முடிச்சுகள் பலவிதம் என்பது உங்களூக்கு தெரிந்திருக்கலாம்.அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வமும் இருக்கலாம்.அப்படியென்றால் ஐவில்நாட் இணையதளம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நாட் என்னும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் இரண்டு விதமான அர்த்ததை பயன்படுத்தி அழகிய சிலேடையாக தலைப்பை கொண்டுள்ள இந்த தளத்தில் பலவிதமான முடிச்சுகள் போடும் முறையை கற்றுக்கொள்ளலாம்.
சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வரும் பேச்சாளரைப்போல இந்த தளம் மிக எளிமையான் வடிவமைப்போடு அழகான சுருக்கமான முன்னுரையோடு முடிச்சுகளுக்கு வந்து விடுகிறது.முடிச்சுகளை கற்றுத்தரவும் முடிச்சுகளை ரசிப்பதற்குமான தளம் என்னும் வர்ணனையோடு துவங்கும் அறிமுக உரை முடிச்சு பற்றி அதிகம் அறிந்தவர்கள் கூட பயனுள்ள பல முடிச்சுகளை கற்றுக்கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கிறது.
முடிச்சு போட கற்பதற்கு முன் கொஞ்சம் டுவைன் கயிற்றை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.கயிறு தான் பெஸ்ட் மெல்லிய கம்பிகளை தவிர்க்கவும் என்றும் குறிப்ப்டப்பட்டூள்ளது.
முடிச்சுகளூக்கான செய்முறை விளக்கம் வளவளவென என்றில்லாமல் ரத்தினச்சுருக்கமாக அமைந்திருக்கிறது.ஒவ்வொரு படியாக விளக்கம் தர்ப்பட்டிருக்கிறது.அவற்றின் அருகிலேயே வீடியோ விளக்கமும் கொடுக்கப்பட்டிருப்பதால் எந்த சந்தேகமும் இல்லாமல் செய்முறை விளக்க குறிப்புகளை புரிந்து கொள்ள முடியும்.
கையில் கயிறோடு கொஞ்சம் நேரத்தை செலவிட்டால் முடிச்சு கலையில் சுலபமாக தேர்ச்சி பெற்றுவிடலாம்.
ஆனால் ஒன்று முடிச்சு பொட கற்றவுடன் மீண்டும் அதனை அவிழ்த்து பார்த்துவிடுங்கள்.அப்போது தான் முடிச்சை முழுவதுமாக கற்றதாக அர்த்தம் என்றும் இந்த தளம் கேட்டுக்கொள்கிறது..
———–

0 Comments on “முடிச்சுகள் பலவிதம்; கற்றுத்தரும் இணையதளம்”
ciniphotoes
Useful information
http://www.fatinfo4u.com