செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான். |
|
. | |
தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம்.
ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் நம்பரை முடக்குவதற்கே எப்ஐஆர் நகலை கேட்கின்றன. எனவே, செல்போன் திரும்ப கிடைக்கும் இல்லாவிட்டாலும் இதற்காகவேனும் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் அதிகம் செய்வதற்கு இல்லை. வேண்டுமானால் செல்போனை திருடிச் சென்ற நபரை மனதார வசைபாடலாம். செல்போன் உரிமையாளர்கள் பலருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்படி செல்போனை பறிகொடுப்பவர்கள், அதனை நினைத்து நொந்து கொள்ள வேண்டிய நிலை இனி இல்லை. மும்பையை சேர்ந்த மைக்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனம் லாஸ்ட் மொபைல் டிராகிங் சாப்ட்வேர் என்னும் பெயரில் இத்தகைய விசேஷ சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இந்த சாப்ட்வேரை செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டால், அது செல்போன் காணாமல் போவதை கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, உங்களுடைய போன் வேறொருவர் கைக்கு சென்று அவர் அதிலிருந்த சிம்கார்டை தூக்கியெறிந்து விட்டு புதிய சிம்கார்டை பயன்படுத்த தொடங்குவார் அல்லவா? இப்படி புதிய சிம்கார்டு நுழைக்க பட்டதுமே இந்த சாப்ட்வேர் உங்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்பிவிடும். இதற்காக பதிவு செய்யும் போதே மாற்று தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை சமர்ப்பிக்க வேண்டும். புதிய சிம்கார்டு பயன்படுத்தப்படுகிறது என்னும் தகவல் தெரிவிக்கப்படுவதோடு, அந்த போன் எந்த இடத்தில் இருக்கிறது என்னும் விவரமும் தெரிவிக்கப்படும். அந்த விவரத்தை காவல் நிலையத்தில் தெரிவித்து செல்போனை மீட்க முயற்சிக்கலாம். ஆச்சரியப்படும் வகையில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திய ஒருசிலர் தொலைந்த செல்போனை மீட்டியிருக்கின்றனர். ஆனால் ஒன்று இதற்கு சேவை கட்டணமாக வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்த தயங்குபவர்களுக்காக என்று டெக்ஸ் மொபைல், எம் கார்டு என்னும் இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சாப்ட்வேர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் செயல்படக்கூடிய வர்ச்சுவல் மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை இன்னோவா டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சாப்ட்வேர், உங்களது போனில் இருந்தால் அது தொலைந்து/திருடப்பட்டு வேறொருவரால் பயன்படுத்தப்படும் போது அதுபற்றிய விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுவதோடு, போனிலிருந்த செல்போன் முகவரிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவையும் பாதுகாக்கப்படுகிறது. இந்த சாப்ட்வேர் செல்போனை பயன்படுத்துபவர் இருப்பிடத்தை தெரிவிப்பதோடு, அவர் எந்த எண்ணுக்கெல்லாம் அழைத்து பேசுகிறார் என்ற விவரத்தையும் அனுப்பி வைக்கிறது. அதுமட்டுமல்ல லவுடு ஸ்பீக்கர் வசதி மூலம் போனை எடுத்தவர் என்னவெல்லாம் பேசுகிறார் என்பதையும் கண்காணிக்க முடியும். இந்த தகவல்களை எல்லாம் காவலர்களிடம் தெரிவித்து போனை மீட்பது சுலபம். ஒரேமுறை 349 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனை பயன்படுத்தலாம். அற்புதமான சாப்ட்வேராக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரே பிரச்சனை என்னவென்றால் இந்த சாப்ட்வேர்கள் பெரும்பாலும் நவீன வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே செயல்படக் கூடியவை என்பது மட்டும்தான். இல்லையென்றால், முதலில் இத்தகைய கண்காணிப்பு சாப்ட்வேர் செயல்படக்கூடிய நவீன போன்களை வாங்கிக் கொள்ள வேண்டும. |

0 Comments on “செல்போனை மீட்கும் சாப்ட்வேர்”
prakash
super techlg.
vivel
செருப்புக்காக
காலை
வெட்டிக் கொள்ளவேண்டுமா?
subas
கட்டணம் செலுத்த தயங்குபவர்களுக்காக என்று டெக்ஸ் மொபைல், எம் கார்டு என்னும் இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சாப்ட்வேர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் செயல்படக்கூடிய வர்ச்சுவல் மொபைல் செக்யூரிட்டி சாப்ட்வேரை இன்னோவா டெக்னாலஜிஸ் அறிமுகம் செய்திருக்கிறது.
ஏனுங்க……….. விஷயம் நல்லாத்தான் இருக்கு, ஆனா சம்பந்தப்பட்ட எந்த முகவரியையும் சரியா தரலயே நீங்க …. ? நாங்க முயற்சி செய்து பாப்பமில்ல………. ? தப்பா சொல்லீட்டேண்னா மன்னிச்சிடுங்க ok வா
pravin
it s nice information