுகிறது.

அநேகமாக 2015 ஆம் ஆண்டு வாக்கில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும். அதற்கு முன்பாக இந்த ரோபோ மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ காலை உணவையும் பரிமாறக் கூடிய திறன் படைத்தது.

இந்த கண்காட்சியில் மேலும் பல ரோபோக்கள் அரங்கேற்றப்பட்டாலும் இந்த கண்காட்சிக்கு தொடர்பில்லாத ஒரு வித்தியாசமான ரோபோவை பற்றி தெரிந்து கொள்ளலாம். ரோபோ கித்தார் எனும் பெயர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தானியங்கி கித்தார் அது. இந்த கித்தாரில் என்ன விசேஷமென்றால் அது தன்னைத்தானே ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் என்பதுதான்.

கித்தாரை இயக்குவதில் தேர்ச்சி இல்லாதவர்கள் இதனை பயன்படுத்துவது எளிது. இசைக்கப்படும் பாடலுக்கு ஏற்ப அது தன்னைத்தானே ஸ்ருதி அமைத்துக் கொள்ளும்.
கிப்சன் எனும் ஆய்வாளர் 15 ஆண்டு கால ஆய்வின் முயற்சியாக இந்த ரோபோ கித்தாரை வடிவமைத்துள்ளார்.

முதல் கட்டமாக சுமார் 4 ஆயிரம் கித்தார்கள் விற்பனைக்கு வரவுள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இது விற்பனைக்கு வருகிறது. இசைப் பிரியர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
——

வயலின் இசைக்கும் ரோபோ

ஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது.
.
மனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது.

டோக்கியோ நகரில் உள்ள டொயோட்டோ ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தனது இயந்திர விரல்களால் வயலின் கருவியை வாசிப்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது.

ரோபோ ஆய்வு மற்றும் தயாரிப்பில் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. புதிய புதிய ரோபோக்கள் அந்நாட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த ரோபோக்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறு வனங்கள் இதன் பின்னே இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

அந்த வகையில் டொயோட்டோ நிறுவனம் ரோபோ தயாரிப்பில் கொஞ்சம் தாமதமாக அறிமுக மானதாக கருதப்படுகிறது. ஆனால் போட்டி யாளர்களுக்கு சவால் விடக் கூடிய அளவுக்கு திறமை படைத்த வயலின் வாசிக்கும் ரோபோவை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

டொயோட்டோ நிறுவனம் ஏற் கனவே வீடுகளில் பயன் படுத்தக் கூடிய ரோபோக்களை பெரிய அளவில் அறிமுகம் செய்திருக்கிறது. அதோடு வயதானவர்களுக்கு உதவக் கூடிய ரோபோக்களும் இந்நிறுவனத் தால் தயாரிக்கப் பட்டுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை விட்டுவிட்டு ரோபோ தயாரிப்பில் ஈடுபடுவது வியப்பை அளிக்கலாம். முதல் விஷயம், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து கார் தயாரிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே ரோபோ வடிவமைப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம்.

தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் ஜப்பான் இயந்திர மயமாக்கலிலும் பல படி முன்னே இருப்பது தெரிந்த விஷயம்தான். அந்நாட்டு தொழிற்சாலைகள் பல இயந்திரமயமாகிவிட்டன. அதாவது தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பல செயல்கள் ரோபோக்களால் செய்யப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரோபோக் களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் கார் வடிவமைப்பு குறித்த அநேக விஷயங் களை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஏற்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ரோபோ பயன்படுத்துவதில் இருக்கும் நிபுணத்துவத்தை கொண்டு வாழ்க்கையின் மற்ற அம்சங் களிலும் கைகொடுக்கக் கூடிய ரோபோக்களை உருவாக்கி அறிமுகம் செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பு கின்றன. இதன் விளைவாகவே புதிய புதிய ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஹோண்டா நிறுவனம் தான் இதனை முதலில் துவக்கி வைத்தது. 1986ம் ஆண்டே அந்நிறுவனம் அசிமோ ரோபோவை அறிமுகம் செய்தது. தற்போது டொயோட்டோ நிறுவனமும் அந்த போட்டியில் சேர்ந்து கொண்டுள்ளது. ரோபோ பயன் படுத்துவதில் தனக்குள்ள நிபுணத் துவத்தை பயன்படுத்திக் கொண்டு சிறந்த ரோபோக்களை உருவாக்கி சந்தைப்படுத்த திட்ட மிட்டிருப்பதாக டொயோட்டோ நிறுவனத் தலைவர் வாட்னாபே தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய அளவில் ரோபோக்களை விற்பனை செய்ய நிறுவனம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் பல செயல்களில் கை கோர்த்து நிற்கக்கூடிய ரோபோக்கள் விற்பனை செய்யப் படும் என்று அவர் கூறியிருக்கிறார்.

ரோபோ தயாரிப்புக்கு ஜப்பானிய அரசு அளித்து வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க ஜப்பானிய அரசு பெரிதும் விரும்புகிறது. ரோபோ வடிவமைப்பை தனது நாட்டின் தேசிய தொழிலாக கருதி ஜப்பானிய அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இதன் விளைவாகவும் வர்த்தக நிறுவனங்கள் ரோபோ ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.

ரோபோக்களின் மூலம் தங்களது நிறுவனத்தின் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளை பறைசாற்ற முடியும் என்று டொயோட்டோ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன.

—————