இசைக்குழுக்கள் புதிய பாடல் ஆல்பங்களை வெளியிடு வதொன்றும் புதிய விஷயமல்ல. பொதுவாக இசைக்குழுக்கள் புதிய ஆல்பங்களை வெளியிடுவது, இந்த குழுவின் ரசிகர்களால் எதிர்பார்க்கப் படும் நிகழ்வாக இருக்கும். புதிய ஆல்பம் வெளிவரும்போது கொண்டாடி மகிழ்வது என்பது அந்தக் குழுவின் ரசிகர்களுக்கு மட்டுமே இயல்பாக இருக்கும்.
|
|
. | |
மிகப்பெரிய இசைக்குழுக்கள் என்றால் பத்திரிகை மற்றும் மீடியா வெளிச்சத்தால் பரபரப்பு அதிகமாகி பலரும் எதிர்பார்த்து அந்த ஆல்பம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அனைவர் மத்தியிலும் ஒரு கொண்டாட்ட மனோபாவம் ஏற்பட்டு விடும். இசை உலகத்தின் மிகவும் பரிட்சயமான இந்த வாடிக்கை யான நிகழ்வுகளை விட்டுத் தள்ளுங்கள் உள்ளபடியே இசைக்குழு ஒன்று வெளியி ட்டுள்ள ஆல்பம் உண்மை யான ரசிகர்களையெல்லாம் கொண் டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அந்த குழுவின் பாடல் ஆல்பம் வெளிவந்த விதத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்கள் என்றால் நீங்களும் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொள்வீர்கள். அப்படி என்னஅந்த இசைக்குழுவிடமோ, அதை வெளியிட்டுள்ள ஆல்பத்திலோ விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். முன்னேறத் துடிக்கும் எத்தனையோ திறமையான இசைக்குழுக்களில் செகண்ட் பெர்சன் குழுவும் ஒன்று. ஆம், அதுதான் அந்த குழுவின் பெயர். புதிய இசைக்குழுவுக்கு ஏற்ப அதன் சமீபத்திய ஆல்பம் கேட்டு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இல்லை யென்றால் ரசிகர்களை கவர முடியுமா? அந்த ஆல்பத்தின் இசைத் தகுதியை விட்டு விடுங்கள், அந்த ஆல்பம் வெளியிடப்பட்ட விதம்தான் நம்முடைய கவனத்துக்கும், பாராட்டுக்கும் உரியது. அந்த ஆல்பம் ரசிகர்களால் ரசிகர்களுக்காக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பதே விஷயம். அதாவது இந்த ஆல்பத்தை ரசிகர்களே புரவலர் களாக நின்று ஆதரித்திருக்கின்றனர். ஆல்பத்தை தயாரித்தவர்கள் ரசிகர்கள்தான். இசைக்கலைஞர்களுக்கும், ரசிகர் களுக்குமிடையே பாலமாக திகழ்ந்து, இடைத்தரகர்கள் இல்லாமல் சுதந்திரமான நோக்கில் இசையை வளர்க்கும் உத்தேசத்தோடு துவக்கப் பட்ட புதுமையான இணையதளம் செல் ஏ பேண்ட் பற்றி இந்த பகுதியில் அது அறிமுகமான காலத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. ரசகர்களின் பங்குச்சந்தை என்று குறிப்பிடப் படக்கூடிய அந்த தளத்தில், தாங்கள் விரும்பும் புதிய குழுக்கள் புதிய ஆல்பத்தை தயாரிக்க ரசிகர்கள் நிதியுதவி செய்யலாம். ஒவ்வொரு ரசிகரும் குறிப்பிட்ட அளவு தொகையைக் கொடுத்து தாங்கள் ஆதரிக்கும் குழு ஆல்பத்தை தயாரித்து வெளியிட உதவி செய்யலாம். அதன் பிறகு ஆல்பம் விற்பனையில் வரும் வருமானத்தில் ரசிகர்களுக்கும் பங்கு கிடைக்கும். இவ்விதமாக இசைத்தட்டு நிறுவனங்களின் தயவு இல்லாமல் ரசிகர்களை நம்பி மட்டுமே இசைக் குழுக்கள் பிழைப்பு நடத்தலாம் என்னும் நம்பிக்கையோடு இந்த தளம் உருவாக்கப்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பிரிட்டனைச் சேர்ந்த செகண்ட் பெர்சன் இசைக்குழு தன்னுடைய ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளது. இது இந்த இளம் குழுவின் இரண்டாவது பாடல் ஆல்பம். தி எலிமண்ட்ஸ் என்னும் பெயரில் இந்தஆல்பம் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பங்குகளை வாங்கி இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். 6 மாத காலத்தில் 50 ஆயிரம் டாலர்கள் திரட்டப்பட்டு இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிதி திரட்டும் நடவடிக்கை மிகுந்த சுவாரசியமானதாக இருந்தது என்று இந்த குழுவைச் சேர்ந்த மற்றொரு இசைக் கலைஞர் தெரிவித்துள்ளார். மற்ற புதிய குழுக்கள் இந்த முறையை பின்பற்றுவதற்கு ஊக்கமளிப்பதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ரசிகர்களே இசைக்குழுவை உருவாக்க உதவி செய்யும் இந்த தளத்தை பிம் பெட்டிஸ்ட் என்னும் ஹாலந்து நாட்டவர் தொடங்கியுள்ளார். வர்த்தக நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் இன்டெர்நெட் உதவியோடு ரசிகர்களை மட்டுமே நம்பி இசைக்குழுவை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்னும் அவரது நோக்கம் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது. |