வரைப்பட வீடியோக்கள்

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந்த வீடியோ காட்சிகளில் யூ டியுப்பில் கண்டு மகிழலாம். வீடியோ பகிர்வு தளத்தில் முதலில் வந்ததும், முதன்மையானதும் தற்போது முன்னிலையில் இருப்பதுமான யூ டியுப் தளம் இப்போது கூகுல் வசமாகி விட்டது.

ஏற்கனவே தன்னிடமிருக்கும் கூகுல் எர்த் சேவையை, யூ டியுப்போடு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என கூகுல் நினைத்ததன் விளைவே இருப்பிடம் சார்ந்த வீடியோ சேவை.

யூ டியுப் தளத்தின் அருமை, பெருமை பற்றி அநேகமாக எல்லோருக்கும் தெரியும். யூ டியுப்பில் விதவிதமான, வினோதமான வீடியோ காட்சிகளையெல்லாம் பார்க்க முடிகிறது.
சூப்பர்ஹிட் படங்களை போலவே யூ டியுப்பில் சூப்பர்ஹிட்டாகும் வீடியோ காட்சிகளை கண்டு உணர்வதும், கண்டுகளிப்பதும் உலகின் பிரபலமான பொழுதுபோக்காக இருக்கிறது.

பொழுதுபோக்குக்கு ஏற்றது என்றாலும் இதிலுள்ள ஒரேயொரு குறை பெரும்பாலான யூ டியுப் காட்சிகள் சுவாரசியமாக இருக்குமே அன்றி பயனுள்ளதாக இருக்காது. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லையென்று சொல்லக் கூடிய காட்சிகள் அதில் கொட்டிக் கிடக்கின்றன. 

அவற்றில் ஒரு சில பிரபலமாகி இன்டெர்நெட் உலகம் முழுவதும் வலம் வந்து லட்சக்கணக்கானோரின் நேரத்தை சாப்பிட்டு விடுகிறது. நாளொன்றுக்கு யூ டியுப்பில் கிட்டத்தட்ட 3 லட்சம் வீடியோ காட்சிகள் பதிவேற்றப்படுகிறது. இவற்றின் ரகங்களை நினைத்துப் பாருங்கள்.

இந்த காட்சி கடலுக்கு மத்தியில் நமக்கு தேவையான பொக்கிஷம் மறைந்திருக்கலாம். பல நேரங்களில் எதிர்பாராமல் இவை முன்னுக்கு வந்து வியக்க வைக்கும். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளில் மிகவும் பொருத்தமானதை தேடிக் கண்டுபிடித்து பார்க்கும் வசதியை கூகுல் வழங்கியுள்ளது. அதுதான் இருப்பிடம் சார்ந்த வீடியோ சேவை.

அதாவது யூ டியுப்பில் உள்ள வீடியோ காட்சிகளை தேடுவதற்கான புதிய ஆனால் அதே நேரத்தில் மிக எளிமையான வழியாக இது அமைந்திருக்கிறது. கூகுல் எர்த் வரைப்பட சேவை பூமியின் மேற்பரப்பை பறவை பார்வை காட்சியாக இன்டெர்நெட் பிரவுசரில் கிடைக்க செய்கிறது.

கூகுல் எர்த் சேவையை பயன்படுத்துவதே ஒரு குதூகலமான அனுபவம். அதிலுள்ள ஒவ்வொரு இடத்தையும் கிளிக் செய்து பெரிதாக்கி பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
நாம் இருக்கும் இடம், அதன் அருகே இருக்கும் பகுதி, நமக்கு தெரிந்த இடம், நாம் கேள்விப்பட்ட இடம், செய்தியில் அடிபடும் இடம் என்று கூகுல் எர்த்தில் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்த வரைப்படத்தின் மீது பொருத்தமான தகவல்களை ஒட்டி வைக்கும் மாஷ் அப் யுக்தியும் பிரபலமாக இருக்கிறது. தற்போது இந்த யுக்தியை கூகுல் யூ யூ டியுப் வீடியோக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் யூ டியூப்பில் உள்ள வீடியோக்களில் குறிப்பிட்ட நகருக்கு பொருந்தக் கூடிய வீடியோ இருக்கிறதா என்று பார்க்க முடியும். 

கூகுல் எர்த் வரைப்படத்தின் மீது ஏதாவதொரு இடத்தில் கிளிக் செய்தால் அந்த இடம் தொடர்பாக யூ டியூப்பில் என்ன வீடியோக்கள் இருக்கின்றனவோ அது அங்கே எட்டிப் பார்க்கும். அதனை கிளிக் செய்து பார்த்து ரசிக்கலாம்.  இது மிகவும் பயனுள்ளது.

உதாரணமாக பாரீஸ் நகருக்கு ஒரு சுற்றுலா செல்கிறார் என்றால் அந்த நகரின் மீது கிளிக் செய்து அந்த நகரம் தொடர்பான காட்சிகள் யூ டியூப்பில் இருக்கின்றனவா என்று பார்க்கலாம்.

இப்படியாக பாரீஸ் நகரில் உள்ள சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், அங்குள்ள உணவு விடுதிகள், திரையரங்குகள் போன்றவை தொடர்பான வீடியோ காட்சிகள் இடம் பெற்றிருந்தால் அவற்றை பார்க்கலாம்.

முற்றிலும் புதிய இடமாக இருந்தால் இத்தகைய வீடியோ காட்சிகள் அந்த இடத்தின் கலாச்சாரத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். வேறு பல விதங்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உண்மையில் யூ டியூப்பை பயன்படுத்திக் கொள்ள மிகவும் சுவாரசியமான வழியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூகுல் புகைப்படங்களுக்கு இது போன்ற சேவையை வழங்கி வருகிறது. பனோரோமியா எனும் பெயரில் கூகுல் எர்த் மீது, இருப்பிடம் சார்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிக்கும் வசதியாக இது அமைந்துள்ளது. தற்போது இது வீடியோ காட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *