Tag Archives: வ‌லைப்ப‌திவு

ஹைகூவில் ஒரு ராஜினாமா கடிதம்

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார்.

சன் மைக்ரோசிஸ்டம்ஸ் டாப் பத்து சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என கூறும் அளவுக்கு புகழும் செல்வாக்கும் பெற்றது.ஜாவா புரோகிராமிங்க் மொழி இந்நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்க‌ப்பட்டது.

 இதெல்லாம் பழங்கதை.சன் ஏகப்பட்ட பிரச்சனைகளூக்கு ஆளாகி மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளால் வாங்கப்பட்டு விட்டது.

இதுவும் கூட‌ ப‌ழைய‌ க‌தை தான். இப்போதைய‌ செய்தி என்ன‌வென்றால் ச‌ன் மைக்ரோசிஸ்ம‌ஸ் த‌ல‌மை அதிகாரியாக‌ இருந்த‌ ஜோனாத்த‌ன் ஸ்வார்ட்ஸ் ராஜினாமா செய்திருக்கிறார் என்ப‌தே.

இந்த‌ முடிவை அவ‌ர் த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌திவில் அறிவித்திருக்கிறார். அதிலும் எப்ப‌டி தெரியுமா? அழ‌கான‌ ஹைகூ வ‌டிவில் க‌வித்துவ‌மாக‌ அத‌ன‌து வெளியேற்ற‌த்தை தெரிய‌ப்ப‌டுத்தியுள்ளார்.

ஆர‌க்கிள் ச‌ன் நிறுவ‌ன‌த்தை கைய‌க‌ப்ப‌டுத்திய‌து ந‌டைமுறைக்கு வ‌ருவ‌தை தொட‌ர்ந்து ஸ்வார்ட்ஸ் த‌ன‌து ப‌த‌வியில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

ச‌ன் நிறுவ‌ன‌த்தில் இது என‌து க‌டைசி நாள் என்று குறிப்பிட்ட‌ பின் ஒரு ஹைகூ வ‌டிவில் என‌து ராஜினாமா முடிவை அறிவிக்கிறேன் என்று குறிபப்பிட்டுள்ளார்.

பொருளாதார‌ சீர்குலைவு/அதிக‌ வாடிக்கையாள‌ர்க‌ளுக்கு பாதிப்பு/இனியும் த‌லைமை அதிகாரி இல்லை.

இது தான் அவ‌ர‌து ராஜினாமா ஹைகூ. ப‌த‌வி போனாலும் தொட‌ர்ந்து வ‌லைப்ப‌திவு செய்ய‌ப்போவ‌தாக‌ அவ‌ர் கூறியுள்ளார்.

ஸ்வார்ட்ஸ் முத‌லில் வ‌லைப்ப‌திவு செய்ய‌த்துவ‌ங்கிய‌ த‌லைமை அதிகாரிக‌ளில் ஒருவ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

———–

http://twitter.com/openjonathan

ஒபாமாவின் முதல் டிவீட்

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதல் முறையாக டிவிட்டரை பயன்படுத்தியிருக்கறார். ஹைதி பூக‌ம்ப‌ நிவார‌ண‌ ப‌ணிக‌ளை ஊக்குவிக்கும் வ‌கையில் அவ‌ர் டிவிட்ட‌ரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒபாமா டிவிட்ட‌ருக்கு புதிய‌வ‌ர் அல்ல‌. அவ‌ர‌து பெய‌ரில் டிவிட்ட‌ர் முக‌வ‌ரி க‌ண‌க்கு இருக்கிற‌து.மேலும் அதிப‌ர் தேர்த‌லின் போது ஒபாமா பிர‌சார‌த்திற்காக‌ டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் சேவைக‌ள் தீவிர‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன.வ‌லைப்பின்ன‌ல் சேவை மூல‌ம் ஒபாமா குழு நிதி திர‌ட்டிய‌ வித‌மும் வேக‌மும் ப‌ர‌வ‌லாக‌ பார‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன.

தேர்த‌ல் பிர‌சார‌த்தில் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் ஹாவ‌ர்டு டீன் போன்ற‌வ‌ர்க‌ள் முன்னோடியாக‌ க‌ருத‌ப்ப‌டும் வேளையில் ஒபாமா வ‌லைப்பின்ன‌ல் சார்ந்த‌ பிர‌சார‌த்தில் முன்னோடியாக‌ புக‌ழ‌ப்ப‌ட்டார்.

அதிப‌ராக‌ ப‌த‌வியேற்ற‌ பிற‌கும் ஒபாமா நிர‌வாக‌த்தில் பொதும‌க்க‌ளின் க‌ருத்தை அறிய‌ இண்டெர்நெட் ப‌ய‌ன்பாட்டை ஊக்குவித்தே வ‌ந்துள்ளார். மேலும் டிவிட்ட‌ரில் அதிக‌ பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை கொண்ட‌வ‌ர்க‌ள் ப‌ட்டிய‌லில் அவ‌ரே முத‌ல் இட‌த்தில் இருந்து வ‌ந்தார்.

இந்நிலையில் க‌ட‌ந்த‌ ஆண்டு சீன‌ விஜ‌ய‌த்தின் போது ஒபாமா டிவிட்டரை தான் பயன்படுத்தியதில்லை என்றும் டிவிட்டர் தனக்கு புரியவில்லை என்றும்  ஒரு குண்டை தூக்கி வீசினார்.ஒபாமா டிவிட்ட‌ரில் பிர‌ப‌ல‌மாக‌ இருப்ப‌தாக‌ க‌ருதப்ப‌ட்டு வ‌ந்த‌ நிலையில் இந்த‌ க‌ருத்து பெரும் அதிர்ச்சியை அளித்த‌து.

ஒபாமா டிவிட்ட‌ர் ப‌ய‌ன்பாட்டில் முன்னுதார‌ன‌மாக‌ திக‌ழ்கிறார் என்று பார‌ட்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் அவ‌ர‌து டிவிட்ட‌ர் அறியாமையை கேட்டு திகைத்துப்போயின‌ர்.

பின்ன‌ர் தான் விஷ‌ய‌ம் விள‌ங்கிய‌து.ஒபாமா பெய‌ரில் டிவிட்ட‌ர் க‌ண‌க்கு இருக்கிற‌தே த‌விர‌ உண்மையில் அவ‌ர் அத‌னை நேர‌டியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த்வில்லை. தேர்த‌ல் பிரசார‌த்தின் போது அவ‌ர‌து பிர‌ச்சார‌ குழுவின‌ர் அவ‌ர் சார்பில் டிவிட்ட‌ர் செய்து ஆத‌ர‌வு திர‌ட்டியுள்ள‌ன‌ர்.அதிப‌ரான‌ பின்ன‌ரும் இதே முறையை அவர‌து உத‌வியாள‌ர்க‌ள் பின‌ப்ற்றி வ‌ந்துள்ள‌ன‌ர்.

நோப‌ல் ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அதிப‌ர் சார்பில் நெகிழ்ந்து போனேன் என்று டிவிட்ட‌ர் செய்துள்ள‌ன‌ர்.

இதையெல்லாம் வைத்து தான் ஒபாமா டிவிட்ட‌ர் செய்கிறார் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

இப்ப‌டியிருக்க‌ ஒபாமா இப்போது முத‌ல் முறையாக‌ டிவிட்ட‌ர் செய்துள்ளார்.

ஹைதியில் ஏற்ப‌ட்ட‌ பூக‌ம்ப‌ம் பெரும் சேத்தையும் பேர‌விவையும் உண்டாக்கியுள்ள‌ நிலையில் ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவை ச‌ங்க‌ம் நிவார‌ண‌ப்பணிக‌ளை மேற்கொள்வ‌தில் ப‌ம்ப‌ர‌மாக‌ சுழ‌ன்று கொண்டிருக்கிற‌து.தாம‌திக்கும் ஒவ்வொரு நிமிட‌மும் உயிர் ப‌லி என்ப‌தை உண‌ர்ந்து நிவார‌ண‌ப் ப‌ணிக‌ளை ச‌ங்க‌ம் ஒருங்கிணைத்து வ‌ருகிற‌‌து.

உயிர் காக்கும் உன்ன‌த‌ ப‌ணியில் ஈடுப‌ட்டுள்ள‌ செஞ்சிலுவை ச‌ங்க‌த்தின் செய‌ல்பாடுக‌ளை ஊக்குவிப்ப‌த‌ற்க்காக‌ ஒபாமா ம‌னைவியோடு ச‌ங்க‌த்தின் த‌லைமை அலுவ‌ல‌க‌த்திற்கு விஜய‌ம் செய்தார்.அரும்பணி ஆற்றி வ‌ரும் உங்க‌ளை பாராட்டி ஊக்க‌ப்ப‌டுத்த‌வே வந்துள்ளேன் என்று அறிவித்த‌ ஒபாமா பின்ன‌ர் அங்கு சுற்றிப்பார்த்து வ‌ருகையில் ஒரு க‌ம்ப்யூட்ட‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை க‌ண்டார்.

அதிப‌ர் ம‌ற்றும் அவ‌ர் ம‌னைவி நிவார‌ண‌ப்ப‌ணிக‌ளை பார்வையிட்டு வ‌ருகின்ற‌ன‌ர் என‌ அவ‌ர் குறிப்ப்ட்டு டிவிட்ட‌ர் செய்தார்.அத‌ன் பிற‌கு ஒபாமா முத‌ன் முத‌லில் டிவிட்ட‌ர் செய்துள்ளார்‌ என அவரே உறுதிப்ப‌டுத்தி அடுத்த‌ செய்திய‌ ப‌திவு செய்தார்.

நிற்க‌ பூக‌ம்ப‌ நிவார‌ன‌ முய‌ற்சிக‌ளில் டிவிட்ட‌ர் போன்ற‌ தொழில்நுட்ப‌ சேவைக‌ள் பெரும் ப‌ங்காற்றி வ‌ருகின்ற‌ன‌.எஸ் எம் எஸ் மூல‌ம் நிதி திர‌ட்டுவ‌திலும் திவிராம் காட்ட‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பாசுவுக்கு டிவிட்டர் வண‌க்கம்

ஜோதி பாசு எந்த அளவுக்கு ம‌திக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது.பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் காத்திருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரது மறைவுக்காக கண்ணீர் சிந்தும் காட்சியும், கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் பாசுவின் நற்பண்புகளை உளமாற புகழ்ந்திருப்பதும் இதற்கு சாட்சி.

அதே போல‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரிலும் பிர‌ப‌ல‌ங்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ம‌றைந்த‌ த‌லைவ‌ருக்கு த‌ங்க‌ள் டிவீட் மூல‌ம் இறுதி ம‌ரியாதை செலுத்தியுள்ள‌ன‌ர்.
ம‌த்திய‌ அமைச்ச‌ரும் டிவிட்ட‌ர் முன்னோடியுமான‌ ச‌ஷி த‌ரூர் ,ஜோதி பாசு (1914…2010)ஆர் ஐ பி என‌ குறிப்பிடிருந்தார். டிவிட்ட‌ர் மொழியில் ஆர் ஐ பி என்றால் ஆத்மா சாந்தி அடைய‌ட்டும் என்று பொருள்.
ப‌த்திரிக்கையாள‌ரும் திரைப்ப‌ட‌ த‌யாரிப்பாள‌ருமான‌ பிரித்திஷ் ந‌ந்தி பாசு த‌ன‌து விச்கியையும் மார்க்சிஸ‌த்தையும் அதே வ‌ரிசையில் நேசித்தார்,ஆனால் ஈடு இணையில்லாத‌ மனிதர்  என்று த‌ன‌க்கே உரிய‌ பாணியில் இர‌ங்கல் தெரிவித்தார்.

தொழில‌திப‌ரான‌ ஆன‌ந்த் ம‌கிந்திரா,பாசுவை ச‌ந்தித்த‌ த‌ருண‌த்தை நினைவு கூறி அப்போது ப‌த‌வியில் இல்லை.எனினும் ஒருபோதும் அதிகார‌மில்லாத‌வ‌ராக‌ தோன்ற‌ மாட்டார் என்னும் உண‌ர்வை அளித்த‌தாக‌ கூறியுள்ளார்.

அமிதாப் ப‌ச்ச‌ன் த‌ன‌து வ‌லைப்ப‌திவில் பாசு ப‌ற்றி விரிவாக‌வே குறிப்பிட்டுள்ளார்.

ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் பாசு மீதான‌ ம‌திப்பை டிவிட்ட‌ர் மூல‌ம் வெளிப்ப‌டுத்தியுள்ள‌ன‌ர்.நிக‌ரில்லாதா த‌லைவ‌ராக‌ வாழ‌ந்து ம‌றைந்த பாசு ப‌ற்றி அறிய‌ அவ‌ர‌து அதிகார‌பூர்வ‌ இணைய‌த‌ள‌த்திற்கு சென்று பாருங்க‌ள்.

 ———–

http://jyotibasu.net/

டிவிட்டருக்கு மாற்றாக ஒரு புதிய சேவை

குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ப‌வுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற‌ மாற்று சேவைக‌ள் இருக்க‌வே செய்கின்ற‌ன‌ என்றாலும் டிவிட்ட‌ருக்கு ச‌வால் விட‌க்கூடிய‌தாக‌ அவை இல்லை என்ப‌தே விஷ‌ய‌ம்.

இனி ஒரு புதிய‌ குறும்ப‌திவு சேவை டிவிட்ட‌ர் அள‌வுக்கு புக‌ழ் பெற‌ முடியுமா? என்று தெரிய‌வில்லை.

இந்நிலையில் டிவிட்ட‌ருக்கு மாற்று என்னும் அறிமுக‌த்துட‌ன் புதிய‌தொரு டிவிட்ட‌ர் போன்ற‌ சேவை உத‌ய‌மாகியுள்ள‌து.http://txt.io/ என்னும் அந்த‌ சேவை டிவிட்ட‌ரைவிட‌ எளிமையான‌து என்றும் என‌வே டிவிட்ட‌ர் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சிக்க‌ல‌ன‌தாக‌ இருக்கிற‌து என‌ க‌ருதுப‌வ‌ர்க‌ளுக்கான‌து என‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து.

டிவிட்ட‌ரை விட‌ எளிமையான‌ சேவை கிடையாது . அதை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தில் எந்த‌ சிக்க‌லும் இல்லை.டிவிட்ட‌ரில் முக‌வ‌ரி க‌ண‌க்கை துவ‌ங்கி ஒற்றை வ‌ரியில் அல்ல‌து சிறிய‌தான‌ ஒரு சில‌ வ‌ரிக‌ளில் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌த்தௌவ‌ங்க‌லாம்.அத‌ன்பிற‌கு பின்தொட‌ர்வ‌து,குறிச்சொல் இடுவ‌து என‌ எண்ண‌ற்ற‌ வ‌ச‌திக‌ள் இருக்கின்ற‌ன‌. அவை ச‌ற்று மிர‌ட்சியை த‌ர‌லாம். ஆனால் ப‌ய‌ன்ப‌டுத்த‌ ஆர‌ம்பித்துவிட்டால் அவ‌ற்றை எளிதாக‌ புரிந்து கொள்ள‌லாம்.

உண்மையில் இத்‌த‌கைய‌ வ‌ச‌திக‌ளே டிவிட்ட‌ரை ஒரு சாதா‌ர‌ண‌ சேவையில் இருந்து அசாத‌ர‌ண‌ சேவையாக‌ உய‌ர்த்தியுள்ள‌து.

இருப்பினும் டிவிட்ட‌ர் புரிய‌வில்லை அல்ல‌து சிக்க‌லான‌தாக‌ இருப்ப‌தாக‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் இருக்க‌கூடும் என்ற‌ ந‌ம்பிக்கையில் மேலே சொன்ன‌ சேவை உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

சேவை எளிமையான‌தோ இல்லையோ அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌ம் எளிமையான‌தாக‌ உள்ள‌து.சொல்ல‌ப்போனால் ப‌டு எளிமை.கூகுல் க‌ண‌க்கு மூல‌ம் புதிய‌ ப‌க்க‌த்தை உருவாக்கி கொள்ளுங்க‌ள் என்னும் வாச‌க‌த்தை கிளிக் செய்து உறுப்பின‌ராக‌ சேர்ந்தால் இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ துவ‌ங்கிவிட‌லாம்.
நினைப்ப‌தை டைப் செய்து ப‌திவு செய்ய‌லாம். ஆனால் அத‌னால் என்ன‌ ப‌ய‌ன் என்று தெரிய‌வில்லை.

உண்மையில் இந்த‌ சேவை டிவிட்ட‌ரை காட்டிலும் எளிமையான‌து அல்ல‌; ஆனால் டிவிட்ட‌ர் ஏன் சிற‌ப்பான‌தாக‌ இருக்கிற‌து என‌ புரிந்து கொள்ள‌ உத‌வ‌க்கூடிய‌து.எளிமை என்ப‌து ப‌யன்பாடு சார்ந்த‌து என்றால் டிவ்ட்ட‌ர் தான் அதில் ம‌ன்ன‌ன்.

———–

http://txt.io/

டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி

ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.ஷாரூக் டிவிட்டரை பயன்ப‌டுத்தும் விதம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் அவ‌ருக்கு போட்டியும் உருவாகியுள்ளது.
போட்டி என்றால் ரசிகர் ஒருவர் ஷாரூக் பெயரிலேயே போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி ஷாரூக் போலவே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த போலி ஷாரூக்கிற்கும் பின்தொடர்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர்.

டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பக்கத்தை அமைக்கலாம்.பெரும்பாலும் பலர் தங்கள் பெயரில் டிவிட்டர் பக்கம் அமைத்து தங்கள் சுயபுராண‌த்தை பதிவு செய்வது உண்டு.ஒரு சில‌ர் ம‌ட்டும் விவ‌கார‌மாக‌ பிர‌ப‌ல‌ங்க‌ளின் பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை துவ‌க்கி விளையாடுவ‌துண்டு.சில‌ நேர‌ங்க‌ளில் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ந‌ட்ச‌த்திர‌த்தின் புக‌ழ்பாட இவ்வாறு செய்வ‌துண்டு.சில‌ வேண்டுமென்றே விவ‌கார‌மாக‌ இத‌னை செய்வ‌தும் உண்டு.
க‌வ‌ன‌த்தை ஈர்ப்ப‌து உட்ப‌ட‌ இத‌ற்கு ப‌ல‌வித‌ நோக்க‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.இத‌னை க‌ட்டுப்ப‌டுத்த‌வே டிவிட்ட‌ர் பிர‌ப‌ல‌ங்க‌ளைப்பொருத்த‌வ‌ரை அவ்ர்க‌ளுக்கான‌ அதிகார‌பூர்வ‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்த‌ உறுதிசெய்த் கொள்ளும் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தின் வ‌ல‌து புற‌த்தில் ச‌ரிபார்க்க‌ப்ப‌ட்ட‌ ப‌க்க‌ம் என்ற‌ வாச‌க‌ம் இட‌ம்பெற்றிருக்கும்.
அக்மார்க் முத்திரையைப்போல‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ பிர‌ப‌ல‌த்திற்கு உரிய‌ ப‌க்க‌ம் இது என‌ உண‌ர்த்தும் சான்றித‌ழ் இது,

ஆனால் இந்த‌ க‌ட்டுப்ப‌ட்டையும் மீறி போலி ப‌க்க‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.ஷாரூக் விஷ‌ய‌த்தில் அவ‌ர் ‘iamsrk’,என்ற‌ பெய‌ரில் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை அமைத்துள்ளார‌ என்றால் அவ‌ர‌து போலி ‘imsrk. என்னும் பெய‌ரில் டிவிட்ட‌ர் செய்து வ‌ருகிறார்.

இந்த‌ செய‌லை எதிர்த்து ஷாரூக் டிவிட்ட‌ர் நிர‌வாக‌த்திட‌ம் முறையீடு செய்து நிவார‌ண‌ம் தேட‌லாம். அவ்வாறு செய்கிறாரா என்று தெரிய‌வில்லை.

————

இது போலி ஷாரூக்;http://twitter.com/imsrk