ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை.
|
|
. | |
எப்படி எனும் கேள்வி அப்படியல்ல. அது மிகவும் யதார்த்தமானது. அதற்கு ஆர்வம் மட்டுமே தேவை. தவிர நடைமுறையில் அந்த கேள்விக்கான பதில் மிகுந்த பயனை அளிக்கக் கூடியது.
எப்படி எனும் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்… கார் ஓட்டுவது எப்படி, பைக் ஓட்ட கற்றுக் கொள்வது எப்படி, கைக் கடிகாரம் சரி செய்வது எப்படி… கேட்டுக் கொண்டே இருக்கலாம். இளநீர் சீவுவது எப்படி, பன நுங்கை கையால் வைத்து கீழே சிந்தாமல் லாவகமாக ஊறிஞ்சுவது எப்படி போன்ற கேள்விகளை கேட்கலாம். இந்த கேள்விகள் புத்திசாலித்தன மானதாகவோ,உலகை பிரட்டக் கூடியதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப உண்டாகும் சந்தேகம் அல்லது பிரச்சனையை தீர்க்கக் கூடிய பதிலை வேண்டு வதாக இருந்தால் போதுமானது. இத்தகைய கேள்விகளுக்கு ஒரு எல்லையே இல்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் இது போன்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றன. எப்படி எனும் கேள்விகளுக்கு விடையளிப்பதற்கு தற்போது புதிய மதிப்பு எதிர்பாராத நேரத்தில் தேள் கொட்டும் போது என்ன செய்வது, இரண்டு நாட்களுக்கும் மேலாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் தசைப் பிடிப்பிற்கு தீர்வு காண்பது எப்படி? என கேட்க தோன்றும் போது, வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினரையோ அல்லது அக்கம் பக்கத்தில்இருக்கும் நண்பர் களையோ கேட்டு தெரிந்து கொள்வோம் அல்லவா. எல்லா நேரங்களிலுமே உடனடியாக பதில் கிடைத்து விடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இன்று இப்படி, எந்த எப்படி கேள்வியை கேட்டாலும் பதில் சொல்வதற்கு எங்கோ ஒரு மூளையில் யாராவது இருக்கவே செய்கின்றனர். பொதுவான சந்தேகங்கள் முதற்கொண்டு வினோதமான விளக்கங்கள் வரை எண்ணற்ற எப்படி வீடியோக்கள் இன்டெர்நெட்டில் கொட்டிக் கிடக்கின்றன. சமையல் கலை குறிப்புகள், அழகு குறிப்புகள், இசை குறிப்புகள் என்று எண்ணற்ற பிரிவுகளின் கீழ் காட்சி வழியே விளக்கமளிக்கும் வீடியோக் கள் தினந்தோறும் இன்டெர் நெட்டில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு தண்ணீரில் விழுந்து விட்ட செல்போனை எப்படி சரி செய்வது எனும் கேள்வி எழுகிறது என வைத்துக் கொள்வோம். அந்த செல்போனை எப்படி தண்ணீரிலிருந்து எடுத்து, மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என்பதை அழகாக விளக்கும் வீடியோ குறிப்பை யாராவது ஒருவர் பதிவேற்றி இருக்கலாம். அதனை பார்த்து செல்போனை மீண்டும் இயங்க வைப்பது மிகவும் சுலபமானது. இதில் என்ன குறிப்பிடத்தக்க அம்சம் என்றால் இத்தகைய வீடியோக்கள் இன்டெர்நெட்டில் நிறைந்திருப் பதோடு அவற்றை இடம் பெற வைத்த வாய்ப்பு தரும் இணையதளங்களும் அதிகரித் திருப்பதோடு இந்த வசதி சாமானியர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு பணம் சம்பாதிப்பதற்கான வழியாகவும் மாறி வருகிறது என்பதே. அமெரிக்காவை சேர்ந்த கதேஷா என்பவர் இது போன்ற 90க்கும் மேற்பட்ட வீடியோ விளக்கங்களை மெட்டாகேப் எனும் தளத்தில் சமர்ப்பித்துள்ளார். கோக் குளிர்பானத்தை இரண்டே நிமிடத்தில் சில்லிட்டு போக வைப்பது எப்படி? கம்ப்யூட்டரை எடுத்த எடுப்பிலேயே இயக்குவது எப்படி உள்ளிட்ட விளக்கங்களை அவர் சமர்ப்பித்திருக்கிறார். இந்த விளக்கங்கள் லட்சக்கணக்கா னோரால் விரும்பி பார்க்கப் பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சாதாரண டார்ச் லைட்டை கொண்டு லேசர் கதிரை உருவாக்குவது எப்படி எனும் விளக்கப் படத்தை கிட்டத் தட்ட 18 லட்சம் பேர் பார்வையிட்டிருக்கின்றனர். மெட்டாகேப் இணையதளம் யூ டியூப்பை போல வீடியோ பகிர்வுக்கான தளம்தான் என்றாலும் பதிவேற்றப் படும் ஒவ்வொரு வீடியோவுக்கும் இந்த தளம் இணையவாசிகளுக்கு காசு கொடுக்கிறது. இதனால் கதேரா ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இந்த தளத்தின் மூலம் சம்பாதித்திருக்கிறார். கதேரா மட்டுமல்ல பல இணையவாசிகள் இப்படி வீடியோ விளக்கங்களை சமர்ப்பித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். சந்தேகத்திற்கு விடை காண இன்டெர்நெட்டை நாடும் பழக்கம் அதிகமாக இருப்பதால் வீடியோ விளக்கங்களை இணையவாசிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்த தளங்கள் சாமானியர்களுக்கு எல்லாம் நிபுணர் எனும் அந்தஸ்தை பெற்றுத் தந்து வருவாயும் ஈட்டித் தருகிறது. எல்லாம் எப்படி எனும் கலையால்தான்! |