கம்ப்யூட்டர்கள் பொறமைப்பட தொடங்கியிருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த செய்தி உங்களுக்கு தெரி யாமல் இருந்தாலும் பரவாயில்லை. காரணம் கம்ப்யூட்டர்கள் வெகு அண்மையில்தான் பொறாமைப்பட தொடங்கி இருக்கின்றன. பொறாமைப்படும் கம்ப்யூட்டர் பற்றி முதல் செய்தி சுவீடனிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி உள்ளது. |
|
. | |
நிச்சயம் இது வியப்பை அளிக்கும் செய்திதான். கம்ப்யூட்டர்களுக்கு சுட்டுப் போட்டாலும் சுயமாக சிந்திக்கும் திறன் வராது என்று கருதப்படுகிறது. அதனையும் மீறி கம்ப்யூட்டர்களுக்கு சொற்பமாக வேனும் சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தி தருவதற்காக செயற்கை அறிவுத் துறை நிபுணர்கள் மிகுந்த நம்பிக்கையோடு தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
எந்தவிதத்தில் எல்லாம் இதனை சாத்தியமாக்கலாம் என்று அவர்கள் அறிவின் எல்லைக்கு சென்று விரிவான ஆய்வுகளில் ஈடுபட்டிருக் கின்றனர். இந்த ஆய்வில் இன்னமும் பிள்ளை பருவத்திலேயே இருக்கும் நிலையில், கம்ப்யூட்டர்கள் பொறாமைப்படுவது பற்றி செய்தி அடிபட தொடங் கியிருக்கிறது. அதாவது கம்ப்யூட் டர்கள் சிந்திக் கின்றனவோ இல்லையோ பொறாமைப்பட தொடங்கி விட்டன. லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்று அதன் உரிமையாளர் மீது கோபம் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது. கம்ப்யூட்டரால் அவருக்கு ஏற்பட்ட காயம் புகைப்படங்களில் பளிச்சென தெரிகிறது. இதே போல மேலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவையெல்லாம் கம்ப்யூட்டர்கள் பொறாமை கொண்டிருப்பதை உணர்த்துகின்றன. இந்த எல்லா சம்பவங்களுக்கும் பொதுவான அம்சம் ஒன்று இருக்கிறது. அது நோக்கியா வின் புதிய செல்போன் ஆகும். பொறாமைப்படும் கம்ப்யூட்டர்கள் பற்றி கேள்விப்பட்டவுடன் ஆச்சரிய மடைந்தவர்கள் கூட இப்போது இதன் பின்னே உள்ள சூட்சமத்தை புரிந்து கொண்டிருக்கலாம். அப்படி புரிந்து கொள்ள முடியாதவர்களுக்காக அந்த மர்மத்தை நேரடியாகவே விளக்கி விடலாம். இந்நிலையில், நோக்கியா ஐ போன் பரபரப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய புதிய போனை மிகவும் வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதற்கான இந்நிறுவனம் மிகவும் புதுமையான விளம்பர யுக்தியை வடிவமைத்திருந்தது. கம்ப்யூட்டர்கள் பொறாமைக் கொண்டு அதன் உரிமையாளர்களை தாக்குவதாகவும், இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் இந்த சம்பவங்கள் அனைத்துக்கும் நோக்கியாவின் என்.95 போனே காரணமாக இருப்பதற்காகவும் அந்த விளம்பரம் தெரிவிக்கிறது. நோக்கியாவின் போன் ஏன் இதற்கு காரணமாக அமைய வேண்டும். இப்படியொரு கேள்வி எழுந்தால், லேப்டாப் மற்றும் இதர கம்ப்யூட்டர் களால் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நோக்கியாவின் புதிய போன், கம்ப்யூட்டருக்கு உரித்தான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதே காரணம் என்று நோக்கியா குறிப்பால் உணர்த்த விரும்புகிறது. இந்த போன் ஸ்மார்ட் போன் ரகத்தில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது. ஆடியோ வசதி, வீடியோ வசதி, கேமரா போன் வசதி, ஜிபிஎஸ் வசதி என்று அனைத்து அம்சங்களையும் உள்ளடக் கியதாக கம்ப்யூட்டரை தேவையில் லாமல் செய்து விடக் கூடிய அந்த போன் உருவாக்கப் பட்டிருப்பதாக நோக்கியா தெரிவிக்கிறது. அதனால்தான் லேப்டாப் கம்ப்யூட்டர் களுக்கு இந்த போனை பார்த்தால் பொறாமை ஏற்பட்டு விடுகிறதாம். அந்த பொறாமையின் காரண மாகவே அவை தங்கள் உரிமை யாளர்களை தாக்குகின்றனவாம். இப்படியொரு விளம்பர யுக்தியை வகுத்து அது பற்றி முழு விவரம் அளிக்க குளோபல் வார்னிங் டாட் காம் எனும் இணையதளத்தையும் நோக்கியா அமைத்திருக்கிறது. அந்த இணையதளத்தில் பொறாமைப்படும் போன்கள் அனைத்தும் தாக்குதல் பற்றி பார்க்க முடியும். அப்படியே நோக்கியாவின் புதிய போன் பற்றியும் சுவாரசியமான விதத்தில் தெரிந்து கொள்ள முடியும். |