அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ காட்சி களில் பெரும்பாலானவை நகைச் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது.
|
|
. | |
அகண்ட அலைவரிசை என்று கூறப் படும் பிராட் பேண்ட் இணைப்பு களின் வருகையை அடுத்து வீடியோ கோப்புகளை பார்ப்பது சுலபமாகி இருப்பதால், இவை பிரபலமாகிக் கொண்டிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
யூ டியூப் தளத்தின் செல்வாக்கும், அவற்றின் மூலம் பகிர்ந்து கொள்ளப் படும் லட்சக்கணக்கான வீடியோ படங்கள் கோடிக்கணக் கானவர்களால் பார்க்கப்படுவதும் வீடியோ யுகம் வந்து விட்டது என்பதை உணர்த்துகிறது. வீடியோ காட்சிகளின் அதிகரித்து வரும் செல்வாக்கை கருத்தில் கொண்டு செல்போனுக்குள் வீடியோவை கொண்டு வந்துவிடும் முயற்சியும் தீவிரமாகியிருக்கிறது. டிவி நிகழ்ச்சிகளை செல்போனிலேயே பார்த்து விடும் வசதியும் அறிமுகமாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதிர்கால டிவி, செல்போன் திரைக் குள் அடங்கியாக வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த வகையான வீடியோவின் முக்கியத்து வத்தை உணர்த்தும் மற்றொரு சேவையாக வீடியோ ஷேர் அறிமுகமாகியிருகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற செல் போன் சேவை நிறுவனமான ஏடி அண்டு டி நிறுவனம்இந்த சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் இந்த சேவையை உருவாக்கு வதற்கான ஆய்வு முயற்சியில் இந் நிறுவனம் ஈடுபட்டதாக தெரிவிக்கி றது. அதன் பயனாக முற்றிலும் புதுமையான இந்த வீடியோ பதிவு சேவை சாத்தியமாகியுள்ளது என்று ஏடி அண்டு டி தெரிவிக்கிறது. செல்போன் மூலம் வீடியோவை அனுப்பி வைக்கும் வசதி உண்மையி லேயே புதுயைமானது தான். தகவல் தொடர்பில் பெரும் மாற்றத்தை இந்த சேவை கொண்டு வரக்கூடும். ஆனால் இந்த சேவையை ஏற்னவே அறிமுக மாகி இன்னமும் பிரபலமாக இருக்கும் வீடியோ போன் சேவையோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. பார்த்துக்கொண்டே பேசலாம் என்னும் வர்ணணையோடு அறிமுக மான வீடியோ போன் வசதி ஏனோ பிரபலமாகவில்லை. வீடியோ யுகத் துக்கு முன்பாக இந்த வசதி அறிமுகமாகி விட்டாலும், பொது மக்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெறாமல் ஒரு வெற்றி புதுமையாகவே இன்று வரை இருக்கிறது. வீடியோ போன் ஏன் பிரபலமாகவில்லை என்பது உண்மை யிலேயே சுவாரசியமான கேள்விதான். இதுபற்றிய விவாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் வீடியோ ஷேர் வசதி இதி லிருந்து மாறு பட்டது. வீடியோ ஷேர் சாப்ட்வேரை டவுன்லோடு செய்து கொண்டால் செல்போனில் பேசும்போது, நம்மைச் சுற்றியுள்ள காட்சியை அதன் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆனால் இது ஒரு வழிப்பாதை. ஒன்று நாம் காட்சியை அனுப்பி வைக்கலாம் அல்லது மறு முனையிலிருப்பவர் அனுப்பி வைக்கும் காட்சியை பார்த்து ரசிக்கலாம். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். நிதானமாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் இது எப்படி எல்லாம் பயன்படுத்தப்படலாம் என்று புரியும். உதாரணத்துக்கு, செல்போன்கள் பெருமளவு பயன்படுத்தப்படும் சூழ் நிலையை எடுத்துக்கொள்ளுங் கள். எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக் கிறீர்கள். நடுவே போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டிருக் கிறீர்கள். அப்போது போன் செய்து தாமதமாகிவிட்டது என்று தெரிவிப்பீர் கள் அல்லவா? இனி இந்த செய்தியை சொல்லுமபோது, போக்குவரத்து நெரிசல் காட்சியை அப்படியே படம் பிடித்து மறு முனையிலிருப்பவருக்கு அனுப்பி வைக்கலாம். வாகன நெரிசலைப் பார்க்கும்போது அவருக்கும் உங்கள் நிலை நன்கு புரியும். அதேபோல காதலியும்பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை என்றால், “வரவேண்டும் என்று நினைத்தேன்’ என்னும் செய்தியை வீடியோ காட்சி யாக அனுப்பி வைக்கலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில், காதலியை மறக்காமல் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த லாம். அலுவலகத்தில் வேலை பளு மிகுதியாக இருப்பதால் வீட்டுக்கு உடனடியாக செல்ல முடியாத கணவன், தன்னைச் சுற்றியுள்ள கோப்புகளை படம் பிடித்து மனைவிக்கு அனுப்பலாம். இப்படி எத்தனையோ விதங்களில் வீடியோ ஷேரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால்தான் செல்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது இது அடுத்த கட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த சேவை யையாவது வேகமாக பிரபலமாகிறதா என்று பார்க்கலாம். |