அது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் மனதை பறிகொடுத்து விடுகிறார். அந்த பெண் யார்?, அவரது பெயர் என்ன?, எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவள் அவரது மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்துவிட்டு, ரெயிலிலிருந்து இறங்கி கூட்டத்தோடு, கூட்டமாக கலந்து விடுகிறார்.
|
|
. | |
கண்டதும் காதல் கொண்டு விட்ட அந்த வாலிபர், தனது மனதை கொள்ளை கொண்ட அந்த பெண்ணை தேடத் தொடங்குகிறார்… இது, நம்ப முடியாத கதை அல்லவே, தமிழ் சினிமாவில் பார்த்து சலித்துப் போன கதை தானே என்று அலுத்துக் கொள்வ தற்கு முன் சில தகவல்கள்.
இது நிஜத்தில் நடந்த கதை. அந்த வாலிபரின் பெயர் பாட்ரிக் மொபர்க். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக் லைன் பகுதியை சேர்ந்தவர். 21 வயதான பாட்ரிக் அண்மையில் நியூயார்க் ரெயிலில் சென்றபோது தான் இந்த பரவசமான அனுபவத்துக்கு ஆளானார். அவர் மனதை பறிகொடுத்த இளம்பெண் அந்த பயணத்தின் போது தனது டைரியில் குறிப்புக்களை எழுதியிருந்தார். அப்படியே அவரது சித்திரத்தை பாட்ரிக்கின் மனதில் எழுதி வைத்து விட்டு போய்விட்டார். அதாவது, தனது காதலியை தேடி கண்டுபிடித்த நியூயார்க் வாசிகளின் உதவியைக்கேட்டு nygirlofmydreams.com’ என்னும் இணையதளத்தை அமைத்தார். இளம்பெண் அன்று அணிந்தி ருந்த உடையின் நிறத்தையும் குறிப்பிட்டிருந்த அவர், தன்னுடைய நிலையை சுருக்க மாக ஆனால் அழுத்தமாக குறிப் பிட்டு அதன் கீழே செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந் தார். இந்த பெண்ணை யாராவது பார்த்தால் எனக்கு சொல்லுங்கள் என்று அவர் காவியமயமான வேண்டுகோளையும் வைத்து இருந்தார். இதன்பிறகு நம்பமுடியாத வேகத்தில் எல்லாம் நடந்தது. இந்த தளம் அரங்கேறிய சில மணி நேரங்களில் எல்லாம் பேட்ரிக் கின் செல்போன் இடை விடாமல் ஒலிக்கத் தொடங்கியது. அவரது செல்போனில் தொடர்பு கொண்டசில இளம்பெண்கள் தான் அந்த பெண் அல்ல. ஆனால் அவளுக்கு பதிலாக தன்னைக் காதலிக்கலாமே என்று கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பாட்ரிக் அவரது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு முதல் சந்திப்புக்கு நாள் குறித்திருக்கிறார். இது நம்ப முடியாத ஆச்சர்யம். ஒரே வார காலத்தில் பெயர் தெரியாத தன்னுடைய காதலியை கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை என்று மகிழ்ச்சியோடு பாட்ரிக் கூறுகிறார். இதனிடையே தன்னுடைய இணையதளத்தில் இந்த தகவலை குறிப்பிட்டு உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி, ஆனால் இனிமேல் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கி றார். எல்லோர் நலன் கருதியும் இந்த காதல் தேடல் படலத்தை இத்தோடு முடித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். தனது காதலியை சந்தித்து பேசிய பிறகு என்ன ஆகிறது என்பதையாவது அவர் இணையதளத்தில் தெரிவிப்பாரா என்று நியூயார்க் வாசிகள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். |