Category: தேடல்

எலான் மஸ்க் புரோ, கிரோகிபீடியா என்னா ஆச்சு?

கூகுள் தேடல் அதிருப்திக்கு உள்ளாக்கும் தருணங்கள் அநேகம் இருக்கின்றன. அதே நேரத்தில், கூகுள் தேடல் அதன் செல்வாக்கிற்கு ஏற்ப செயல்படும் தருணங்களும் உண்டு. குரோகிபீடியா (Grokipedia ) தொடர்பான தேடல் ஒரு உதாரணம். குரோகிபீடியா என தேடினால் கூகுள், விக்கிபீடியாவின் குரோகிபீடியா கட்டுரையை முதல் முடிவாகவும், இரண்டாவது முடிவாக குரோகிபீடியாவையும் முன்னிறுத்துகிறது. குரோகிபீடியாவுக்கான தேடலுக்கு, குரோகிபீடியா தளத்தை முதலில் குறிப்பிடாமல், விக்கிபீடியா கட்டுரையை முன் வைத்து, குரோகிபீடியா தளத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளியிருப்பது புருவங்களை உயர்த்தலாம். நிற்க, […]

கூகுள் தேடல் அதிருப்திக்கு உள்ளாக்கும் தருணங்கள் அநேகம் இருக்கின்றன. அதே நேரத்தில், கூகுள் தேடல் அதன் செல்வாக்கிற்கு ஏற்...

Read More »

அந்த காலத்தில் சாட்ஜிபிடி இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில், பழைய தேடியந்திரம் ஆஸ்க் ஜீவ்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆஸ்க்.காம் அண்மையில் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. ஆஸ்க்ஜீவ்ஸின் அடுத்த வடிவம் தான் ஆஸ்க்.காம் என்பதால் இதன் முடுவிழா இணைய வரலாற்றில் முக்கிய நிகழ்வு தான். இணைய தேடலில் ஒரு பெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்க்.காம் மூடப்படுவது அத்தனை பெரிய விஷயமா என்று கேட்கலாம். ஆஸ்க்.காமின் மூல வடிவமான ஆஸ்க்ஜீவ்ஸ், இணையத்தில் கேள்வி பதில் வடிவில் தேடல் […]

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில், பழைய தேடியந்திரம் ஆஸ்க் ஜீவ்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் நினை...

Read More »

நீங்கள் ஏன் மாற்று தேடலில் ஈடுபட வேண்டும்?

பயனாளிகளை பின் தொடராமல் அவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக சொல்லும் மோஜீக் தேடியந்திரத்தை நீங்கள் அவசியம் பயன்படுத்திப்பார்க்க வேண்டும். மோஜீக்கை மகத்தான தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கவனிக்க வேண்டிய மாற்று தேடியந்திரம். அந்த காரணத்தினாலேயே பயன்படுத்திப் பார்க்க வேண்டும். மோஜீக்கின் தேடல் முடிவுகள் கூகுளில் இருந்து வேறுபட்டிருக்கிறது. இந்த வேறுபாடு எந்த அளவு பயனுள்ளது என்பது ஒரு பக்கம் இருக்க, சில நேரங்களில் மாற்று தேடியந்திரங்களை பயன்படுத்தி பார்ப்பது அவசியம். அதிலும் குறிப்பாக ஒப்பீடு தேவைப்படும் […]

பயனாளிகளை பின் தொடராமல் அவர்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிப்பதாக சொல்லும் மோஜீக் தேடியந்திரத்தை நீங்கள் அவசியம் பயன்பட...

Read More »

வாழ்க வாத்து தேடியந்திரம்

டக்டக்கோ சிறந்த தேடியந்திரம் என்று ஏற்றுக்கொள்வதில் பெரும்பலானோருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், டக்டக்கோ சிறந்ததொரு மாற்று தேடியந்திரம் என்று முன்னிறுத்தப்படுவதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்ல. டக்டக்கோவும் தன்னை மாற்று தேடியந்திரமாகவே முன்னிறுத்திக்கொள்கிறது. – பயனாளிகளின் தனியுரிமையை மதிக்கும், பாதுகாக்க முற்படும் தேடியந்திரம்! மாற்று தேடியந்திரம் என்ற வகையில் டக்டக்கோ பற்றி ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். இப்போது, ஏஐ யுகத்தில் டக்டக்கோ தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் விதம் கவனத்தை ஈர்ப்பதால் மீண்டும் ஒரு முறை எழுதத் தோன்றுகிறது. […]

டக்டக்கோ சிறந்த தேடியந்திரம் என்று ஏற்றுக்கொள்வதில் பெரும்பலானோருக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம். ஆனால், டக்டக்கோ சிறந்தத...

Read More »

உலகின் முதல் சர்ச் இஞ்சின் எது தெரியுமா?

ஆர்ச்சி தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமாக கருதப்படுகிறது. ஆலன் எம்டேஜ் இந்த தேடியந்திரத்தை உருவாக்கினார். 1990 அறிமுகமான ஆர்ச்சி, தேடியந்திரம் என்றால் அறியப்படும் கூகுளுக்கு முன் உருவானது என்பது மட்டும் அல்ல, வெப் என அறியப்படும் வலைக்கு முன் உருவான தேடியந்திரம். ஆர்ச்சி, எப்டிபி கோப்புகளை மட்டுமே தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. நவீன தேடியந்திரங்களோடு ஒப்பிடும் போது ஆர்ச்சி தேடிய கோப்புகள் எண்ணிக்கை அற்ப சொற்பம் என்றாலும்,கோப்புகளை தானியங்கி முறையில் திரட்டி, பட்டியலிட்டு அவற்றிலிருந்து பொருத்தமானதை […]

ஆர்ச்சி தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமாக கருதப்படுகிறது. ஆலன் எம்டேஜ் இந்த தேடியந்திரத்தை உருவாக்கினார். 1990 அறிமுக...

Read More »