மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே.
மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்ட கதைகளும் அநேகம் இருக்கின்றன. இதன் விளைவாக மைஸ்பேஸ் சர்ச்சைக்கு இலக்காகி இந்த போக்கிற்கு கட்டுப் பாடு தேவை என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைகளை மீறி மைஸ் பேசின் சக்தி அற்புதமானதாக இருக்கிறது. புதிய நண்பர்களை தேடித்தரும் அதன் ஆற்றலை எந்த ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் ஆதரவு திரட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். முதன் முதலில் இதனை உணர்ந்து பயன்படுத்திக் கொண்டது இசைக் கலைஞர்கள் தான். புதிய பாடகர்கள் மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பக்கத்தை அமைத்து அதன் மூலம் தங்களுக்கான ரசிகர்களை தேடிக் கொள்வதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றிக்கதைகள் மைஸ்பேஸ் தளத்தை மிகவும் பிரபலமாக்கியதன் விளைவாக பல துறையை சேர்ந்தவர் களும் மைஸ்பேசில் இடம்பிடித்து வருகின்றனர். குறிப்பாக பல எழுத்தாளர்கள் மைஸ்பேஸ் பக்கம் மூலம் வாசகர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். மைஸ்பேஸ் இதற்கான சுலபமான மற்றும் செலவு குறைந்த வழியாக கருதப்படுகிறது.
இந்த பின்னணியில் தான் மைஸ்பேஸ் தளத்துடன் புகழ்பெற்ற ஹார்ப்பர் அண்டு காலின்ஸ் பதிப்பகம் கைகோர்த்துள்ளது. மைஸ்பேஸ் உறுப்பினர்கள் உதவியோடு புத்தகம் ஒன்றை வெளியிட இந்த பதிப்பகத்தின் சிறுவர் புத்தக பிரிவு தீர்மானித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான இந்த புத்தகத்தை பத்திரிகையாளரான ஜேகா டாடே என்பவர் எழுத இருக்கிறார். இந்த புத்தகம் தொடர் பான கருத்துக்களை மைஸ்பேஸ் உறுப்பினர்கள் தெரிவிக்கலாம். மைஸ்பேசில் எண்ணற்ற சமூகங்கள் இருக்கின்றன. இவற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை சமூக நோக்கில் விவாதிப்பதற்காக என்றே அவர் பிளேனட் என்னும் சமூகமும் இருக்கிறது. இந்த பகுதியில் தான் புத்தகத்திற் கான ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டும். இணையவாசிகள் வழங்கும் ஆலோசனைகளில் இருந்து மிகச் சிறந்த 40 கருத்துக்களை தேர்வு செய்து புத்தகத்தில் பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக்கொள்வது என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வு நூல்களில் ஆங்காங்கே நிபுணர்களின் கருத்துக் கள் மேற்கோள் காட்டப்படும் அல்லவா, அதேபோல இணைய வாசிகள் சமர்ப்பிக்கும் கருத்துக்கள் எடுத்தாளப்படும். புத்தகத்தின் முடிவில் ஆலோசனை வழங்கியவர்களின் பட்டியலும் இடம் பெற்றிருக்கும். ஆலோசனைகள் ஒரு வரியாகவும் இருக்கலாம்! ஒரு பத்திரிகையாகவும் இருக்கலாம். மைஸ்பேஸ் தளத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான டாம் ஆண்டர்சன் இந்த திட்டத்தை குறிப்பிடத்தக்க முயற்சி என்று வர்ணிக்கிறார். இளைஞர்களை சுற்றுச்சூழல் விவாதத்தில் ஆர்வம் கொள்ள வைக்க இந்த புத்தக திட்டம் உதவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை யோடு சொல்கிறார். மைஸ்பேஸ் மூலம் உருவாக உள்ள முதல் புத்தகமாகவும் இது அமையும் என்கிறார். ஏற்னவே மைஸ்பேஸ் எம்.டிவியோடு இது போன்ற ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டது. தற்போது பதிப்பக நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது. இதனிடையே மைஸ்பேஸ் மற்றொரு கூட்டு முயற்சியையும் அறிவித்திருக் கிறது. தற்போது வீடியோ கேம்கள் அனைத்து தரப்பினரிடையேயும் பிரபலமாகி வருவதால், வீடியோ கேம்களை உருவாக்குவதற்காக என்று வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான ஒபிரான் மீடியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சியில் 5 நிமிடத்தில் விளையாடி முடிக்க கூடிய குறைந்த நேரத்திலான வீடியோ கேம்கள் உருவாக்கப்பட உள்ளன. போகிற போக்கில் ஆடக் கூடிய எளிமையான கேம்களாக இவை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மைஸ்பேஸ் பற்றி மற்றொரு செய்தி. பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்க்ஸ் தனது ரசிகர்களுக்காக என்று மைஸ்பேஸ் தளத்தில் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில் எலக்ட்ரிக் கள் தொடர்பான தனது கருத்துக்களை கூறி அதற்கு தெரிவித்துள்ளார். |