நீங்களும்தான் தினந்தோறும் ரெயிலில் போய் வருகிறீர்கள். கையில் செல்போன் வைத்திருக் கிறீர்கள். ஆனால் இத்தாலியை சேர்ந்த ராபர்ட் பெர்னகோவை போல உங்களால் செய்ய முடியவில்லையே! அப்படி என்ன அவர் செய்து விட்டார் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர் ரெயில் பயணத்திலேயே ஒரு நாவலை எழுதி முடித்து பதிப்பித்து விட்டார். பேனாவை கூட தொடாமல் அந்த நாவலை செல்போன் மூலமே எழுதி முடித்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
|
|
. | |
அதாவது செல்போனில் சர்வ சகஜமாக இருக்கும் எஸ்எம்எஸ் வசதியை பயன்படுத்திக் கொண்டு அவர் நாவலை எழுதியிருக்கிறார். இதன் மூலம் உலகிலேயே செல்போன் மூலம் முதன் முதலில் நாவலை எழுதி வெளியிட்டவர் எனும் சிறப்பை அவர் பெற்றிருக்கிறார்.
ராபர்ட் பெர்னகோ செய்திருப்பது உண்மையிலேயே மெச்சத்தக்க விஷயம்தான். ஆனாலும் கூட முதன் முதலில் செல்போன் நாவலை எழுதியவர் எனும் அடைமொழிக்கு அவரை சொந்தக்காரராக்குவது சரியா என்று கேட்க தோன்றலாம். அதிலும் குறிப்பாக சீனாவில் சில ஆண்டுகளுக்கு முன்னரே எஸ்எம்எஸ் நாவல் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அறிந்திருப்பவர்கள், நிச்சயம் இந்த கேள்வியை கேட்பார்கள். நம் நாட்டில் கூட மலையாள எழுத் தாளர் ஒருவர் எஸ்எம்எஸ்சில் நாவல் எழுதி அசத்தியிருக்கிறார். எனினும் ராபர்ட் பெர்னகோ விஷயத்தில் என்ன சிறப்பு என்றால், மனிதர் எஸ்எம்எஸ் வசதியை பயன்படுத்தினாலும், எஸ்எம்எஸ் பாணியில் நாவலை எழுதாமல் முழுநீள நாவலாக அதனை எழுதி முடித்திருக்கிறார். அதாவது இதுவரை எழுதப்பட்ட எஸ்எம்எஸ் நாவல்கள் அனைத்தும் எஸ்எம்எஸ்க்கே உரித்தான குறுக்கெழுத்து பாணியில் (இலக்கண பிழையும் இருக்கலாம்) எழுதப் பட்டவை. எஸ்எம்எஸ்சின் வரம்பு மற்றும் அது ஏற்படுத்தி தரும் புதிய வாய்ப்பை பிரதானமாக கொண்டு இந்த படைப்புகள் உருவாக்கப் பட்டன. ராபர்ட் பெர்னகோ எஸ்எம்எஸ் பாணியில் நாவலை எழுதாமல் நாவல் எழுத எஸ்எம்எஸ்சை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஐடி துறையில் வேலை பார்க்கும் இளைஞரான பெர்னகோ மிகவும் பிசியானவர். வேலையில் மூழ்கி கிடக்கும் அவருக்கு எழுத்தாளராக வேண்டுமென்ற ஆர்வமும் உண்டு. அறிவியல் புனைக்கதைகளில் அவருக்கு மிகுந்த பற்று உண்டு. அறிவியல் புனைக்கதை வரிசையில் நாவல் ஒன்றை எழுத அவர் மனதில் ஒரு கதைகருவும் உருவாகி இருந்தது. ஆனால் என்ன பிரச்சனை என்றால், வீட்டுக்கும், வேலைக்குமாக அலைந்து கொண்டிருந்த அவருக்கு உட்கார்ந்து எழுததான் நேரமில்லை. இருப்பினும் மனிதர் அதனை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கவில்லை. தினந்தோறும் அவர் நம்மை போலவே ரெயிலில் வேலைக்கு சென்று வருபவர். ரெயில் பயணங்க ளில் செய்வதறியாமல் போரடித்து அமர்ந்திருக்கும் செயலை செய்யாமல் அந்த நேரத்தில் நாவலை எழுத தீர்மானித்தார். இங்கு இருப்பது போல இத்தாலியில் ரெயில்கள் நெரிசலாக இல்லாமல், மிகவும் சொகுசாக இருக்கின்றன என்றாலும், ரெயிலில் அமர்ந்தபடி நாவலை எழுத முடியுமா என்ன? பெர்னகோ அப்படி நினைக்க வில்லை. கையில் செல்போன் இருக்க என்ன கவலை என்று நினைத்தார். தான் எழுத உத்தேசித்திருந்த நாவலின் அத்தியாங்களை சிறுசிறு பத்திகளாக பிரித்து ஒவ்வொரு பத்தியாக எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்து கொண்டார். பின்னர் ஒவ்வொரு நாளும் இந்த எஸ்எம்எஸ்களை தனது கம்ப்யூட்டர் மாற்றி கொண்டு விடுவார். “சகபயணிகள்’ எனும் பெயரிலான அந்த நாவல் இப்படித்தான் உருவானது. சரி! நாவலை எழுதியாகி விட்டது. அதனை வெளியிடுவது எப்படி? இன்டெர்நெட் யுகத்தில் இந்த கேள்வி எந்த அறிமுக எழுத்தாளரை யும் வாட்ட வேண்டியதில்லை. இருக்கவே இருக்கிறது சுயபதிப்பு சேவை தளமான லூலு டாட் காம். இணையவாசிகள் தங்கள் படைப்புகளை இந்த தளத்தின் மூலம் புத்தகமாக வெளியிட்டு, இந்த தளத்தின் மூலமே வாசகர்களுக்கு விற்பனை செய்து கொள்ளலாம். பதிப்பகங்களின் தயவோ, எந்த விதமான முதலீடோ இல்லாமல் புத்த கத்தை பதிப்பித்து தேவைக் கேற்ப அவற்றை இந்த தளத்தின் மூலமே அச்சிட்டு விற்பனையும் செய்யலாம். இந்த வசதியை பெர்னகோ மிக அழகாக பயன்படுத்திக் கொண்டு தனது நாவலை வெளி யிட்டார். இதன் மூலம் ரெயிலில் பயணம் செய்யும் மற்ற வாசகர்களுக் கெல்லாம் அவர் முன்னோடியாக இருக்கிறார். |

0 Comments on “செல்லில் எழுதிய நாவல்”
J.Hari Krishnan
MIGHAVUM PARATTAPADA VENDIA SAITHI.
arun
நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/