நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் சாத்தியம் ஆக முடியாத அதிசயம் அல்ல. துணிச்சலும், புதிய இடங்களை பார்ப்பதில் பரவசமாகும் ஆர்வம் இருந்தால் நீங்களும் கூட ஊர் ஊராக சென்றபடி அங்கிருந்தே வேலை பார்க்கலாம். அல்லது தொழில் செய்யலாம்.
|
|
. | |
மேலை நாட்டினர் பொதுவாகவே பயண பிரியர்களாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் இப்படி துணிந்து நாடோடி அதிபர்களாகியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலம் உழைத்து விட்டு சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு மாதக்கணக்கில் சுற்றுலா செல்லும் பழக்கம் மேலை நாட்டினருக்கு இருக்கிறது.
உலக அனுபவத்துக்கு இது உதவுகிறது என்றாலும், ஒரு சிக்கல் என்னவென்றால் பயணம் முடித்து திரும்பி வரும்போது, கையில் இருந்த காசெல்லாம் கரைந்திருக்கும். இந்த காரணத்துக்காகவே பலர் தாங்கள் செல்லும் இடத்துக்கு தங்களது வேலையையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். இன்டெர்நெட் வசதி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பணி செய்வது சாத்தியமாவதால், இதில் எந்த பிரச்சனையும் இல்லை. |
வீட்டிலிருந்தே வேலை செய்வது என்பது பழக்கமான ஒரு கருத்தாக்கம்தானே. இன்டெர்நெட் இதனை சுலபமாக்கி தந்திருக்கிறது. அலுவலகம் பக்கமே தலை வைத்துப் படுக்காமல், இமெயில் மூலமே தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்து விடும் நபர்கள் எல்லாம் இருக்கின்றனர்.
இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று வெவ்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கிருந்த படியே வேலை செய்யும் ஆர்வமும், துணிச்சலும் அந்தோனி பேஜ் போன்றோருக்கு இருக்கிறது.
பல நாடுகளில் சுற்றியபடி தன்னுடைய இணைய வடிவமைப்பாளர் வேலையை சிறப்பாக செய்து வரும் அவர், தன்னைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளத்தையும் அமைத்திருக்கிறார். ஒர்க்கிங் நோ மேட்ஸ் டாட் காம் என்பது அந்த தளத்தின் முகவரி. அதாவது பணிபுரியும் நாடோடிகள் என்ற பொருள் வரும்.
இந்த தளத்தில் அவர் தனது பயண, பணி அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிதாக இத்தகைய வாழ்க்கையை துவங்க இருப்பவர் களுக்கான ஆலோசனைகளையும் அளித்து வருகிறார்.
புதிய நாடுகளுக்கு செல்லும்போது விசா பெறுவது எப்படி? அங்கே தங்குமிடங்கள் எப்படி இருக்கும், உள்ளூர் மக்கள் எவ்வாறு பழகுவார்கள் போன்ற விவரங்களையெல்லாம் அவர் பதிவு செய்து வருகிறார்.
பேஜை போலவே ஊர் சுற்றியபடி சொந்தமாக தொழில் செய்யும் மற்றொரு நபர் கனடாவைச் சேர்ந்த சைமன் லீ பைன். வாடிக்கையாளர்கள் தன்னை தொடர்புகொள்ளும் போதெல்லாம் இப்போது எந்த நாட்டில் இருக்கிறீர்கள், எந்த இடத்தைப் பார்த்தீர்கள் என்று தவறாமல் விசாரிப்பதாக அவர் கூறுகிறார்.
ஊர் சுற்றியபடி இருப்பது அவருக்கு ஒரு கூடுதல் தகுதியாகியிருப்பதை இந்த விசாரிப்பு உணர்த்துகிறது அல்லவா? அது மட்டுமல்லாமல் வெளியூரில் தங்கியிருக்கும்போது, உண்மையில் செலவு குறைந்து கூடுதலாக சேமிக்க முடிகிறது என்கிறார் அவர்.
பேஜே கூட லண்டனில் இருந்ததை விட ஊர் சுற்றி பார்க்கும் இந்த காலத்தில் அதிகம் சம்பாதித்து அதிகம் சேமித்திருப்பதாக தெரிவிக்கிறார். அதோடு, புதிய இடங்களை பார்க்கும் அனுபவம் மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தை எதிர்கொள்ள நேர்வது உங்களது சிந்தனையை செழுமையாக்கி துடிப்போடு செயல்பட வைக்கிறது.
இந்த அனுபவம் எப்போதுமே புத்துணர்ச்சி மிக்கவராக, செல்வ செழிப்பு மிக்கவராக உணரவும் வைக்கிறது என்கிறார் பேஜ். ஆக, நிச்சயம் நீங்களும் துணிந்து நாடோடி அதிபராகலாம். வெளியே இருந்தபடி பணி செய்வதற்கு ஏற்ற துறையை தேர்வு செய்து கொண்டால், போதுமானது.
இன்டெர்நெட் சார்ந்த வேலை என்றால் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதற்காக தொழில் நுட்ப கில்லாடிகள் மட்டும்தான் இப்படி வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு தெரிந்த வேலையை கூட இன்டெர் துணையோடு நிறைவேற்றிக் கொள்ளும் வழியை கண்டு பிடித்து விடலாம்.
உதாரணத்துக்கு நீங்கள் பங்குச் சந்தை ஆலோசனை வழங்குபவர் என்றால், எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பங்குச் சந்தை நடவடிக்கைகளை கவனித்து உங்களது வாடிக்கையாளர்களுக்கு உரிய ஆலோசனையை வழங்க முடியும் தானே.
இப்படி உங்களுக்கு ஏற்ற வழியை நீங்களும் தேடிக்கொள்ளலாம்.