Tag Archives: வலைப்பதிவு

என்டிடிவி ஹின்டுவில் தமிழ் வலைப்பதிவு நிகழ்ச்சி

தமிழ் பதிவுலகம் தீவிரமாக இயங்கி வருகிறது.குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகள் தமிழில் அதிகம் உள்ளன‌.சைபர் உலகம் பற்றி தமிழ் பதிவுலகம் சிறந்த முறையில் தகவல்களை பதிவு செய்து வருவதன் அங்கீகாரமாக என்டிடிவி ஹின்டு சானலில் வரும் பைட் இட் என்னும் நிகழ்ச்சியில் இந்த வாரம் தமிழ் தொழில்நுட்ப வலைப்பதிவுகள் பற்றி இடம்பெற உள்ளது.

ஷிரடி சாய்தசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக என்னையும் பேட்டி கண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக என்டிடிவி ஹின்டுவிற்கு ந‌ன்றி.இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து கருத்து தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நாளை இரவு 9.30 மணிக்கு இந்த‌ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அன்புடன் சிம்மன்.

டிவிட்டரின் மதிப்பு 100 கோடி

twஇணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிவிட்டரின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவான டெக்கிரன்ச் இந்த மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் அன்மையில் 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியதை அடுத்து இந்தமதிப்பீட்டினை டெக்கிரன்ச் வெளீயிட்டுள்ளது.

டிவிட்டர் பிரபலமாக இருந்தாலும் அதன் பயனாளிகள் அதிகரித்து வந்தாலும் அதற்கான வருவாய் ஈட்டும் வழி பிடிபடாமலே இருக்கிறது.வருவாய்க்கான வழிகள் பற்றி நிறுவன அதிபர்களும் இது வரை தெளிவாக பதில் தந்ததில்லை.

வழக்கமான விளமபர வருவாய் வழி டிவிட்டருக்கு பொருந்தி வராத்தால் வெற்றிக‌ர‌மாக‌ இருக்கும் அந்த‌ சேவை எப்ப்டி லாப‌க‌ர‌மான‌தாக‌ மாறும் என்ப‌து புரியாத‌ புதிராக‌வே இருக்கிற‌து.

இத‌னிடையே கூகுல் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் டிவிட்ட‌ரை வாங்க‌லாம் என்றும் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து.

இந்நிலையில் டிவிட்ட‌ருக்கான‌ ம‌திப்பீடு வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் டிவிட்ட‌ரின் ம‌திப்பு 250 டால‌ர் என பென்ச்மாரக் என்னும் நிறுவனத்தால் ம‌திப்பிட‌ப்ப‌ட்ட‌து.த‌ற்போது டெக்கிரன்ச் ம்திப்பீட்டின் படி இது 100 கோடி டால‌ராக‌ உய‌ர்ந்துள்ள‌து.

தமிழ்மீடியாவில் என் வலைப்பதிவு

த‌மிழ்மீடியா செய்தி இணையதளம் எனது வலைப்பதிவுக்கான இணைப்பை தனது தளத்தில் வழங்கியுள்ளது.அந்த தளத்தில் உள்ள வாரம் ஒரு வலைப்பதிவு என்னும் பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த கவனத்திற்காகவும்,அங்கீகாரத்திற்காகவும் எனது மனமாற்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.இந்த இணைப்பு மேலும் புதிய வாசகர்களை பெற்றுத்தரும் என நம்புகிறேன்.

தமிழ்மீடியா போன்ற தளங்கள் இப்ப‌டி வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வது அவற்றை ஊக்கப்படுத்தும் செயலாகும்.என் பதிவை அறிமுகத்திற்கு ஏற்றதாக கரிதியத்ற்கு மீண்டும் ஒரு முறை ந‌ன்றி.

—————

link;
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-50-40

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன?

டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம்.

140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள்.

டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது தான்.

அதிகபட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது தவிர டிவிட்டரில் வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது.நீங்கள் நினைக்கும் எதனையும் டிவிட்டரில் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் இலக்கணப்படி இவை நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்னும் கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை துவங்கப்பட்டதன் நோக்கமே நீங்கள் இப்போது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறீகள் என்பதை உங்கள் நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து கொள்ள வழி செய்வதற்காகதான்.

டிவிட்டர் முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் இதற்கான பதிலை டைப் செய்தீர்கள் எனறால் இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் விருப்பத்திற்கேற்ப இவற்றை உங்கள் நண்பர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை உலகம் முழுவதோடும் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் டீ சாப்பிட போகிறேன் , சினிமாவுக்கு போகிறேன் , என எந்த வகையான தகவல்களையும் டிவிட்டரில் வெளியிடலாம்.அவை முக்கியமனதாக இருக்க வேண்டும் எனறோ பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றோ கட்டாயமில்லை.

இதனால் யாருக்கு என்ன பயன் என்னும் கேள்வி ஆரம்பத்தில் பலமுறை கேட்கப்பட்டு அலுத்துப்போகும் அளவுக்கு பதிலளிக்கப்பட்டு விட்டது.இப்போது டிவிட்டரால் என்ன பயன் என்று யாரும் கேட்பதில்லை.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இருப்பினும் டிவிட்டரின் உண்மையான பயனை புரிந்துகொள்ள இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படும் அந்தரங்கமான , அலப விவரங்களால் யாருக்கு என்ன பயன்? எனபது டிவிட்டரை அறிமுகம் செய்து கொள்ளும் எவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி.

டிவிட்டர் அடிப்படையில் ஒரு சமுக வலைப்பின்னல் சேவை என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அவசியம் புரியும். நட்பு வட்டாரத்தோடு தொடர்பு கொள்ளவும் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளாவும் டிவிட்டர் துவங்கப்பட்டது.கருத்துக்களை எப்படி வேன்டுமானலும் பகிர்ந்துக்கொள்ளலாம்.டிவிட்டர் நிறுவனர்கள் தேர்வு செய்த வழி நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்வியாகும்.

இந்த கேள்விக்கான பதிலின் மூலம் ஒருவர் நணபர்களுக்கு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சுலபமாக தெரிவிக்க முடியும்.உதாரணத்திற்கு ஒரு கல்லூரி மாணவர் , தான் உடற்பயிற்ச்சி கூடத்திற்கு செல்வதாக கூறலாம்.இல்லை காதலியை பார்க்க செல்வதாக தெரிவிக்கலாம்.அவருடைய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம்.

நண்பன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள முடிவதோடு அதற்கேற்ப திட்டங்களையும் வகுத்துக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நணபன் சினமாவுக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம் உடனே மற்ற் நண்பர்கள் தாங்களும் வரத்தாயார் என தெரிவித்து சேர்ந்துக்கொள்ளலாம்.இல்லை நண்பனை பாரக்கச்செல்லாலாம் என நினைத்துக்கொண்டிருப்பவர் அவர் வேறு வேலையாக இருப்பதைதெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படலாம்.
இதை போனில் கூட தான் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.ஆனால் டிவிட்டரில் எந்த முயற்சியும் இல்லாமலேயே நண்பர்களை பின்தொடர முடியும் என்பதே விஷயம்.

போனில் சொல்லும் போது சிலரிடம் மட்டுமே தெரிவிக்க முடியும். சிலரை மறந்துவிடலாம்.என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று யாராவது கேட்கலாம்.மன்னிக்கவும் மரந்துவிட்டேன் என்று சமாளிக்க வேண்டும்.டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் போது அந்த கவலையே வேண்டாம். டிவிட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்து கொன்டால் போதும் மற்றவர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் ஒருவர் டிவிட்டரில் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் அவரின் அப்போதைய மன நிலையை தெரிந்துகொள்ளலாம். நிச்சயம் நண்பர்களுக்கு இது தேவையானது.டிவிட்டர் இதை தான் செய்ய முறபட்டது.

மேலும் டிவிட்டரை பயன்படுத்துவர் பிரபலம் என்னும் போது அவரது ஒவ்வொரு செயலும் ரசிகர்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும் அல்லவா?

இப்படிதான் டிவிட்டர் துவங்கியது.

டார்வினுக்காக ஒரு வலைப்பதிவு -1

darwin1ஒரு புத்தகத்தை படிக்க சிறந்த வழி அந்த புத்தகம் பற்றி வலைப்பதிவு செய்யத்தொடங்குவது தான்.
அதிலும் மற்றவர்களும் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்ப ப‌ட்டால் வாசிப்பு அனுபவத்தை வலைப்பதிவு செய்வதை தவிற சிறந்த வழி வேறில்லை.குறிப்பிட்ட அந்த புத்தகம் நீண்ட நாட்களாக படிக்க நினைத்த புத்தகம் என்றால் வலைபதிவு செய்வது அதனை படித்து முடிக்க பேருதவியாக இருக்கும்.

இத‌ற்கான சிறந்த உதாரணமாக ஜான் விட்பீல்ட்டின் டார்வின் புத்தக வலைப்ப‌திவு முயற்ச்சியை குறிப்பிடலாம்.அறிவியல் விஷயங்கள் பற்றி எழுதி வரும் விட்பீல்டு, டார்வினின் ஆகச்சிறந்த படைப்பான ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் புத்தகத்தை படிக்கத்தொடங்கியதும் அந்த அனுபவத்தை அத்தியாயம் அத்தியாயமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொன்டார்.

டார்வினின் இந்த புத்தகத்தை படிக்க இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது.

உயிரியல் உலகில் பெரும் மற்றத்தை கொண்டு வந்த இப்புத்தகம் வெளியாகி 150 ஆண்டுகள் ஆகிறது.மேலும் டார்வினின் 200‍‍ வது ஆண்டு விழா கொன்டாடப்படும் ஆண்டாகவும் இது அமைகிற‌து. இந்த இரட்டை நிகழ்வுகளை கொன்டாடும் வகையில் டார்வினையும் உயிரியல் உலகிற்க்கான அவரது பங்களிப்பு குறித்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டார்வினின் பிறந்த பூமியான பிரிட்டனில் நாடு த‌ழுவிய அளவில் விழாக்களூக்கு எற்பாடு செய்யப்பட்டிருக்கிற‌து.

எங்கும் டார்வின் ப‌ற்றியே பேச்சாக இருப்பதால் இயல்பாகவே ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் புத்தகத்தை மீண்டும் படிக்கும் பலருக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிற‌து.இது வரை அப்புத்தகத்தை தொடாதவர்கள் கூட இந்த சந்தர்ப்பத்திலாவது இப்புத்தகத்தை படித்துவிட விரும்புகின்ற்னர்.

உயிரியல் துறை நிபுனராக இருந்த போதிலும் விட்பீல்டும் இதுவரை இப்புத்தகத்தை முழுவதுமாக படித்ததில்லை என்கிறார்.
ஒருவிததில் இது அநீதி தான். உயிரியல் துறை நபரே டார்வினின் முக்கியமான நூலை படிக்காவிட்டால் எப்படி? விட்பீல்டு இதற்கு சுவார்ஸ்யமான பதிலை தருகிறார்.

அதைவிட நேர்மையானது. முதலில் டார்வினின் புத்தகத்தை படிக்காமல் இருப்பது குறித்து தனக்கு பெருமை இல்லை என்று கூறிவிடுகிறார்.அதோடு டார்வினை படிக்காமல் இருப்பத‌ற்கு ஆர்வம் இல்லாமல் இல்லை ஆனால் உயிரியல் துறையில் இப்போது டார்வினின் புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறுகிறார். காரண்ம் டார்வின் உயிரியலின் துவக்க காலத்தில் தன்னுடைய கோட்பாடுகளை உருவாக்கினார். உயிரியல் துறையில் த‌ற்போது ஆதிக்கம் செலுத்தும் மரபணு தொழில்நுட்பம் ,கணிதவியல் அலசல் முறை ஆகியவை அவருக்கு கிட்டவில்லை.மேலும் அவர் பயன்படுத்திய விலங்குகளின் க‌ருத்த‌ரிப்பு போன்ற உத்திகள் இப்போது காலாவதியாகிவிட்டன.அறிவியலின் ம்ற்ற துறைகளை விட உயிரியல் த‌ன்னுடைய கடந்த கால கோட்பாடுகளை உதறித்த‌ள்ளி விடுகிறது.இயற்பியலின் அடிப்படை விதிகளும் கனித சமன்பாடுகளும் இன்னமும் தொடரவே செய்கின்றன. ஆனால் உயிரியலில் கோட்பாடுகளைவிட(டார்வினின் பரிணாம் கொள்கை மட்டும் விதிவிலக்கு) தகவல்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தகவல்களோ மாறும் தன்மை கொண்டவை.எல்லவர்றையும் விட டார்வினின் கொள்கை அடிப்ப்டையில் மிகவும் எளிமையானது. அதனை புரிந்து கொள்ள ஆரிஜின் ஆப் ஸ்பிஷியஸ் முழு புத்தகத்தை படித்தாக வேன்டும் என்ற தெவையில்லை.

இப்படி புத்தகத்தை படிக்காதற்கான காரண‌த்தை விளக்கிவிட்டு அதற்காக டார்வினை படிக்காமல் இருப்பது நல்லது என்று சொல்லிவிட முடியாது எனகூறும் விட்பீல்டு , புத்தகத்தின் 150 வது ஆண்டு விழாவைவிட இத‌னை படிக்க பொருத்தாமான நேரம் எது என்று கேட்கிறார்.

இந்த உற்சாகத்தோடு தான் அவர் டார்வினை படிக்கத்தொடங்கினார். டார்வினை நாம் மட்டும் படிப்பதைவிட மற்றவர்களும் சேர்ந்து படிக்கட்டும் என்ற ந‌ல்லெணணத்தில் படிக்க படிக்க அதை வலைப்பதிவும் செய்யத்தொடங்கினார்.

பிளாகிங் த ஆரிஜின் என்ற பெயரில் அமைந்த இந்த வலைப்பதிவை சீட் ஆன்லைன் இதழ் ஸ்பான்சர் செய்த‌து. வலைப்பதிவின் நோக்கம் இர்ண்டுவிதமானது என அவர் குறிப்பிட்டிருந்தார். ஒன்று 150 ஆன்டுக்கு பிறகு டார்வினின் தத்துவம் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கின்றன என பார்ப்ப்பது. மற்றொன்று, டார்வின் புத்தகம் முதன்முதலில் வெளியான போது என்ன மனநிலை இருந்திருக்கும் என் உண‌ர்ந்து பார்ப்பது.

இரண்டும் முரணானவை என்றாலும் கூட சுவாரசியமானவை தான்.
———–

(புத்தகத்தை அவர் வலைப்பதிவு செய்த விதத்தை தொடர்ந்து பார்ப்போம்….)